Search This Blog

3.8.10

குடுமிகளின் நையாண்டி தர்பார்!


கேள்வி: பெங்களூரில் திருவள்ளுவர் சிலை திறக்கப்படுவதன் மூலம் கன்னடர் தமிழர் இடையே நல் லுறவு, நல்லிணக்கம் ஏற்படும் என்று கருநாடக முதல்வர் எடியூரப்பா கூறியுள் ளாரே?

பதில்: நல்லுறவா? நல்ல உறவுதான். யாரா வது கன்னட வெறியர்கள் ஒரு சமயம் பார்த்து, அந்தச் சிலையை அவமதிக்காமல் இருந்தாலே போதுமே!

துக்ளக், 19.8.2009, பக்கம் 9

இது பதிலா? கன்னட வெறியர்களைத் தூண்டிவிடும் பூணூல் தனமா?

துக்ளக் பார்ப்பனர் ஏடு இப்படி தூபம் போடுகிறது என்றால், தினமலர் சிண்டு விரைத்துக் கொண்டு கீழ்க்கண்டவாறு எழுதுகிறது.

தமிழக பொதுப் பணித்துறைச் செயலாளர் ராமசுந்தரம் தமிழகத்திற்கு கருநாடகா ஆண்டுக்கு 201 டி.எம்.சி. தண்ணீர் தரவேண்டும். மேட்டூர் அணையிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறந்துவிடப்படும். கருநாடக அரசு, குறித்த நேரத்தில் தண்ணீர் திறந்து விடாததால், இந்த ஆண்டு தாமதமாக கடந்த 7 ஆம் தேதிதான் திறந்துவிட்டோம்.

டவுட் தனபாலு: அதனால் என்னங்க... பெங்களூருவுல திருவள்ளுவர் சிலை திறந்து விட்டோமே இல்லையா? அதுக்கப்புறம் டெல்டா பகுதிகள்ல முப்போகம் விளையாதா என்ன...?

(தினமலர், 18.8.2009)

எது எதையும் முடிச்சுப் போடுகிறார்கள் பார்த்தீர்களா இந்த முப்புரிக்கும்பல்?

திருவள்ளுவர் சிலை திறக்கப்படுவதால் இரு மாநிலங்களுக்கும் நல்லுறவு ஏற்படும் என்று கருநாடக மாநில முதலமைச்சர் கூறுகிறார். இவ்வளவுக்கும் திருவாளர் சோ விழுந்து விழுந்து ஆதரிக்கும் பி.ஜே.பி.யின் முதலமைச்சர்தான் அவர்.

அதையும் தாண்டி திருவள்ளுவர்மீது அவாளுக்கு இருக்கும் எரிச்சல் பொத்துக் கொண்டு கிளம்புகிறதே!

தினமலரோ திருவள்ளுவர் சிலை திறந்தாச்சு தமிழ்நாட்டில் டெல்டா முப்போகம் விளையாதா என்ன என்று கிண்டல் கேலி செய்கிறது.

யாருக்கு எதன்மீது என்ன அபிப்ராயம் இருக்கிறதோ, அந்தப் பாணியில்தானே புத்தி மேயப் போகும்?

கும்பமேளா நடந்துவிட்டதோ இல்லையோ, இனி பாருங்கோ இந்தியாவில் பாலும், தேனும் பெருக்கெடுத்து ஓடப் போகுது.

காஞ்சி ஜெயேந்திரருக்கு பவள விழா நிறைவு ஜெயந்தி நடக்கிறதோ இல்லையோ, நீங்க பாக்கத்தான் போறீங்க கங்கையும், காவிரியும் யாருடைய சிரமும் இல்லாமல் ஒன்றாக இணையப் போகின்றன.

அழகர் பச்சை உடை உடுத்தி ஆற்றில் இறங்கினாரோ இல்லியோ, வைகையில் கரைபுரண்டு ஓடப்போகும் காட்சியை மதுரை மக்கள் பார்த்து மகிழ்ச்சிக் கூத்து ஆடத்தான் போகிறார்கள் என்று கும்மாங்குத்து நம்மால் கொடுக்க முடியாதா?

மூன்று சதவிகித உச்சிக்குடுமிகள் தமிழ் நாட்டில் உட்கார்ந்துகொண்டு தமிழ்ச் செம்மொழி என்றால் கிண்டல் வள்ளுவர் சிலை திறப்பு என்றால் ஒரு சீண்டல்; உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு என்றால், நையாண்டி செய்கிறார்கள் என்றால்...

தமிழர்களின் சுரணையைச் சீண்டுகிறார்கள் சூடு கிளப்புகிறார்கள் என்று தானே பொருள்!

தமிழா தன்மானங்கொள்! என்று சூளுரைத்துக் கிளம்பத்தான் வேண்டுமோ!

--------------------- "விடுதலை” 31-7-2010

0 comments: