Search This Blog

20.3.10

அடல்ட்ஸ் ஒன்லி மகாபாரதம்!



2009ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது அளிக்கும் விழா 16.10.2010 மாலை டில்லி சாகித்ய அகாடமியின்

காமினி அரங்கத்தில் நடைபெற்றது. தெலுங்கு மொழியில் யர்லகட்ட லட்சுமி பிரசாத் என்பவருக்கு விருது அளிக்கப்பட்டது.

திரவுபதி என்னும் தெலுங்கு நூலை எழுதியதற்காக அந்த விருது வழங்கப்பட்டது.

அந்த நேரத்தில் ஆர்.எஸ்.எஸ். வகையறாக்களைச் சேர்ந்த பத்து பேர்கள் திடீரென்று மேடைக்கு ஓடிச் சென்று, விருது பெற்றவருக்கு எதிராகக் குரல் எழுப்பி, அவர் கையில் இருந்த விழா மலரையும் பறித்து வீசி எறிந்தனர். எதிர்பாரா விதமாக நடைபெற்ற இந்த அநாகரிக அவலத்தைக் கண்டு பார்வையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இவ்வளவுக்கும் விருது பெற்றவர் சாதாரணமானவர் அல்லர். ஆந்திர மாநில இந்தி அகாடமியின் தலைவர், ஆந்திரப் பல்கலைக் கழகம் விசாகப்பட்டினத்தில் இந்தித் துறையின் தலைவராகவும் இருந்தவர். மகாபாரதத்தை அடிப்படையாகக் கொண்டு திரவுபதைபற்றி எழுதிய அவரின் நூலுக்குத்தான் சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது.

திரவுபதையை இழிவுபடுத்தி அந்த நூலில் எழுதப்பட்டதாகக் குற்றச்சாற்று.

அறிவுத்துறை வேலை செய்திருந்தால் அந்த நூலுக்கு மறுப்பு எழுதி இருந்தாலும் கண்ணியம் கடுகு அளவுக்கும் அவர்களிடம் இருந்திருந்தால் வேறு வகைகளில் எதிர்ப்பைக் காட்டியிருக்கலாம்.

இரண்டும் இல்லாதவர்கள் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் என்பதால் அவர்களுக்கே .உரித்தான தனித்தன்மையான காலாடித்தனத்தில் இறங்கி இருக்கின்றனர்.

இந்தத் தகவலை விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு நேரில் சென்ற தோழர் அருள்பேரொளி (சென்னை - வேளச்சேரி) என்பவர் நமக்குத் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் இந்து மதத்தின் இதிகாசங்கள் என்று கூறப்படும் இராமாயணம் மகாபாரதம் மற்றும் கீதையை அக்குவேர் ஆணி வேராக அலசி எடுத்து வந்திருக்கிறோம் _ வருகிறோம் அவற்றை பல நேரங்களில் எரியூட்டவும் செய்திருக்கிறோம்.

இராவண லீலாவே நடத்தி இராமன், சீதை, இலட்சுமணன் உருவங்களை பல லட்சம் மக்கள் முன் எரித்தும் காட்டியுள்ளோம்! ஆனால் வேறு மாநிலத்தில் வேறு வகையாக நடக்கிறது என்றால் அதன் காரணம் என்ன?

அங்கு ஒரு பெரியார் இல்லை; அங்கு ஒரு மணியம்மையார் இல்லை; அங்கு ஒரு வீரமணி இல்லை; அங்கு ஒரு திராவிடர் கழகம் இல்லை; அங்கு கருஞ்சட்டைத் தொண்டர்கள் இல்லை என்றுதான் பொருள்.

யார் இந்த திரவுபதி?

5 கணவன்கள் போதாது என்று கருதி ஆறாவது ஆசாமியாகிய கர்ணன் மீதும் காமம் கொண்டவள் தானே? இல்லை என்று மறுக்க முடியுமா? அதற்கு அந்தத் திரவுபதி கூறும் காரணம் என்னவாம்?

தருமன் - சதா வேதாந்தம் படிப்பவன்;

பீமன் - உடல் பெரியவன், குண்டன், சதா சாப்பிட்டுக் கொண்டே இருப்பவன்;

அர்ச்சுனன்- ஏகப்பட்ட மனைவிகளுக்குச் சொந்தக்காரன், ஆற்று மணலை எண்ணினாலும் அர்ச்சுனன் மனைவியை எண்ண முடியாதாம்!

நான்காவது கணவனான நகுலனும், 5ஆவது கணவனான சகாதேவனும் எனது பிள்ளைகள் போன்றவர்கள். அதனால்தான் கர்ணன் மீது காமம் கொண்டதாக ஒருத்தி சொல்கிறாள் என்றால், அந்தப் பெண்ணின் யோக்கியதையை தெரிந்து கொள்ள வேண்டாமா?

