ஜாதிவாரிக் கணக்கெடுப்பு வேண்டும் என்பது திராவிட இயக்கத்தவரின் கோரிக்கை. தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்கள் தொடர்ந்து தம் அறிக்கைகளிலும், மேடைகளிலும் வலியுறுத்தி வருகிறார். தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் மய்ய அரசுக்குச் ஜாதிவாரி கணக் கெடுப்புகோரி கடிதம் எழுதி வலியுறுத் தியதுடன், தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் வாயி லாக அழுத்தம் கொடுத்து வலிமை சேர்த்துள்ளார். மய்ய அமைச்சர் பிரணாப் முகர்ஜி சென்னை வந்து கலை ஞரைச் சந்தித்தபோதும் வலியுறுத்தினார்.
புதிரா?
மக்களில் பலருக்கு இந்தத் திராவிட இயக்கத்தாரின் வேண்டுகோள் புதிராக விளங்கலாம். கோயில், சாமி இவை வேண்டாம் என்கிறார்கள். ஆனால் அனைத்துச் ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள். ஜாதியை ஒழிக்கச் சண்ட மாருதம் செய்கிறார்கள். தங்கள் உயிர்க் கொள்கையே ஜாதியற்ற, சமத்துவ சமுகம் என்று விடாப்பிடியாகத் தொடர்ந்து அதற்கென போராட்டங்கள், கிளர்ச்சிகள், மாநாடுகள் நடத்தி வருகிறார்கள். ஆனால் ஜாதி கணக்கெடுப்பு வேண்டும், வேண்டும் என்கிறார்களே என்ற அய்யம் எழலாம்.
ஜாதிகள் நீடிக்கும் வரை
கோயில் என்பது இருக்கும் வரை அனைத்து ஜாதியினரும் உள்ளே நுழைந்து பூசனை செய்ய உரிமை வேண்டும். அது போல் ஜாதி ஒழிக்கப் படாமல் உள்ளவரை ஜாதி கணக் கெடுப்பும் வேண்டும். ஏனென்றால் எம்.ஜி.ஆர். இறப்பதற்கு முன் ஜாதிச் சங்கங்களிடம் அவர்களுடைய ஜாதியில் இருப்பவர் எண்ணிக்கையைக் கேட்டபோது ஒவ்வொரு ஜாதியினரும் அளித்த எண்ணிக்கையைக் கூட்டிப் பார்த்தால் தமிழக மக்கள் தொகையைவிட அதிகமாக இருந்தது.
இப்போது அரசே கணக்கெடுக் கையில் தனித்தனியாகக் கணக் கெடுப்பதால் அது போல் தவறோ, மோசடியோ, எவரும் செய்து சலுகை பெற்றுவிட முடியாது, மற்றவர் பெறவேண்டிய உரிமை யைத் தட்டிப் பறித்துவிடவும் முடியாது. அடிப்படையில் இந்தக் கோரிக்கையின் இன்றியமையாமை இது. ஜாதியைக் காரணம் காட்டி, ஜாதியின் பெயரால் சமூகத்தில் மூவாயிரம் ஆண்டுகளாக ஒடுக்கப்பட்டு, நசுக்கப்பட்டு வரும் மக்கள் தங்கள் உரிமைகளைப் பெறுவதற்கு மிகச் சிறந்த கருவி இந்தக் கணக் கெடுப்பு. இதன் பயன் பிறகுதான் உணரமுடியும்.
நிறத்தாலும், பிறப்பாலும்
ஒடுக்கப்படும் இனங்களை ஏன் கண்டறிய வேண்டும்? ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வோர் இனத்திலும் ஒடுக்கப்பட்டவர்களைக் கண்டெடுத்துப் பிரதிநிதித்துவம் தருவது, முன்னேற்றம் அடையச் செய்வது ஒன்றும் புதிதல்ல. என்ன வேறுபாடு என்றால் மேலை நாடுகளில் நிறத் தால் பிரிக்கப்பட்டு உரிமை இழந்து இருக்கிறார்கள். இங்கே பிறப்பால், வருண பேதத்தால், ஆரியம் என்றோ செய்த சூழ்ச்சியால் பிரிக்கப்பட்டுக் கீழ்மைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.
இங்கே அதற்கு மாற்றாக நீதிக் கட்சி, தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா வலியுறுத்தியதுதான் இட ஒதுக்கீடு . ஆனால் அமெரிக்க நாட்டிலும் இட ஒதுக் கீடு இருக்கிறது. ஆனால் இட ஒதுக்கீடு என்று பெயர் கொடுக்காமல், பன்மைத்துவம் என்று பெயர். ஆங்கிலத்தில் ஞடரசயடவைல என்று கூறுவார்கள். இதன்படி அங்கே ஒடுக்கப்பட்ட கருப்பர்களின் உரிமைக் குரலுக்கு மதிப்பளித்து அவர்கள் எண்ணிக்கையில் அதிகமாக உள்ள மாநிலங்களில் அரசு அலுலலகம், நீதிமன்றங்கள், பள்ளிக்கூடங்கள், கல்விச் சாலைகளில் கருப்பர்களே அதிக எண்ணிக்கையில் நியமனம் பெறுகிறார்கள். ஆக ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பது புதுமையல்ல.
இடையில் நடந்தது என்ன?
ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பது ஏதோ இப்போதுதான் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையல்ல; நடக்காததுமல்ல. ஆங்கிலேயர் ஆட்சியின் போதே 1931 வரை மக்கள் தொகைக் கணக்கெடுப்பு டன் ஆங்கில அரசு ஜாதிவாரிக் கணக்கெடுப்பும் நடத்தி வந்தது. அது நிறுத்தப்பட்டு விட்டது. விடுதலைக்குப் போராடும் வேளை யில் சமூக நீதிப் போராட்டத்திற்கு முதன்மை குறைந்துவிட்டது. இப்போது எண்பது ஆண்டுகளுக்குப் பிறகு அந்தக் கோரிக்கைக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மக்கள் தொகைக் கணக்கெடுப்பு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் நடப்பது என்பது நாம் அறிந்ததே.
ஜாதிவாரி கணக்கெடுப்பை யாராவது எதிர்க்கிறார்கள் என்றால் அவர்கள் ஜாதியையும் நிலைக்கச் செய்து, இட ஒதுக்கீட்டுக் கொள்கை கூடாது என்ற நிலைப்பாடு உள்ளவர்கள். அதாவது பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்கள் சலுகைகளைப் பெற்று முன்னேறுகிறார்களே, இத்தனை ஆண்டுகாலம் அவர்களை அடக்கி வைத்து, ஒடுக்கி வைத்து ஏகபோகமாக அனுபவித்தோமே அதில் மண் விழுகிறதே என்னும் வயிற்றெரிச்சல் காரர்கள்தாம்.
புள்ளிவிவரம் இல்லாத கையறு நிலை
எனவேதான் அவர்கள் வழக்கு மன்றம் செல்கிறார்கள். இடஒதுக்கீட்டுக்கு எதிராகக் குரல் கொடுத்து வாதாடுகிறார்கள். நீதிமன்றங்களில் அவர்கள் வகுப்புரிமையை, இட ஒதுக்கீட்டை ஏதோ தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி, ஏதோ பெரிய கொடுமை; தகுதி, திறமை என்ற போலி முகமூடியைக் காட் டும்போது நீதிமன்றங்கள் புள்ளி விவரங்களைக் கேட்கிறபோது, நியாயத்திற்குப் போராடும் நம்மவர் கள் போதிய புள்ளி விவரங்கள் இல்லாது கைகளைப் பிசைந்து, தலை சாய்த்து நிற்கிற அவலம் ஏற்படுகிறது. நீதிமன்றங்கள் போதிய அரசுப் புள்ளி விவரங்கள் இல்லையே என்று அவர்களுக்குச் சாதகமான தீர்ப்பை வழங்கி நீதிக்குப் பதிலாக அநீதி இழைத்து விடுகிறார்கள். நீதிமன்றங்களும் பலப்பல சந்தர்ப்பங்களில் இந்தக் குறைபாட்டைச் சுட்டிக் காட்டியுள்ளன.
1950 இல் தந்தை பெரியார் தூக்கிய போர்க்கொடி
1950 இல் செண்பகம் துரைராசன் வழக்கில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்ட போது தந்தை பெரியார் இருந்தார், பேரறிஞர் அண்ணா இருந்தார், போராடினார்கள். தலைவர் காமராசர் இருந்தார். எடுத்துச் சொன்ன நியாயத்திற்குச் செவி சாய்த்து நேருவிடம் எடுத்துச் சொன்னார். நியாயம் பிறந்தது, அரசமைப்புச் சட்ட முதல் திருத்தம் வாயிலாக. அவ்வாறு பெற்ற பலனை முழுமையாக அடையத் தடையாக இருப்பது இந்த ஜாதிவாரிக் கணக் கெடுப்பே, போதிய புள்ளி விவரங்களே இல்லாததுதான்.
------------------ தொடரும்...............முனைவர் பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன் எழுதிய கட்டுரை ”விடுதலை”16-8 -2010
2 comments:
jaathi vaarikkanakkeduppu vEndum enbathil entha vitha santhEkamum kidayaathu. AAnaal atharku u
ellOrum virumbum kaaranam, uNmai nilaimaiyai arinthu koLLavEndum enbathu thaan. Innum eththanai kaalaththirku ththaan indru entha arasiyal selvaakum illaatha piramanarkaLai villankallaka kaanbithu veeramani arasiyal nadathappokiraar. indraya odukkappatta aathi thiraavidar kazhukku nija villankaL piRpaduththappatta vakuppai cherntha thEvar mudaliya jaathikaL thaan. aanal athai maraiththu innum parpanarkaL thaan aneethi iLaippathupOl pEsivaruvatharkkum, kadantha 60 aandu ida othukkeettu koLkaikaLinaal pirpattOr evvaaru payan adainthu irukkiraarkaL ennum uNmaiyum theriyavarum. avvaaru unmai vLangum pOthu ithuvarai pirpattoOr patiyalil irunthu ippOthu kanisamaaka munnEriyuLLavarkalukku idaothukkeetil irunthu viduvikkappattu innum pinthangi irukkum vakuppinarukku athika salukai aLikka vakai seiya vEndum.
இடஒதிக்கிடு பகிர்ந்தலிப்பதில் இன்னும் னுட்பமாக, தர்கால மக்கலின் பொருலாதர னிலைமையை சீர்தூக்கி பார்த்து, சரியான மக்கலுக்கு,அவர் தம் எதிர்கால னல்வாழ்க்கைக்கு பயனுல்ல வழியை னாம் தெரிந்தெடுப்பது னம் இன்ரியமையாகும்.அதர்கான வழிகலுக்கு னாம் வித்திட வேண்டும்.வாழ்க மாந்தர், வாழ்க வலமுடன்.
Post a Comment