Search This Blog

20.8.11

பெரியார் சகாப்தம் இது - உருவாதே பூணூலை!


உச்சநீதிமன்ற நீதிபதி வீ. ஆர். ரவிச்சந்திரன்: குறைந்த மதிப்பெண் பெற்ற ஒரு பிற்படுத்தப்பட்ட மாணவனை சேர்த்துக் கொண்டு அவனுக்குக் கல்வி கற்பித்து, அவனுக்கு ஒரு வாய்ப்பளித்து, அவனை முன்னேற்றுங்கள்.

டவுட் தனபாலு: இதன் மூலமா இதே படிப்பு படிக்க விரும்பும் ஒரு குறிப்பிட்ட பரம ஏழை மாணவனுக்கு, அவன் முற்பட்ட பிரிவு மாணவன்ங்ற ஒரே காரணத்துக்காக அதிகமான மதிப்பெண்கள் பெற்றும், சம்பந்தப்பட்ட படிப்பைப் படிக்க வாய்ப்பு கிடைக்காமல் போகுமே . . . பரவாயில்லையா?

------------------- ( தினமலர் : 20.8.2011)

முற்போக்குப் பார்ப்பானாக இருந்தாலும் சரி, பிற்போக்குப் பார்ப்பானாக இருந்தாலும் சரி, இடஒதுக்கீடு என்ற வார்த்தையைக் கேட்ட மாத்திரத்திலேயே ஆசனவாயில் எரியும் தீக்குச்சியை வைத்தாற்போல துடி துடிப்பதைக் கவனிக்க வேண்டும்.

உச்சநீதிமன்ற நீதிபதி ரவீந்திரன் சமூக நீதியின் அடிப்படையில் பேசினால், தினமலர் அய்யரோ சமூக அநீதிக்காக வக்காலத்து வாங்குகிறார்.

இந்த நாட்டில் ஒருவன் ஏன் உயர் ஜாதியான்? இன்னொருவன் ஏன் தாழ்த்தப்பட்டவன், பிற்படுத் தப்பட்டவன் ஆனான்?
வருணாசிரமக் கழுவில் ஏற்றி கல்வி கற்க வாய்ப்பு இல்லாமல் தீர்த்துக் கட்டி யது யார்? அந்தக் கொடுமைக்குப் பரிகாரம்தான் இந்த இட ஒதுக்கீடு.

எந்த ஜாதி அவனுக்குக் கல்வி கிடைக்காமல் நந்தியாகக் குந்தி இருந்ததோ, அந்த நந்தியையே மருந்தில் சிறிது நஞ்சு சேர்ப்பது போல் சேர்த்து, குணப்படுத் துவதுதான் ஜாதியின் அடிப்படையிலான இட ஒதுக்கீட்டின் தத்துவம்.

இன்றைய தினம் தாழ்த்தப்பட்டோரும், பிற்படுத்தப் பட்டோரும் படித்துப் பட்டம் பெற்று, உத்தியோகப் படிக்கட்டுகளில் ஏறி, சுழலும் மின்விசிறியின் கீழ் நாற் காலியில் அமரும் மறுமலர்ச்சி நடந்திருக்கிறதே! இதற்கு இடஒதுக்கீடு தானே காரணம்?

தினமலர் கூட்டத்திற்குச் சமுதாயப் பொறுப் புணர்ச்சி இருக்குமேயா னால் இதனைக் கண்டு இதயம் குளிர்ந்திருக்க வேண்டுமே! முதுகைத் தட்டிப் பார்த்து பூணூல் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்தி வேலை நியமனம் செய்தவர்களின் பரம்பரையா நீதி நியாயம் பேசுவது?

இதே தினமலர் கும்பலை இன்னொரு இடத்திற்கு இழுத்து வருவோம்!

இந்து மதத்தில்தானே தாழ்த்தப்பட்டவனும், பிற்படுத்தப்பட்டவனும் இருக்கிறான் - அர்ச்சகர் பயிற்சி பெற்று, தேர்வு எழுதி, வெற்றி பெற்ற அந்தத் தோழனை இந்துக் கோயில்களில் அர்ச்சகர் ஆக்கினால் அய்யய்யோ, போச்சு, போச்சு, ஆச்சாரம் போச்சு, ஆகமம் போச்சு என்று அலறுவது ஏன்? உயர்நீதிமன்றப் படி ஏறி ஒப்பாரி வைப்பதேன்?

கட்டை விரலைக் காணிக்கையாகக் கொடுத்த ஏகலைவன் கதை முடிந்துபோன ஒன்று. கட்டை விரலைக் கேட்ட வனின் தலையைக் கேட்கும் பெரியார் சகாப்தம் இது - உருவாதே பூணூலை!

---------------- மயிலாடன் அவர்கள் 20-8-2011 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

2 comments:

rajamelaiyur said...

///
தொண்டு ஆகும். நம் சமூதாய மக்களிடையே இருக்கிற இழிவு, மடமை, முட்டாள்தனம், மானமற்றத் தன்மை ஆகியவை ஒழிக்கப்பட்டு – மனிதன் இழிவற்று மானத்தோடு அறிவோடு வாழ வேண்டும் என்பதே கொள்கையாகும். -பெரியார் -"விடுதலை",12-7-1969 ,
தமிழ் ஓவியா படைப்புகளில் தேட..!


powered by

20.8.11

1/1


பெரியார் சகாப்தம் இது - உருவாதே பூணூலை!
3Share

சகாப்தம்!
உச்சநீதிமன்ற நீதிபதி வீ. ஆர். ரவிச்சந்திரன்: குறைந்த மதிப்பெண் பெற்ற ஒரு பிற்படுத்தப்பட்ட மாணவனை சேர்த்துக் கொண்டு அவனுக்குக் கல்வி கற்பித்து, அவனுக்கு ஒரு வாய்ப்பளித்து, அவனை முன்னேற்றுங்கள்.

டவுட் தனபாலு: இதன் மூலமா இதே படிப்பு படிக்க விரும்பும் ஒரு குறிப்பிட்ட பரம ஏழை மாணவனுக்கு, அவன் முற்பட்ட பிரிவு மாணவன்ங்ற ஒரே காரணத்துக்காக அதிகமான மதிப்பெண்கள் பெற்றும், சம்பந்தப்பட்ட படிப்பைப் படிக்க வாய்ப்பு கிடைக்காமல் போகுமே . . . பரவாயில்லையா?
//

நெத்தியடி கேள்வி

rajamelaiyur said...

அருமையான பதிவு