Search This Blog

14.8.09

மோட்சம் என்பது என்ன? நரகம் என்பது என்ன?



மோட்சம் - நரகம் என்ற மோசடி!


மக்களின் சுபாவம் பொருள் தெரிந்த காரியத்திற்கு பயப்படுவதை விட பொருள் தெரியாத காரியத்திற்குத்தான் அதிகம் பயப்படும். ஏனெனில் பொருள் தெரிந்த காரியங்களுக்குப் பரிகாரம் செய்து கொள்ளக் கூடுமானதினால் அதற்குப் பயப்படமாட்டான். பரிகாரம் செய்து கொள்ள முடியாததற்கே அதிகம் பயப்படுவான்,

ஒரு வீட்டுக்குள் பிரவேசிப்பவனுக்கு அவனைப் பிரவேசிக்கால் இருக்கச் செய்ய `அங்கு தேள் இருக்கும் பாம்பு இருக்கும்' என்று சொன்னால் அவன் அதற்குப் பயப்படாமல் கையில் தடியையும் காலில் பூட்சையும் போட்டுக்கொண்டு உள்ளே பிரவேசிக்கத் துணிந்து விடுவான். அல்லது கையில் நெருப்புப் பந்தத்தை எடுத்துக் கொண்டாவது பிரவேசிக்கத் துணிந்து விடுவான். ஏனெனில் தேளைப்பற்றியும், பாம்பைப் பற்றியும் அவனுக்குத் தெரியுமாதலால் அவைகளின் கஷ்டத்தில் இருந்து விலக ஏற்பாடு செய்து கொள்ளத் தெரியும்.

ஆனால் அதே வீட்டில் பிசாசோ, பூதமோ இருப்பதாகச் சொல்லிவிட்டால் அந்த வீதியில் நடக்கக்கூட பயந்து கொள்ளுவான். என்ன சொன்னாலும் அந்த வீட்டில் இருக்க சம்மதிக்கவே மாட்டான். காரணம் என்னவென்றால் பிசாசு பூதம்என்பது இன்னது இன்னமாதிரியாய் இருக்கும் என்கின்ற விபரம் அவனுக்குத் தெரியாது. ஆதலால் அதிலிருந்து தப்ப உபாயம் செய்து கொள்ள அவனுக்கு முடிவதில்லை.

அதுபோலவேதான் மனிதனுக்கு மோட்சம் என்பது என்ன? நரகம் என்பது என்ன? என்று தெரிந் திருந்தால் அவற்றின் பேரால் இவ்வளவு மக்கள் ஏமாந்திருக்க முடியாது. அர்த்தம் தெரியாததையும் மனதில் படமுடியாததையும் பிரசாரம் செய்வதால் மக்கள் ஏமாந்துவிடுகின்றார்கள். ஏதோ தனக்கு பெரிய லாபம் வருகின்றது என்று கருதுகின்றான். வியாக்கியானம் செய்து பார்க்கும்படி சொன்னால் மோட்சத்தையும் நரகத்தையும் பற்றி அனேக `பெரியார்கள்' ஏற்கனவே சொல்லி இருப்பதால் அதைப்பற்றி சந்தேகப்படுவதோ அல்லது விளக்கிக் கொள்ள ஆசைப்படுவதோ குற்றமானது என்று கருதுகின்றான்.

இந்த மனப்பான்மையிலேயேதான் மனிதன் வாழ்க்கையை நடத்துகின்றான். இதனாலேயேதான் பாமர மக்கள் சிறிதும் தலைதூக்க முடியாமல் மிருகப் பிராயத்தில் இருந்து வருகின்றார்கள். `பகுத்தறிவைப் பயன்படுத்துவதே பாவம்' என்று சொல்லப்பட்ட ஒரு ஆயுதமே மக்களை அழுத்தி வைத்துக் கொண்டிருக்கின்றது. அர்த்தமற்ற உண்மையற்ற சொற்களுக்கு நடுங்கச் செய்கிறது.


உதாரணமாகப் பாருங்கள். மனிதனுடைய மூடத் தனத்துக்கு ஒரு உதாரணம் காட்டுகின்றேன்.

