
மதமற்ற உலகம்
மதமற்ற உலகம் எனும் தலைப்பில் கருத்தரங்கம் நம் பகுத்தறிவாளர் கழக மாநாட்டினையொட்டி நடைபெறவிருக்கிறது. ஏன் இந்தத் தலைப்பு? மதம் மக்களுக்குத் தேவை - ஒற்று மையைக் காப்பதற்கு - ஒழுக்கத்தை வளர்ப்பதற்கு - என்றெல்லாம் கூறப்படும்போது, மதமற்ற உலகமா? அது எப்படி அமையும்? கட்டுப்பாடற்ற நிலையில் கட்டவிழ்த்து விடப்பட்ட மக்களாக அல்லவா, மாறிவிடுவார்கள் மதமற்ற நிலையில்! கூடாது, இதை அனுமதிக்கக் கூடாது என்றெல்லாம் பரபரக்கலாம் பரமனின் பக்தர்கள் - மதத்தின் பாதுகாவலர்கள்.
லுக்ரெடியஸ் எனும் அறிஞர் சொன்னார், மதம் மனிதர்களைக் கெட்டவைகளின் உச்சிக்கே கொண்டு போய்விட்டது என்று! (Tantum Religio Potuit Suadere Malorum) மதம் மக்களை நல்வழிப்படுத்தவில்லை, மாறாக மக்களைக் கெட்ட வர்களாக, கொடுமைக்காரர்களாக, கொலைகாரர்களாக ஆக்கி யுள்ளது என்பதுதான் வரலாற்றின் பக்கங்களில் பதிவாகியிருக்கும் உண்மை.
கிரேட் பிரிட்டன் எனும் நாடு - இங்கிலாந்து, அயர்லாந்து, ஸ்காட்லாந்து வேல்ஸ் எனும் நான்கு நாடுகளின் இணைப்பு. இவற்றில் அயர்லாந்து கத்தோலிக்கக் கிறித்துவர்களைக் கொண்ட பகுதி. மற்றவை, புரொடஸ்டன்ட் பிரிவுக் கிறித்துவர்களைக் கொண்டது. பெரும்பான்மையுடன் புரொடஸ்டன்ட் கிறித்துவர்கள் சிறுபான்மை யினரான அயர்லாந்தின் கத்தோலிக்க கிறித்துவர்களுக்குத் தந்துவரும் கொடுமைகள் ஏராளம்.
அயர்லாந்தில் என்ன நிலை? கத்தோலிக்கக் கிறித்துவம் மணவிலக்கை அனுமதிப்பதில்லை. திருமணம் என்பது கர்த்தரே கவனித்துப் போட்ட முடிச்சு, அதனை மனிதர்கள் அவிழ்க்கக் கூடாது. ஆகவே மணவிலக்கு அளிக்கக் கூடாது என்கிறது அந்த மதம். ஆனால் மத ஓடத்தில் ஏறியிருந்தாலும், அந்த மாந்தர்கள் மணவிலக்கு கோருகிறார்கள், அதற்கான சட்டம் கோரினார்கள். தரலாமா? கூடாதா? என்பதை வாக்கெடுப்பு நடத்தி முடிவு செய்யலாம் என்றது அரசு, 1996 இல்!

நாத்திக நாடான அல்பேனியாவில் பிறந்த (அன்னை) தெரசா பழுத்த கத்தோலிக்க கிறித்துவர். கொல்கத்தாவில் மக்கள் தொண்டு செய்த மனிதநேயர். அவரே, மதம் பிடித்து விட்ட காரணத்தால் கொல்கத்தாவிலிருந்து அயர்லாந்துக்குப் பறந்து போய் மண விலக்குக்கு எதிராகப் பிரச்சாரம் செய்தார். ஆனால் மக்கள் எதிர் விதமாக வாக்கு அளித்து, மணவிலக்கு அளிக்கும் விதமாக அந்நாட்டின் அரசமைப்புச் சட்டத்திற்குத் திருத்தச் சட்டம் கொண்டுவரச் செய்து, குறைந்த பெரும்பான்மையில் வெற்றி பெற்று விட்டனர். குடித்துவிட்டுத் தினமும் போட்டு அடிக்கும் குடிகாரக் கணவன்களிடமிருந்து விடுதலை பெறும் நிலையை அயர்லாந்து மனைவியர் பெற்று விட்டனர். குடிப்பதிலிருந்தும் மனைவியரை அடிப்பதிலிருந்தும் ஆண்களைத் தடுத்து ஒழுக்கத்தைக் கடைப் பிடிக்கச் செய்திடக் கையாலாகாத கத்தோலிக்கம் மனைவியரை மட்டும் வாழ்நாள் முழக்கக் கஷ்டப்பட அனுமதித்ததே, என்ன நியாயம்? ஜோசப்புக்கு ஒரு நீதி, மேரிக்கு ஒரு நீதியா?
ஒரு மதத்தின் இரு பிரிவினரிடையே இது என்றால், லெபனான் நாட்டில் இரு வேறு மதத்தினரிடையே வேறு நிலை. அந்நாட்டின் அதிபர் கிறித்துவராக இருக்க வேண்டும். நாடாளுமன்றத்தின் தலைவர் இசுலாமியராக இருக்க வேண்டும். இப்படியே, அதிகாரம் மிக்க பெரும் பதவிகளில் இரு மதத்தினரும் மாற்றி மாற்றி அமர்த்தப்பட வேண்டும் என்பதே நாட்டின் சட்டம். இதுவும் சரிப் பட்டு வரவில்லை. ஷியா பிரிவு முசுலிம்கள் அடித்தட்டில் வைக்கப் பட்டுள்ளனர். குர்து எனும் இசுலாமியர்களுக்கு வாக்குரிமையே கிடையாது என்ற நிலை. அரசியல் அதிகாரத்தையே, மதம் கூறு போட்டு விட்ட கொடுமை. மதம் மக்களுக்காகவா? மக்கள் மதத்திற்காகவா?
ஈராக்கின் அதிபராக இருந்த சதாம் உசேன் பழுத்த இசுலாமிய மதவாதி. அவர் சார்ந்த அரசியல் கட்சியான பாத் கட்சி (Baath Party)யில் எம்மதத்தவரும் சேரலாம் என்பது விதி. யூதர்கள்கூட இக்கட்சியில் அங்கம் வகிக்கின்றனர். சதாம் உசேனின் நாட்டுக் கொடியில் அல்லா மிகப் பெரியவன் (அல்லாஹு அக்பர்) என்ற வாசகங்களையே பொறித்து வைத்தவர். ஆனாலும் பக்கத்தில் உள்ள இசுலாமிய நாடான ஈரான் மீது 1979-இல் படையெடுத்த போது என்னஆயிற்று? சதாம் உசேன் காஃபிர் (infidel) என்றே ஈரான் நாடு கூறியது. கடவுள் நம்பிக்கை அற்ற மத விரோதியாம்! வேடிக்கை என்ன என்றால் இருவருமே ஒரே கடவுள் கொள்கையைக் கொண்ட ஒரே மதத்தின் வேறு வேறு பிரிவுகளைச் சேர்ந்தவர்கள். ஆனாலும் சதாம் உசேன் தொடுத்த போரின் விளைவாக அவரும் நாத்திகன் எனப் பேசப்பட்டார்.
இசுலாமிய மதத்தைச் சேர்ந்த ஜோர்டான் நாட்டின் அபுமுசாப் அல் ஜர்காவி என்பவர் ஏற்படுத்திய அல்கொய்தா அமைப்பு கொலை, சதிச் செயல்களில் ஈடுபடுவதற்கு என்றே தோற்றுவிக்கப்பட்டது. மத அடிப்படையில் மட்டுமே அனைத்தையும் நோக்கும் விபரீதமான அமைப்பு. ஈராக் நாட்டின் மக்கள் தொகையில் 2 விழுக்காடு மட்டுமே உள்ள கிறித்துவர்களின் சர்ச்களில் வெடிகுண்டு வைப்பதே இந்த அமைப்பின் வேலை. மது காய்ச்சுகிறார்களாம், மது விற்கிறார்களாம் ஆகவே கொல்லப்பட வேண்டுமாம்.
ஈராக்கில் இப்படி என்றால், ஈரானில் என்ன நிலை? இந்திய முசுலிம் சல்மான் ருஷ்டி என்பவர் எழுதிய நாவல் ஒன்றுக்காக அவரைக் கொல்ல வேண்டும் என்று மதத் தீர்ப்பு கொடுத்தது ஈரானின் அதிபர் அயத்துல்லா கொமேனி! இங்கிலாந்தில் வாழும் ஒருவருக்கு ஈரான் நாட்டில் தண்டனை வழங்கப்பட்டது. எந்நாட்டில் இருந்தாலும், எமது மதத்தைச் சேர்ந்தவரானதால் தண்டிக்கலாம் என்கிற விசித்திரமான வாதம்! ஆதாரத்தோடு அவர் எழுதியதை அறிவு நாணயத்துடன் ஆதாரம் காட்டி மறுக்கத் துப்பில்லாமல் தூக்குத் தண்டனை தருகிறது மதம்! அவரின் நூலைப் பதிப்பித்த பல்வேறு நாட்டினர் படுகொலை செய்யப்பட்டனர், மதவெறியர்களால்!
இதே ஷியா முசுலிம் வெறியர்களால் ஆப்கானிஸ்தான் நாட்டில் நடத்தப்பட்டது என்ன? அல்கொய்தா அமைப்பினரின் பங்காளிகளான தாலிபான் அமைப்பு உலகப் புகழ் பெற்ற பாமியான் புத்தர் சிலைகளை உடைத்துச் சேதப்படுத்தி உலகப் பெரும் இகழைத் தாங்கினார்களே! உருவ வணக்கம் கூடாது என்பவர்களாம்! நல்ல கொள்கைதான்! ஆனால் இவர்களின் போராட்டங்களின் போது இவர்கள் உயர்த்திப் பிடித்தது அயதுல்லா கொமேனியின் படம் பொறித்த பதாகைகளை! சதாம் உசேனின் படம் பொறித்த பதாகைகளைத் தூக்கிப் பிடித்துக் கொண்டே உருவ வழிபாடு கூடாது என்று அடுத்தவருக்கு மட்டும் அறிவுரை கூறுவது, அறிவுடைமையா?
கடவுள்மீது நாங்கள் நம்பிக்கை வைத்திருக்கிறோம் (In God We Trust) என்று டாலர் நோட்டில் அச்சடித்துத் தம் அறியாமையைப் பறைசாற்றும் அமெரிக்க நாட்டின் தலைமை வழக்குரைஞர் ஜான் ஆஷ்கிராப்ட் என்பார் கூறினார், அமெரிக்க நாட்டுக்கு அரசர் கிடையாது; கிறித்து மட்டுமே உண்டு! என்னேஅறியாமை!
அமெரிக்க நாட்டின் கிறித்துவப் பிரச்சாரகர் பில்லி கிரகாம் என்பவர் மதத்திற்காகச் சண்டை போட்டு மரித்துப் போனவர்கள் சுவர்க்கத்தில் இருக்கிறார்கள், பூமிக்குத் திரும்பி வர வேண்டும் என்று நினைத்தாலும் வர முடியாமல் நிலையாக சொர்க்கத்தில் இருப்பார்கள் எனப் பேசுகிறார். இதே மாதிரியில்தான் ஜிஹாத் எனும் மதப் பாதுகாப்புச் சண்டையில் செத்துப் போன இசுலாமியர்கள் சுவனத்தில் இருப்பார்கள் எனக் கூறுகிறது இசுலாம்!
நரகத்தை உருவாக்கிக் காட்டி, அதன் கொடுமைகளைப் பரப்பிப் பயங்காட்டி, மக்களை மிரட்டி, அதே நேரத்தில் மோட்சம், சொர்க்கம், சுவனம் என்றெல்லாம் கற்பித்து அதன் வாய்ப்பு வசதிகளைச் சுட்டிக் காட்டி, ஆசையை வளர்த்து - அப்பேர்ப்பட்ட வாழ்வு, சாவுக்குப் பிறகு கிடைக்கும். ஆகவே மதத்திற்காகச் சாகப் பயப்படாதே என மதவெறி கொண்ட மடையர்களை மயக்கிச் சதிச் செயல்களில் ஈடுபட வைக்கின்றனர்.
இந்தக் கற்பனைகளை நம்ப வைக்க வேண்டும் என்பதற்காக மேலும் பொய்களை, கற்பனைகளை, அதிசயங்களைத் தத்தம் மதத்திற்குக் கற்பித்துப் பரப்பி வந்துள்ளனர்.
கல்யாணம் ஆவதற்கு முன்பே, கணவன் மனைவி உறவு கொள்வதற்கு முன்பே, கன்னிகழியாத மேரியின் கருப்பையில் கருவளர்கிறது. அதற்குக் காரணம், பரிசுத்த ஆவி என ஒரு கதையைக் கட்டிப் பரப்புகின்றனர் கிறித்துவர்கள்.
பழங்காலக் கிரேக்கக் கடவுளான ஜூபிடர் கன்னிப் பெண் டானே என்பாளிடம் பொன்மழையாகப் பெய்து குழந்தையை அவள் கருப்பையில் வளர விட்டதாகவும், அதுதான் பெர்சியுஸ் எனும் (பாதிக்) கடவுள் என்றும் கிரேக்கர்கள் சொல்லி வைத்தார்கள். அதே கதையைக் கிறித்துவர்கள் நகலெடுத்து வைத்துள்ளனர்.
காலிகஸ் எனும் பாம்பையே ஆடையாகக் கொண்ட தேவதை, வானத்திலிருந்து பெற்ற இறகுப் பந்தைத் தன் மார்பகங்களில் மறைத்து வைத்ததன் விளைவாக - ஹுட்சிலோ பொட்லி எனும் கடவுள் பிறந்ததாகப் பழைய புளுகு. நானா எனும் கன்னிப் பெண், தன் மார்பகங்களில் மறைத்து வைத்த மாதுளம் பழத்திலிருந்து அட்டிஸ் என்ற கடவுள் பிறந்ததாகக் கிரேக்கப் புராணம்.
மங்கோலிய மன்னர் ஒருவரின் கன்னி மகள் தூங்கிக் கொண்டிருக்கும்போது, உடலில் ஒளி வெள்ளம் பாய்வதை உணர்ந்து விழித்துப் பார்த்தாள், கருவுற்றிருந்தாள், செங்கிஸ்கான் பிறந்தான் என்றொரு புராணம்.
திருமணம் ஆகாத தேவகியின் வயிற்றில் பிறந்த இந்துக் கடவுள் கிருஷ்ணன் என்றொரு புராணம். கன்னி இசிஸுக்குப் பிறந்த ஹோரஸ் கடவுள்; கன்னி மய்யாவுக்குப் பிறந்த கடவுள் மெர்க்குரி; ரியா சில்வியாவுக்குப் பிறந்த ரோமுலுஸ் என்று புராணப் புளுகுகளின் பட்டியல் நீளும். நாம் காணும் இயற்கை விதிகளுக்குப் புறம்பாகப் பிறந்ததால் அதிசயமானவர்கள் - ஆண்டவர்கள் - என்று கற்பிதம் செய்யப்பட்டு நம்ப வைக்கப்பட்ட மக்களை மடையர்களாக்கித் தொடர்ந்து லாபம் கண்டிடச் சூது மதியாளர்களால் உருவாக்கப்பட்டது மதம்.
இந்து மதத்தைப் பொறுத்த மட்டில், தன் மதத்தவரில் கால் பங்குப் பேரைத் தொடக் கூடாதவர்களாகவும், முக்கால் பங்குக்கு மேற்பட்டவர்களைப் பிறவித் தொழிலாளிகள் என்ற நிலையிலும் வைத்துச் சுரண்டி வரும் நிலையைக் கொண்டுள்ளது. இந்தக் கொடுமையை - ஜாதிக் கொடுமையை பார்ப்பன வல்லாண்மையைக் கண்டித்து உருவாக்கப்பட்ட சமண மதத்தைச் சார்ந்த வர்களை ஈவிரக்கம் இன்றிக் கொன்று குவித்தது இந்து மதம்.
வேதப் பார்ப்பன ஆதிக்கத்தைக் கண்டித்தும், ஜாதிப் பிரிவினையைக் கண்டித்தும் தொடங்கப்பட்ட புத்த நெறியைத் தழுவியவர்களை - அவர்கள் மன்னர்களாக இருந்தாலும் - அழித்து வெறியாட்டம் போட்டு அந்த நெறிகளை இந்தியாவை விட்டே விரட்டிப் பழி தீர்த்த மதம் இந்து மதம்.
உலகில் மனிதர்கள் உருவாகி வளர்ந்த நாள் முதல் நடந்த போர்களில் - அண்மைக் காலத்தில் நடந்த உலகப் போர்களில் - சிறிய சண்டைகளில் இறந்தவர்களின் எண்ணிக்கையைவிட மதச் சண்டைகளில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகம். சிலுவைப் போர் என்றும், ஜிஹாத் என்றும், புரொடஸ் டன்ட்களுக்கு எதிரான போர் என்றும், சமண, புத்தக் கொள்கைகளுக்கு எதிரான போர் என்றும் நடத்தப்பட்ட மதவெறிப் போர்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை கூடுதல் என்கிறபோது, மதங்கள் எதற்கு? மதங்கள் தேவையா?
மதம் இல்லாமல் மக்கள் இருக்கவில்லையா? அதுபோலவே மதங்கள் கற்பிக்கப்பட்ட 3000 ஆண்டுகளாகத்தானே கொலைகளும் கொடுமைகளும்? மதங்கள் அறிவுக்கும் ஆற்றலுக்கும் அறிவியலுக்கும் எதிராகச் செயல்பட்ட கறுப்பு வரலாறுகள் கொஞ்சமா?
