Search This Blog

8.8.09

சுதந்திர நாட்டில் ஜாதி இருக்கலாமா? ஜாதி இருக்கும் ஒரு நாட்டில் சுதந்திரம் இருக்குமா?


மக்களுக்காகத்தானே சட்டம்?

கலப்புத் திருமண தம்பதியர், விடுதலை இயக்கம் மற்றும் இளைஞர் இயக்கம் ஆகிய அமைப்புகளின் சார்பில் சென்னையில் கடந்த முதல் தேதியன்று கவன ஈர்ப்பு அறப்போராட்டம் ஒன்று நடத்தப்பட்டது. சென்னையில் மானுட மறுமலர்ச்சிப் பாசறையும் தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டும் வருகிறது. திராவிடர் கழகத்தின் முக்கியப் பணியும் அதுதான்.

முதல் தேதியன்று நடந்த அப்போராட்டத்தில் பல கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன.

அந்தக் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படவேண்டியவை _ செயல்படுத்தப்பட வேண்டியவையும்கூட!

21 ஆம் நூற்றாண்டில் ஜாதியை சட்டப்படி அனுமதிப்பது என்பது அநாகரிகமாகும். இந்திய அரசமைப்புச் சட்டத்திலேயே ஜாதியைப் பாதுகாக்கும் பகுதியைச் சுட்டிக்காட்டிதான் 1957 ஆம் ஆண்டிலேயே ஜாதிக்கு அரண் செய்யும் அந்தப் பகுதியைக் கொளுத்தும் புரட்சிகரமான பேராட்டத்தை தந்தை பெரியார் அவர்கள் நடத்திக் காட்டினார்.

சட்டத்தைக் கொளுத்தினால் மூன்றாண்டு கடுங்காவல் தண்டனை என்று இந்தப் போராட்டத்துக்காகவே சட்டம் கொண்டுவரப்பட்ட நிலையிலும், அதைப்பற்றிச் சற்றும் பொருட்படுத்தாமல் பத்தாயிரம் திராவிடர் கழகத் தோழர்கள், கருஞ்சட்டைக் குடும்பத்தினர்கள் அந்தப் போராட்டத்தில் பகிரங்கமாகவே ஈடுபட்டு, மூன்று மாதம் முதல் மூன்றாண்டுவரை கடுங்காவல் தண்டனையை ஏற்றனர். பலர் சிறைக்குள் மாண்டனர்; இன்னும் பலர் சிறைக்குள் நோய் வாய்ப்பட்டு விடுதலையான குறுகிய காலத்திலேயே மரணத்தைத் தழுவினர்.

தந்தை பெரியார் அவர்கள் தம் வாழ்நாளில் இறுதியாக நடத்திய தமிழர் சமுதாய இழிவு ஒழிப்பு மாநாட்டில்கூட இந்திய அரசமைப்புச் சட்டத்தில் தீண்டாமை ஒழிக்கப்படுகிறது என்பதற்குப் பதிலாக ஜாதி ஒழிக்கப்படுகிறது என்று அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றிக் கொடுத்தார்கள்.

சுதந்திர நாட்டில் ஜாதி இருக்கலாமா? ஜாதி இருக்கும் ஒரு நாட்டில் சுதந்திரம் இருக்குமா? என்ற தந்தை பெரியார் அவர்களின் வினாவுக்கு இதுவரை நாணயமான பதில் இல்லை.

இந்த நிலையில், ஜாதி ஒழிப்புக்கு ஓர் அறுவை சிகிச்சையான ஜாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டவர்களைப் போற்றுகின்ற வகையிலும், ஊக்கப்படுத்தும் வகையிலும் சில சலுகைகளை, வாய்ப்புகளைத் தரவேண்டியது அவசியமாகும்.

ஜாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்ட இணையர்களுக்கு உற்றார், உறவினர் மத்தியில் பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன. அரசு இத்தகைய இணையர்களுக்கு உறுதுணையாக இருந்து சிறப்பு சலுகைகளை அளிக்கும் பட்சத்தில் ஜாதி மறுப்புத் திருமணங்களுக்குச் சமூகத்தில் கூடுதல் அங்கீகாரம் கிடைக்க அதிக வாய்ப்பு உண்டு.

ஆண்டுக்கு ஒருமுறை காந்தியார் பிறந்த நாளில் தீண்டாமை ஒழிப்பு என்ற பெயரில் சமபந்தி போஜனங்கள் நடத்துவதால் தீண்டாமை ஒழிந்துவிடப் போவதில்லை. அது ஒரு சம்பிரதாயச் சடங்காகவே கருதப்படும்.

