
பாரீர்!
திருவாரூர் மாவட்டம் மஞ்சக்குடியில் தயானந்தா டிரஸ்ட் மேல்நிலைப் பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள், தொடக்கப் பள்ளிகள், ஆயுர்வேத மருத்துவமனை இவற்றுடன் ஆறு வேதப் பாடசாலைகளையும் நடத்துகிறது.
சின்ன வயதில் ஊரில் தேங்காய் திருடிவிட்டு ஊரை விட்டு ஓடிப்போன பார்ப்பனருக்கு இவ்வளவு வசதி வாய்ப்புகள் எப்படி வந்தன?
எந்தப் பைத்தியக்காரப் பார்ப்பானும்கூட கேள்வி கேட்கமாட்டான். சமத்து என்று உள்ளுக்குள் பூரித்துப் புளகாங்கிதம் அடைவார்கள்.
இதற்குநேர் எதிர் தமிழர்கள். பெரியார் அறக்கட்டளை எதற்காகக் கல்விக் கூடங்களை நடத்தவேண்டும்? என்று கேட்கும் அதிமேதாவிகள் நம் இனத்தில் மட்டும்தான் உண்டு.
கொலைக் குற்றவாளியாகத் திரிகிற ஆசாமியை இன்னும் ஜெகத்குரு என்றுதானே சொல்லிக் கொண்டுள்ளனர்! இன்னும் ஜெயேந்திரர் ஜெயந்தியை நடத்திக்கொண்டு இருக்கிறார்களே!
அந்த இன உணர்வு பாழாய்ப் போன இந்தத் தமிழர்களுக்கு என்று வந்து தொலையப் போகிறதோ!
1. ரிக்வேதம் 2. யஜுர் வேதம் 3. ஸாம வேதம் 4. சுக்ல யஜுர் வேதம் 5. மைத்ரேயினி சாகை 6. வைகானஸ ஆகம பாட சாலை என்று பார்ப்பனர்களின் சமாச்சாரம் சம்-பந்தப்பட்ட வேத பாடசாலைகள் நடத்தப்படுகின்றன.
இவை எல்லாம் இந்தக் காலத்தில் எதற்கு என்று எவரும் அவாளிடம் கேட்பதில்லை. இவை எல்லாம் இருந்தால்தான் பிராமணர்களாக அவர்களால் இருக்க முடியும் என்பது அவர்களின் உறுதியான நிலைப்பாடு!
இந்த ஆறு வேத பாடசாலைகளுக்காக நன்கொடைகளைக் கேட்டு துக்ளக் போன்ற இதழ்களில் விளம்பரம் செய்துள்ளார்கள். இனாமாகவே கூட அவர்கள் வெளியிடுவார்கள். காரணம், அவர்களின் அஸ்திவாரச் சமாச்சாரமாயிற்றே!
இந்த வேதப் பாட சாலைகளில் படிக்கும் 75 பார்ப்பன மாணவர்களுக்கு நாள் ஒன்றுக்கு காலை உணவுக்கு ரூ.900; மதிய உண-வுக்கு ரூ.1800; இரவு உணவுக்கு ரூ.3600 தேவைப்படுகிறதாம்.
தங்கள் குடும்பங்களில் உள்ளவர்களின் திருமண நாள், பிறந்த நாள், புதுமனை புகுவிழா, முன்னோர்கள் நினைவு நாள், பண்டிகை நாள்கள், ஆகிய தினங்களில் ஒரு நாள் உணவளித்து மகிழலாமே! என்பதுதான் அந்த விளம்பரம். அவ்வாறு பார்ப்பனர்கள் நிதிகளையும் அளித்து உதவிக் கொண்டுதானிருக்-கின்றனர்.
பெரியார் அறக்கட்டளை பல கல்வி நிறுவனங்களை நடத்திக் கொண்டுதானிருக்கிறது. குழந்தைகள் இல்லம், முதியோர் இல்லங்களை நடத்திக் கொண்டுதானிருக்கிறது.
பார்ப்பனர்களுக்கு இருக்கும் அந்த உணர்வு பார்ப்பனர் அல்லாதாருக்கு இருக்கவேண்டாமா?
எதிரிகளிடம் கற்றுக் கொள்ளுங்கள், இன உணர்வின் எடை எவ்வளவு என்று!
--------------------- மயிலாடன் அவர்கள் 4-8-2009 "விடுதலை"யில் எழுதிய கட்டுரை
0 comments:
Post a Comment