அய்ந்து பேருக்கும் தேவி அழியாத பத்தினி என்று இந்துமதம் இத்தகைய பெண்ணைப் போற்றுகிறது; கடவுளாகத் தொழுகிறது என்றால் இந்த மதத்தின் யோக்கியதை எத்தகையது என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாமே!

இந்து மதத்தில் அழியாத பத்தினியாக ஒருத்தி இருக்கவேண்டுமானால் ஒரே நேரத்தில் பல கணவன்மார்கள் இருக்க வேண்டும் என்று தானே பொருள்? உண்மையைச் சொன்னால் உடல் எரிவானேன்? அறிவார்ந்த ஓர் அவையின் மேடையில் ஏறிக் காலித்தனத்தில் இறங்குவானேன்?

மகாபாரதத்தில் விபச்சாரத்தில் பிறக்காத ஒரே ஒரு ஆள் உண்டா? பந்தயம் கட்டிக் கேட்கிறேன் என்று பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் கேட்டாரே, எந்த பாரதப் பிரசங்கி இதுவரை பதில் சொல்லி-யிருக்கிறார்? மகாபாரதத்தின் யோக்கியதைக்கு வேறு எங்கும் தேடிப் போக வேண்டாம்.

தொலைக்காட்சியில் மகாபாரதம் ஒளிபரப்பப்பட்டபோது நேயர் ஒருவர் இந்து ஏட்டில் (18.12.1988) எழுதிய கடிதம் ஒன்று போதுமே! கடிதம் எழுதியவர் சென்னையைச் சேர்ந்த டி.ஆர். சுந்தரம். கடிதம் இதோ:

தர்மபுத்திரா (யுத்திஸ்த்ரா), வாயுபுத்ரா (பீமா) ஆசியோடு குந்திக்கு, தருமர் ஆகியோர் பிறக்கிறார்கள். தொலைக்காட்சியில் வாயுவைக் காட்டும்போது, உடனே குழந்தைகள். அந்த பிறப்புபற்றி சில கேள்விகளைக் கேட்கத் துவங்கி விடுகிறார்கள். பெற்றோர்களால் அந்த கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியவில்லை. அது தெய்வீக சம்பந்தப்பட்டது; எனவே அதுபற்றி எல்லாம் குழந்தைகள் கேள்வி கேட்கக் கூடாது என்றுதான் பெற்றோர்கள் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது. இப்போது மேலும் தொடர்கள் ஒளிபரப்பாக இருக்கின்றன. பாண்டவர்களும், கவுரவர்களும் சூதாடுவது, பாண்டவர்கள் தோற்பது, மனைவியை வைத்தே சூதாடுவது, திரவுபதையைத் துகில் உரிவது ஆகிய காட்சிகள் எல்லாம் வர இருக்கின்றன. இவைகளை குழந்தைகளை வைத்துக் கொண்டு எப்படிப் பார்க்க முடியும்?

நாம் நமது குழந்தைகளிடம் திரவுபதி 5 ஆன்மிக சக்திகளின் சின்னம்; எனவே 5 பேரை மணந்து கொண்டார் என்று கூறினால், அவர்கள் திருப்தி அடைந்து விடுவார்களா? அல்லது கட்டிய மனைவியை, மற்றவன் துகில் உரிவதைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் புருஷலட்சணம் என்று அவர்களிடம் கூற முடியுமா? நமது காலத்தைவிட இக்காலக் குழந்தைகள் மிகவும் புத்திசாலிகள். 3000, 5000 ஆண்டுகளுக்குமுன் நடந்ததை இப்போது அவர்களிடம் விவரித்து, குழப்பத்தை ஏற்படுத்தக் கூடாது. எல்லாவற்றுக்கும் தெய்வீக முத்திரையைக் குத்தி, நாம் குழந்தைகளிடம் வியாக்யானம் செய்து கொண்டிருக்க முடியாது.

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மகாபாரதத் தொடர் வயது வந்தவர்கள் மட்டுமே பார்க்கக் கூடியதாகும். எனவே நள்ளிரவு சினிமாக்களை ஒளிபரப்பும் நேரத்தில், இதை ஒளிபரப்புவது நல்லது இவ்வாறு அந்த வாசகர் தமது கடிதத்தில் எழுதியிருக்கிறார்.

இந்த யோக்கியதையில் உள்ளதுதான் மகாபாரதம். இதைச் சொன்னால் மானம் போகிறதாம்! அப்படியென்றால் இவர்களின் மான உணர்வின் யோக்கியதைதான் என்ன?

------------------மின்சாரம் அவர்கள் 20-3-2010 “விடுதலை” ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை

4 comments:

passerby said...

மகாபாரதம் எழுதப்பட்ட காலம் ஆதிகாலம். அதற்கு முன் அது செவிவழிக்கதை. மகாபாரதம் என்பது ந்டந்ததோ அல்லது கதைக்கப்பட்டதோ, என்பவை நடந்தது நினைப்புக்கெட்டா நெடுங்காலத்திற்கு முன்.