மதம் தேவையற்றது, தீதானது, கொடுங்கோன்மைக்கு வழிகோலுவது! எனவே மதமற்ற மனித சமுதாயத்தை உருவாக்குவோம்! மதமற்ற உலகைப் படைப்போம்! அறிவுக்கு விடு தலை தரும் அறிவைப் போற்றும் - ஆதிக்கமற்ற உலகை உருவாக்குவோம்!
---------- சார்வாகன் அவர்கள் 6-9-2008 "விடுதலை" யில் எழுதிய கட்டுரை
6 comments:
இன்று, விழா மேடையில் கலைஞர் கருணாநிதி சொன்னது -
"இந்த சிறப்பான விழாவுக்கான மேடையை அமைத்துக் கொடுத்த கிருஷ்ணனனுக்கு நன்றி. இன்று கோகுலாஷ்டமி. நான் மேடையை அமைத்துக் கொடுத்த கிருஷ்ணனுக்கு நன்றி கூறுகிறேன். அப்படிப்பட்ட உழைப்பாளிகள் உள்ள இயக்கம் இது. எந்தப் பணியையும் நிறைவேற்றிக் கொடுக்கக் கூடியவர்கள் அவர்கள்"
என்ன சொல்லவருகிறார்? நாத்திகவாதிக்கு எதுக்கு கோகுலாஷ்டமி?
திராவிட தமிழ் முண்டம்,கருப்பு சட்டை பொறிக்கி நாய்,அரை டிக்கட் தமிழ் ஓவியா அய்யா,
கீழ்த்தரமான தமிழ்நாட்டில் ஆங்காங்கே தாடிக்கார தீவிரவாதியான பெரிய அய்யாவோட கேவலமான சிலைகளை நட்டு வைத்திருக்கிறார்கள்.அந்த சிலைகள் அனைத்திலும் கீழ்கண்ட வாசகங்களை செதுக்கி வைக்குமாறு கருப்பு சட்டை வெறி நாய்களுக்கு பரிந்துரை செய்கிறேன்.
1)பெரிய தாடிக்கார அய்யா நல்லவனோ,பண்பாளனோ இல்லை இல்லவே இல்லை.
2)தாடிக்கார அய்யாவை நம்புகின்றவன் முட்டாள்.
3)தாடிக்கார தீவிரவாதியை பெரியார் என்று போற்றி வணங்குகின்றவன் காட்டுமிராண்டி.
4)தாடிக்காரனையும்,தீவிரவாதத்தையும் பரப்புகின்ற கருப்புசட்டை குஞ்சுகள் அயோக்ய்ர்கள்.
பாலா
இந்த உலகத்துல ....
பல மடப்பயல்க .....
வாழ்றதுக்குத்தான் மதம் கடவுள் உண்டாகபட்டதுன்னு தெரியாம
மதம் கடவுளுக்காக வாழ ஆரம்பிச்சிட்டானுங்க ...
எங்க போய் முடிய போதோ ...........
அடிச்சிகிட்டு சாக போறானுங்க .......
அறிவியலும் பொருளாதாரமும் வளர்ந்தா போதாது ....
மனுசன மதிக்க பழகுங்கடா மத கடவுள் வெறியர்களே ......
இந்த உலகத்துல ....
பல மடப்பயல்க .....
வாழ்றதுக்குத்தான் மதம் கடவுள் உண்டாகபட்டதுன்னு தெரியாம
மதம் கடவுளுக்காக வாழ ஆரம்பிச்சிட்டானுங்க ...
எங்க போய் முடிய போதோ ...........
அடிச்சிகிட்டு சாக போறானுங்க .......
அறிவியலும் பொருளாதாரமும் வளர்ந்தா போதாது ....
மனுசன மதிக்க பழகுங்கடா மத கடவுள் வெறியர்களே ......
//
உருவ வணக்கம் கூடாது என்பவர்களாம்! நல்ல கொள்கைதான்! ஆனால் இவர்களின் போராட்டங்களின் போது இவர்கள் உயர்த்திப் பிடித்தது அயதுல்லா கொமேனியின் படம் பொறித்த பதாகைகளை! சதாம் உசேனின் படம் பொறித்த பதாகைகளைத் தூக்கிப் பிடித்துக் கொண்டே உருவ வழிபாடு கூடாது என்று அடுத்தவருக்கு மட்டும் அறிவுரை கூறுவது, அறிவுடைமையா?
//
:)
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி பா.மோசே செல்வகுமார்
Post a Comment