Search This Blog

15.8.10

இந்தியாவின் சுதந்திரம் நள்ளிரவில் வந்தது ஏன்?


என்று விடியும்?

ஆகஸ்ட் 15 என்றால் இந்தியாவின் சுதந்திர நாள் என்று தெரியும். ஆனால் அந்த சுதந்திரம் நள்ளிரவில் வந்தது ஏன் என்ற பூடகம் மட்டும் பல பேருக்குத் தெரியாது.

இந்திய சுதந்திரம் மூட நம்பிக்கையின் வயிற்றில் பிறந்தது என்றால் சிலருக்கு உதடுகள் துடிக்கும்.

ஆனாலும் நள்ளிரவில் பெற்றதற்குக் காரணம் இந்து மத மூடநம்பிக்கையே!

1947 ஆகஸ்ட் 15 அன்று இந்தியாவுக்குச் சுதந்திரம் என்று பிரிட்டீஷ் அரசு சட்டம் செய்து விட்டது. என்ன ஆகஸ்ட் பதினைந்தா? அந்த நாள் என்ன தெரியுமா? சுதந் திரம் கேட்பதற்கு முன் நல்ல நாள் கெட்ட நாள் நல்லநேரம் எது, கெட்ட நேரம் எது என்று சம்பந்தப்பட்டவர்களை அணுகி தெரிந்து கொண்டிருக்க வேண்டாமா என்று இந்து சனாதனிகள் கச்சையைக் கட்டினார்கள்.

ஆகஸ்ட் 15 அஷ்டமி ஆயிற்றே! 16 நவமி யாயிற்றே! அஷ்டமியில், நவமியில் நல்ல காரியம் நடக்கலாமோ என்று பற்களை நரநர வென்று கடித்தனர்.

நேரு பகுத்தறிவுவாதி என்று சொல்லிக் கொண் டாலும், சனாதனிகளின் பஞ்சகச்ச தர்ப்பைப்புல் மிரட்டலை எதிர்க்க முடியவில்லை.

சட்டம் இயற்றியது இயற்றியதுதான். அதில் மாற்றம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்று கறாராக அடித்துக் கூறி விட்டது வெள்ளை அரசாங்கம்.

தடுக்கி விழுந்தாலும், அது அந்தர்பல்டி என்று நகாசு செய்யக் கூடியவர்கள்தானே இந்தப் பார்ப்பன சனாதனிகள்?

சாஸ்திரத்துக்குள் புகுந்து கொண்டு, கொலம்பஸ் போல் ஒன்றைக் கண்டு பிடித்துச் சொல்லி, தங்களுக்குத் தாங்களே ஆசுவாசம் செய்து கொண்டார்கள்.

வெள்ளைக்காரர்களுக்கு மறு நாள் என்பது இரவு 12 மணி; நமக்கோ விடியற் காலை 5 மணி; ஆகவே ஆகஸ்ட் 15 நள்ளிரவில் சுதந்திரம் வாங்கினால், வெள்ளையர்களுக்கு அது 15 ஆம் தேதியாகவும், நமக்கோ முந்தைய நாளான 14 ஆம் தேதியாகவும் ஆகி விடுவதால், அஷ்டமி, நவமி போன்ற கெட்ட விஷயங்கள் நம்மைத் தீண்டாது என்று கூறி, ஒருவழியாகப் பிரச்சினைக்கு முற்றுப் புள்ளி வைத்தனர்.

இந்தச் சாமர்த்தியம் பார்ப்பனர்களைத் தவிர வேறு யாருக்குத்தான் வரும்?

இரவில் வாங்கும் இந்திய விடுதலை என்று விடியுமோ? யார் அறி குவரே! என்ற புரட்சிக் கவிஞரின் (1947 பொது நலம் ஏடு) வினாவுக்கு மட்டும் இன்று வரை விடை கிடைக்கவேயில்லை.

------------------- மயிலாடன் அவர்கள் 15-8-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

3 comments:

Robin said...

புதிய தகவல். இதற்கு ஆதாரம் ஏதும் உண்டா?

Unknown said...

அப்போது ஏன் பெரியார், ஆட்சேபிக்கவில்லை? ஒரு வேளை, தம்மைச் சார்ந்த ஆங்கிலேயர்கள், நாட்டை விட்டு வெளியேறுகிறர் என, வருத்தத்தில் இருந்தாரோ?( நீதிக் கட்சி ஆங்கிலய ஆதரவு கட்சி தானே!)

நம்பி said...

//Blogger ரம்மி said...

அப்போது ஏன் பெரியார், ஆட்சேபிக்கவில்லை? ஒரு வேளை, தம்மைச் சார்ந்த ஆங்கிலேயர்கள், நாட்டை விட்டு வெளியேறுகிறர் என, வருத்தத்தில் இருந்தாரோ?( நீதிக் கட்சி ஆங்கிலய ஆதரவு கட்சி தானே!)

August 15, 2010 10:13 PM//

பெரியார் சுத்ந்திரத்தையே விரும்பவில்லை...இது இன்னொருவனிடமிருந்து அடிமையாக இருந்துவிட்டு (அவன் ஒட்டு மொத்தமாகத்தான் அடிமையாக அதற்குரிய கௌரவத்துடன் கருதினான்..அதை ஒரு சமூகமாக கருதினான்...பார்ப்பனனை போல தொழில் ரீதியாக ஒவ்வொருவரையும் சூழ்ச்சியுடன் பிரிக்கவில்லை) மீண்டும் பார்ப்பனனிடம், ஆதிக்க வர்க்கத்தினரிடம் அடிமையாக இருப்பதை சுத்ந்திரமாக கருதவில்லை..ஆகையால் அதை கருப்புத்தினமாகத்தான் அறிவித்தார். நாட்டின் விடுதலையை விட சமூகவிடுதலை தான் முக்கியம் என்பதை அறிவித்தார். எதையும் சரியாக வாசிக்கவில்லை போலும். சோம்பேறி பார்ப்பனனிடம் அடிமையாக இருப்பதற்கு ஆங்கிலேயனனிடமே இருந்துவிட்டு போகட்டுமே...