Search This Blog
3.4.09
ஈழத்தில் நடைபெறுவது இனப்படுகொலையே
ஈழத்தில் நடைபெறுவது இனப்படுகொலையே
புகழ்பெற்ற நாவலாசிரியர் அருந்ததிராய் படப்பிடிப்பு
[மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்டவரும், ஆங்கிலத்தில் God of small things என்ற புதினத்தை எழுதி, இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற புக்கர் பரிசைப் பெற்றவருமான உலகப் புகழ்பெற்ற பெண் எழுத்தாளர், அருந்ததிராய், ஈழத்தமிழர்களுக்கு எதிராக சிறீலங்கா அரசு செய்யும் கொடுமைகளைப் பற்றி, மார்ச் 30 ஆம் நாளிட்ட தி டைம்ஸ் ஆஃப் இண்டியா ஆங்கில நாள் இதழில் எழுதியுள்ளதை இங்கு தருகிறோம்.]
சிறீலங்காவில் நடப்பதைப் பற்றி யாரும் எதையும் பேசாத நிலையில், அங்கு பயங்கரக் கொடுமைகள் நடத்தப்படுகின்றன. அங்கு என்ன நடக்கிறது என்பதைப் பற்றி இந்தியாவின் முக்கிய ஊடகங்களிலோ, பன்னாட்டு செய்தித்தாள்களிலோ கிட்டத்தட்ட எந்தத் தகவலும் தரப்படுவது இல்லை. இப்படி ஒரு நிலை ஏன் நிலவுகிறது? என்பது கவலைக்குரியது.
நமக்கு ஓரளவிற்குக் கிடைக்கும் செய்தி, ஒன்றைத் தெரியப்படுத்துகிறது - பயங்கரவாதத்திற்கு எதிரான போர் எனும் பிரச்சாரத்தைப் பயன்படுத்தி, சிறீலங்கா அரசு, மக்களாட்சியின் சாயல் கூட இல்லாமல் அதைக் குலைக்கிறது, மற்றும் தமிழர்களுக்கு எதிராகச் சொல்ல முடியாத குற்றங்களைச் செய்கிறது. ஒரு தமிழனோ, தமிழச்சியோ, தான் ஒரு பயங்கரவாதி என மெய்ப்பிக்காத வரையில், தமிழர் ஒவ்வொருவரும் பயங்கரவாதி எனும் கொள்கையின் அடிப்படையில் அந்த அரசு செயல்படுகிறது - பொது மக்கள் வாழும் இடங்கள், மருத்துவ மனைகள், பாதுகாப்பிற்கான இடங்கள் ஆகியவற்றின் மீது குண்டுகளை வீசி, அவற்றைப் போர்ப் பகுதிகளாக மாற்றுகிறது. இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் போர்ப்பகுதியில் மாட்டிக் கொண்டுள்ளதாக நம்பகமான செய்திகள் தெரிவிக்கின்றன. கவச வண்டிகளையும், போர் விமானங்களையும் பயன்படுத்தி சிறீலங்கா ராணுவம் முன்னேறுகிறது.
வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில், இடம் பெயர்ந்தவர்களைத் தங்கவைப்பதற்காக, நலவாழ்வுக்கிராமங்களை நிறுவியிருப்பதாக அரசுச் செய்திகள் கூறுகின்றன. 2009 பிப்ரவரி 14 ஆம் தேதி டெய்லி டெலகிராஃப் நாளேடு தரும் செய்தியின்படி, போர் நடக்கும் இடங்களில் இருந்து தப்பிச் செல்கிறவர்களைக் கட்டாயமாகப் பிடித்து வைக்கும் மையங்களாகவே இந்த கிராமங்கள் இருக்கும் கொடுமைக்கூடாரங் களுக்கான வேறு பெயராக நலவாழ்வுக்கிராமங்கள் என்பதை எடுத்துக்கொள்ளலாமா? சிறீலங்காவின் மேனாள் வெளியுறவுத்துறை அமைச்சர், மங்கள சமர வீரா,டெய்லி டெலகி ராஃப் இதழுக்குப் பின்வரும் செய்தியைத் தந்திருக்கிறார். பாதுகாப்பிற்கான அச்சுறுத்தல் என்ற அடிப்படையில், சில மாதங்களுக்கு முன்பு, கொழும்பில்உள்ள தமிழர்கள் அனைவரையும் பதிவு செய்யத் தொடங்கியது. ஆனால், ஜெர்மன் நாஜிகள் 1930 களில் செய்தது போன்ற கொடுமையைச் செய்ய இதை அரசு பயன்படுத்திக்கொள்ளக் கூடும். தமிழ் மக்கள் அனைவரையும், பயங்கரவாதிகள் என அரசு முத்திரை குத்தப்போகிறது.
இனப்படுகொலைதான்
தமிழ் ஈழ விடுதலைப் புலிகளை ஒழிப்பது குறிக்கோள் என்று கூறிக் கொண்டு, பொதுமக்களையும் பயங்கரவாதிகளையும் அடக்கி ஒடுக்கும் செயல், சிறீலங்கா அரசு இறுதியில் இனப்படுகொலை செய்யப் போவதைக் காட்டுவதாகத் தோன்றுகிறது. அய்க்கிய நாடுகள் சபையின் மதிப்பீட்டின்படி, பல ஆயிரக்கணக்கான மக்கள் ஏற்கெனவே கொல்லப்பட்டுள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கில் காயம்பட்டுள்ளனர். அங்கே நடந்தனவற்றை நேரில் கண்டவர்கள் சொல்வதைக் கேட்கும் பொழுது மக்கள் நரகத்தில் நடக்கும் துன்பத்தை அனுபவிக்கிறார்கள் எனத்தெரிகிறது. சிறீலங்காவில் நடப்பன மறைக்கப்படுகின்றன. இருப்பினும் கிடைக்கும் தகவலைக் கொண்டு பார்த்தால், அங்கு நடப்பது வெளிப்படையாக ஓர் இனத்திற்கு எதிரான போர் ஆகும். யாரும் தட்டிக்கேட்காத நிலையில் இக்குற்றங்கள் எல்லாம் நடப்பதற்குக் காரணம் ஆழ்ந்து பதிந்துள்ள இனவெறிதான்! அதன் காரணமாகத் தான் முதலில் சிறீலங்காவில் உள்ள தமிழர்கள் ஓரங்கட்டப்பட்டு அந்நியர்கள் ஆக்கப்பட்டனர். இனவாதத்திற்கு அங்கு நீண்டவரலாறு உண்டு - சமூகப் புறக்கணிப்பு, பொருளாதார முற்றுகை, பெரும் அளவில்திட்ட மிட்ட கொலைகள், சித்திரவதை ஆகியன நடந்துள்ளன. முதலில் அமைதியான, வன்முறையற்ற முறையில் தமிழர்கள் எதிர்த்தார்கள், பின்பு அது உள்நாட்டுப் போராக மாறியது.
சிறீலங்காவில் நடப்பதைக் குறித்து மற்றவர்கள் பேசாமல் இருப்பது ஏன்? மற்றொரு பேட்டியில் மங்கள் சமரவீரா இவ்வாறு கூறியுள்ளார். சிறீலங்காவில் இன்று சுதந்திரமான செய்தி ஊடகம் கிட்டத் தட்ட இல்லை
சாவை உண்டாக்கும் குழுக்கள், வெள்ளை வேன்களில் மக்களைக் கடத்திச் செல்லல் ஆகினபற்றியும் சமரவீரா கூறியுள்ளார். இவை மக்களைப் பீதியடையச் செய்துள்ளன. அரசுக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்கள், இதழாளர்கள் உள்பட, கடத்திச் செல்லப்பட்டுக், கொல்லப்படுகிறார்கள். பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்கள், காணாமல் போதல், கொலைகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி, பத்திரிகையாளர்களை சிறீலங்கா அரசு அடக்கிவைத்திருப்பதாக, பன்னாட்டுப் பத்திரிகையாளர் கூட்டமைப்புக் கூறுகிறது.
மனித இனத்திற்கு எதிரான இக்குற்றங்களைச் செய்ய, போர் ஆதரவுச் சாதனங்களையும் கருவிகளையும் சிறீலங்கா அரசுக்கு இந்திய அரசு தருகிறது எனும் கவலையளிக்கிற உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. இது உண்மையாயின் மிகவும் கண்டிக்கத் தக்கது. பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளின் அரசுகள் செய்வது என்ன?
சிறீலங்காவில் நடக்கும் கொடுமைகள் தமிழ்நாடடு மக்களை உணர்ச்சிவயப்படுத்தியுள்ளன. 10 பேருக்கு மேல் ஏற்கனவே தங்கள் உயிரை முடித்துக்கொண்டனர். மக்களின் கோபமும் வேதனையும் உண்மையானவை. அரசியல் வாதிகளில் நேர்மையற்றவர்கள் அவற்றைத் தேர்தல் காரியங்களுக்குப் பயன்படுத்துகிறார்கள்.
கவலைக்குரிய இந்நிகழ்வுகள் இந்தியாவின் பிற பகுதிகளுக்குத் தெரியவில்லை. என்பது அசாதாரணமானது. இங்கு அப்படிப்பட்ட பேச்சு மூச்சற்ற நிலை ஏன் நிலவுகிறது? சிறீலங்காவில் பெரிய அளவில் நடக்கும் கொடுமைகளைக் காணும் பொழுது, இவ்வாறு அமைதியாக இருப்பது மன்னிக்க முடியாதது. பலகாலத்திற்கு முன்பே இதைப் பற்றிப்பலர் பேசியிருக்கவேண்டும் ஆனால் போதிய தகவல் கிடைக்காமையால் நான் உள்படப்பலர் அதைச் செய்யவில்லை.
கொலைகள் தொடர்கின்றன, பல லட்சக்கணக்கில் மக்கள் கொடிய முகாம்களில் அடைக்கப்பட்டிருக் கிறார்கள்; இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பட்டினியாகக் கிடக்கிறார்கள்; இனக் கொலை நடக்க இருக்கிறது; இந்த நிலையிலும் இப்பெரிய நாட்டில் மயான அமைதி நிலவுகிறது. இது மிகப்பெரிய மனிதத் துயரம். உலகம் தலையிடவேண்டும். காலம் கடப்பதற்கு முன் இப்பொழுதே செயல்படவேண்டும்.
Labels:
பொதுவானவை
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
நாம் வெற்றி கொள்வோம்...
கவலை வேண்டாம்!
புலிகலின் வலிமை....போகப் போகப் புரியும்....
புரியாதவன்.....சவப்பெட்டியில்....போவான்
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி .
Post a Comment