Search This Blog

24.8.08

விநாயக புராணம் - ஒரு ரவுடி மனிதன் கதை - காரவன் ஏட்டில் ஆதாரத்துடன் விளக்கம்




(கடவுள்கள், தெய்வங்கள் என்பவற்றை மய்யமாக வைத்து சுற்றி வளைத்துப் புனையப்பட்டுள்ள கதைகளை நுணுகிப் பார்த்தால் அந்தக் கடவுள்கள், கடவுளச்சிகள் எல்லாம் அடிப்படையில் ஒரு மனிதனாகவும் பெண்ணாகவும் இருப்பது வெட்ட வெளிச்சமாகும்.
கிருஷ்ணாவதாரம் என்ற பெயரில் வழக்கறிஞர் திரு கே.எம். முன்ஷி எழுதிய விளக்க நூலில் கிருஷ்ணன் ஒரு சாதாரண மனிதன். கிருஷ்ண லீலைகள் என்பன குழந்தை விளையாட்டுகள், காளைப் பருவக் குறும்புக் கூத்துக்கள் என்று விளக்கியுள்ளார்.

இதே போன்றே விநாயகன் என்று பூஜிக்கப்படும் யானைமுக அலங்கோல உருவ தெய்வம் என்பதும் அடிநாளில் தண்டச்சோற்று ஊராரை மிரட்டி வயிறு வளர்த்த ஒரு ரவுடியை அடிப்படையாகக் கொண்டது. விநாயகபுராணம் அவனுடைய ரவுடித் தனத்தை விவரிப்பது என்று உண்மை விளக்கம் செய்கிறார் திரு கே.விசுவநாதன் என்பவர்.

டில்லி ஆங்கில மாதம் இருமுறை ஏடு காரவனில் செப்டம்பர் 1 ஆம் தேதி இதழில்.
தந்தை பெரியாரவர்களின் பகுத்தறிவுக்காவனம் எவ்வளவு தொலைவுக்குப் பரந்து வளர்ந்து பூத்துக் காய்த்து நற்பலனளித்து வருகிறது என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டாகிறது.)


மனிதனையே கடவுளாக்குகின்றனர்


நம் நாட்டுக் கெட்ட வழக்கங்களில் முக்கியமான ஒன்று மனிதர்களை எல்லாம் கடவுள்களாக்க முற்படுவதும், அவற்றுக்குக் கும்பிடு போட கோயில்கள் கட்டி வைப்பதுமாகும்.
எனவே, ஒருவன் தன் சொந்த உருவத்தில் சொந்த கதையில், அந்தக் கதையில் தனக்கு மதிப்புச் சேர்க்க தன்கிட்டவும் நெருங்காத சில தெய்வீக குணபாவங்களைச் சேர்த்தும் கோயில்கள் அமைத்தும் வந்ததன் காரணமாக ஒரே பெயர் முதலியன உள்ள நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான கோயில்கள் இப்போது நமக்கு உள்ளன. புராணக் கதைகளில் ஆதாரப் புலன்

இந்தக் கடவுள் என்பவைகளைச் சுற்றிப் புனையப்பட்டி ருக்கும் அந்தக் கதைகளை நாம் நுணுகி காரண காரிய புலனாய்வு செய்து பார்த்தால் அந்தக் கதைகள் குறிப்பிடும் அந்தக் கடவுள்கள் என்பன அடிநாளில் ஒரு ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ இருப்பதைக் கண்டறியலாம். தலைமைக் கடவுள்கள் என்று கூறப்பட்டவைகளின் அடிப்படையும் கூட இப்படி மனிதனை மூலாதாரமாகக் கொண்டிருப்பதைக் காணலாம்.

இவ்விதம் மனிதரைக் கொண்டு கடவுள்களை மனிதர்கள் சிருஷ்டி செய்யும் திருப்பணி இன்றும் கூட தொடர்ந்து நடக்கிறது.

இப்போது உயிருடன் இருப்பவர்களில் அல்லது அண்மையில் செத்துப் போனவர்களில் யாராவது தங்களுக்கு விருப்பமானவராக இருந்தால் கடவுள் தன்மை கற்பனை செய்து கூறி அவர் களையும் தெய்வமாக்கி சிலை வைத்துக் கோயில் கட்டி தெய்வமாக்கிவிடுகின்றார்கள்.
ஏன் தடைப்படுத்தவில்லை?

விஞ்ஞானப் புதுமை அறிவுவளம் கண்ட இந்த காலத்திலும் இவ்விதம் இந்த ஏமாற்றுத்தனமான - மோசடியான சட்டப்படி குற்றமான இந்தச் செயல்களுக்கு நமது சமுதாயம் இன்னும் முடிவு கட்டாதது விசித்திர விபரீதமாகத்தான் இருக்கிறது.
இப்படி ஏன் தடைப்படுத்தப்படவில்லை? ஏனென்றால் இவ்விதம் செய்வதை மத விரோதமாகவும் நாத்திகமாகவும் கடவுள் துவேஷமாகவும் இப்போது படித்தவர்கள் என்பவர் களும் கருதி பயந்து ஒதுங்கி ஒருங்கி இருக்கின்றனர்.

ஆயினும் மூடநம்பிக்கைகளை ஒதுக்கித் தள்ளவும் உண்மையை அறியவும் விரும்புகிறவர்கள் இந்த அறிவொளிப் பணி செய்வதனின்றும் தடைப்பட்டு நிற்கமாட்டார்கள்.

துணிவுடன் இந்த தெய்வ மோசடிகளை அம்பலப் படுத்தி உண்மையை உலகோர் அறியச் செய்ய துணிவுடன் செயலில் ஈடுபட்டுத்தான் தீர்வார்கள்.

விகனேசுவரன் யார்?

ஒரு வேலையைத் துவங்கும் முன் அன்றாடம் பூசை போடுகிறார்களே - விநாயகர் சதுர்த்தி என்று ஆண்டு தோறும் ஒரு நாளில் கொண்டாடுகிறார்கள் - இந்த விக்னேசுவரன் யார்? இவன் அடிப்படைப் பிறப்பு - வாழ்க்கை - அடிப்படை -வரலாறு -கதை என்ன? இவனை ஏன் கும்பிடவேண்டும் - அருள் பெறத் துடிக்க வேண்டும்? புராணங்களும் கதைகளும் தவிர்த்து இவனைப் பற்றிய உண்மைகளை அறிய வேறு உண்மையான - ஆதாரங்கள் உள்ளனவா? அறிவியல் கொண்டு கணித்துப் பார்ப்போம்.

புராணக் கதைகளில் இந்த விக்நேசுவரைப் பற்றி குற்றிப்பிட்டுள்ளவற்றில் முக்கியமானவை -


(1) இவருக்குள்ள பெயர்களில் முக்கியமானவை விக்நேசுவரன் ; கணபதி - விநாயகர்.
(2) அவலட்சம் - அசாதாரண நீண்ட மூக்கு - யானைத் துதிக்கை போல் தோற்றம்
(3) ஒரே ஒரு பல்-தந்தம்
(4) பெருச்சாளி வாகனம்


இந்த இலட்சணங்களை ஆதாரமாகக் கொண்டு அவனுடைய மனித வாழ்க்கைக் கதையை யூகித்துக் கொள்ளலாம்.

ஏழைக் குடும்பத்தில் பிறந்து வைத்தவன் சின்னஞ்சிறு வயதிலிருந்து பிச்சை எடுத்து வயிறு வளர்க்க வேண்டிய ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவன் (சிவன் பிச்சையாண்டி என்பது புராணம்).

இவனது அவலட்சணம் கண்டு ஊரார் இவனை அறுவறுத்து ஒதுக்கினர் - விரட்டினர் - பிச்சைத் தொழிலும் வயிற்றுப் பாட் டுக்கு உதவியாகவில்லை. பட்டினி வேதனையால் பரிதவித்தான். இருந்தாலும் நல்ல மூளை - புத்திசாலி - சிந்தனா சக்தி அதிகம்.
வயிற்றுப் பாட்டுக்கு ஒரு உபாயம் வகுத்துச் செயல்படுத் தினான்.

அவனைப் போன்ற ஏழை எளியவரும் விஷமிகளுமான சிறுவர்களை கோஷ்டியாகச் சேர்த்துக் கொண்டான். இந்த விஷமச் சிறுவர் கூட்டம் சூழ வீடுதோறும் பிச்சைக்குச் சென்றான் பிச்சை போடாவிட்டால் . . . கூச்சல் - ரகளை செய்தனர். இவர்கள் வீட்டு வாசலை விட்டு அகன்றால் போதும் என்ற வேதனையால் வீட்டுக்காரர்களும் சாப்பாட்டைப் போட்டு அனுப்பி வைப்பார்கள்.

இது மாதிரி ரகளைக் கும்பல் பிச்சைக்காரர்கள் இப்போதும் இல்லாமல் போகவில்லை. வயதடைந்ததும் இந்தச் சிறுவன் பிச்சைக்கு கொஞ்சம் கவுரவமான - சிரமமில்லாத - முறையை தேர்ந்தெடுத்தான்.

திருமணம் மற்ற வகை விசேஷங்கள் நடக்கும் வீடுகளில் முற்றுகை இடுவான். இவன் கோஷ்டிக்கு தண்டியான சாப்பாடு போட வற்புறுத்தல் - இன்றேல் கூச்சல் - ரகளை - அந்த விசேஷ நிகழ்ச்சிகள் அமைதியாக நடக்காது செய்வோம் என்று பயமுறுத்தல்.

இந்த எச்சரிக்கை பயமுறுத்தல்களுக்கு அந்த வீட்டுக்காரர் பணிந்து வராவிட்டால், மற்றொரு தொல்லை முறையைக் கையாண்டான். பெருச்சாளிகளைப் பிடித்து வைத்திருந்தனர் இந்த வாலிபக் கூட்டதினால் விசேஷ நிகழ்ச்சிகளில் தங்களுக்கு விருந்துச் சாப்பாடு போடாவிட்டால் தங்களிடம் இருந்த பெருச்சாளிகள் எலிகளை அந்த விருந்து வீட்டுக்குள் போட்டு அந்த நிகழ்ச்சிக்கு வந்திருப்பவர்கள் கலைந்து ஓடும்படி செய்வார்கள் துவக்கத்தில் அடிபட நேர்ந்ததென்றாலும் நாளடைவில் இந்த முறை அவனுக்கு நல்ல வெற்றி தேடித் தந்தது; சுகமாக விருந்து சாப்பாடு கிடைக்கச் செய்தது.

இவன் ஒரு விருந்து வீட்டில் தலைகாட்டினால் போதும் - முதலில் இவனுக்கு வலிய விருந்துபச்சாரம் நடத்தி வைத்து அனுப்பிவிடுவர் - சடங்குகளை அமைதியாக நடத்திக் கொள்ள வழி செய்து கொள்வர்.

நாளேற வேற, இவனுக்கு விருந்து வைப்பது அவ்வூரின் ஒரு வழக்கமாகிவிட்டது. திருமணம் முதலிய நிகழ்ச்சிகளுக்கு இந்தப் போக்கிரி விஷமம் ஏதாவது விளைவித்து தடை ஏற்படச் செய்வானோ என்ற பயமே இவன் வயிற்றை முதலில் நிரப்பி அனுப்பி விடுவதற்கு முக்கிய காரணம்.

நாளாவட்டத்தில் இவனை அடிப்படையாகக் கொண்டு ஒரு மூடநம்பிக்கை எண்ணத்தை இட்டுக் கட்டி பரப்பி விட்டனர். இவனுக்கு முதலில் சாப்பாடு போட்டால் தொல்லைகள் தடைகள் - விக்கினங்கள் நேரிடாது என்று கூறிவைத்தனர். எனவே பல ஆண்டுகள் தொடர்ந்து இவனுக்கு சுகபோஜன உபசாரம் ஊரார் பலரும் நடத்தி வைத்தனர். அயலூரார் கேட் டால் இவன் தெய்வீக சக்தி கொண்டவன் - சாமியார் போன் றவன். முதலில் இவனுக்கு சோறு போட்டு திருப்திப்படுத்தினால் கல்யாண காட்சி விசேஷங்கள் - மற்ற எல்லா காரியங்களும் விக்கினமின்றி நடக்கிறது. இவனுக்கு முதலில் சோறு போடா விட்டால் இவனிடமுள்ள தெய்வீக சக்தி காரணமாக நமக்கு விக்கினம் விளைகிறது என்று கூறி வைக்கலாயினர். இந்தப் பிரசாரத்தால் இவனை ஒரு மகான் என நினைக்கச் செய்துவிட் டனர். அப்படியே நடத்தவும் செய்தனர். வயது அதிகரித்ததும் கல்யாணக் காட்சிகளுக்கும் மற்ற விசேஷங்களுக்கும் அவனை அழைத்து முதன்மை மதிப்பு இடத்தில் அமர்த்தி உபசாரம் நடத்தினர். அவனிடம் ஆசிகளும் பெற்றனர் - தண்டியாக விருந்து சாப்பாடும் போட்டனர். உழைக்காமல் உண்டு களித்து திண்ணை தூங்கி வாழ்க்கை நடத்த வாய்த்ததால் உடலும் வயிறும் பெருத்து பானை வயிறும் யானை உடலும் பெற்றான்.

