
பழங்கதை தீரட்டும்!
பொங்கல் புதுநாள் எனும்
புதுப் புறநானூறு பூக்கட்டும்
எங்கள் இனப் பண்பாடு எனும்
எழுச்சி முரசம் கேட்கட்டும்
செங்கதிராம் எம் பெரியாரின்
செய்திகள் செகமெங்கும் சேரட்டும்!
கங்குகரை யெங்கும் - புதுக்
காலக்குரல் கேட்கட்டும்!
தைமுதல் தமிழ்ப் புத்தாண்டெனும்
தைரிய அறிவிப்பு
தமிழ்க்கடல் உள்ளவரை
தலை நிமிரும் சரித்திரக் குறிப்பு
பிரபவப் பிதற்றலை விரட்டினார்
பெருமைமிகு மகுடம் சூட்டினார்
அருமை மானமிகு கலைஞர்
அய்யாவழி வந்த வினைஞர்
உடலைப் பேணுவீர்!
உள்ளத்தை உயர்த்துவீர்!
கடவுள் உள்பட
காலாவதி யாக்குவீர்
திடமொடு பயணிப்பீர்!
தீரட்டும் பழங்கதை!
கடலலையாய் ஒலிப்போம்
பொங்கலோ பொங்கல்!
0 comments:
Post a Comment