Search This Blog

10.1.10

கோவில் கட்டக் கூடாது - நீதிமன்றம் தீர்ப்பு

திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில்
கோவில் கட்டக் கூடாது!

திருச்சி பெரிய மிளகுப் பாறையில் அரசு மருத்துவக் கல்லூரி இயங்கி வருகிறது. அதன் ஒரு பகுதியில் பிசியோதெரபி கல்லூரியும் செயல்பட்டு வருகிறது. அக்கல்லூரி வளாகத்தின் நுழைவாயிலின் அருகில் ஒண்டிக்கருப்பண்ணசாமி கோவில் இருந்து வருகிறது. அக்கோயில் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்து வந்ததாலும், மேலும் போக்குவரத்து விரி வாக்கத்திற்காக இடிக் கவும் மாவட்ட நிருவாகம், நெடுஞ்சாலைத் துறையும் முடிவு செய்தன. ஆனால் சிலர் தூண்டுதலின் பேரில் அக்கோவில் இடிக்கப் படாமல், அக்கல்லூரி வளாகத்திற்குள் கட்ட முடிவு செய்து அதற்கான பணிகளை மேற்கொண் டனர். இதற்கு மாவட்ட நிருவாகமும் ஒத்து போக வே அக்கோவில் விரைவாக கட்டும் பணி இன்று வரை நடந்த வந்தது.

வழக்கு

அனைத்து மதத்தைச் சார்ந்த மாணவ, மாண விகள் படிக்கக் கூடிய இக் கல்லூரி வளாகத்திற்குள் இக்கோவில் கட்டக் கூடாது என அக்கல்லூரி யின் அனைத்து மாணவர் களும் பெரும் போராட்டத் தில் ஈடுபட்டனர். மேலும் இதுதொடர்பாக அரசு பொது இடத்தில், அரசு கட்டடத்தில் எவ்வித மதகோவில்களையும், வழிபாட்டுத் தலங்களை கட்டக் கூடாது, கடவுளர் படங்கள் வைக்கக் கூடாது எனவும் அரசாணை உள்ளது. இதனையும் மீறி அக் கோவில் கட்டும் பணி நடந்து வந்ததால், திருச்சி மாவட்டத் திராவிடர் கழகம் சார்பில், மாவட்டத் தலைவர் மு.சேகர், பேரா.ப.சுப்பிரமணியன் ஆகியோர்களால் திருச்சி மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வழக்குத் தொடரப் பட்டது. (வழக்கு எண் 974/2009)கோவில் கட்ட அனுமதி வழங்கிய மாவட்ட ஆட்சியர் சவுண் டையா, மருத்துவக் கல்லூரி முதல்வர் பாலசுப்பிரமணியன் ஆகியோர்கள் மீது தொடரப்பட்ட வழக்கில் மாவட்ட நிருவாகம் சார்பில் வழக்கறிஞர் ஆஜராகி வந்தார். அப்போது அரசு இடத்தில் அனைத்து மதத்தை சார்ந்தவர்களும் படிக்கக் கூடிய, கல்லூரி வளாகத்தில் கோவில் கட்ட ஏன் அனுமதித்தீர்கள்? மேலும் இவ்வழக்குத் தொடர்பாக மாவட்ட ஆட்சியரும், கல்லூரி முதல்வரும் ஆஜராகி விளக்கமளிக்குமாறு நீதிபதி சந்திரன் உத்தர விட்டிருந்தார்.

தீர்ப்பு

இந்நிலையில் இவ் வழக்கு நேற்று முன்தினம் ஜன.8 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. இவ் வழக்குத் தொடர்பாக மாவட்ட ஆட்சியரும், மருத்துவக் கல்லூரி முதல் வரும் இதுவரை ஆஜராகவில்லை என்பதால், திராவிடர் கழகம் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பளிக்கப் பட்டது.

இடைக்கால தடை

அரசு இடத்தில், கோவில் கட்டக் கூடாது என இடைக்கால (தடை உத்தரவு எண். 535/2009) தடைவிதித்தும், மேலும் அத் தீர்ப்பில் இனிமேல் அக்கோவில் பணி நடைபெறக் கூடாது என்றும், கட்டிய கோவிலை இடிக்கவும் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி சந்திரன் உத்தரவிட்டார்

------------------------"நன்றி:- “விடுதலை” 10-1-2010

0 comments: