
விநாயக சதுர்த்தியாம்....
விநாயகன், விக்னேசுவரன், கணபதி, கணேசன் என்றெல்லாம் சொல்லப்படும் பிள்ளையாரின் பிறந்தநாள் விரைந்துவருகிறதாம். எப்படிப் பிறந்த நாளைக் கண்டறிந்தார்கள் என்பதே விளங்கவில்லை. ஏன் என்றால் பிள்ளையாரின் பிறப்பு, பல வகைகளில் பல கதைகளில் கூறப்பட்டுள்ளது.
அதில், ஒருவகை, சிவ மகாபுராணத்தில் கூறப்பட்ட கதைச் சுருக்கம் இது:
பார்வதியுடன் (சிவனின் மனைவி) பேசிக் கொண்டிருந்த அவள் தோழி விஜயை என்பவள் கேட்டாளாம், உங்கள் கணவருக்கு மட்டும் ஏராளமான வேலைக்காரர்கள் (கணங்கள்) இருக்கும்போது - உங்களுக்கு யாருமே இல்லையே என்று! அவள் தன் உடலில் சிறிது நீர் தெளித்து ஈரமாக்கி அழுக்கைத் திரட்டி எடுத்து மூன்று கண்களும் யானை முகமும் உடைய உருவத்தை உண்டாக்கிக் காவலுக்கு வைத்துவிட்டுக் குளிக்கப் போனாள்.
அங்கே வந்த சிவன் உள்ளே போக முயல, அழுக்குருண்ண்டைக் கணபதி தடுக்க, நான்தான் சிவன் எனக் கூறிக் கொண்டே உள்ளே போக முயல, கணபதி தன் தண்டாயுதத்தால் சிவனை அடித்துவிட்டது. இவனைக் கொஞ்சம் கவனியுங்கள் என்று சிவன் தன் பிரதம கணங்களுக்குக் கூடி, சிவ கணங்கள் கணபதியை நெருங்க, அவர்களையும் அடித்து விரட்டிவிட்டது.
சிவனுக்கு ஈகோ கிளம்பி, சண்டைபோட முடிவெடுத்து பிரம்மா, இந்திரன் முதலியோரைச் சேர்த்துக் கொண்டு போர் முஸ்தீபு செய்யும் போது விஷ்ணு , நான் மாயையால் கணபதியை வெல்கிறேன் எனச் சவடால் அடித்தார். போர் நடக்கும் போது சிவன், பின்புறம் இருந்து பிள்ளையாரைத் தாக்கியதால் அது மூர்ச்சை அடைந்தது. இது விவரத்தை நாரதர் பார்வதியிடம் போட்டுக் கொடுக்க அவளும் தன் பங்குக்குப் போராடத் தொடங்கினாள். பயந்துபோன சிவனும் மற்றவர்களும் துரோணாகலம் எனும் மருந்து மலையை வரவழைத்து சிகிச்சை செய்ததும் கணபதிக்குத் தெளிவு வந்தது.
இதன்படி பார்வதி அழுக்கைத் திரட்டிப் பிள்ளையாரை உருவாக்கும் போதே யானை முகத்தை வைத்தாள் என்றாகிறது.
ஆனால், சிவ புராணத்தில் கணபதியை மனிதத் தலையோடு உருவாக்கியதாக வருகிறது. சண்டையில் பிள்ளையாரின் தலை துண்டிக்கப்பட்டுவிட்டது. அது கண்டு பார்வதி அழுதுபுரளவே, ஒரு கொம்பு இருந்த யானைத் தலையைக் கொய்து வந்து பிள்ளையாரின் தலையில் பொருத்தி வைக்கப்பட்டது என்று உள்ளது.
எதை நம்புவது? பிள்ளையார் பக்தர்களும் பிள்ளையாரின் பிறந்த நாள் கொண்டாடுபவர்களும் பதில் கூறுவார்களா?
------------- நன்றி: "விடுதலை" 22-8-2008 பக்கம் 6
2 comments:
vanakkam thozar
ungkalukku inaippu
thanththulleen.
நன்றி தோழரே. தொடர்ந்து கருத்து தெரிவிக்கவும்.
Post a Comment