Search This Blog

1.8.11

சிவபிரான் முழுமுதற் கடவுள் என்பதை கிறிஸ்தவர், முஸ்லிம்கள் ஒப்புக்கொள்ளுகிறார்களா?

பெரியபுராணம்

பெரியபுராணத்தில் உள்ள விஷயங்கள் உண்மையாய் நடந்த செய்திகளா? அல்லது மக்களுக்குச் சிவபக்தி உண்டாக வேண்டும் என்கின்ற எண்ணத்தோடு சைவ சமயவாதிகளால் கற்பனை செய்யப்பட்ட செய்திகளா? சிவனுக்கு மனித உருவமும் மாட்டு வாகனமும், பெண்ஜாதி - பிள்ளைகளும் உண்மையாகவே இருந்து வருகிறதா? அல்லது சிவபக்தர்கள் கற்பனை செய்த கருத்துக்களா? சிவன்தான் முழுமுதல் கடவுள் என்றால், முழுமுதல் கடவுள் என்பதற்கு உருவம், பெண்டு, பிள்ளை கற்பிப்பது பொருத்தமாகுமா?

கைலாயம் முதலிய இடங்கள் உண்மையிலேயே இருக்கின்றனவா? அல்லது சைவ மதவாதிகளின் கற் பனையா? உண்மையாய் கைலாயம் என் கின்ற இடம் ஒன்று இருக்குமானால் சாஸ்திரப்படி அதற்கு ஆதாரம் இருக்கிறதா? சிவன், விஷ்ணு, பிர்மா, இந்திரன் முதலியவர்கள் உண்மையிலேயே அவர்களைப்பற்றிச் சொல்லப் படுகிற பெரிய புராணம் முதலிய மத ஆதாரங்களின்படி இருந்தவர்களா? அல்லது மதவாதிகளால் கற்பிக்கப்பட் டவர்களா?

அகஸ்தியனென்றும், நாரதனென்றும் மற்றும், மனிதத் தன்மைக்கும் விஞ்ஞான உண்மைக்கும் மேற்பட்டவர்கள் என்றும், சொல்லப்பட்டவர்களை யெல்லாம் உண்மையாய் இருந்தவர்கள் என்றும் அவர்கள் சங்கதி எல்லாம் உண்மையாய் நடந்தவைகள் என்றும் பெரிய புராணக்காரர்கள் நம்புகிறார்களா?

பெரிய புராணச் செய்திகள் உண்மையாக நடந்தவைகள் என்றால் ஒரு ஆயிரம் வருஷங்களுக்குள்ளாகக் கடவுள்கள் நேரில் வந்து காட்சி கொடுத்ததாக அருத்தமாகவில்லையா!

கைலாயத்தில் இருந்து மாட்டின் மேல் வந்து பக்தனையும், அவன் மனைவியையும் அந்த மாட்டின் மேல் ஏற்றிக்கொண்டு கைலாயத்துக்குப் போய் விட்டார்கள் என்றால் அது உண்மையாகவே நடந்திருக்குமா?

மாடு இரண்டாகி வந்ததும், மாடு ஆகாயத்தில் ஏறிச் சென்றதும் கற்பனையா? அல்லது உண்மையா? உண்மையானால் அது கடவுள் தன்மைக்கு ஏற்றதா? அல்லது மனிதத் தன்மைக்கு ஏற்றதா?

இந்த மாதிரிக் கடவுள் அற்புதங்கள், பக்தர்கள் அற்புதங்கள் எல்லாம் இப்போது சைவத்தில் நடைபெறாமல் இருப்பதற்குக் காரணம் என்ன?

சாயிபாபா, ராமகிருஷ்ணர், ரமண ரிஷி, காந்தியார், சொரக்காய் சாமியார், பாம்பன் சாமியார், மெய்வழி ஆண்ட வன், மௌன சாமியார், பட்டினத்தார், பத்திரகிரியார், அருணகிரியார் முதலியவர்களைப்பற்றிச் சொல்லப்படும் அற்புதங்கள் எல்லாம் பெரியபுராண பக்தர்களது அற்புதங்களோடு சேர்ந்தவைகளா? அல்லது அதைவிட மட்ட ரகமானவையா, அல்லது கற்பனைகளா?

அற்புதங்கள் இல்லாத கடவுள்களோ - மதமோ - பக்தர்களோ - மதித்து வணங்கத்தக்கவர்களோ - சைவத்தில் - பெரியபுராணத்தில் ஏன் இருப்பதில்லை.

