Search This Blog

27.8.08

இந்தியாவில் முதல் பாலம் எப்பொழுது கட்டப்பட்டது?





ஆரம்பத்தில் சேது திட்டத்திற்குப் பணம் இல்லை என்று தள்ளி போட்டார்கள்

ஆரம்பத்தில் சேது சமுத்திரத் திட்டத்திற்குப் பணம் இல்லை என்று சொல்லி திட்டத்தை தள்ளித் தள்ளிப் போட்டார்கள். பணம் இருந்தது. ஆனால் அவர்களுக்கு மனம் இல்லை. ஆனால் இங்கே கலைஞர் என்ன செய்தார்? இந்த 2450 கோடி ரூபாய் சாதாரண விசயமல்ல. இதை கலைஞர் அவர்கள் வாங்கிவிட்டார். இதே மதுரையில்தான் சேது சமுத்திரத் தொடக்கவிழா சிறப்பாக நடந்தது.

இந்தத் திட்டத்தைத் தடுக்க ஒரே ஒரு வழி ராமன்தான்

வேலைகள் வேகமாக நடந்து முடியப் போகிறது என்ற நிலைக்கு வந்தவுடனே திடீர் என்று அப்பொழுதுதான் அதற்கு ஒரு தடையைக் கிளப்ப வேண்டும் என்று வேறு எதுபற்றி சொன்னாலும் சரியாக வராது. ஏனென்றால் கொடுத்த ரிப்போர்ட் அனைத்தும் நிபுணர்கள் கொடுத்தது. அதற்கு ஒரே ஒரு வழி ராமன்தான். இப்பொழுது கைகொடுப்பான் என்று நினைத்து ஹரேராம், ஹேராம் - ரகுபதி ராகவ ராஜாராம் பதீத்த பாவன சீத்தாராம் என்று ஆரம்பித்து ராமன் பாலத்தை இடிக்காதே என்ற பிரச்சாரத்தை ஆரம்பித்தார்கள்.

உடைத்தால் இந்துக்களின் மனம் புண்படுமாம்!

இது இராமன் கட்டிய பாலம். இதை உடைக்கக் கூடாது. இதை உடைத்தால் இந்துக்களின் மனம் புண்பட்டுப் போய்விடும் என்று நினைத்தார்கள். அப்படி சொல்லுகிறவர்கள் யாராவது ராமர் காலத்து வாழ்க்கை வாழ்ந்தால் அது நியாயம். இன்றைக்கு வாஜ்பேயிக்கும், அத்வானிக்கும் ஏ.கே. 47 துப்பாக்கிதான் பாது காப்பு (கைதட்டல்). ராமர் காலத்து அம்பையோ - வில்லையோ யாரும் வைத்திருக்கவில்லை.

அந்தப் பாணத்தைப்பற்றி சொன்னால் - யாராவது நம்புவார்களா?


இது சாதாரண அம்பல்ல. ராமர் பாணத்தை விட்டால் அது எங்கே போய் நிற்கும் என்றால், ஏழு மராமரங்களையம் துளைத்து அதற்கு அப்பாலும் சென்று, அப்புறம் எல்லோ ருடைய உடலையும் துளைத்து இரத்தக் கறை எல்லாம் படிந்து அதைப் போக்க அந்த அம்பு நதியில் குளித்து, பிறகு அந்த அம்பு அம்பறாத் தூணிக்குள் போய்விட்டது என்று சொல்லுகின்றான்.

அவ்வளவு சக்திபெற்ற பாணத்தைப் பற்றிச் சொன்னால் இன்றைக்கு யாராவது நம்புவார்களா? வேல், அம்பு இதெல்லாம் காட்சிக்குத்தான் இன்றைக்கு இருக்கிறது. இதை யாரும் தூக்குவதில்லை.

ஏ.கே. 47-அய்த்தான் நம்புகிறார்கள்

ஏ.கே. 47-னைத்தான் நம்புகிறார்கள். இன்றைக்கு இராணுவ வீரர்களுக்கு எதைக் கொடுத்திருக்கின்றோம்? ஆகவே எப் பொழுது இராமன் இருந்தார்? எப்பொழுது பாலம் கட்டினார்? என்று கேட்டால் - இல்லீங்க அது எங்களுடைய நம்பிக்கை.

