
மடமை - இழிவுக்கு இந்துமதம் தானே காரணம்?
சரித்திர காலம் முதற்கொண்டு ஏன் கற்பனைக் காலம் அதாவது புராண காலம் முதற்கொண்டு இந்த நாட்டில் சமுதாய சம்பந்தமான மாறுதலுக்குக் கிளர்ச்சி நடந்து இருக்குமே ஒழிய அரசியல் கிளர்ச்சி நடந்ததே இல்லை. புராண காலம் முதற்கொண்டு வகுப்புக் கிளர்ச்சி தான் நடந்து வந்து இருக்கின்றன. பார்ப்பனர்கள் தான் மக்களின் மடமையை அனுகூலமாக்கிக் கொண்டு கடவுள், மதம், சாஸ்திரம் முதலிய பலவிதான புளுகுகளால் தங்கள் வாழ்வைப் பலப்படுத்திக் கொண்டு தங்கள் ஆதிக்கத்துக்கு அரண் அமைத்துக் கொண்டு விட்டனர்.
அந்தக் காலத்தில் அவனுடைய அமைப்பின் மூலம் தன்னையே கடவுள் என்று கூறும் அளவுக்கு ஆக்கி கொண்டான் நம்மைக் கீழ் மக்கள் இழித்த சாதி என்றும் ஒத்துக் கொள்ளச் செய்து விட்டான். இதற்கு அனுகூலமாக மடராஜாக்களைத் தங்கள் வயப்படுத்திக் கொண்டு தங்கள் ஆதிக்கத்தைப் பரப்பி விட்டான் என்றாலும் இந்த முறைகளைக் கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் எதிர்த்துப் போராடத் தொடங்கினார்கள்.
இவர்களை எல்லாம் மன்னர்களின் ஆதரவைக் கொண்டு கொன்று குவித்து ஒழித்துக் கட்டி விட்டார்கள். இதுதான் முதலாவது கட்டம். அடுத்து 2.500 ஆண்டகளுக்கு முன் வட இந்தியாவில் ஓர் அரசகுமாரன் இவற்றை
எல்லாம் சிந்தித்து மாற்றம் காண முற்பட்டான். அவன் அரச குமாரனாகவும் இருந்ததனால் மக்களுக்கும் எளிதில் எடுத்துப் பரப்ப முடிந்தது.
மக்களுக்கும் பிடித்து விட்டது. புத்தன் அரசனாக இருந்ததாலேயும், மக்களின் ஆதரவு பெருகி வந்ததனாலேயும், அவன் அறிவையே ஆதாரமாகக் கொண்டு கொள்கைகளை விளக்கி வந்ததனாலேயும் பார்ப்பபார்களால் அவனை எதிர்க்க முடியவில்லை. திணறி விட்டார்கள். புத்தனுக்குப் பிறகு பார்ப்பனர்கள் தந்திரமாக புத்தமார்க்கத்திலேயே சேர்ந்துக் கொண்டு அதை நாசமாக்கிப் புத்தர்களையும் மடாலயங்களையும் ஒழித்துக்கட்டி விட்டார்கள்.
இந்த புத்த மார்க்கத்தை ஒழித்து மக்கள் நிரந்தர மடையவர்களாகவே இருக்கக் கோயில்களையும், குட்டிச்சுவர்களையும், ஏராளமாக உற்பத்தி பண்ணினார்கள். நிறைய புராணங்களை எல்லாம் உண்டாக்கினார்கள். இந்த இராமாயண, பாரதங்களைக் கூட புத்தனுக்குப் பிறகு தான் ஏற்படுத்தினார்கள். கடவுள் அவதாரங்கள் கூட புத்தனுக்கப் பிறகு தான் ஏற்பட்டதாகும்.
தெருவிலே திரிந்த பண்டாரப் பசங்களை எல்லாம் பிடித்து நாயன்மார்கள் ஆழ்வார்கள் ஆக்கி இவர்கள் மூலம் நம் மக்களை மடையர்களாக்கச் செய்தார்கள். புத்தனுக்குப் பிறகு எங்கள் பிரச்சாரத்தக்கு முன்வரையில் எவனுமே அறிவு சம்பந்தமான கருத்துக்களை எடுத்துச் சொல்ல முன்வரவே இல்லை. நான் முன்கூறிய நாயன்மார்கள் பாடிய தேவாரத்தைப் பற்றியும், ஆழ்வார்கள் பாடிய பாட்டுக்கள் பற்றியும் எவ்வளவு பெருமையாகக் கொண்டாடுகின்றார்கள்.
இந்த ஆழ்வார்களும் நாயன்மார்களும் யார்? சுத்தக்காட்டு முட்டாள்கள் ஆவார்கள். அடுத்து பார்ப்பான் பெரியதாக விளம்பரப்படுத்தும் விவேகானந்தர், இராமகிருஷ்ண பரமஹம்சர், அந்த தீர்த்தா, இந்த சரஸ்வதி, என்பவர்கள் எல்லாம் யார்? இவர்களும் காட்டுமிராண்டிக் கடவுளையும், மதத்தையும் மக்களிடம் எடுத்துச் சொல்லிப் பிரச்சாரம் செய்தவர்களே ஆவார்கள். பொய்யும், புளுகும் எழுதி மக்களை ஏமாற்றினர்.
2000-ஆண்டுகளாகப் பார்ப்பான் மனிதனை ஏமாற்றிக் கொண்டு வருகிறான். கடவுளுக்கு சக்தி இருக்குமானால் பின் ஏன் அவதாரம் எடுக்க வேண்டும்? கடவுள் எல்லாமாய், எங்குமாய் எல்லாம் வல்லவனுமாய் இருந்தால் எவ்வாறு கடவுளின் பெண்டாட்டியை மற்றொருவன் அடித்துச் செல்ல முடியும்? கடவுள் கதை என்று எழுதிவதில் கடவுளின் பொண்டாட்டியினை ஒருவன் அடித்துக் கொண்டு போய் விட்டான் என்ற எழுதுவது பற்றி பார்ப்பான் வெட்கப்படவே இல்லையே?
தோழர்களே! என்ன அக்கிரமம்? விவேகானந்தர் விழா என்று இந்த
வருஷம் கொண்டாடினார்கள். இந்த ஆள் என்ன அதிசயமாகப் பாடுபட்ட ஆள்? எதற்காக விழாக் கொண்டாட வேண்டும்? இந்து மதத்தை மேல் நாட்டுக்குப் போய் பரப்பினார் என்கிறார்கள். மேல் நாட்டக்குப் போய் இங்க நாறுகிற இந்துமதத்தை "நாலு முட்டாள் பசங்கள் நம்பும்படி" செய்து விட்டு வந்ததற்காகவா விழா? இந்த ஆள் உருவம் போட்டு தபால் ஸ்டாம்பு வெளியிட்டு இருக்கின்றார்கள். இது நமக்கு அவமானம் அல்லவா?
நமது மடமைக்கும், இழிவுக்கும், இந்த இந்து மதம் தானே காரணம்?"இந்து மதம்" என்றே ஒரு மதம் உண்டா? சங்காராச்சாரியாரே "இந்து மதம்" என்று ஒன்று இல்லை. இதற்கு வேண்டுமானால் "ஆரிய மதம்" என்று கூறலாம், அல்லது- வைதிக மதம் என்று கூறலாம் என்று தானே கூறியுள்ளார். இந்த ஆள் விழாவிற்கு மத சார்பற்ற சர்க்கார் உதவி செய்யலாமா?
------------------ 07-02-1963- அன்று பண்ணுருட்டியில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய பேரூரை. "விடுதலை" – 13-02-1963
4 comments:
நன்றி ஓவியா
பெரியாரின் பேச்சுகளையும் எழுத்துக்களையும் தேடித்தேடிப் படிப்பவன் நான் . உங்கள் பக்கம் எனக்கு வரப்பிரசாதம்.நானும் நிறைய பெரியார் புத்தகங்கள் வைத்துள்ளேன்.எனது பாக்கத்தில் விரைவில் எழுதவுள்ளேன்
வாழ்க பெரியார் கொள்கைகள் வளர்க பெரியார் புகழ்
நன்றி தோழரே.தங்களின் வலைப்பதிவு முகவரியை தெரிவிக்கவும்.
விவேகானந்தரை பார்ப்பனர்கள் இந்துமதப் பிரச்சாரத்திற்கு பயன்படுத்திக் கொண்டார்கள். அவ்வளவுதானே ஒழிய வேறில்லை.
காந்தியையும் அப்படித்தான் பார்ப்பனர்கள் பயன்படுத்தினார்கள். இறுதியில் காந்தியார் பார்ப்பனர்களின் பேச்சைக் கேட்காத்தால் சுட்டுக் கொள்ளப்பட்டார்.
பார்ப்பனர்கள் தங்களுக்கு உதவினால் மகாத்மா ஆக்குவார்கள். பிடிக்கவில்லை என்றால் சுட்டுக் கொள்வார்கள்.
அது போல் தான் விவேகானந்தருக்கு விழா எடுக்கப்பட்டதே தவிர வேறு எதுக்கும் இல்லை என்பதை பார்ப்பனரல்லாத தோழர்கள் உணர்வார்களாக.
http://priyamudan-prabu.blogspot.com/
Post a Comment