பெரியபுராணம் நிஜமானால் பக்தலீலாமிருகமும் நிஜமாய்த்தான் இருக்கவேண்டுமா? அல்லது அது கற்பனையா? சிவன் என்கின்ற ஒரு கடவுள் ரிஷபாரூடராய்ப் பார்வதி சமேதராய்க் கைலாயத்தில் இருக்கின்றார் என்றால், விஷ்ணு என்பதாக ஒரு கடவுள் கருட ஆரூடராய், லட்சுமி சமேதராய் வைகுண்டத்தில் இருக்கிறார் என்பது மெய்யா? அல்லது கற்பனையா? நாயன்மார்கள் நால்வர்களுடைய கதையும் மெய்யானால், ஆழ்வாராதிகள் பன்னிருவர்கள் கதைகளும் மெய்யா? கற்பனையா?

தேவார திருவாசகங்களுக்கும், நாலாயிரப் பிரபந்தங்களுக்கும் என்ன வித்தியாசம்? எது முந்தியது? எது உண்மை? எது சிறந்தது? பெரிய புராணம் இன்றைய சைவர்களுக்குப் பொருத்தமானதா? இன்று அது சைவர்களுக்குள் பரப்பப்படுவது கடவுள் பெருமை, பக்தர் பெருமை ஆகியவை தெரிவதற்கு ஆகவா? அல்லது அதைப் பின்பற்றச் செய்வதற்கு ஆகவா? பெரியபுராணம் ஒழுக்க நூலாகுமா?

பெரிய புராண சிவன் முழுமுதற் கடவுளாக இருக்க முடியுமா?

முழுமுதற் கடவுள் என்பதற்கு ஏதாவது லட்சணம் உண்டா? அந்த லட்சணப்படி பெரியபுராண சிவன் இருக்கிறாரா?

சிவபிரான் முழுமுதற் கடவுள் என்பதை கிறிஸ்தவர், முஸ்லிம்கள் ஒப்புக்கொள்ளுகிறார்களா?

அவர்கள் ஒப்புக் கொள்ளா விட் டாலும் வைணவர், மாத்துவர், ஸ்மார்த் தர்களாவது ஒப்புக் கொள்ளுகிறார்களா?

-------------தந்தைபெரியார் - “குடிஅரசு” - கட்டுரை - 02-10-1943
(பெரிய புராணம் எனும் தலைப்பில் எழுதப்பட்டது}

2 comments:

நம்பி said...

சிவபொருமான் உலகின் முழுமுதற் கடவுளாய் இருந்தால் பைபிளில் சிவபெருமானைப்பற்றி ஒரு வாசகமும் வரவில்லையே.

சிவபொருமான் உலகின் முழுமுதற் கடவுளாக இருந்தால் குரானில் சிவபெருமானை பற்றி வரவில்லையே!

சரி அல்லா! தான் முழுமுதற் கடவுளாக இருந்தால் அல்லாவை பற்றி பார்ப்பனன்கள் எழுதிய புராணபுருடாக்களில் ஒரு இடத்திலும் வரவில்லையே!

இயேசு நாதர் முழுமுதற்கடவுள் என்றால் புராண புருடாக்களில் அவர் பெயர் வரவில்லையே!

ஏன்? யூதக்கடவுள்களைப் பற்றியும் இந்தப் புராண புருடாக்களில் வரவில்லையே!

அனைத்தும் அறிந்தவர் கடவுள் என்றால், எபிரேய மொழியில் இந்துமதப் புராணப் புருடாக்கள் எழுதப்படவில்லை.

ஏன்? அரேபிய மொழிகளில் எழுதப்படவில்லை. ஏன்? உலகில் உள்ள அனைத்து மொழிகளிலும் ஒரே மாதிரியாக எழுதப்படவில்லை. இத்துப்போன இந்து மதத்தில் எடுக்கப்பட்ட அவதாரங்கள் மற்ற இடங்களில் உள்ள மக்களுக்கும், மதங்களுக்கும் தெரியவில்லை.

ஏன்? இந்த கடவுள் மட்டும் பூணூல் அணியவேண்டும்.

ஏன்? அந்தக்கடவுள் மட்டும் பூணூல் போடுவதில்லை.

அப்புறம் எப்படி? உலகின் முழுமுதற் கடவுளாக சிவன் வரமுடியும்? இயேசு வரமுடியும்? அல்லா வரமுடியும்?

கறி துன்னுவதற்கு ஒரு கடவுள்!, கறி துன்னாமல் இருப்பதற்கு ஒரு கடவுள்!, உயிர்ப்பலி கொடுப்பதற்கு ஒரு கடவுள்!, பாவம் செய்வதற்கு ஒரு கடவுள்!, பாவத்தை மன்னிப்பதற்கு ஒரு கடவுள்!, மனிதனை இழிவு படுத்துவதற்கு ஒரு கடவுள்!, மனிதனை அடிமைப்படுத்துவதற்கு ஒரு கடவுள்!, ஈவு இரக்கமின்றி மனிதனை கொல்லுவதற்கு ஒரு கடவுள்!, பெண்ணை சித்ரவதை செய்வதற்கு ஒரு கடவுள்!, சோம்பேறியாகத் திரிவதற்கு ஒரு கடவுள்! என்று ஏன்? இத்தனை கடவுள்கள்! வரவேண்டும்.

இதில் எந்த கடவுள் உசந்தவன்?

Unknown said...

Krishna is the Supreme Personality of Godhead
== நமது சாஸ்த்திரத்தில் உள்ள அறிவுகளில் எல்லாம் அரசனாக விளங்கும் மற்றும் மிகமிக ரகசியமான பகுதிகள்: ==
கிருஷ்ணர் மட்டுமே முழுமுதற்கடவள் மற்ற அனைவரும் தேவர்களே ஆவார்கள். 33 கோடி தேவர்களும் கிருஷ்ணரின் சேவகர்கள் மற்றும் பக்தர்கள். கிருஷ்ணரை மட்டும் வழிபட்டால் போதும்,பிற தேவி தேவதைகளை வணங்கவேண்டிய தேவையில்லை. காரணம் கிருஷ்ணரிடம் அனைத்தும் முழுமையாக உள்ளன.

ஆன்மீகம் என்றால் தர்மத்தின் உள்ளபடி நடத்தல், பொருள் சேர்த்தல், பௌதீக ஆசைகளை அடைதல், ஆண்டவன் திருநாட்டிற்குள் செல்லுதல் இந்த நான்கில் முதல் மூன்றை மட்டுமே பிற தேவி தேவதைகள் மிகமிகக் குறைந்த அளவு மட்டுமே தரமுடியும். அதுவும் கிருஷ்ணரிடமிருந்து தான் பெற்றுத்தருகிறார்கள். ஆனால் இந்த நான்கையும் கிருஷ்ணர் மட்டுமே முழுமையாக தரமுடியும். அதிலும் மோக்ஷத்தை கிருஷ்ணரால் மட்டுமே தரமுடியும். தேவர்களை வணங்குவது சாஸ்த்திரத்திற்கு உட்படாத செயலாகும். மற்றும் தேவவூலகங்கள் சென்றாலும் மீண்டும் இந்த துன்பமயமான இவ்வூலகில் பிறந்தே ஆகவேண்டும். இந்த ஜடவுலக துன்பங்களான பிறப்பு, இறப்பு, முதுமை,நோயிலிருந்து மீள ஒரே வழி கிருஷ்ணரை மட்டும் சரணடைந்து வழிபடுவதே ஆகும் வேறுவழியே இல்லை.


== கிருஷ்ணர் மட்டுமே முழுமுதற்கடவுள் என வேதங்கள், இதிஹாசங்களும் உபநிஷத்துக்களும்.,புராணங்களில் உள்ளபடி ==

அதர்வணவேதம்: கோபால தாபனீ உபநிஷத் 1.1
சச்சிதானந்த ரூபாய க்ருஷ்;ணயாக்லிஷ்ட காரிணே நமோ வேதாந்த வேத்யாய குரவே புத்தி ஸாக்ஷிணே
'''நித்யமான ஆனந்தம்,இருப்பு, அறிவுவை உடைய திவ்ய சொரூபரான கிருணுஷ்ணருக்கு என் பணிவான வணக்கத்தினை நான் செலுத்துகின்றேன். நான் ஏன் அவருக்கு என்னடைய வந்தனங்களை செலுத்துகிறேன் என்றால் அவரை புரிந்து கொள்வது என்பது வேதங்களை புரிந்து கொள்வதாகும். ஆகையால் அவரே உன்னதமான ஆசான் ஆவார்.'''

கோபால தாபனீ உபநிஷத் 1.3
க்ருஷ்;ணோ வை பரமம் தைவதம்
'''கிருஷ்ணர் மட்டுமே முழுமுதற்கடவுள்'''

கோபால தாபனீ உபநிஷத் 1..21
ஏகோ வசீ ஸர்வ க: க்ருஷ்ண ஈத்ய:
'''கிருஷ்ணர் மட்டுமே முழுமுதற்கடவுள் மற்றும் அவரே வணக்கத்துக்கு உரியவர்'''