Search This Blog

5.8.09

கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடலாமா?




கிருஷ்ண ஜெயந்தியாம்...
அவதாரமா? ஆதிக்கடவுளா?


பிரம்மவைவர்த்த புராணம் என்றொரு ராஸிக புராணம் புளுகி வைத்திருக்கிறார்கள். வைவர்த்தம் என்றால் பரிணாம வளர்ச்சி எனப் பொருள். பிரம்மனின் உருமலர்ச்சிப் புராணமாகும் இது. சூத முனிவன் நைமிகாரண்யத்தில் பிற முனிவர் களுக்கு இப்புராணத்தைக் கூறினாராம். இதன் மூன்றாம் காண்டம் கிருஷ்ண அவதாரம், கிருஷ்ண லீலைகள் பற்றிக் கூறுகிறது.

பிரளயம் ஏற்பட்டு உலகமே அழிந்தபோது சொர்க்க லோகமும் அழிந்துவிட்டதாம் இவை இரண்டிற்கும் இடைப்பட்ட புவர்லோகம் அழிந்துவிட்டதாம். வைகுந்தமும் சிவலோகமும் காலியாகிவிட்டனவாம். (குடியிருந்தவர்கள் குளோஸ்) ஆனால், கிருஷ்ணனின் கோலோகம் பிரளயத்தின் போது எவ்வித மாற்றமும் இல்லாமலே இருந்ததாம்.

இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் கிருஷ்ணனை விஷ்ணுவின் அவதாரம் என்கிறார்கள். ஆனால், வைகுந்தம் வேறு - கிருஷ்ணனின் கோலோகம் வேறு என்கிறார்கள். ஒருபடி மேலே போய்ப் பரப்பிரம்மமே விஷ்ணுவல்ல, கிருஷ்ணனே என்கிறது! பீம்சிங்! இது என்ன புதுக் குழப்பம்? துக்ளக் சோ விளக்கவேண்டும்.

விஷ்ணு இன்னும் எப்படிக் கேவலப்படுத்தப்பட்டிருக்கிறது பாருங்கள்! கிருஷ்ணனின் வலது புறத்தில் நாராயணன் தோன்றியதாம். கிருஷ்ணனைப் போற்றி புகழ்ந்து எதிரில் உட்கார்ந்ததாம் நாராயணன். கிருஷ்ணனின் இடது புறத்தில் சிவன் தோன்றியதாம் பிரம்மா, யமன், சரசுவதி, மகாலட்சுமி, துர்க்கை, சாவித்திரி மன்மதன், ரதி என கடவுள் பட்டாளமே கிருஷ்ணன் உடலிலிருந்தே தோன்றினவாம்.

விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்று கிருஷ்ணன் எனக்கூறி அவனுக்குக் காமக் களியாட்டங்களைக் கற்பித்துக் கடைசியில் ஜேரா என்னும் வேடன் விட்ட அம்பால் காலில் காயம்பட்டு (டெட்டனஸ் எனும் விறைப்பு நோயால்) இறந்து போனான் என்று பாகவதம் கூறுகிறது.

எதை ஏற்பது? எதன் அடிப்படையில் கிருஷ்ண ஜெயந்தி? விளக்குவார்களா? விளங்கிக் கொள்ளாமலே, கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடலாமா? பக்தர்களே, புத்தி மீதி இருந்தால் சிந்தித்துப் பாருங்களேன்!


-----------------------நன்றி:- "விடுதலை" 4-8-2008

2 comments:

அசுரன் திராவிடன் said...

கிருஷ்ண பக்தர்களே வெண்ணையை யும் பெண்ணையும் திருடி தின்ன கிருஷ்ணனுக்கு ஜெயந்தியா? அப்படி என்றால் உங்கள் வீடு பிள்ளைகள் கிருஷ்ணனை போல் நடந்து கொண்டல் ஏற்று கொள்விர்களா?
கிருஷ்ணன் கு ஈவ் டீசிங் வழக்கு எல்லாம் கிடையாதா ? இதுதான் ஒரு குலத்துக்கு ஒரு நீதியோ ? i

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி இளஞ்சேரன்