Search This Blog

6.8.09

கிருஷ்ண பகவானின் அசிங்கமான ஆபாசக் கதைகள்

கிருஷ்ணனின் அசிங்கமான விளையாட்டுகள்
தந்தை பெரியார் அம்பலப்படுத்தினார்ஜகநாதம் என்பது இந்தியாவில் உள்ள புண்ணிய ஸ்தலங்களிலெல்லாம் மிக முக்கியமானது என்று சொல்லப்படுவது இந்துக்கள் என்போர்களில் தென்னாட்டில் உள்ள சைவர்களில் யாரோ ஒரு சிலரால் மதத்துவேஷம் காரணமாக ஜகநாதம் ஒரு சமயம் அலட்சியமாகக் கருதப்பட்டாலும், இந்தியாவில் உள்ள பெரும்பாலோராலுமே முக்கிய ஸ்தலமாகக் கருதப்படுவது. அந்த ஸ்தலத்தின் முக்கியதுவத்திற்கு உதாரணம் என்னவென்றால், அந்த ஜகநாதம் என்கின்ற ஊரின் எல்லைக்குள் ஜாதி வித்தியாசம் பார்க்கக் கூடாது என்று சொல்வார்கள். அதற்கு உதாரணமாக அந்தக் கோயிலில் பூஜை பண்ணுகின்றவர்கள் அந்தப் பக்கத்திய நாவிதர்கள். அவர்கள் குளத்தருகில் அடைப்பத்துடன் நின்று கொண்டு சவரம் செய்வார்கள். பிறகு கோயிலில் பூசாரியாகவும் இருப்பார்கள். அந்தக் கோயிலில் பூசை செய்யும் உரிமையே அந்த ஊரிலுள்ள நாவித வகுப்பைச் சேர்ந்தவர்களுக்குத்தான் உண்டு என்கின்றார்கள். அங்கு சுவாமிக்கு முன்னால் சாப்பாட்டை மலைபோல் குவித்து ஆராதனை செய்வார்கள். அந்தச் சாதத்தை பூசாரிகள் பங்கு பிரித்து எடுத்துக் கொண்டு வெளியில் வந்து விற்பார்கள். யாத்திரைக்காரர்கள் யாராயிருந்தாலும் அதை வாங்கிச் சாப்பிட வேண்டும். மற்றபடி கடையிலும் சாதத்தை சட்டியில் வைத்துவிற்பார்கள். ஜாதி வித்தியாசம் என்பதில்லாமல்யாவரும் வாங்கிச் சாப்பிடுவார்கள். தவிர, அந்த ஸ்தல எல்லைக்குள் எச்சில் வித்தியாசம் பார்க்கக் கூடாது என்பார்கள். இலையில் உள்ள சாப்பிட்ட மீதியை எடுத்து திரும்பவும் சட்டிக்குள் போட்டுக் கொள்வார்கள். கடைகளில் விற்பனைக்காக வைத்திருக்கும் சாதச்சட்டியில் யாரும் கைவிட்டு சாதத்தை எடுத்து வாயில் போட்டுப் பார்த்து மீதியை சட்டியிலேயே போட்டுவிடலாம் அதை யாரும் ஆட்சேபிக்க மாட்டார்கள்.

ஜெகநாதத்திலுள்ள அந்த ஜெகநாதர் கோயிலுக்குள் யாரும் போகலாம்; சாமியைத் தொடலாம்; சாமியைச் சுற்றலாம்; காலைத் தொட்டுக் கும்பிடலாம். இது மாத்திரமல்லாமல், அந்த எல்லைக்குள் யாரும் திதி, விரதம், தர்ப்பணம் முதலிய அனுஷ்டானங்கள் ஒன்றும் செய்யக்கூடாதாம். செய்தால் பாவமாம். அன்றியும், அங்குள்ள சாமிகள் கிருஷ்ணன், பலராமன், சுபத்திரை ஆகிய மூவர். அதாவது மற்ற இடங்களைப் போல் சாமி புருஷன் பெண் ஜாதியுடன் இல்லாமல் அண்ணன், தம்பி, தங்கை ஆகிய மூன்று பேர்களுக்கும் தங்கையாகிய சுபத்திரையை நடுவில் வைத்து அண்ணன்மார் இருவரும் இரு பக்கத்தில் நிற்கின்றார்கள். இதுவும் மரக்கட்டையில் அரைகுறையாய் செய்த உருவங்கள்தான், விக்கிரகங்கள்.

இந்த ஊரைப்பற்றிச் சொல்லும்போது சர்வம் ஜகநாதம்என்றுசொல்லுவதுஒருவழக்கம்.அதாவது ஜாதி, மதம், எச்சில், விரதம், முறை முதலிய வித்தியாசம் அந்த எல்லைக்குள் இல்லை என்பதைக் காட்டுவதற்காகச் சொல்லுவது. இதற்கு ஆதாரமாக இரண்டு விதமான கதைகள் சொல்லப்படுவதுண்டு.

ஒன்று,

இப்படி விஷ்ணு என்னும் முழுமுதற் கடவுளின் அவதாரமாகிய கிருஷ்ணன் என்னும் கடவுள் இறந்த பிறகு அந்தக் கடவுளின் பிணத்தை துவாரகைச் சுடுகாட்டில் வைத்து தகனம் செய்து அது எரிந்து கொண்டிருக்கையில் திடீரென்று சமுத்திரம் பொங்கியதால் துவாரகை முழுவதும் தண்ணீருக்குள் ஆழ்ந்துவிட்டபோது இந்தக் கடவுளின் பிணமும், எரிந்து கொண்டிருந்த சுடுகாடும் தண்ணீருக்குள் மூழ்க நேரிட்டதால், அரைகுறையாய் வெந்த பிணக்கட்டையானது தண்ணீரில் மிதந்து கரை ஓரமாய் ஒதுங்கியதாகவும், அந்த ஊருக்கு ஜகநாதம் என்று சொல்லப்பட்டதாகவும், அந்த ஊரார் அந்தக் குறை பிணத்தை எடுத்து அதன் சக்தியை ஒரு மரக்கட்டையில் ஏற்றி அம் மரக்கட்டையில் இருந்து குறை பிணம் போலவே ஒரு உருவம் செய்து அதை வைத்து பூசித்து வருவதாகவும், அந்த ஸ்தலத்தின் சரித்திரம் சொல்லுகின்றது.

மற்றொன்று,

கிருஷ்ணபகவானின் லீலா விநோதங்களில் ஒன்றாகிய கோபிகைகளுடன் கூடி குலாவி வருவதை கிருஷ்ண பகவானின் தங்கையாகிய சுபத்திரை பார்த்து பொறாமைப்பட்டு, ஸ்ரீ கிருஷ்ணபகவானிடம் சென்று "ஓ அண்ணாவே! நீ எவ்வளவோ அழகாகவும், பெருமை உள்ளவனாகவும் இருக்கின்றாய். உன்னுடன் கூடி அனுபவிக்கும் பெருமை கோபிமார்கள் எல்லோரும் பெற்று அனுபவித்து வருகின்றார்கள். ஆனால், நானோ உனக்கு தங்கையாகப் பிறந்துவிட்ட காரணத்தினால் அந்த சுக போகத்தை அடைய யோக்கியதையில்லாதவளாய்ப் போய் விட்டேன்" என்று துக்கப்பட்டதாகவும், கிருஷ்ணபகவான் பார்த்து, "உலகத்திலேயே மிகவும் புண்ணிய பூமியாகிய ஜகநாதம் என்கின்றதாக ஒரு ஸ்தலம் இருக்கின்றது. அங்கு எந்தவிதமான வித்தியாசமும் கிடையாது; எந்தவிதமான செய்கைக்கும் பாவம் கிடையாது; ஆதலால் அந்த ஜகநாதத்திற்குப் போய் எல்லாவிதமான சுகங்களையும் அனுபவிக்கலாம்" என்பதாகச் சொல்லி ஜகநாதத்திற்கு வந்து கிருஷ்ணன், சுபத்திரை, பலராமன் ஆகிய சகோதர சகோதரிகள் ஒன்று சேர்ந்து இருப்பதாகவும் ஒரு கதையை ஜெகநாத பண்டாக்கள் ஸ்தல மகிமையைச் சொல்லும் முறையில் சொல்வதுண்டு.

---------------- தந்தைபெரியார்-(நன்றி:-"விடுதலை" 5-8-2009 பக்கம் -8)


இந்தக் கிருஷ்ணனின் பிறந்த நாள் வருகிறதாம்! மான உணர்ச்சி உள்ளவர்கள் கொண்டாடலாமா?

1 comments:

tncsc said...

dai moodittu inimel hindhu madhatha ilivu paduthama olunga iru