மனிதன் திருடுவான். நம்பிக்கை துரோகம் செய்வான், மோசம் செய்வான், கொலையும் செய்வான். ஆனால் ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவன் கொண்டு வந்த தண்ணீரை தொட்டுக் குடி என்றால் நடுங்குவான்.

பாவம் என்று ஒன்று இருந்தால் மோசம் செய்வதைவிட, நம்பிக்கை துரோகம் செய்வதைவிட, பதறப்பதறக் கொலை செய்வதைவிட, வேறு ஒன்றும் அதிகபாவம் இருக்கமுடியாது. ஆனால் இவற்றை யெல்லாம் பஞ்சாமிருதம் சாப்பிடுவதுபோல் செய்து விட்டு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவனை திண்ணையில் உட்காரவைப்பது என்றால் நடுங்குகின்றான் என்றால் மனித சமூகத்தை எவ்வளவு சுயநலமாக இருக்கும்படியாகவும், முட்டாள்தனமாக இருக்கும்படியாகவும் வாழ்க்கை முறைகள், மத முறைகள், மோட்ச நரக முறைகள் அமைக்கப்பட்டிருக்கின்றது என்று எண்ணிப் பாருங்கள்.


----------5.7.1931 தேதியிட்ட `குடி அரசு' ஏட்டில் வெளிவந்த தந்தைபெரியார் உரையிலிருந்து சில பகுதிகள்....

5 comments:

hayyram said...

ஈ.வே. ராமசாமி நாயக்கரின் மனித நேயம் பற்றி வாய்கிழியப் பேசுகிறார்கள். ஆனால் பிராமணர்களுடைய விஷயத்தில் ஈ.வே. ராமசாமி நாயக்கருடைய மனிதநேயம் எப்படிப்பட்டது தெரியுமா?

ஈ.வே. ராமசாமி நாயக்கர் கூறுகிறார்:-

‘‘பார்ப்பனன் இந்நாட்டினின்று விரட்டப்பட வேண்டும்’’
(விடுதலை 29-01-1954)

‘‘எவ்வளவு பகுத்தறிவுவாதிகளாய், நாத்திகர்களாய் இருந்தாலும் பார்ப்பானை உள்ளே விடக்கூடாது; சேர்க்கக்கூடாது’’
(விடுதலை 20-10-1967)

கடவுளை ஒழிக்க வேண்டுமானால் பார்ப்பானை ஒழிக்கவேண்டும்.
(விடுதலை 19-10-1958)

‘‘பெரியார் மாளிகைக்கு வந்தால் பார்ப்பன நிருபர்களை நெட்டித்தள்ளச் சொன்னார்’’
(நூல்:- பெரியார் கொள்கைக்குக் குழிதோண்டிய திராவிடர் கழகம்
-வே. ஆனைமுத்து)

வீரமணி கூறுகிறார்:-

பெரியார் அவர்கள் துவேஷம் பாராட்டியதில்லை என்று இன்று சொல்லுகிறார்கள் ஒன்றை தெளிவாகக் கேட்கிறோம். ‘‘பார்ப்பனனே வெளியேறு’’ என்ற முழக்கத்தைத் தந்தை பெரியார் அவர்கள் கொடுத்தார்கள்.
(நூல்:- சங்கராச்சாரி யார்?)

‘‘பாம்பையும், பார்ப்பானையும் கண்டால், பாம்பைவிட்டுவிடு பார்ப்பானை அடி என்றார் பெரியார்’’
(நூல்:- இந்துத்துவாவின் படையெடுப்பு)

‘‘சாதிப்பாகுபாடுகளை ஒழிப்பதற்கு, அரசியல் சட்டம், காந்தியார், நேரு படத்தை கொளுத்தவேண்டும். இவையத்தனை முயற்சிகளிலும் பலன் கிட்டாமல் தோல்வி கிடைக்கமானால், பிறகு பார்ப்பனர்களை அடிக்கவும், உதைக்கவும், கொல்லவும், அவர்கள் வீடுகளைக் கொளுத்தவுமான காரியங்கள் நடைபெறவேண்டும்’’.
(நூல்:- தமிழர் தலைவர்)

ஈ.வே. ராமசாமி நாயக்கரின் இந்த மனிதநேயதில்லாத, வெறித்தனமான பேச்சால்தான் தூத்துக்குடி, புதுக்கிராமத்தில் உள்ள அக்கிரகாரத்தில் புகுந்து பூணுல்கள் அறுக்கப்பட்டு பார்ப்பனர்கள் தாக்கப்பட்டார்கள்.

‘‘திருச்சி காவிரி, தில்லை ஸ்தான படிக்கட்டு அருகில் தாக்கப்பட்டு பார்ப்பனர்களின் பூணூல் அறுக்கப்பட்டது’’

“சில வருடங்களுக்கு முன் சென்னையில் பார்ப்பனர்கள் தாக்கப்பட்டு பூணூல்கள் அறுக்கப்பட்டது’’

அடிக்க வேண்டும்; கொல்லவேண்டும்; வீடுகளைக் கொளுத்த வேண்டும் என்று சொன்ன ஈ.வே. ராமசாமி நா யக்கர்தான் மனிதநேயவாதியா? ஈ.வே. ராமசாமி நாயக்கரின் பொய்யான மனிதநேயம் என்பது ஒருபுறம் இருக்கட்டும். ஈ.வே. ராமசாமி நாயக்கர் யாரை தங்களுடைய எதிரியாக நினைத்தாரோ- யாரை ஓழித்தால் சாதி ஓழியும் என்று சொன்னாரோ-அந்தப் பார்ப்பனரை தேர்தலிலே ஆதரிக்கவும் செய்திருக்கிறார். இது அவருடைய முரண்பாடுகளை அல்லது தன் செல்வாக்கை உயர்த்திக்கொள்ள செய்த தந்திரத்தைத்தான் காட்டுகிறதே ஒழிய மனிதநேயத்தைக் காட்டாது.
1957-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் ஈ.வே. ராமசாமி நாயக்கர் கூறுகிறார்:-

‘‘காஞ்சிபுரத்தில் (அண்ணா போட்டியிட்ட இடம்) டாக்டர் சீனிவாச அய்யரையும், சென்னையில் டி. டி. கிருஷ்ணமாச்சாரி, கிருஷ்ணாராவையும் ஆதரிக்கிறேன். பிராமணர்கள் இந்த நேரத்தில் ஒற்றுமையுடன் இருக்கவேண்டும். காமராஜ் வெற்றி பெற்றால் பிராமணர்களுக்கு மந்திரி பதவி கிடைக்கும். ‘‘
(நூல் : தேர்தல் அரசியல்-தி. சிகாமணி)

ஆனால் அதே ஈ.வே. ராமசாமி நாயக்கர் 1962 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் கூறுகிறார்:- “தேர்தல் தினத்தன்று பிராமணர்கள் வாக்களிக்க வரக்கூடாது’’
(நூல் : தேர்தல் அரசியல்)

இது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்! ஒரு முறை காமராசருக்கு ஓட்டுப்போடுமாறு வேண்டினார். பின்பு வாக்களிக்க வரக்கூடாது என்று மிரட்டுகிறார். 1957 ஆம் ஆண்டு பிராமணர்கள் உதவி வேண்டும். 1962 -வேண்டாம். இதுதான் ஈ.வே. ராமசாமி நாயக்கருடைய தந்திரம்.

மேலும் ஈ.வே. ராமசாமி நாயக்கர் ஏ. பாலசுப்பிரமணியம், பி. ராமமூர்த்தி போன்ற பிராமணர்களையும் தேர்தலிலே ஆதரித்தார்.

பார்ப்பனர்களை ஒழித்தால்தான் சாதி ஒழியும் என்று சொன்னாரே ஈ.வே. ராமசாமி நாயக்கர் - பின் ஏன் பார்ப்பனர்களை தேர்தலிலே ஆதரிக்க வேண்டும்? இது ஒரு சந்தர்ப்பவாதமல்லவா?

hayyram said...

நான் திராவிடக் கழகத்திலோ, முன்னேற்றக் கழகத்திலோ எந்தக் காலத்திலும் சந்தா கட்டி உறுப்பினராக இருந்ததில்லை. பெரியாருடைய கொள்கைகளையும் அண்ணாவுடைய கொள்கைகளையும் ஏற்றுக்கொண்டேன். ஆகையால் அதைப் பிரசாரம் செய்தேன். அந்தக் கொள்கைகளை நான் ஒத்துக்கொண்டேனே தவிர, கட்சியில் நான் உறுப்பினராக இருந்ததில்லை. எனது குடும்பம் தேசபக்தி உள்ள குடும்பம். நாங்கள் எல்லாம் தேசியவாதிகள்.

அதோடு நாங்கள் இந்து தர்மத்தைக் கடைப்பிடிக்கும் குடும்பத்தினர். மெலும் குடும்பத்தில் எல்லோரும் பக்தி மிகுந்தவர்கள். இவை அனைத்தையும் நான் உதறித்தள்ளிவிடவில்லை. சில பகுத்தறிவுக்கொள்கைகள் எனக்குச் சரியெனப்பட்டது. அந்தக் கருத்துக்களை படங்கள் மூலம் சொன்னேன். அவ்வளவுதான்.

’புயல் நிவாரணத்துக்காக எல்லோரும் பணம் வசூல் செய்து தாருங்கள்’ என்று அறிஞர் அண்ணா அவர்கள் கூறினார்கள் (1956). அப்போது நானும் சென்று வசூல் செய்தேன். அதைக் கட்சிக்குக் கொடுத்துவிட்டு சேலத்தில் படப்பிடிப்புக்காக நான் சென்றுவிட்டேன். ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தது.

அப்போது அண்ணா அவர்கள் அதிகமாகப் புயல் நிவாரண நிதி வசூலித்தவர்களுக்கு ஒரு பாராட்டு விழா வைத்தார். நான் சேலத்திலிருந்து எனது தாயாருக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ‘இன்று விழா நடக்கிறது யாராவது அழைப்பு கொடுத்தார்களா?’ என்று கேட்டேன். ‘இல்லையென்று’ கூறினார்கள் என் தாயார்.

உடனே அந்த நேரமே சேலத்தில் இருந்து புறப்பட்டு மாலை நான்கு மணிக்கெல்லாம் சென்னை வந்துவிட்டேன். விழாவிற்காக என்னைக் கூப்பிட வருவார்கள் என்று வீட்டில் காத்துக்கொண்டிருக்கிறேன். என்னை யாரும் கூப்பிட வரவில்லை. மாலை ஆறு மணி அளவில் பாராட்டுக் கூட்டம் நடக்கிறது. அப்பொழுதுதான் முதன்முதலில் எம்.ஜி.ஆரைக் கூட்டிச் சென்று அந்தக் கூட்டத்தில் மேடையேற்றி கௌரவிக்கிறார்கள். அதிகமாக நிதி வசூலித்தவன் நாந்தான். ஆனால் எம்.ஜி.ஆர் அவர்களை அந்தக் கூட்டத்தில் மேடை ஏற்றிப் பாராட்டுகிறார்கள். பல நாட்கள் நான் வருத்தமாக இருந்தேன். ஒரு நான் என்னுடைய நெருங்கிய நண்பரான இயக்குனர் பீம்சிங் வந்தார்.

அவர் என்னிடம் வந்து, ’சிவாஜி பாய், ஏன் தலையில் கைவைத்து உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்கள்? வாருங்கள் திருப்பதி போய் வரலாம்’ என்றார்.

நான் ‘சாமி கும்பிடும் மனோநிலையில் இல்லை. எனக்கு எதற்கு திருப்பதி’ என்றேன். நான் கோவிலுக்குள் அதிகம் போனதில்லை. ஆனால் பீம்சிங் பிடிவாதமாகக் கூப்பிட்டு, திருப்பதிக்கு அழைத்துச் சென்றுவிட்டார்.

அப்போது பயங்கர மழை. சாலை முழுவதும் வெள்ளம் இருந்தாலும் எப்படியோ திருப்பதி சென்றடைந்தோம்.

நான் திருப்பதியிலிருந்து மாலையில் சென்னை வந்தேன். ‘நாத்திக கணேசன் ஆத்திகனாக மாறினார்’ என்று தினத்தந்தியில் தலைப்புச்செய்தி வந்தது. வரும்போழுது ரோடு முழுவதும் பார்த்தால் என்னைப் பற்றி ‘திருப்பதி கணேசா, கோவிந்தா’ என்று எழுதியிருந்தார்கள்…

நான் அந்த வாசகங்களையெல்லாம் படித்துக் கொண்டே வந்தேன். அப்பொழுது பீம்சிங் கூறினார். ‘கவலைப்படாதே கணேசா, அப்படித்தான் எழுதுவார்கள், நீ உயர்ந்த நடிகன், எதைப்பற்றியும் கவலைப்படாதே’ என்றார்.

யார் ‘திருப்பதி கணேசா கோவிந்தா’ என்று எழுத வைத்தார்களோ அவர்களுடைய மனைவி மற்றும் வீட்டுப் பெண்கள் எல்லாம் இப்போது திருப்பதியில் அங்கப்பிரதட்சணம் செய்து கொண்டிருக்கிறார்களே. எல்லாமே போலியாக இருக்கிறது.

என்றைக்கு என்னைக் கேலி செய்தார்களோ அன்றே திருப்பதி ஆண்டவன் கண்விழித்துப் பார்த்து அருள்புரிந்துவிட்டார். நான் நடித்த படங்களெல்லாம் மாபெரும் வெற்றிப் படங்களாக அமைந்தன. ’மக்களைப் பெற்ற மகராசி, வணங்காமுடி, தங்கமலை ரகசியம், அம்பிகாபதி, உத்தமபுத்திரன்’ போன்ற படங்கள் அப்போதுதான் வெளிவந்தன.

- சிவாஜி கணேசன் / பக்கம் 130 -136 எனது சுயசரிதை.

hayyram said...

திருப்பதி போனதற்காக சிவாஜியைக் குறிவைத்துக் தாக்கினர் தி.மு.க. வினர். அவருடைய போஸ்டரில் சாணி அடித்தார்கள், அவருடைய கார்மீது கல்லெறிந்தார்கள்.

ஆனால் கடவுள் எதிர்ப்பிலும் அவர்களுக்கு உறுதி இல்லை. பத்துவருடங்களுக்குப் பிறகு ‘தனிப்பிறவி’ என்ற திரைப்படத்தில் எம்.ஜி.ஆர் முருகனாக நடித்தார். முன்னேற்றக் கழகத்தாரிடமிருந்து முக்கல் இல்லை; முனகல் இல்லை; முணுமுணுப்புகூட இல்லை; ஏனென்றால் எம்.ஜி.ஆர். அப்போது வளர்ந்துவிட்டார்.

வலியோரை வாழ்த்துவதும் எளியோரை தாழ்த்துவதும் இந்த வசன நிர்வாகிகளின் வழக்கமல்லவா?

hayyram said...

ஈ.வே. ராமசாமி நாயக்கர் கூறுகிறார்:-

”சேலத்தில் மதுவிலக்கு செய்வதற்காகக் கோவையில் உள்ள பள்ளிக்கூடங்களை மூடுவது நியாயமா? ஐந்து, ஆறு லட்சம் குடிகாரர்களைக் காப்பாற்றுவதற்கு என்று நான்கு கோடிக்கு மேற்பட்ட மக்களிடமிருந்து பல வரியைக் கசக்கிப் பிழிவது நியாயந்தானா? நான் இப்படிச் சொல்வதால் மதுவிலக்கை எதிர்க்கின்றேன் என்று சனங்கள் எண்ணிக்கொள்ளக்கூடாது. நான் மதுவிலக்கை திடமாக ஆதரிக்கிறேன். மதுவிலக்கு பல தடைவை சிறை சென்றிருக்கிறேன். ”
(விடுதலை 24-07-1939)

அதாவது நான் மதுவிலக்கை திடமாக ஆதரிக்கிறேன். மதுவிலக்குக்கு பல தடைவை சிறை சென்றிருக்கிறேன் என்றெல்லாம் பெருமையாகக் கூறிய ஈ.வே. ராமசாமி நாயக்கர் கூறுகிறார்:-

”பொதுவாக மதுவிலக்கு என்பது இயற்கையோடு போராடும் ரு முட்டாள்தனமான போராட்டமேயாகும்”
(விடுதலை 09-11-1968)

எப்படிப்பட்ட முரண்பாடு என்று பாருங்கள். சினிமா பார்ப்பதை விட கள் குடிப்பதே மேல் என்று சொன்னவர்தான் ஈ.வே. ராமசாமி நாயக்கர்.

மக்கள் கள்குடித்து சாகக்கூடாது என்பதற்காக தன் தோப்பிலுள்ள 500 தென்னை மரங்களை வெட்டினார் என்றெல்லாம் அவரைப் பற்றி பருமையாகக் கூறுகிறார்கள். ஆனால் இங்கே ஒன்றைக் கூறவிரும்புகிறேன்.

வீரமணியிடம் ஒருவர், கள் குடிப்பதை எதிர்த்து தென்னை மரங்களை வெட்டிய பெரியார் மதுவிலக்கை எதிர்த்தது முரண்பாடல்லவா என்று கேட்கிறார். அதற்கு வீரமணி, ”அப்போது பெரியார் காங்கிரசில் இருந்தார். காங்கிரசின் கொள்கையை-திட்டத்தை செயல்படுத்தவே மரங்களை வெட்டினார். அது அவர் கொள்கை அல்ல” என்று கூறினார்.

அதாவது ஈ.வே. ராமசாமி நாயக்கர் மக்கள் கள் குடித்து சாகக்கூடாது என்பதற்காக தன் தோப்பிலுள்ள 500 தென்னை மரங்களை வெட்டவில்லை. மாறாக காங்கிரஸ் சொன்னதால்தான் மரங்கள் வெட்டப்பட்டது என்பதை வீரமணியே ஒத்துக்கொள்கிறார். பின் எதற்காக 500 தென்னை மரங்களை வெட்டினார் என்று பெருமையாகப் பறைசாற்றுகிறார்கள்?

இதுபோன்ற முரண்பாடுகள் பலவற்றைச் சுட்டிகாட்ட முடியும். ஈ.வே. ராமசாமி நாயக்கர் இடத்திற்கு ஏற்றாற்போல் தன்னுடைய பேச்சை மாற்றி மாற்றி பேசுபவர். உண்மையை மக்களுக்குச் சொல்ல வேண்டும் என்ற எண்ணமெல்லாம் அவருக்கு கிடையாது. பொய் சொல்லியாவது தன்னுடைய கருத்தை உண்மை என்று நிலைநாட்ட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்தான் ஈ.வே. ராமசாமி நாயக்கர். அவருடைய முரண்பட்ட கருத்துகள் ஒருபுறம் வைத்துக்கொள்வோம். இனி ஈ.வே. ராமசாமி நாயக்கர் வரலாற்றுப் பொய்களைப் பார்ப்போம்.

bala said...

திராவிட தமிழ் முண்டம்,கருப்பு சட்டை பொறிக்கி நாய்,அரை டிக்கட் தமிழ் ஓவியா அய்யா,

கீழ்த்தரமான தமிழ்நாட்டில் ஆங்காங்கே தாடிக்கார தீவிரவாதியான பெரிய அய்யாவோட கேவலமான சிலைகளை நட்டு வைத்திருக்கிறார்கள்.அந்த சிலைகள் அனைத்திலும் கீழ்கண்ட வாசகங்களை செதுக்கி வைக்குமாறு கருப்பு சட்டை வெறி நாய்களுக்கு பரிந்துரை செய்கிறேன்.

1)பெரிய தாடிக்கார அய்யா நல்லவனோ,பண்பாளனோ இல்லை இல்லவே இல்லை.
2)தாடிக்கார அய்யாவை நம்புகின்றவன் முட்டாள்.
3)தாடிக்கார தீவிரவாதியை பெரியார் என்று போற்றி வணங்குகின்றவன் காட்டுமிராண்டி.
4)தாடிக்காரனையும்,தீவிரவாதத்தையும் பரப்புகின்ற கருப்புசட்டை குஞ்சுகள் அயோக்ய்ர்கள்.

பாலா