உண்மையிலேயே தீண்டாமை ஒழிக்கப்பட வேண்டுமானால், ஜாதி ஒழிக்கப்படவேண்டும். ஜாதியின் காரணமாகத்தான் தீண்டாமை என்பதை முதலில் பகுத்தறிவு ரீதியாக உணரவேண்டும். அந்த வகையில் பார்க்கப் போனால், ஜாதி மறுப்புத் திருமணங்கள் செய்துகொண்டவர்களை முன்னிலைப்படுத்தி அரசாங்கம் கவுரவிக்கவேண்டாமா?

கல்வியில், வேலை வாய்ப்பில் ஜாதி ஒழிப்புத் திருமணம் செய்துகொண்ட இணையர்களுக்குப் பிறந்த குழந்தைகளுக்குக் குறிப்பிட்ட சதவிகிதம் இட ஒதுக்கீடு செய்யப்படவேண்டும்.

1998 இல் தென் மாவட்டங்களில் ஜாதி கலவரம் நடந்தபோது, தமிழ்நாடு அரசால் கூட்டப்பட்ட அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தில் (22.10.1998) திராவிடர் கழகம் பல கருத்துருக்களை அரசிடம் எழுத்துமூலமாகவே அளித்துள்ளது.

அதில் ஒன்று: கல்வி, வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு என்பதற்கு மட்டும் ஜாதி அளவுகோல், மருந்தில் விஷம் கலப்பதுபோல் அனுமதிக்கப்படவேண்டும். இதற்காகச் சான்றிதழ் கொடுக்கும்போதுகூட ஜாதிப் பெயரைப் போடாமல் எஸ்.சி., பி.சி., எம்.பி.சி., எஃப்.சி., எஸ்.டி., அளவில் குறியீடுகள் இருந்தாலே போதுமானது.

ஜாதி மறுப்புத் திருமணம் செய்துகொள்ளும் தம்பதிகளுக்குச் சிறப்பு சலுகைகளும், அத்தம்பதிகளுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்குக் குறிப்பிட்ட அளவு சதவிகித இட ஒதுக்கீடும் செய்யப்படவேண்டும். அதற்கு inter caste quata என்று பெயரிடலாம். படிப்படியாக இதன் அளவை அதிகரித்து, ஜாதியின் அடிப்படையில் இட ஒதுக்கீட்டின் சதவிகிதத்தைக் குறைத்துக்கொண்டே வரவேண்டும். இந்த அடிப்படையில் தனியார் துறைகளிலும் இட ஒதுக்கீடு செய்யப்படவேண்டும். தனியார் துறை வளர்ந்துவரும் இந்தக் காலகட்டத்தில் இந்த முறை பின்பற்றப்படவில்லையானால், குறிப்பிட்ட ஜாதியினரின் ஆதிக்கம் அந்தத் துறையில் வளர்ந்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தும் ஆபத்து ஏற்படலாம் என்று திராவிடர் கழகம் அளித்த கருத்துருவில் முக்கியமாகக் கூறியிருந்தது.

இந்தக் காலகட்டத்திலாவது இதுகுறித்து மாநில, மத்திய அரசுகள் சிந்தித்துச் செயல்படவேண்டும்.

அரசமைப்புச் சட்டத்தில் இண்டர்கேஸ்ட் கோட்டா ஒதுக்கிட இடமில்லை என்று சொல்லக்கூடும். தேவையின் அவசியத்தைக் கருதி சட்டத் திருத்தம் கொண்டு வரலாமே! மக்களுக்காகத்தானே சட்டம்?

இந்த வகையில் ஒரு பக்கம் அழுத்தம் கொடுக்கப்பட்டுக் கொண்டே இருக்கவேண்டும்.

-------------------- நன்றி:-"விடுதலை"தலையங்கம்7-8-2009

2 comments:

bala said...

ஜாதி வெறி பிடித்து அலையும் திராவிட முண்டம்,கருப்பு சட்டை பொறிக்கி நாய்,அரை டிக்கட் தமிழ் ஓவியா அய்யா,

ஆமாங்கய்யா;பாசறை சொறி நாய்கள் மாதிரி ஜாதி வெறி பிடித்த பொறிக்கிகள் சுதந்திர நாட்டில் இருக்கக் கூடாது தான்;பேசாம பாசறை நாய்களெல்லாம் அவங்க வந்தேறிய சோமாலியா திராவிட நாட்டுக்கே போயிடலாமே;இந்தியா பிழைத்துக் கொள்ளுமே'செய்யுமா இந்த நாய்கள்.

பாலா

தமிழ் ஓவியா said...

ஜாதி ஒழிய வேண்டும் என்று சொன்னால் போதுமே பார்ப்பான் வந்து குறுக்கே படுத்து ஜாதி ஒழியாமல் காப்பாற்ற வந்துவிடுவான்.

அப்பாவித் தமிழர்களே பார்ப்பானை நம்பாதீர்கள். இதுவரை ஏமாந்தது போதும். இனியும் ஏமறாதீர்கள்.