பதினேழரை லட்சத்திற்கு முன்னாலே இராமன் பாலம் கட்டினான் என்று சொல்லுகின்றார்கள். அதற்கு ஏதாவது ஆதாரம் உண்டா? நண்பர்களே, இந்தப் புத்தகத்தில் ஒரு செய்தியை எடுத்துப் போட்டிருக்கின்றோம். நீங்கள் இதைப் படிக்கவேண்டும், தெரிந்துகொள்ள வேண்டும்.

பெரியார் மணியம்மை பொறியியல் கல்லூரியின் ஆய்வுத் தகவல்

உங்களுக்குத் தெரியும். பெரியார் மணியம்மை பொறியியல் கல்லூரி, பெரியார் மணியம்மை பல்கலைக் கழகமாக உயர்த்தப்பட்டது, மிகச் சிறப்பாக வளர்ந்துகொண்டு வருகின்றது. பெரிய சிவில் எஞ்சினியரிங் பேராசிரியர்கள் இவர்களை எல்லாம் அழைத்து நான் ஒரு செய்தியைக் கேட்டேன்.

உலகப் புத்தகங்களில் இருந்து ஆய்வு செய்து எனக்குக் கொடுங்கள் என்று கேட்டேன். அந்தச் செய்தி என்னவென்றால் உலகத்திலேயே முதன் முதலில் பாலம் எப்பொழுது கட்டினான்?

உலகில் முதல் பாலமே கி.மு.2650 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது

மனிதர் தோன்றிய பின்னர் உலகத்தில் முதல் பாலம் எப்பொழுது கட்டப்பட்டது என்று சொன்னால் ஆவணப்படி கி.மு. 2650 எகிப்து நாட்டில் நைல் நதிக்குக் குறுக்கே கட்டப்பட்ட வளைவுப் பாலம், மெனிஸ் மன்னரால் கட்டப்பட்ட பாலம். கி.மு. 2650 +பிளஸ் இன்றைக்கு கி.பி. 2008 இவைகளை சேர்த்தால் 4658 வருடங்கள்தான் ஆகியிருக்கும் உலகில் முதல் பாலம் கட்டவே.

ஆசியாவிலேயே முதல் பாலம் கட்டப்பட்டது எப்பொழுது?

ஆசியாவிலேயே எப்பொழுது முதல் பாலம் கட்டினார்கள் என்றால், கி.பி. 600. அப்படியானால் 2000-லிருந்து 600 வரை கழித்துக் கொள்ளவேண்டும். அதாவது 1400 ஆண்டுகள் எங்கே? கி.பி. 600 ஆம் ஆண்டில் ஆசியாவில் பீஜிங்குக்குத் தெற்கே கற்களால் கட்டப்பட்ட சாவ் - சோ - பாலம் (சீனா). (நீளம் 37 மீட்டர், உயரம் 72 மீட்டர், சாலை அகலம் 9 மீட்டர்).

இந்தியாவில் முதல் பாலம் எப்பொழுது கட்டப்பட்டது?

சரி, இந்தியாவில் முதலில் எப்பொழுது பாலம் கட்டினார்கள்? கி.பி. 16-ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் அய்தராபாத்தில் முசி. ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட புராணா புல் பாலம்தான் மிகப் பழமையான இந்தியப் பாலம். இப்பொழுது நாம் 21-ஆம் நூற் றாண்டில் இருக்கின்றோம். அதாவது அய்ந்து நூற்றாண்டு களுக்கு முன்னாலே கட்டப்பட்ட பாலம் இது.

உச்சநீதிமன்ற நீதிபதிகள்

இவ்வளவு ஆதாரங்கள் இருக்கின்றன. உச்சநீதிமன்றத்தில் சிலர் நீதிபதிகளாக உட்கார்ந்து கொண்டு எங்களை மாதிரி அறிவாளிகள் யாரும் இருக்கமாட்டார்கள். நாங்கள் யாரைப் பற்றி வேண்டுமானாலும் பேசுவோம், எதைப்பற்றி வேண்டு மானாலும் பேசுவோம் என்று சொல்லுகின்ற இந்த மேதைகள் இருக்கிறார்களே நீதிபதிகள். அந்த நீதிபதிகள் விஞ் ஞானத்தைப்பற்றிக் கவலைப்படாமல் மனம் புண்படாமல் - இராமன் பாலத்தை உடைக்காமல் காரியம் பாருங்கள் என்று சொன்னால், எப்படி இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவது?

இராமன் காலத்தில் இருந்ததெல்லாம் இன்று இருக்கிறதா?

ராமன் காலத்தில் இருந்ததெல்லாம் இன்றைக்குப் பாது காப்பாக வைத்திருக்கின்றார்கள்? அயோத்தியிலேயே ராமர் கால அயோத்தி இருக்கிறதா? முதலில் ராமன் பிறந்தான் என்று சொல்லப்படுகின்ற அயோத்தியே கேள்விக் குறியாக இருக்கிறதே. அதனாலே எதையும் அறிவுப் பூர்வமாக சிந்தித்தால் சரியான முறையில் விடை கிடைக்கும். புராதனச் சின்னத்தைப் பாதுகாக்க வேண்டுமாம், என்ன அது புராதனச் சின்னம்? எப்படி கடலில் அந்தப் பாலத்தைக் கட்ட முடியும்? சரி, கடலில் பாலம் கட்டினால் அனுமார் ஏன் நிலப் பகுதியை (சஞ்சீவி மலை) தாங்கிப் பிடித்துக் கொண்டு சென்றது? என்ன அது? அனுமார் வந்திருந்ததால் பாலத்தில் அல்லவா நடந்து வந்திருக்கவேண்டும்! அதுதானே மிக முக்கியம். இவர்கள் அதைப்பற்றி கவலைப்படவில்லையே.

நாரிமனிடம் கம்ப இராமாயணப் பாட்டை விளக்கி

நாங்கள்தான் கவலைப்பட்டோம், சரி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் என்ன கேட்கிறார்கள் என்பதற்ககாக கம்ப ராமாய ணத்தில் உள்ள பாட்டை எடுத்துச் சொன்னோம். உச்சநீதிமன்ற வழக்கறிஞர் நாரிமன் அவர்களிடம் அந்தப் பாட்டைப்பற்றியே விளக்கிச் சொல்லப்பட்டது. இந்த கம்பர்களைக் கொண்டு போய்விட்டால் அந்த வம்பர்களுக்கு பதில் சொல்லக் கூடியதாக இருக்கும். இராவணன் சீதையைக் கொண்டு வந்து விட்டார். இராமர் பார்த்தார் - அந்த பாலத்தையே அம்பினால் குத்தி இடித்து உடைத்துவிட்டு வந்து விட்டாராம். ஏனென்றால் திரும்பி இராவணன் வந்துவிடக் கூடாது பாருங்கள். (சிரிப்பு - கைதட்டல்) அந்தப் பணத்தைப் பயன்படுத்திக் கொண்டு அதனாலே ரொம்ப முன் யோசனை யோட உடைத்துவிட்டாராம் - ராமர் அந்த பாலத்தை. இந்தப் பாட்டை எடுத்துக் காட்டி வக்கீல் எடுத்துச் சொல்லுகிறார்.

நீ ஒன்று சொன்னால் அவர்கள் ஒன்று சொல்லுகின்றார்கள்

பி.ஜே.பி.காரர் எதிர்த்து வாதம் புரிகிறார். அது இடைச் செருகல் என்று சொல்லுகின்றார். இதிலே இல்லீங்க, அதிலே இல்லீங்க என்று சொல்லுகின்றார். நீதிபதி சொன்னார். இடைச் செருகல் போன்ற இவைகளை எல்லாம் பார்ப்பதா எங்களுடைய வேலை? நீ ஒன்று சொன்னால், அவர்கள் ஒன்று சொல்லுகின் றார்கள் என்று சொன்னார். இப்படி நடந்தது விவாதம். இதையெல்லாம் விட்டு, விட்டு 2450 கோடி ரூபாய் நம்முடைய வரிப்பணம். நீங்களும், நானும் நேரடியாகவும், மறைமுகமாகவும் கொடுக்கின்ற வரிப் பணத்தை நமது கலைஞர் கஷ்டப்பட்டு, தி.மு.க. அமைச்சர் டி.ஆர். பாலு ரொம்ப சிரமப்பட்டு, வேகப் படுத்தினார்.

தென் மாவட்ட மக்களுக்கு வளம் கொழிக்கும் திட்டம்

தென் மாவட்டங்களில் வேலையில்லாத் திண்டாட்டம், நீதிபதி இரத்தினவேல் பாண்டியன் தலைமையில் அதற்கு ஒரு விசாரணைக் குழுவே போட்டார்கள். இந்தப் பகுதியில் இளைஞர்கள் வேலை இல்லாமல் இருக்கின்றார்கள். அதனால் வெடிகுண்டு செய்யலாமா? என்று பார்க்கின்றார்கள்.

அதனால் அவர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும், தொழிற்சாலை வரவேண்டும், நல்ல வேலை வாய்ப்பை உண் டாக்க வேண்டும் என்று அறிக்கை கொடுத்தார். தொழிற் சாலைகளை உருவாக்கவேண்டும், இளைஞர்களுக்கு, தென் மாவட்ட மக்களுக்கு ஒருய அற்புதமான திட்டத்தைப் போட்டு செயல்படுத்திய திட்டம் தான் சேது சமுத்திரத் திட்டமாகும்.

தொழிற்சாலைகளை உருவாக்கவேண்டும், இளைஞர்களுக்கு, தென் மாவட்ட மக்களுக்கு ஒரு அற்புதமான திட்டத்தைப் போட்டு செயல்படுத்திய திட்டம்தான் சேது சமுத்திரத் திட்டமாகும்.

இராமனைக் காட்டி முட்டுக்கட்டை

தமிழகம் வளம் பெறுவதற்காக இப்படி ஏற்பாடு செய்தால் அதற்கு முட்டுக்கட்டைப் போட்டு ராமனைக் காரணமாகக் காட்டி, மத உணர்ச்சியைப் புண்படுத்தாதீர்கள் என்று சொல்வதா? அப்படியானால் இதற்கு என்ன அர்த்தம்? யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் சொல்லலாம் என்ற நிலை ஏற்படலாமா? இங்கே இருக்கிற மீனாட்சி அம்மன் கோவில் எங்களுடைய தாத்தா சொத்துதான். எங்களுடைய தாத்தா ராத்திரி கனவில் வந்தார். நீங்கள்போய் அந்த இடத்தில் குடியேறுங்கள். வெறும் நம்பிக்கை என்று சொன்னால் போதும், நம்பிக்கையை யாரும் கேள்வி கேட்கக் கூடாது. இப்படி ஒவ்வொருத்தரும் எங்கே வேண்டுமானாலும் போகலாம் என்று ஆரம்பித்தால் அதற்கு மரியாதை உண்டா? எதைச் சொல்லுவதற்கும் ஒரு ஆதாரம் வேண்டாமா? அறிவியல் பேச வேண்டாமா? தொல்லியல் பேச வேண்டாமா? புவியியல் ஆதாரம் வேண்டாமா? இதையெல்லாம் நன்றாக எண்ணிப் பார்க்க வேண்டும். எப்படியாவது இந்த சேது சமுத் திரத் திட்டத்தை நிறுத்த வேண்டும். அதற்கு ராமனைப் பயன்படுத்துகின்றார்கள்.

ராமன் என்பவன் உண்மையில் இருந்தானா?

ராமன் என்பவன் ஒருவன் உண்மையிலேயே இருந்தானா? இன்றைக்கு எல்லா கடவுள்களும் பெரியார் விஷயத்தில் நூற்றுக்கு நூறு எப்படி என்பதைப் பார்த்துள்ளீர்கள்! மீனாட்சி அம்மன் உட்பட ஏ.கே. 47 பாதுகாப்போடு இருக்கிறார். எல்லா பக்தர்களும் மெட்டல் டிடெக்டர் மூலமாகத்தான் வெளியே போய்விட்டு உள்ளே வருகிறார்கள். காரணம் என்ன? கடவுள் நம்மை காப்பாற்றுகிறதா? அல்லது நாம் கடவுளைக் காப்பாற்றுகிறோமோ? என்று கேட்டால் இப்பொழுது இருக்கின்ற எல்லா கோயில் கடவுள்களையும் கலைஞர்தான் காப்பாற்றிக் கொண்டிருக்கின்றார் (கைதட்டல்).

கலைஞருடைய காவல்துறைதான் இந்த கடவுள் பயல்களை காப்பாற்றி கொண்டிருக்கிறது (கைதட்டல்). கலைஞருடைய அரசுதான் காப்பாற்றிக் கொண்டிருக்கின்றது. கலைஞரை கடவுள் காப்பாற்றவில்லை கடவுளை கலைஞர் காப்பாற்று கிறார். பகுத்தறிவாளர்கள் காப்பாற்றுகிறார்கள்.

மத வெறித்தனத்தினால் இன்னொருவனை கொல்லக்கூடாது

மதவெறித்தனத்தினாலே ஒருவன் - இன்னொருவனைச் சுட்டுக்கொல்லக்கூடாது. அன்பு காட்ட வேண்டும். அறநெறி யோடு வாழவேண்டும். மனித நேயத்தோடு வாழ வேண்டும் என்று சொல்வதற்கு நாங்கள் இருக்கின்றோம். இந்த இராமனைக் காட்டி எவ்வளவு பெரிய பித்தலாட்டம் செய்கிறார்கள். கடைசியாக நான் ஒன்றைச் சொல்லுகின்றேன்.

அண்ணா பெயரில் கட்சியை வைத்துக்கொண்டு


அண்ணா பெயரில் கட்சி வைத்துக் கொண்டு, கொடியில் அண்ணா படத்தைப்போட்டுக் கொண்டு, கொள்கையிலே அத்தோடு அண்ணாவை விட்டுவிட்ட ஜெயலலிதா அம்மையார் அவர்கள் - நேற்று என்ன சொன்னார் என்பதைப்பற்றிக் கவலைப்பட வேண்டாமா? இந்த அம்மையார் பிஜே.பி. காரர்களைவிட மூடநம்பிக்கையின் உச்சக் கட்டத்திற்குப் போய் சொல்லுகின்றார். அந்த அம்மையார் ராமர் பாலத்தை விட்டு விட்டு வேறு வழித்தடத்திற்கு வந்து செய்தால் சரி என்று ஆரம் பித்தார்கள். ஏனென்றால் அவர்கள் நல்ல எண்ணத்தோடு சொல்ல வில்லை. ஆகவே இந்தப் பிரச்சினையை இப்படியே நீட் டிக் கொண்டு போகலாம். தேர்தலில் அவர்கள் சொல்ல முடியாது.

ஜெயலலிதா தமிழர்களுக்கு செய்த துரோகம்

தேர்தல் முடிந்து நம்மாட்சி வந்துவிட்டால் அந்தத் திட் டத்தை கிடப்பில் போட்டுவிடலாம் என்பதற்காக இடையி டையே குறுக்கு சால் விட்டார். இந்த அம்மையார் பா.ஜ.க.வோடு கூட்டுச் சேர்ந்தாலும், சேராவிட்டாலும் அது ஒரு பக்கத்திலே இருந்தாலும், மனதார அந்த அம்மையார் இந்துத்துவா உணர்ச்சிக்கு ஆளானதினுடைய விளைவாக என்ன சூழல் என்று சொன்னால், தான் ஏற்கெனவே சொன்ன, போட்டத் தீர்மானத்திற்கு விரோதமாக - அதுவும் அவர் களுடைய தேர்தல் அறிக்கைக்கு விரோதமாக அவர்கள் சொல்லுவது இந்த சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை அறவே கைவிட வேண்டும் என்று இப்பொழுது சொல்லுகிறார். கிட்டத்தட்ட எல்லா வேலையும் முடிந்து வரும்போது - இப்படி ஜெயலலிதா அவர்கள் சொன்னால் இதைவிட தமிழர் களுக்குத் துரோகம், தமிழ் நாட்டிற்குத் துரோகம் வேறு யாரும் செய்யமுடியாது.

---------மதுரையில் 17-8-2008 அன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் கலந்துகொண்டு ஆற்றிய உரையிலிருந்து --"விடுதலை" 26-8-2008

0 comments: