Search This Blog

3.4.09

கடவுள்கள் படங்கள், சிலைகளை அரசு அலுவலகங்களிலிருந்து அகற்ற ஆணை


மதச்சார்பின்மை

மதச்சார்பின்மை என்ற கொள்கைக்கு அவ்வப்பொழுது மாற்றுப் பொருள் சொல்லி, நடைமுறையில் அக்கிரகாரமயமாகவே ஆட்சி நடப்புகள், அரசு அலுவலக நடவடிக்கைகள் அமைந்து வந்தாலும், சில மாநிலங்களில் உண்மையான மதச்சார்பின்மை பக்கம் தொட்டுக்கொள்கிற அளவிலும், துடைத்துக்கொள்கிற அளவிலும் ஆணைகள் பிறப்பிக்கவும் பட்டன.

1974 அக்டோபரில் கேரள மாநிலத்தில் ஒரு அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

மதச்சார்பற்ற கொள்கைக்கு விரோதமாக மத நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதனால் வகுப்புக் கலவரங்களுக்கு வித்திடக்கூடிய சூழ்நிலை உருவாகிறது. எனவே மத நிகழ்ச்சிகளில் அரசு ஊழியர்கள் கலந்துகொள்வது தடை செய்யப்படுகிறது. இந்த ஆணை அரசாங்க பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் பணியாற்றும் ஆசிரியர்கள், பேராசிரியர்களுக்கும் பொருந்தும் என்றும் அவ்வாணையில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த செய்தி 1974 அக்டோபர் 11 நாளிட்ட செய்தி ஏடுகளிலும் வெளிவந்தது.

வெங்கடேசுவரா பல்கலைக் கழகத்தில்

ஆந்திர மாநிலம் வெங்கடேசுவரா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் சச்சிதானந்தமூர்த்தி அவர்கள் 1976 அக்டோபரில் ஒரு சுற்றறிக்கையைப் பல்கலைக் கழகத்தின் பல்வேறு துறைகளுக்கும் அனுப்பினார்.

1) பல்வேறு மதங்களை உள்ளடக்கிய மதச்சார்பற்ற ஜனநாயகக் குடிஅரசு நாட்டில், ஒரு மதத்துக்குச் சொந்தமான பாடலை கடவுள்வாழ்த்து பாடக்கூடாது. எனவே பல்கலை நிகழ்ச்சிகள் எதிலும் கடவுள் வாழ்த்து தேவையில்லை. எல்லா மதப் பாடல்களையும் பாடுவது என்பது நடைமுறைக்கு ஒத்துவராது.

2) தேசியகீதம் - குடியரசுத் தலைவர், பிரதமர், கவர்னர் முதலமைச்சர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் மட்டுமே இசைக்கப்படவேண்டும்.

3) பல்கலை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் விருந்தினர்களுக்கு மாலைகள் அணிவிக்கக் கூடாது. பல்கலைக் கழகத்திற்கு வெளியே இருந்துவரும் விருந்தினர்களுக்கு மலர்ச் செண்டு அளிக்கலாம் என்று ஆணை ஒன்றினைப் பிறப்பித்தார்.

பார்ப்பனர்களும், இந்து ஏடும் கொடுத்த பெருந்தொல்லையால் சில நாட்களில் இந்த ஆணையில் திருத்தம் செய்யும்படி நேர்ந்தது.

தமிழ்நாட்டில்

அறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சர் ஆனநிலையில் மிக முக்கிய ஆணை ஒன்றினைப் பிறப்பித்தார். பொது (ஜெனரல்-எம்) இலாகா நினைவுக் குறிப்பு எண். 7553/66-2 நாள் 29 ஏப்ரல் 1968.

பொருள் : எந்த மதத்தைச் சேர்ந்ததாயினும் கடவுள்கள் - பெண் கடவுள்கள் - படங்கள் - சிலைகள் ஆகியவற்றை பொது அலுவலகங்களிலிருந்து நீக்குதல்.

இலாகா தலைவர்களுக்கு அறிவித்துக் கொள்ளப்படுவதாவது : மதச்சார்பற்ற கொள்கை உடைய ஆட்சியாதலால் எந்த மதத்தைச் சார்ந்த சாமியார்கள், (சாதுக்கள், மகான்கள், அவதாரங்கள் உட்பட) கடவுள்கள், பெண் கடவுள்கள் ஆகியவற்றின் படங்கள் - சிலைகள் முதலியவற்றை அரசாங்க அலுவலகத்தில் அல்லது அரசுக்குச் சொந்தமான இடத்தில் வைத்திருப்பது சரியல்ல என்று அரசாங்கம் கருதுகிறது.

இந்தக் கட்டடங்களில் இவை இருக்குமானால், அவற்றை படிப்படியாகவும்,எந்தவித ஆடம்பரமும் அல்லாமலும், பிறர் கவனத்தை ஈர்க்காத வகையில் அல்லது எந்தவித அசம் பாவிதமும் நிகழாத வகையிலும் அகற்ற வேண்டும்.



- சி.ஏ. ராமகிருஷ்ணன் அரசு தலைமைச்செயலாளர்


முதலமைச்சர் அண்ணா அவர்களால் பிறப் பிக்கப்பட்ட உண்மையான மதச்சார்பின்மைக் கொள்கைக்கேற்ற ஆணையிது!

------------------நன்றி:-"விடுதலை" 3-4-2009

4 comments:

முகவைத்தமிழன் said...

ஆனால் எங்கே பின்பற்றப்படுகின்றது?

மீண்டும் அண்ணாவும், பெரியார் அவர்களும் வந்தால்தான் நாடு திருந்தும் போலுல்லது.

Unknown said...

அரசு ஆனைகளை அதிகாரிகள் மதிப்பதேயில்லை. இலஞ்சம் வாங்கக்கூடாது ஆனனலும் இலஞ்சம் வாங்கிக் கோண்டு தானே இருக்கிரார்கள். இலxசம் வாங்கிக்கி கொண்டு இன்ரைக்கு கடவுள் நமக்கு இவ்வலவுதான் கொடுத்திருக்கிறார் என்று கடவுளை துணைக்கு அழைத்துக் கொள்கிறார்கள்.

கடுமையான நடவடிக்கைகள் மூலம்தான் இவைகளை நடைமுறைப்படுத்த முடியும்.
துணிச்சலான அரசாக இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சூனிய விகடன் said...

அம்பேத்கர் படத்தை வைப்பதை விட சாமி படங்கள் எவ்வளவோ மேல்

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

முகவைத் தமிழன்

இன்பா