வயது முதிர்ந்ததும் அவன் செத்து வைத்தான். அவன் சாதாரண மனிதல் அல்ல - தெய்வீக சக்தி வாய்ந்த மகான் என்ற கட்டுக் கதை அவன் செத்ததும் பலவித உருவங்களில் பலவித அசாதாரண கற்பனை தெய்வீக நிகழ்ச்சி ஒட்டுக்களுடன் தீவிரமாகப் பரப்பப் பட்டது. முக்கியமாக உழைக்காமல் உண்டு களிக்க திட்டமிட்ட சோம்பேறிக் கூட்டத்தினர் இவனை தெய்வமாக்கிப் பிரச்சாரம் செய்து சுகமாக வயிறு பிழைக்க வழி செய்து கொள்ளலாயினர்.
இவனைப் போல உருவங்கள் செய்து வைத்து பூசைகள் பெயரால் சாப்பாடு கொழுக்கட்டை வகைகளும் படையல் போடச் செய்து படையல் போட்டவர்களுக்கு பிரசாதம் என்ற பெயரில் சிறிதளவு கொடுத்துவிட்டு பாக்கியை உண்டு வைத்தனர். இந்த வகையில் அந்த ரவுடித் தலைவன் நிரந்தரத் தெய்வமாக - கடவுளாக ஆக்கப்பட்டுவிட்டான். இவனுக்கு பாவர்வதி விஷ்ணு போன்ற பழைய தெய்வங்களை உறவு காட்டி கதைகளும் பாட்டுகளும் புனைந்து பரப்பினர்.

பிற்காலத்தில் புராணங்கள் என்ற கதைகள் புனையப்பட்ட போது, இந்த தண்டச் சோற்று ரவுடியின் வரலாறும் விநாயக புராணமாகப் பாடி வைக்கப்பட்டது. கோயில் வாசல்களில் - குளம் ஆறு கிணற்றங்கரைகளில் ஜனங்கள் நடமாடும் வழியில் மரத்தடியில் இவனுடைய அவலட்சண உருவச் சிலைகள் செய்து வைத்து விக்கினம் தவிர்க்க பூசை நடத்திக் காணிக்கை செலுத்தும் - படையல் போடும் முறையையும் ஏற்படுத்தினர். அன்றாட அலுவலர் துவங்கும் முன் குளிப்பது முதல் கடமை - இந்த முதல் கடமையை அடுத்து மற்ற வேலைகள் செய்வது வழக்கம். வேலை துவங்கும் முன் முதலில் குளித்தும் முதலில் காட்சி தருவது விக்கின விநாயகன் அவலட்சண சிலை (வைதீகர் கூற்றுப்படி சகுனப் பீடையைப் போல்) எனவே தங்களது அன்றைய வேலைக்கு விக்கினம் ஏற்படாதிருக்க, விக்கினேசுவர சிலைக்குக் கும்பிடு போடும் பூசை போடும் முறை பரம்பரையாக்கப்பட்டு விட்டது.

பெயர்கள் காரணம்

போக்கிரி சிறுவர் கும்பலின் தலைவரான இருந்ததால் இவ னுக்கு விநாயகர் - கணபதி - கூட்டத் தலைவன் - என்றும் தொல் லைகள் விஷமங்கள் விளையாது தடுப்பவன் என்ற எண்ணத்தால் விக்னேசுவரன் என்றும் காரண இடுகுறிப்பெயர்கள் இட்டனர்.
பெரிய சட்டித் தலையும் நீண்ட மூக்கும் சின்னஞ்சிறு குழிக்கண்களும் தொந்தி வயிறும் கொண்டிருந்ததால், பிற்காலப் புராணக் கதைக்காரர்கள் இவன் தலையை சீவன் வெட்டியதாக வும் . . . பார்வதி அழுத்தாலும் வெட்டிய தலை காணாமல் போனதாலும், யானைத் தலையை வெட்டி சேர்த்து சிநவனால் உயிர் ஊட்டியதாகவும் - யானைகள் கலவி செய்ததைப் பார்த்தபடி சிவன் - பார்வதி கூடியதால் அல்லது யானை உருக்கொண்டு கூடியதால் யானைக் குழந்தை பிறந்து வைத்தது என்றும் கதை புனைந்தனர். கிழ வயதில் எல்லா பற்களும் உதிர்ந்து ஒரே பல்லையுடையவன் என்றும் கிழவயதில் மூலையில் முடங்கிக் கிடந்தபோது இவனைச் சுற்றி எலி, பெருச்சாளிகள் ஓடியாடி இவனுக்குப் பிச்சையாகப் போடும் உணவில் பங்கு கொண்டதாலோ - இவன் அடிநாளில் பெருச்சாளிகளைக் கொண்டும் விருந்து வீடுகளில் விஷமம் செய்து வயிறு வளர்க்க இவனுக்கு பெருச்சாரி சாதனமாக இருந்ததாலோ இவனுக்கு வாகனம் எலி பெருச்சாளி என்றும் பிற்காலப் புராணக்காரர்கள் இட்டுக் கட்டிக் கதை புனைந்து வைத்துவிட்டனர்!



------------------- "விடுதலை" 7-9-1969

1 comments:

kumar said...

vazhipadu matrum nambikkaikal ellam oru thanippatta manithanudaya ishtam, vinayakarin puranam oru ravudi manithan kadhai endral dhadikkaranudaiya pithatralkalai eappadi nambukireargal so ungal velaiya mattum parthukkondirungal.