Search This Blog

17.8.08

கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டிதானே!



செருப்பு விரும்பும் கடவுள்



சிவனும், கவர்ச்சிப் பெண் (மோகினி) வேடம் அணிந்த விஷ்ணுவும் மோகித்துப் புணர்ந்து பெற்ற பிள்ளை கையனார் - அய்யனார் - அய்யப்பன் என்றாகிவிட்ட கதை தெரியும்.
சிவனை வழிபட்ட கண்ணப்பன் எனும் அருந்ததிய பக்தன், தன் கண்ணைப் பெயர்த்துச் சிவன் கண்ணில் பொருத்துவதற்காகத் தன் செருப்புக் காலால் சிவன் முகத்தில் மிதித்தான் என்று அவர்களே எழுதி வைத்துள்ள புராணக் கதையைப் பற்றியும் தெரியும். அய்யனார் என்பது கிராமக் காவல் பணியில் இருக்கும், இரவு 12 மணிக்கு மேல் நட்ட நடுநிசியில் வேட்டைக்குச் செல்லும், துட்டர்களை அழிக்கும் என்றெல்லாம் புருடா விட்டிருப்பதும் தெரியும். இதற்காகவே, போர்ப்படை வீரர் உடையிலும் காவல்துறை உடையிலும் அய்யனார் குதிரைக்குப் பக்கத்தில் நிற்க வைத்து ஊர் எல்லையில் சுட்ட மண் பொம்மைகள் செய்து வைத்து இருப்பதைக் கிராமங்களில் பார்க்கலாம். இந்தப் பொம்மைகளுடன் அவருக்கு வேட்டையில் உதவி செய்யும் நாய்ப் பொம்மை ஒன்றும் வைக்கப்பட்டுக் காட்சியளிக்கும்.
பெரும்பாலும், மனித நடமாட்டம் குறைந்த பகுதிகளில், மரங்கள், புதர்கள் நிறைந்த காட்டுப் பகுதிகளில்தான் இந்தக் கடவுள் இருக்கும். இந்தக் கடவுளுக்குச் சில சிறப்புச் சக்திகள் இருப்பதாகவும் சில மூட பக்தர்கள் நம்புகின்றனர். கைகளில், கால்களில் நோய் அல்லது அடிபட்டு விட்டால், அவர்கள் அய்யனாரிடம் வேண்டிக் கொள்வார்களாம். நோய் குணமாகி விடுமாம். மருத்துவம் செய்து கொண்டே, பிரார்த்தனை செய்து கொள்வார்கள்; குணமானதும் பெருமையை அய்யனாருக்கு அர்ப்பணித்து விடுவார்கள். மருத்துவர் திறமை, மருந்து அம்போ!

கடலூர் மாவட்டம் திட்டக்குடியை அடுத்த கொரக்கை என்ற கிராமத்தில் உள்ள கருப்பு சாமியை வேண்டிக் கொண்டு பக்கத்திலுள்ள மரத்தில் பழஞ்செருப்பைக் கட்டிவிட வேண்டுமாம். நோய் குணமாகி விடுமாம். இந்த மூடநம்பிக்கையில் கட்டித் தொங்க விடப்பட்ட செருப்புகள் கருப்புசாமிக்குப் புகழ் மாலைகள்!

கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டிதானே!

-------------நன்றி: "விடுதலை" ஞாயிறுமலர் 16-8-2008

0 comments: