ஆனந்தவிகடன்
ஆனந்தவிகடன் இதழில் ஒரு கேள்வி - பதில்:
கேள்வி: மெத்தப் படித்த அறிவாளிகள்கூட மூட நம் பிக்கைக்கு அடிமையா கிறார்களே?
பதில்: அறிவு வேறு... பகுத் தறிவு வேறு. சாமிக்கு வேண் டுதல் செய்து கொண்டதால் தான் எம்.பி.ஏ. பரீட்சையில் பாஸ் செய்தோம் என்று ஒருவர் உளமார நம்பினால் என்ன செய்ய முடியும்?! நீதிபதிகள், விஞ்ஞானிகள், அய்.ஏ.எஸ். அதிகாரிகள் எல்லோரும் ஒரு போலிச் சாமியாருக்குப் பாத பூஜை செய்வதை இங்கு நம்மால் பார்க்க முடியும் என்று அறிவார்த்தமாக ஆனந்தவிக டன் பதில் சொன்னதற்குப் பலே, பலே! ஆனந்தவிகடனா இப்படி பதில் சொல்லுகிறது? என்று பாராட்டக் கூடச் செய்யலாம்.
மூட நம்பிக்கையின்மீது தனது அதிருப்தியை வெளிப் படுத்திய அதே ஆனந்தவிக டன் குழுமம்தானே சக்தி விகடன்களை வெளியிட்டு கல்லாப் பெட்டிகளை நிரப்பு கிறது.
மகப்பேறு நல்கும் மண்டார்தி சர்ப்ப சுந்தரி என்று சிறப்புக் கட்டுரைகளைத் தீட்டிக் குதூகலிக்கிறது.
விகடன் கூறும் மண்டார்தி சர்ப்ப சுந்தரி என்ன மகப்பேறு துறையில் பி.எச்டி., பட்டம் பெற்ற மருத்துவப் பெருமாட்டியா?
சாமியார்களைப்பற்றிக் கூட ஆனந்தவிகடன் மூக்கைச் சிந்தி பதில் கூறுகிறது.
சத்குரு ஜக்கி வாசுதேவர்களுக்காகப் பக்கங்களை ஒதுக்குவது ஏன்? சாமியார் களில் என்ன போலி சாமி யார்? ஒரிஜினல் சாமியார்? காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் ஒரிஜினல் சாமியாரா? போலி சாமியாரா? ஆனந்தவிகடன்கள் அடுத்த இதழிலாவது பதில் சொல்லட்டுமே!
படிப்பு வேறு - பகுத்தறிவு வேறு என்று அப்பாடா! இப் பொழுதாவது ஆனந்தவிக டன் வட்டாரம் ஒப்புக்கொள்கிறதே- மகிழ்ச்சிதான்.
நம் நாட்டுப் படிப்பு என்பது வயிற்றுப் பிழைப்புக்கு ஒரு லைசென்ஸ் என்பதுதான் தந்தை பெரியாரின் கணிப்பு.
நம் நாட்டுப் படிப்பில் இன்னும் பித்தா பிறைசூடிப் பெருமானே! பாட்டு மனப் பாடப் பகுதியில் சொல்லிக் கொடுக்கப்படுகிறதே - ஆனந்தவிகடன் கண்டித்த துண்டா?
சிவபெருமான் தலையில் வீற்றிருக்கும் சந்திரன் என்பது விஞ்ஞானத்திற்கு ஏற் றதுதானா?
நம் நாட்டில் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகளின் தன்மைதான் என்ன? கடவுள் கற்பனையே - புரட்சிகர மனித வரலாறு எனும் நூலினை தோழர் ஏ.எஸ்.கே. (முதுபெரும் பொதுவுடைமை வீரர்!) எழுதியுள்ளார்.
அதன் முன்னுரையில் அவர் குறிப்பிட்டு இருக்கும் கருத்து கோடி பொன் பெறும்.
முதல் மனிதன் ககாரின் 1962 இல் விண்வெளி -அகண்ட காஸ்மாசில் சென்றதை விஞ் ஞானியாக இருந்தும் கடவுள் நம்பிக்கை கொண்ட நல்லவர் டாக்டர் சி.வி. ராமன் அவர்கள் அழுத்தமாகக் கண்டித் தார். கடவுள் வசிக்கும் இடத்தில் மனிதன் தன் பூத உட லுடன் செல்லுவது மிகமிகப் பாவம் செய்வதாகும் என்றார்.
அறிஞர் பட்டம் சூட்டப் பட்ட அவரே அவ்வாறு எண்ணங் கொண்டவராக இருந்தார் என்றால், நம் நாட் டின் பாமர மக்கள் நிலையை நான் சொல்லித்தான் தெரிய வேண்டியதில்லை - கூறாமலே விளங்கும் என்று எழுதியுள்ளார் தோழர் ஏ.எஸ்.கே.!
இனிமேலாவது ஆனந்த விகடன் மூடப் பக்தியில் மக்களைத் தள்ளும் சேவை யைக் கைவிடுமா?
----------------- மயிலாடன் அவர்கள் 5-8-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை
3 comments:
பேரன்பின் மாலை வணக்கங்கள் தோழர்!
// அறிவு வேறு... பகுத் தறிவு வேறு //
விகடனா இதை சொன்னது .. நம்ப முடியவில்லை ... நீங்கள் சொல்வதால் நம்பத்தான் வேண்டியுள்ளது ...
// மூட நம்பிக்கையின்மீது தனது அதிருப்தியை வெளிப் படுத்திய அதே ஆனந்தவிக டன் குழுமம்தானே சக்தி விகடன்களை வெளியிட்டு கல்லாப் பெட்டிகளை நிரப்பு கிறது. //
ஹி..ஹி ..ஹி ... ஆனந்த விகடன் வேறு ... சக்தி விகடன் வேறு ...
வருகிறேன் தோழர் !
நண்பரே, பகுத்தறிவு பாசறையில் இருந்து வந்த குடும்பத்தினர் நடத்தும் தொலைகாட்சி கூட இம்மாதிரியான தெய்வ தரிசனம், ஜோசியம் சொல்லும் பாம்பு நடந்தது என்ன? திருவண்ணாமலை கார்த்திகை தீபம் நேரலை என்று ஒளிபரப்பி கல்லா கட்டுகிறார்களே, அதை லாவகமாக மறந்து விடுகிறீர்களே?
click and read the link
மதம்மாற்றம் செய்ய தில்லுமுல்லு மொள்ளமாரித்தனம்.
.............
Post a Comment