Search This Blog

1.8.08

பெரியாரின் தெளிவான கொள்கை முழக்கங்கள்



பகுத்தறிவு ஆசான் தந்தை
பெரியாரின் ஆறு கொள்கை விளக்கம்


துவக்கத்தில் தன்மான இயக்கத்துக்கு ஆதரவாக இருந்த டாக்டர் வரதராஜூலு நாயுடு அவர்கள் பிற்காலத்தில் எதிர்க்க ஆரம்பித்தார்.

ரத்தம் சிந்தியாவது தேச பக்தர்கள் புற்றீசல்களைப் போல் உயிர் துறந்தாவது - சுயமரியாதைப் பிரச்சாரத்தை ஒடுக்கிவிட வேண்டும் என்று தமிழ்நாடு இதழில் (10-5-1928) எழுதினார். அதற்கு தந்தை பெரியார் அளித்த சுயமரியாதை இயக்கத்தின் கொள்கை விளக்கமாவது:

1. மக்களுக்குப் பிராணனைவிட மானம் பெரிதென்பது அதன் முதலாவது கொள்கையாகும்.

2. எல்லோரும் பிறவியில் சமம் என்பது இரண்டாவது கொள்கையாகும்.

3. பெண்களுக்கு சம உரிமை இருக்கவேண்டும் என்பது மூன்றாவது கொள்கையாகும்.

4. ஜாதி, மத பேதங்கள் தொலையட்டும். நாட்டில் ஒற்றுமையையும் எல்லாருடைய நன்மையையும் உத்தேசித்து ஒவ்வொரு ஜாதி, மதத்திற்கும் அரசியலில் சரியான பிரதிநிதித் துவம் இருக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்பது நான்காவது கொள்கையாகும்.

5. கண்மூடி வழக்கங்களும் மூடநம்பிக்கையும் தொலைய வேண்டும் என்பது அய்ந்தாவது கொள்கையாகும

6. வேதம், சாஸ்திரம், புராணம், பழக்கம் என்னும் காரணங்களால் மனிதனின் பகுத்தறிவைக் கட்டுப்படுத்தக்கூடிய பார்ப்பனியம் ஒழிந்து, சுயேச்சையும் அறிவும் வளர வேண்டும் என்பது ஆறாவது கொள்கை.


இவ்வாறு கொள்கை விளக்கம் அளித்தார் தந்தை பெரியார்.

---------- தந்தைபெரியார் - "குடிஅரசு" - 27-5-1928

0 comments: