ஜெர்மனி, அயர்லாந்து உள்ளிட்ட நாடுகளில், கத்தோலிக்க பாதிரியார்கள், சிறுவர்களுடன் தகாத உறவு வைத்துக் கொண்டதற்காக, போப் பெனிடிக்ட் மன்னிப்பு கேட்டுள்ளார்.
ஜெர்மனி, அயர்லாந்து, ஆஸ்திரியா, நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, அமெரிக்கா என பல்வேறு நாடுகளில் கத்தோலிக்க பாதிரியார்கள், பல ஆண்டுகளாக சிறுவர்களுடன் தகாத உறவு வைத்துள்ளனர். இது தொடர்பாக வாடிகன் நகரில் உள்ள போப் பெனிடிக்ட்டுக்கு ஏராளமான புகார்கள் வந்தன. குறிப்பாக, அயர்லாந்தில் இந்த புகார்கள் அதிகம் காணப்பட்டது. அயர்லாந்து நாட்டின் சார்பில், இது குறித்து ஒரு ஆணையம் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
ஒரு பாதிரியார் நூற்றுக்கும் அதிகமான சிறுவர்களுடன் உறவு கொண்டதை ஒப்புக் கொண்டுள்ளார். மற்றொரு பாதிரியார், இரண்டு வாரத்துக்கு ஒரு முறை சிறுவர்களுடன் உறவு கொள்வதை, 25 ஆண்டுகளாக செய்து வந்துள்ளதை ஒப்புக் கொண்டுள்ளார்.
போப் பெனிடிக்ட், ஜெர்மனியில் உள்ள முனிச் நகர பிஷப்பாக, 1977ஆம் ஆண்டு முதல் 1981ஆம் ஆண்டு வரை பணியாற்றியுள்ளார். அவர், பிஷப்பாக இருந்த கால கட்டத்திலும் இது போன்ற சம்பவங்கள் நடந்துள்ளன.எனவே, போப் பெனிடிக்ட் இச்சம்பவங்களுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும், தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஜெர்மனி பார்லிமென்ட் கீழ் சபையின் துணைத் தலைவர் உல்ப்கேங் தியர்ஸ், பெனிடிக்ட்டை சந்தித்து கோரினார்.
நாளுக்கு நாள் பாதிரியார்கள் மீதான புகார்கள் அதிகரித்து வந்ததால் இதற்கு தீர்வு காண்பதற்காக கடந்த வாரம் போப் பெனிடிக்ட் வாடிகன் தேவாலயத்தின் உயர்மட்ட நிருவாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.பாதிரியார்களின் தகாத உறவால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், தேவாலய நிர்வாகிகளுக்கும் அவர் சமீபத்தில் மன்னிப்பு கடிதம் எழுதியுள்ளார். போப் தனது கடிதத்தில் குறிப்பிடுகையில், பாதிரியார்கள் தாங்கள் செய்த தவறான செயலை ஒப்புக்கொள்ள வேண்டும். இந்த செயல்கள் உங்கள் மதிப்பின் தரத்தை தாழ்த்தக்கூடியது. இந்த தகாத செயலால் பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்கிறேன். உங்களுக்கு நேர்ந்த இந்த துயரம் குறித்து வெட்கமும் வேதனையும் அடைகிறோம். அயர்லாந்து நாட்டு பாதிரியார்கள் செய்த துரோகச் செயல் குறித்து விசாரிக்கப்படும். அயர்லாந்து மக்கள், தேவாலயங்கள் மீது மீண்டும் நம்பிக்கை கொள்ளும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.போப்பின் இந்த எட்டு பக்க கடிதத்தால் மற்ற நாட்டு கத்தோலிக்கர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். அயர்லாந்து நாட்டு சம்பவங்களைத் தான் போப் கண்டித்திருக்கிறார். அனைத்து நாடுகளுக்கும் இவரது மன்னிப்பு கடிதம் பொருந்தவில்லை என, அமெரிக்க கத்தோலிக்கர்கள் தெரிவித்துள்ளனர். தவறு செய்த பாதிரியார்களை பதவி விலக வற்புறுத்தும்படி போப் இந்த கடிதத்தில் தெரிவிக்காததற்கு சிலர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
------------------- நன்றி:- “விடுதலை” 22-3-2010
13 comments:
நாத்திகம் பேசும் பலர் பிராமண எதிர்ப்பு ஒன்றையே குறிக்கோளாக வைத்திருக்கும் போது, உண்மையான பெரியார் தொண்டனாக நீங்கள் தெரிகின்றீர்கள். எல்லா மதங்களிலும் தவறு இருக்கின்றது கண்டு சொல்லுங்கள். செய்வீர்கள் என்ற நம்பிக்கையுடன்.
//நாத்திகம் பேசும் பலர் பிராமண எதிர்ப்பு//
பிரமாணம் என்பதே மனித குலத்துக்கு எதிரானது. இந்த சொல்லே வர்ணாசிரமத்தை அடிப்படையை உணர்த்துவது. பார்ப்பனர் என்பதும் பார்ப்பனீயம் என்பது வேண்டுமானால் ஜாதியை குறிப்பது என்று எடுத்துக்கொள்ளலாம். இது ஒன்றே மனிதனை பிரித்தாளுகிறது. இது தான் இங்கே பிரச்சினை. மற்றவை எல்லாம் பிறநாட்டிலிருந்து வந்தவைகள் தான். ஆகையால் தான் அனைவரும் பார்ப்பனர், பார்ப்பனீயத்தை எதிர்க்கின்றனர். இவர்கள் தான் இங்கு பிரச்சினை. போப்பாண்டவரா? வர்ணாசிரமத்தை ஆதரிக்கிறார். அது இன்னொரு சமயப்பிரச்சினை அந்த பிரச்சினையை அந்த சமயத்தை சார்ந்தவர்களே எதிர்த்துகொள்கின்றனர். வேறு வேறு கிருத்துவ உட்சமயங்களை கொண்டு. அதுமட்டுபில்லாமல் பொதுவுடமைவாதிகளும் எதிர்க்கின்றனர். நாம் பார்ப்பனீத்தை ஆதாரிக்காதவராக இருந்தால் நாம் அது பற்றி கவலைப்படவேண்டியதில்லையே? பார்ப்பனர், பார்ப்பனீயம் என்று இலட்சம் முறை குறை கூறினாலும் அது பற்றி ஏன் கவலைப்படவேண்டும். நாம் தான் அதிலிருந்து வந்துவிட்டோமே? இங்குள்ள குறைக்கு அங்குள்ள குறைகள் தீர்வாகாது? ஜாதியையும் மதத்தையும் சாராதாவர்கள் எந்த மனித குல அதர்மத்தையும் எதிர்ப்பார்கள். அவர்கள் கண்முன் எந்த சமயமும் தெரியாது. எந்த ஜாதியிம் தெரியாது. மது பாட்டிலை கையிலெடுத்து கொண்டும், மதுவை குடித்துக்கொண்டே போதையிலேயே மதுவிலக்கு பிரச்சாரத்தை எவராலும் பண்ண முடியாது. பண்ணினால் மக்களின் விமர்சனத்துக்குள்ளாகும். இங்குள்ள பிரவினைக்கு பார்ப்பனர், பார்ப்பனீயம் இதுவே அனைத்துக்கும் காரணம். அவர்களால் உருவாக்கப்பட்ட மனுதர்மமே காரணமாகும் இன்றுவரை கையில் தூக்கி கொண்டு அலைகிறார்களே அதுவே காரணம். இந்த அதர்மத்தின்முன்னே போப்பாண்டவர் பிரச்சினை ஒரு தூசு.
Post a Comment