Search This Blog

5.3.10

மக்களுக்குத் தரும் போதைகள் நவக்கிரக கோவில்கள்



(கிரகங்களின் எண்ணிக்கை தற்போது பத்து, மேலே சொல்லியுள்ளவற்றில் இராகு, கேது, என்பவை (சாயாகிரகம்) இல்லாதவை. இந்த ஒன்பதைச் சொல்லி, அவற்றிற்குக் கோவில்கள் அமைத்தும், சிலைகளை கோவில்களில் அமைத்தும், அவற்றை விளம்பரப்படுத்தி, மக்கள் அங்கு சென்று வர ஆசைகாட்டியும், பார்ப்பனர்கள் ஏமாற்றி வருகிறார்கள். நம்மக்களும் காலத்தையும் பொருளையும், மானத்தையும் இழந்து வாழ்கின்றனர். மக்கள் இவவற்றை புறக்கணிக்க வேண்டும்)

2. சபரிமலை அய்யப்பன் கோயில் 18 படிக்கட்டுகளும் ஒவ்வொரு கடவுளைக் குறிப்பதாகுமாம்.

ஒன்றாம் படி _ சூரியன்

இரண்டாம் படி _ சிவன்

மூன்றாம் படி _ சந்திரன்

நான்காம் படி _ பராசக்தி

அய்ந்தாம் படி _ செவ்வாய்

ஆறாம் படி _ முருகன்

ஏழாம் படி _ புதன்

எட்டாம் படி _ விஷ்ணு

ஒன்பதாம் படி _ குருபகவான்

பத்தாம் படி _ பிரம்மா

பதினொன்றாம் படி _ சுக்கிரன்

பன்னிரெண்டாம்படி _ ரங்கநாதன்

பதின்மூன்றாம் படி _ சனீஸ்வரர்

பதினான்காம் படி _ எமன்

பதினைந்தாம் படி _ ராகு

பதினாறாம் படி _ காளி

பதினேழாம் படி _ கேது

பதினெட்டாம் படி _ விநாயகர்

-----------------------------(தினகரன் பொங்கல் மலர்)

(அய்யப்பனே ஒரு கற்பனை; அவன் பிறப்பே அசிங்கம். இரு ஆண்களுக்குப் பிறந்தவன் என்று கூறி. அவன் பெருமைக்கு கதைகள் வேறு. அந்தக் கோயிலில் 18 படிகள் இருந்தால், அவை ஒவ்வொன்றும் ஒரு கடவுளைக் குறிக்கிறதாம். சபரிமலை செல்லும் பக்தர்கள் பலகாலமாக அந்தப் 18 படிகளிலும் ஏறி மிதித்துக் கொண்டுமேலே சென்று அய்யப்பனைப் பார்க்கிறார்கள். இத்தனை ஆடம்பரமும் காட்டு மிராண்டித்தனமும் வெளியில் தெரிபவை. இந்தப் படிகளின் விளக்கத்தின்படி, 18 படிகளும் 18 கடவுள்கள் என்றால் , பக்தர்கள் அனைவரும் அந்தப் பதி னெட்டுக் கடவுள்களையும் ஏறி மிதித்துச் சென்று, திரும்பி மிதித்துக்கொண்டு வருகின்றனர். என்றுதான் அருத்தம். கடவுளர் மதிப்பு இப்படிப்பட்ட முட்டாள் தனத்தால் சந்திசிரிக்கின்றன. கடவுளைக் கற்பித்தவன் முட்டாள் என்பதற்கு இதுவே சான்றாகும்)

-----------------------தஞ்சை நாராயணசாமி அவர்கள் எழுதிய கட்டுரை --”விடுதலை” ஞாயிறுமலர் 27-2-2010

0 comments: