
கேள்வி: பார்ப்பனர்களுக்கு இடஒதுக்கீடு கேட்கிறாரே சட்டமன்ற உறுப்பினர் (அதிமுக) எஸ்.வி. சேகர்?
பதில்: என்னையும்கூட நேரில் (21.3.2009) பெரியார் திடலுக்கு வந்து சந்தித்து இது பற்றி தனது நிலையை விளக்கினார்.
நான் அவரிடம் தெளிவுபடுத்தினேன். ஏற்கனவே இருந்த உங்களுக்கான இடஒதுக்கீட்டை வகுப்புவாரி Proportional Representation உரிமை ஆணையை - எதிர்த்து நீதிமன்றத்திற்கு, பொய்யான பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்து ஒழித்தவர்கள் நீங்கள்தான் - பார்ப்பனர்கள்தான்; அரசியல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டு, வகுப்புவாரி சட்டம் வந்தால்தான் எந்த அரசும் முன்னேறிய ஜாதியினராகிய பார்ப்பனருக்கு இடஒதுக்கீடு தர முடியும். அதுவும் 3 விழுக்காடு உங்களுக்குத் தருவதில் எவ்வித மறுப்பும் இல்லை; பிரச்சினை எழுந்ததே - நீங்கள் ஏற்கனவே 100 விழுக்காடும் ஏகபோகமாக வைத்திருந்தினால் தான் என்று விளக்கினேன். அவரும் புரிந்து கொண்டார்.
-----கி.வீரமணி அவர்கள் 4-4-2009 "விடுதலை" ஞாயிறு மலரில் கேள்வி ஒன்றுக்கு அளித்த பதில்


3 comments:
தந்தை பெரியார் அவர்களிடம் ஒரு பார்ப்பனர் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் தன்னைச் சேர்க்க மறுக்கிறார்கள் என்று சொன்னபோது அப்போதே 3 விழுக்காடு அவர்களுக்குக் கொடுங்கள் என்று ஆணையிட்டார் பெரியார்.
நேர்மையாக இருந்தால் இந்நேரம் அவர்களும் மனிதர்களாக உடன் பிறப்புக்களாக வாழ்ந்திருக்கலாம்.
கொலைக்குற்ற சுப்புணியை மதிக்க வைப்பார்கள் ஆனால் மனித நேயத் தலைவர்களை மதிக்க மாட்டார்கள்.
மனதால் மாறாத வரைக்கும் அவர்கள் "மிலேச்சர்கள்" தான்.
பார்ப்பனர்களின் உரிமையை யாரும் இங்கு தட்டிப்பறிக்க வில்லை. பார்ப்பனர்கள்தான் பார்ப்பனரல்லாதவர்களின் பங்கை அனுபவித்துக் கொண்டு இன்று வரை கொடுக்க மறுக்கிறார்கள்.
நல்ல பதிவு.
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
தமிழன் &
திருநாவு
Post a Comment