
சங்க நூலில் இல்லை விநாயகன்
தமிழகத்தில் பிள்ளையார் வணக்கம் கி.பி. ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் வந்தது. அதற்கு முன் இங்கு இல்லை. சங்க கால நூல்கள் எதிலும் விநாயகர், விக்னேசுவரர் என்ற வடமொழிப் பெயர்கள் இல்லாவிட்டாலும், பிள்ளையார் என்ற தமிழ்ப் பெயர்கூட காணப்பட-வில்லை.
-------------முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்கள் எழுதிய தமிழின் சிறப்பு என்ற நூலில் பக்கம் 29
யானைப் புணர்ச்சியே பிள்ளையார்
சிவபெருமான் உமாதேவியுடன் திருக்கைலாயக் கிரிக்கருகிலுள்ள சித்திர சாலையை அடைந்து அங்கு விசுவகன்மனால் எழுதப்பட்ட மந்திர வடிவமாகிய சித்திரங்களைப் பார்ப்பதியாருக்குக் காட்டி, பெண்ணே முதலிலுள்ள பிரணவாகாரமாகிய இரண்டு யானைகளில் முற்பட்டது திரிமூர்த்திகளை உணர்ந்தது. அது எனது வடிவம். அடுத்தது சக்திகள் மூவரையும் பெற்றது. அது உனது வடிவம் ஆதலின் யாம் அச்சித்திரங்களின் வடிவம். ஆகுதும் என்று திருவாய் மலர்ந்தனை உமாதேவியாரும் அக்கருத்துக்கு இசைந்தனள். அப்போது இறைவர் ஆங்கோர் திருவிளையாடல் செய்ய அதனால் அப்பிரணவ வடிவத்திலிருந்தும் மூத்த பிள்ளையார் திருவவதாரம் செய்தனர் என்பது. இதன் விவரம் விநாயக புராணத்தில் படிக்கக் காண்க.
----------------------------தாயுமான சுவாமிகள் பாடல் மூலமும் உரையும்-சென்னை இட்டா பார்த்தசாரதி நாயுடு அவர்களால் தமது ஸ்ரீ பத்மநாப விலாச அச்சுக் கூடத்தில் பதிப்பிக்கப்பட்டது. 1905 இஃது சில வித்வான்களைக் கொண்டு எழுதுவித்த உரையுடன் கூடியது.
---------------தகவல்: குடந்தை கும்பலிங்கன் -"விடுதலை" ஞாயிறுமலர் 22-8-2009
0 comments:
Post a Comment