Search This Blog

26.8.10

சுருட்டுப் பிடிக்கும் பிராமணன் அடுத்த ஜென்மத்தில் பன்றியாய்ப் பிறப்பான்?


பன்றி அய்யர்

புகையிலையினால் வரும் ஆபத்து குறித்து நிறைய தகவல்கள் நாள்தோறும் வந்து கொண்டு இருக்கின்றன. உலகில் தேவைப்படும் புகையிலையில் 85 விழுக்காடு இந்தியாவில் உற்பத்தியாகிறதாம். 44 லட்சம் தொழிலாளர்கள் பீடி, சுருட்டுத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

புகையிலையை உபயோகிப்பதன் காரணமாக ஆண்டு ஒன்றுக்கு மரணத்தை வரவழைத்துக் கொள்பவர்கள் 8 லட்சம் பேர் என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

அக்பரின் ஆட்சிக் காலத்தில் அமெரிக்காவில் இருந்து ஒரு கிறித்துவப் பாதிரியாரால் புகையிலை இந்தியா வந்தடைந்தது.

இந்தப் புகையிலை பற்றி இந்து மதப் புராண மான பத்ம புராணம் இவ்வாறு கூறுகிறது.

தாம்ப்ர பாணர தம் விப்ரம் நரஹ

தாதாரோ நரகம் யாதிப் ராமணோக் ராம சூக்ர ஹ:

இதன் கருத்து : தரும வான்கள் சுருட்டுப் பிடிக்கும் பிராமணர்களுக்குத் தருமம் செய்யக்கூடாது. அப்படித் தருமம் செய்யும் தருமவான் நரகத்துக்குத் தான் போவான். மேலும் சுருட்டுப் பிடிக்கும் பிராமணன் அடுத்த ஜென்மத்தில் பன்றியாய்ப் பிறப்பான் என்றும் கூறப்பட்டுள்ளது.

அக்பர் காலத்தில் சுருட்டு அறிமுகமாகி இருந்தாலும், அவுரங் கசீப், குரு கோவிந்தசிங் ஆகிய இருவரும் சுருட்டைத் தடை செய்துள்ளார்கள். ஒரு 300 அல்லது 350ஆண்டுகளுக்கு முன் இந்தியாவுக்கு அறிமுகமான சுருட்டுப் பற்றி பத்ம புராணம் பேசுகிறது என்றால், இந்தப் புராணம் அக் கால கட்டத்திற்குப் பின்தான் எழுதப்பட்டிருக்க வேண்டும்.

சுருட்டுக் குடிப்பதால் ஆபத்து என்று சொல்லும் கருத்து மிகவும் நியாயமான ஒன்றுதான். அதில் கூட பிராமணர்களைக் காப்பாற்றும் நோக்கத்தில் மட்டுமே எழுதப்பட்டிருப் பதைக் கவனிக்க வேண்டும்.

அது ஒரு புறம் இருக்கட்டும். சுருட்டுக் குடிக்கும் பிராமணன் அடுத்த ஜென்மத்தில் பன்றியாய்ப் பிறப்பான் என்று பத்ம புராணத்தில் கூறி இருப்பதால், இப்பொழுதெல்லாம் தெருக்களிலும், சாக்கடையிலும் திரிந்து கொண்டிருக்கும் இந்தப் பன்றிகள் எல்லாம் யார்? போன ஜென்மத்தில் சுருட்டுக் குடித்த பார்ப் பனர்கள்தானே. அப்படி என்றால் இந்தப் பன்றிகளுக்கு சாமா சாஸ்திரி, குப்புசாமி அய்யர், ஆராவமுது அய்யங்கார், பூவராக சர்மா என்று செல்லமாகப் பெயர் சூட்டி அழைக்கலாம் அல்லவா?

----------------- மயிலாடன் அவர்கள் 22-8-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

4 comments:

ஒசை said...

சுருட்டு பிடிச்சா பார்ப்பான் தான் பன்றியா போவான். அதனால் நாம பயமில்லாம்ம சுருட்டு பிடிக்கலாம். அப்படியே உடம்புக்கு நோக்காடு வந்தா, கலைஞரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் வைத்தியம் பார்த்துக்கலாம்.

ஆட்டையாம்பட்டி அம்பி said...

//அப்படியே உடம்புக்கு நோக்காடு வந்தா, கலைஞரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் வைத்தியம் பார்த்துக்கலாம்.///

அதெல்லாம் முட்டாள்கள் செய்யும் வேலை. அதாவது "உடம்புக்கு நோக்காடு வந்தா, கலைஞரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் வைத்தியம் பார்த்துக்க் கொள்வதும் மற்ற English மருத்துவவர்களிடம்"
வைத்தியம் பார்ப்பது அடி முட்டாள் தனம்.

ஆதாலால் கோவிலுக்கு போய் ஒரு அர்ச்சனை அல்லது ஒரு யாகம் பண்ணுங்கோ; உங்க உடம்பு நன்னா ஆயிடும்.

போவீகளா அம்பி???

ஒசை said...

ஆட்டையாம்பட்டி அம்பி,
நோக்கு நோக்காடு வந்தா அப்படி தான் செய்வேளா... அதெல்லாம் பார்ப்பான் பணறதாச்சே. பரவாயில்லே.
நா பகுத்தறிவாதி. அதுக்கு தகுந்த வைத்தியம் சொல்லுங்க. சொல்வேளா அம்பி.

ஆட்டையாம்பட்டி அம்பி said...

கேள்வி கேட்ட பகுத்தறிவாதிக்கு நன்றி!

கலைஞரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் வைத்தியம் பார்த்துக்கலாம்....

எல்லாம உங்களுக்காகத்தான்.உங்களை மாதிர் பகுத்தறிவாதிகளுக்கு தான்.

பகுத்தறிவு இல்லை என்றால்? கோவிலுக்கு போய் ஒரு அர்ச்சனை அல்லது ஒரு யாகம் பண்ணுங்கோ; உங்க உடம்பு நன்னா ஆயிடும்.