காலத்தைக் காட்டும் கண்ணாடியே இலக்கியம். Literature holds mirror to life. எனவே, அக்கால கலாச்சாரப்படியே கதாபாத்திரங்கள் இருக்கின்ற்ன.

இன்று எந்த இந்துவாவது தன் மகளை பலகணவன்மாரைக் கொண்டு வாழ் என்று சொல்கிறார்களா? ஏதோ, இந்துக்கள் ம்காபாரத்த்தில் சொன்ன அனைத்து கலாச்சாரக் கூறுகளை ஏற்றுக்கொணடமாதிரியல்லவா சீறுகிறீர்கள்?

பத்தினி என்றால் யார்? என்ப்தற்கு உங்கள் defintion என்னவோ? பலதாரம் மணந்த பெண் - அக்கால வழக்கப்படி - அவள் பலகணவர்களின் விருப்பபபடி வாழ்வானாயின், அது ப்த்தினித்தன்மையென்பேன்.

ஏன் அக்காலத்திற்கு போகிறீர்கள்? திடீரென ஒரு இயற்கைக்கோளாறினால், பெண்குழந்தைகள் எண்ணிக்கை கிடுகிடுவெனக்குறைய், ஆண்கள் எண்ணிக்கை பல மடங்காகிறது. ஒருவனுக்கு மனைவி என்பதே சாத்திய்மில்லை எனவாகிறது. ஆணுக்கும் பெண்ணுக்கும் உடலுறுவு இல்லாமல் மனித வாழ்க்கையிருக்கமுடியாது. Food, shelter and Sex are three essential requirments of life: without them, life is impossible.

நண்பரே, மகாபாரதம் திரும்பும். பத்தினி என்றால் யார் என்பதன் defintion மாறும். ஆண்-பெண் உறவே தலைகீழாக மாறும்.

இந்துக்கள் தங்கள் மதத்தில் வேண்டியவ்ற்றை எடுத்துக்கொண்டு வேண்டாவற்றைத் தள்ளிவிட அவர்கள் மதம் அனுமதிக்கிறது.

புராணங்கள் கதைகள். அவற்றை முழுக்க முழுக்க ஏற்றுக்கொள்ளத் தேவையில்லை. அவற்றின் பலகதைகள் குழந்தைகளுக்குத் தேவையில்லை என இந்துக்களுக்குத் தெரியும்.

அதைச்சொல்ல நீங்கள் வரவேண்டுமா?

Please write something originally.

லெனின் said...

கிறிஸ்தவத்தில் இயேசு பிறந்ததும் சந்தேகபிறப்பு தானே. யாருக்கு பிறந்தார் என்பதற்கும் விடை இல்லையே . இதையும் விபச்சாரி மகன் இயேசு என சொல்லும் நேர்மை உங்களுக்கு உண்டா. கேட்கிறவன் கேணையாய் இருந்தால் மணியம்மை பல்கலைக்கு அங்கீகாரம் உண்டு என்பார்களாம் .

mightymaverick said...

பெரியாரின் இரண்டு மனைவிகளும் பத்தினிகள் தான் என்றால், திரௌபதியும் பத்தினிதான்... ஒருவகையில் சொல்வதென்றால் பெரியாரும் ஆணாதிக்க கொள்கை உள்ளவர் தான்... அவருடைய சீடர்கள் என்று சொல்லும் தி.க. காரர்களில் ஒழுக்கமானவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்... சமீபத்தில் தான் பெரியார்தாசன் என்ற ஒருவர் ரெண்டாவது முறையாக மதம் மாறி இருக்கிறார்; கேட்டால் நான் பெரியாரின் கடவுள் எதிர்ப்பு கொள்கை தவிர்த்து மற்ற எதையும் விட வில்லை என்கிறார்... இதெல்லாம் பெரியார் கொள்கையை பின்பற்றும் எத்தனை பேர் விமர்சித்தார்கள்... ஏதோ பழைய சங்கதிகளை எல்லாம் "copy,paste" செய்து விட்டால், பெரியார் உத்தமர் ஆகி விட மாட்டார்... சொல்லப்போனால், மகாபாரதத்தில் தான் முதல் நேரடி ஒளிபரப்பு (live telecast) நடந்தது... இன்று அந்த கண்டுபிடிப்புக்கு யாரோ ஒருவன் காப்புரிமை வாங்கி வைத்திருக்குறான்... அதையெல்லாம் எதிர்க்காது பெரியார் தாசர்கள் என்னய்யா புடுங்கிகிட்டு இருக்கீங்க...

thiravidaraj said...

மகாபாரதத்தில் அப்படி என்ன live telecast நடந்திருக்கு. கொஞ்சம் விளக்கம் தேவை