Search This Blog

3.4.09

ஸ்ரீராம ஜெயம் எழுதினால் வெற்றி கிட்டுமா?





ராம நவமியாம்!

இன்று ராமன் நவமியாம். அதாவது ராமன் பிறந்த நாளாம். ஆனாலும் நவமி என்பதை கெட்ட நாளாகக் கூறுகிறார்கள் பக்தர்கள். அதுபோல அஷ்டமி என்பது கிருஷ்ணன் பிறந்த நாளாம். அஷ்டமியும் கெட்ட நாள் என்றுதான் கூறுகிறார்கள்.

இந்தியா சுதந்திரம் பெறும் நேரத்தைக்கூட நவமி, அஷ்டமி பார்த்துத் தான் தேர்ந்தெடுத்தார்கள். அந்த அளவுக்கு இவை இரண்டும் மோசமான நாள்கள்தானாம்.

ராமனையும், கிருஷ்ணனையும் கெட்டவர்கள் என்பதாக வைணவத்துக்கு எதிரானவர்கள் கிளப்பி விட்டிருக்கிறார்களோ, என்னவோ! அந்தச் சண்டைதான் எப்பொழுதும் உண்டே!

ஆனால் ராமனைப்பற்றி அளந்து கொட்டுவதில் ஒன்றும் குறைச்சல் இல்லை.

பலம் இல்லாதவர்கள் எல்லாம் ராமனை நினைத்தால் பல(ன்)ம் பெறுவார்களாம். அதனால்தான் அவன் பலராமனாம். தம் பக்தர்களைக் காப்பதற்காகவே தண்டத்தைத் தம் கையில் வைத்துக் கொண்டிருக்கிறானாம். அதுதான் கோதண்டராமனாம்.

நிர்பல்கே பல்ராம் எனும் சுலோகத்தின் பொருளும் அதுதானாம். அனுமானின் சாதனைகள் எல்லாம் அந்த ராமன் என்ற பலத்தின் - நாமத்தின் பலனால்தானாம்! மலையைத் தூக்கியது - கடலைத் தாண்டியது - இலங்கைக்குத் தீ வைத்துத் தப்பியது எல்லாம் ராமன் சக்தியால்தானாம். அதனால் தான் ராம பக்தன் அனுமான் என்ற பெயராம்!

படிக்க அழகாகத்தான் இருக்கிறது; கேட்க வேடிக்கையாகவும் இருக்கிறது.

அந்த ராமனின் படத்தை தீயிட்டுக் கொளுத்தச் சொன்னாரே பெரியார், அவர் ராமனுக்கே சாமி (ராமசாமி) என்று ஏற்றுக்கொள்வார்களா?


வருணாசிரம தர்மத்தைக் காப்பது ராம அவதாரத்தின் நோக்கமாக இருக்கிறது என்பதற்காக ராமன் புரட்டையும், இராமாயணப் புரட்டையும் புரட்சித் தீயில் பொசுக்கியதே - பொசுக்கி வருகிறதே திராவிடர் கழகம் - அந்த ராமன் சக்தி (பல்ராம் - கோதண்டராம்) எங்கே போய் ஒளிந்துகொண்டது?

இதையெல்லாம் செய்த - செய்யச் சொன்ன இயக்கத் தலைவர் தந்தை பெரியார் 95 ஆண்டுகாலம் வாழ்ந்தது எப்படி?

இப்பொழுது கூட சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தில் ராமன் பாலம் என்ற ஒன்றைக் குறுக்கே கொண்டு வந்து போட்டு, மக்களின் கடும் வெறுப்புக்கு ஆளாகியிருக்கிறார்களே - அந்தப் பக்த சிகாமணிகள் எதற்காக உச்சநீதிமன்றம் செல்லவேண்டும்? ராமன் ராமம் ஜெபிக்க வேண்டியது தானே? ஸ்ரீராம் ஸ்ரீராம் என்று இலட்சக்கணக்கில் எழுதி (Imposition) வாத்தியார் ராமனின் அருளை, சக்தியைப் பெற்றுத் தடுக்க வேண்டியது தானே?

அறிவுக்குமுன் நிற்க முடியாத இந்தப் பக்தர்களை ஊதித் தள்ளுவோம்; இறுதி வெற்றி யாருக்கு என்பதை நிலை நாட்டுவோம். தி.மு.க. வின் தேர்தல் அறிக்கையில் கூட சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றிட வாக்குறுதி கூறப்பட்டுள்ளதே - வெற்றி நமதே!

--------- மயிலாடன் அவர்கள் 3-4-2009 "விடுதலை" யில் எழுதிய கட்டுரை

1 comments:

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

போனமுறை எஸ்.வி.சேகர் சம்சாரம் அதை எழுதிதான் அவர் வெற்றி பெற்றாராம்.
கிகிகிகிகி!