Search This Blog
5.4.09
வீரமணி ஒழிக! உன்னைக் கொல்லாமல் விட மாட்டேன்! -தி.க. தலைவர் கி.வீரமணி கூட்டத்தில் கலாட்டா
பெரியார் திடலில் நடந்தது என்ன?
இருவருக்கு 15 நாள் சிறை
நாடாளுமன்றத் தேர்தலும் ஈழப் பிரச்சினையும் என்ற தலைப்பில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் சென்னை பெரியார் திடலில் நடிகவேள் எம்.ஆர். ராதா மன்றத்தில் நேற்று (4.4.2009) மாலை 7.30 மணிக்கு உரையாற்றினார். ஏராளமானவர்கள் உரை கேட்கத் திரண்டு இருந்தனர்.
இரவு 8 மணி அளவில் வீரமணி ஒழிக! உன்னைக் கொல்லாமல் விட மாட்டேன்! என்று கத்திக் கொண்டு ஒருவர் மேடையை நோக்கி ஓடி வந்தார். அவர் பின்னால் இன்னொரு வரும் ஓடி வந்தார். அந்த இருவரையும் கூட்டத்தில் இருந்தவர்கள் மடக்கிப் பிடித்தனர். அவரைத் தொந்திரவு செய்யாதீர்கள், முறைப்படி காவல்துறையிடம் ஒப்படையுங்கள் என்று கூறினார் திராவிடர் கழகத் தலைவர். அதன்படி காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப் பட்டு, காவல்துறையினர் வந்தபின் இருவரும் காவல்துறையிடம் ஒப்படைக் கப்பட்டனர்.
முறைப்படி புகாரினை திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கலி. பூங்குன்றன் கொடுத்தார்.
உண்மை இவ்வாறு இருக்க இரு பார்ப்பன ஏடுகள் வீரமணியிடம் கேள்வி கேட்டதாகவும், அவர் பேச்சை விமர்சித்ததாகவும் அதைத் தொடர்ந்து திராவிடர் கழகத் தொண்டர்கள் அவர்களைத் தாக்கியதாகவும் செய்திகளை வெளி யிட்டுள்ளன. அவர்கள் சொல்லுகிற படியே பார்த்தாலும், சங்கராச்சாரியார் பிரசங்கம் செய்யும் கூட்டங்களில், அவாள் ஏடுகளில் நாள்தோறும் வெளிவரும் (இன்றைய நிகழ்ச்சிகள் - engagements) பகுதிகளில் ஆன்மிகப் பிரச்சாரக் கூட்டங்களிலும் கேள்விகளை மற்றவர்கள் கேட்கலாமா? அதனை வரவேற்பார்களா? என்று தெரிந்து கொள்ள தமிழர்கள் விரும்புகின்றனர்.
கடைசிச் செய்தி
குற்றவாளிகள் இருவரும் மாஜிஸ்டிரேட் உத்தரவுப்படி புழல் சிறையில் 15 நாள்கள் அடைக்கப்பட்டனர்.
------------------"விடுதலை" 5-4-2009
Labels:
வீரமணி
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
அடுத்தவனை கேட்பது இருக்கட்டும்....வீரமணி?.. சொக்கத்தஙம் சோநியாவுக்கும்,தூயவர் பிரனப்புக்கும் காவடி தூக்குவதா?
வீரமணி படித்தது இடாலியிலா?
ஒருவர் ஏற்பாடு செய்த கூட்டத்தில் தேவையில்லாமல் கலாட்டா செய்வது அக்கிரமம்.
கருத்து வேறுபாடு இருந்தால் இவர்கள் கூட்டம் போட்டு அவர்களை விமர்சிக்கலாம் அதை விடுத்து கலாட்டா செய்வது அநாகரிகமான செயல்.
கலாட்டா செய்த காலிகள் ம.க.இ.க.வை சேர்ந்தவர்கள் என்பதை தமிழ் தொலைக் காட்சி உறுதி செய்தது.
ம.க.இ.க. முற்போக்கு முகமூடி போட்டுள்ள பார்ப்பன அமைப்பு என்பது இந்த நிகழ்சி மூலம் உறுதி யாகிவிட்டது
Post a Comment