
விநாயக சதுர்த்தியாம்...
விநாயகன் பிறந்த அசிங்கம் ஒரு பக்கம் இருக்க - அவன் திருமணம் ஆகாதவன், அவனுக்கு எருக்கம் பூமாலையும், எலுமிச்சம் பழமும் என்றெல்லாம் கதை கட்டிப் பிரச்சாரம் செய்து பிழைப்பு நடத்துகிறார்கள்.
சிவமகாபுராணம் சொல்வது என்ன? பிள்ளையாருக்கும், அதன் தம்பி முருகனுக்கும் திருமணம் நடத்துவதுபற்றி அதுகளின் பெற்றோர்களான சிவனும் பார்வதியும் பேசிக் கொண்டிருந்தார்களாம். அப்போது, அன்புச் சகோதரர்கள் இருவரும் அங்கே இருந்தனராம். எனக்கு முதலில் - எனக்கு முதலில் என இரண்டுமே குதித்தனவாம். அண்ணாதுரை (விநாயகன்) குதித்ததாவது சரி - தம்பிதுரை (முருகன்) எப்படிக் குதிக்கலாம்?
குதித்ததுகள் இரண்டும் - கடவுள் சகோதரர்கள் ஆயிற்றே! ஆகவே போட்டி வைத்தார்களாம். எது உலகைச் சுற்றிவிட்டு முதலில் திரும்பி வருகிறதோ அதற்கே முதலில் கல்யாணம் எனச் சொல்லி விட்டார்கள். முருகன் மயில்மீது ஏறிக் கொண்டு உலகைச் சுற்றப் போய் விட்டான். விநாயகன் அப்பாவையும் அம்மாவையும் ஒன்றாக நிற்க வைத்து ஏழு முறை சுற்றி வந்து, உலகத்தைச் சுற்றியதற்குச் சமம் எனக் கூறியதாம். அவர்களும் ஏற்றுக் கொண்டு அதற்குத் திருமணம் செய்து வைத்தார்களாம்.
விசுவரூபனின் இரண்டு மகள்களான சித்தி, புத்தி என்ற இருவரையும் கல்யாணம் கட்டிக் கொண்டதாம் கணபதி. உலகைச் சுற்றி விட்டு வேர்க்க விறுவிறுக்க வந்து சேர்ந்த முருகன், விநாயகன் திருமணத்தைத் தெரிந்து கொண்டதும் கோபித்துக் கொண்டு மலைக்குப் போய்விட்டான் என்கிறது சிவமகாபுராணம்.
திருமணம் ஆனவன் என்றும் இல்லை என்றும் இருவிதக் கதைகள் - பித்தலாட்டக்காரர்களின் கைவேலை.
இன்னொன்று, சகோதரர்களுக்குள் போட்டியே ஒரு மாம்பழத்தைப் பங்கு போடுவது பற்றித்தான் என்று ஒரு புருடா விட்டிருக்கிறார்களே!
எதை ஏற்பது? எல்லாமே பித்தலாட்டமாகவே இருக்கிறதே இந்து மதத்தில்!
------------------நன்றி: "விடுதலை" 27-8-2008
2 comments:
neengal inthukkalukku yethiriya? illai kadavulukku yethiriya?
-tamizhthesan
நாங்கள் யாருக்கு எதிரி அல்ல. மனித நேயத்தை கடைபிடிக்கும் சாதாரண மனிதர்கள்.
உண்மையை உலகுக்கு சொல்லுகிறோம்.
உங்களின் அறிவுக்கு சரி என்று பட்டால் ஏற்றுக்கொள்ளுங்கள். இல்லையெனில் ந்ன்கு ஆலோசித்து ஒரு முடிவுக்கு வாருங்கள்.
Post a Comment