பிற்படுத்தப்பட்டோருக்கு சட்டப்படியான
நாடாளுமன்றக் குழுவை அமைத்திடுக!
அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும்
கழகத்தின் சார்பில் கடிதம்
வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்!
ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு உடனடியாக ஆணை பிறப்பிக்க முன்வரவேண்டும். பிற்படுத்தப்பட்டோருக்கான பார்லிமெண்டரி கமிட்டியை காலந்தாழ்ந்த நிலையில் உடனே அமைத்திடவேண்டும். கட்சி வேறுபாடு இல்லாமல் இதற்குக் குரல் கொடுத்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் நாம் பாராட்டி வரவேற்கிறோம். அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் திராவிடர் கழகம் கடிதம் எழுதும். இப்பிரச்சினை வெற்றியடையும் வரையில் வற்புறுத்தி செயலில் இறங்க முற்படுவோம் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார். அவரது அறிக்கை வருமாறு:
அனைத்துக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள்
நேற்று, பிற்படுத்தப்பட்ட சமூகத்தினைச் சார்ந்த அனைத்துக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும், பிரதமர் மன்மோகன்சிங் அவர்களைச் சந்தித்து, முக்கியமாக மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளது மிகவும் பாராட்டத்தக்கதாகும்.
ஜாதிவாரி கணக்கெடுப்பு சூழ்ச்சி தாமதம்
1. மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஜாதி விவரம் சேர்க்கப்படுவது அவசர அவசியமாகும். 1931 மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்குப்பின் ஜாதிவாரி மக்கள் தொகைக்கான சரியான புள்ளி விவரங்கள் இல்லை என்பதால், இது மிக முக்கியம் என்பதை சென்னை உயர்நீதிமன்றம் ஒரு முக்கிய தீர்ப்பில் வலியுறுத்தியதோடு, உச்சநீதிமன்றத்தில் இட ஒதுக்கீடு, சமூகநீதி சம்பந்தமான வழக்குகள் நடைபெறும் போதெல்லாம் நீதிபதிகள் வழக்கமாக எழுப்பும் கேள்விகளாகவும் இவை உள்ளன. எனவே, மத்திய கணக்கெடுப்பு (சென்சஸ்) 2011 இல் நடப்பதில் ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க, கட்சித் தலைமைகள், மத்திய அமைச்சரவை அதன் குழு எல்லாம் முடிவு செய்த பிறகும் காலதாமதம் செய்வது மிகப்பெரிய சமூக அநீதியாகும். ஆட்சியில் உள்ள உயர்ஜாதி அதிகார வர்க்கத்தின் ஆளுமை காரணமான சூழ்ச்சியாகும்!
இடைக்கால தீர்ப்பு போன்றதொரு ஆணை
தமிழ்நாட்டில் கடந்த 30 ஆண்டுகளுக்குமேல் அமலில் இருந்துவரும் 69 சதவிகித ஒதுக்கீடு பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மக்களுக்கான கல்வி, வேலை வாய்ப்புக்கான இட ஒதுக்கீடுபற்றி வழக்கு உச்சநீதிமன்றத்தில் கடந்த 16 ஆண்டுகளுக்குமேல் நடைபெற்றுவரும் நிலையில், சில மாதங்களுக்குமுன் தலைமை நீதிபதி ஜஸ்டீஸ் கபாடியா தலைமையில் உள்ள பெஞ்ச், இதற்கு ஓராண்டு அவகாசத்தில், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் தொகை தமிழ்நாட்டில் உள்ளதையொட்டி இட ஒதுக்கீடுபற்றி, இங்குள்ள பிற்படுத்தப்பட்டோர் நலக்குழு (மாநிலக் குழு) புள்ளிவிவரங்கள் அடிப்படையில் பரிந்துரைத்து, தீர்ப்பு வழங்க உதவலாம் என்கிற ஒரு மிக நியாயமான இடைக்காலத் தீர்ப்பு போன்ற ஓர் ஆணையை வழங்கியுள்ளது.
தி.மு.க. அரசுமீது குறை காணும் ஒரு தலைவர்
இதற்கும்கூட ஜாதிவாரிக் கணக்கெடுப்பு மிகவும் தேவை. தமிழ்நாட்டுத் தலைவர் ஒருவர், மாநில (தி.மு.க.) அரசுமீது குறைகூறும் நோக்கத்தோடு மாநில அரசே ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்திடவேண்டும் என்கிறார்; மண்டல் கமிஷன் அறிக்கைக்குப் பிறகு, அரசியல் சட்டத்தில் இட ஒதுக்கீடு சம்பந்தமான சட்டத் திருத்தங்கள் நமது மற்றும் தி.மு.க. போன்ற ஒத்த கருத்துள்ள இயக்கங்களின் ஒத்துழைப் போடு அரசியல் சட்ட திருத்தங்களாக வந்து, இட ஒதுக்கீடு அனைத்து மாநிலங்களுக்கும், மத்திய நிறுவனங் களிலும் கல்வி, வேலை வாய்ப்பில் செயல்படுத்திட வேண்டிய சட்டக் கட்டாயம் இப்போது வந்துவிட்டது. எனவே மத்திய சென்செஸ் ஜாதிவாரி இருந்தால் மத்திய. மற்ற மாநிலங்களில் இட ஒதுக்கீடு பிற்படுத்தப்பட்டோருக்குக் கிடைக்கும்.
ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு உடனடியாக ஆணை வரவேண்டும்
எனவே, இந்தியா முழுமைக்குமான ஒடுக்கப்பட்ட சமூக மக்களின் சரியான புள்ளிவிவரம் தேவை என்னும் போது, நமது முதல்வர் கலைஞர் அவர்களும், மற்ற அரசியல் கட்சிகளின் தலைவர்களும் முழு அளவில் ஜாதிவாரி கணக்கெடுப்பை ஏற்றுக்கொண்டு வற்புறுத்து கின்றனர்.
எனவே, இனி ஒருபோதும் எந்த சாக்கையும் கூறி மத்திய அரசு காலதாமதம் செய்யக்கூடாது. ஜாதிவாரிக் கணக்கெடுப்புக்கு உடனடியாக ஆணை பிறப்பிக்க முன்வரவேண்டும்.
பிற்படுத்தப்பட்டோர் பார்லிமெண்டரி கமிட்டி
2. இரண்டாவது, இவ்வளவு பெரும்பான்மையாக உள்ள பிற்படுத்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கையில், அச்சமூகத்தின் உரிமையையும், நலவாழ் வையும் சட்டப்படி பாதுகாக்க, அரசியல் சட்டத்தின் ஜனநாயக நெறிமுறைப்படி, பிற்படுத்தப்பட்டோர் பார்லி மெண்டரி கமிட்டியை பல ஆண்டுகளுக்குமுன்பே ஏற்படுத்தி யிருக்கவேண்டும்; க்ஷநவவநச டயவந வாய நேஎநச காலந் தாழ்ந்தேனும் செய்ய வேண்டியதைச் செய்தால் நல்லது என்பதற்கொப்ப உடனடியாக சபாநாயகர் திருமதி மீராகுமார் அவர்களிடம் பிரதமர் பேசி ஏற்பாடுகளை விரைந்து செய்யவேண்டும். உறுதி அளித்த பிரதமருக்கு நமது நன்றி!
கொலு பொம்மைபோல்...
3. தேசிய பிற்படுத்தப்பட்டோர் நலக் கமிஷன் ஒரு சட்டப்படி அமைக்கப்பட்ட குழு (ளுவயவரவடிசல க்ஷடினல) ஆகும். ஆனால், அதற்குரிய சட்ட அதிகாரம் எதுவும் வழங்கப்படவில்லை; அது வெறும், கொலு பொம்மைபோல உள்ளது. இதனால் பிற்படுத்தப்பட்ட சமூக ஊழியர்களின் குறைகள் தீர்க்கப்பட போதிய வாய்ப்பும், வழியும் இல்லை. பிற்படுத்தப்பட்டோருக்கென ஒதுக்கப்படும் நிதி சரியான முறையில் செலவழிக்கப்பட்டு உரியவர்களுக்குப் போய்ச் சேருகிறதா என்று உறுதிப்படுத்தப்பட முடிய வில்லை.
இக்கமிஷனுக்குப் போதிய அதிகாரங்கள் கொடுக்கப் பட்டால், அது அரசின் பணிகளுக்கே மிகப்பெரிய உதவிகரமாக அமையக்கூடும்.
சட்ட மேதை ஜஸ்டீஸ் எம்.என். ராவ் அவர்கள் தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்திற்குத் தலைவராக நியமிக்கப்பட்ட நிலையில், இவ்வாணையம் மிகவும் பயனுறு வகையில் செயல்பட (நுககநஉவஎந குரஉவடிபே) அதிகாரங் களை அதற்கு அளிப்பது முக்கியமாகும்.
இப்படி முயற்சி எடுத்த பிற்படுத்தப்பட்டோர் நாடாளு மன்றக் குழுவின் அமைப்பாளர் திரு. எம். அனுமந்தராவ் அவர்களையும், அவர்களோடு இணைந்து கட்சி வேறுபாடு கருதாமல் குரல் கொடுக்கும் அத்துணை நாடாளுமன்ற உறுப்பினர்களையும் நாம் வெகுவாகப் பாராட்டி வரவேற்கிறோம்.
அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும், திராவிடர் கழகத்தின் சார்பில் ஒரு கடிதம்மூலம் வேண்டுகோள் விடுக்கவும், இவை வெற்றியடையும்வரை வற்புறுத்தி செயலில் இறங்கிடவும் இருக்கிறோம்.
சென்னை
27.8.2010
தலைவர்,
திராவிடர் கழகம்.
0 comments:
Post a Comment