Search This Blog

9.9.09

தாழ்த்தப்பட்ட மக்களின் உண்மையான எதிரி யார்?


தாழ்த்தப்பட்டவர்களையும், பிற்படுத்தப்பட்டவர்களையும் மோத விட்டு ,அந்த மோதல்கள் மூலம் தங்களின் வாழ்வை வளப்படுத்திக் கொள்வதே பார்ப்பனர்களின் வாடிக்கை. பார்ப்பனர்களின் சுயரூபம் வெளிப்படாமல் இருக்க அவர்கள் கையாளும் தந்திரங்களில் இதுவும் ஒன்று. அந்த வகையில் ஒரு சில பார்ப்பன இணையதளங்களும், அதன் பாதாந்தாங்கிகளும் இணையத்தில் பெரியாரை தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக சித்தரித்து கட்டுரைகளை எழுதி வருகின்றனர். அவர்களின் கட்டுரைக்கு ஆதாரபூர்வமான மறுப்பை சான்றுகளுடன் தெரிவித்தால் அதை பதிவு செய்யாமல் இருட்டடிப்பு செய்து விடுகின்றார்கள்.
அவர்கள் என்ன இருட்டடிப்புச் செய்தாலும் பெரியார் என்ற சுடரொளி சுடர் விட்டு ஒளி கொடுக்கும். அந்த ஒளியில் பார்ப்பனர்களின் உண்மை முகம் அம்பலத்துக்கு வந்தே தீரும்.
அந்த வகையில் அவர்கள் வெளியிடாமல் இருட்டடிப்பு செய்த புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் கருத்தை இங்கே பதிவு செய்யப்படுகிறது. ஊன்றிப் படித்து உண்மையை அறிந்து கொள்ள வேண்டுகிறேன்.


***********************************************************************************

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உண்மையான எதிரி யார் என்பதை அம்பேத்கர் குறிப்பிடுகிறார்.

இதோ அம்பேத்கர் பேசுகிறார்:

“பார்ப்பனர்களை முதலில் எடுத்துக்கொள்ளுங்கள், சரித்திர அடிப்படையில் பார்த்தால் அவர்கள் அடிமைப்படுத்தப்பட்ட மக்களின் (சூத்திரர்கள்,தீண்டப்படாதவர்கள்) ஜென்ம விரோதிகளாக இருந்து வருபவர்கள். இந்து சமுதாய மக்கள் தொகையில் இந்த இருவரும் 80 சதவிகிதத்தில் உள்ளனர். இன்று இந்தியாவிலேயே, அடிமைப் படுத்தப்பட்ட வகுப்பைச்சார்ந்த சாதாரண மனிதன் ஒருவன் இவ்வளவு தாழ்த்தப்பட்டு, இழிவுபடுத்தப்பட்டு எதிர்காலத்தைப்பற்றிய நம்பிக்கையோ, அபிலாஷையோ இல்லாது. இருப்பதற்கு முழுமையான காரணம், பார்ப்பனர்களும் அவர்களுடைய சித்தாந்தமுமேயாகும்.

பார்ப்பனியத்தின் தலையாய கொள்கைகள் அய்ந்து

(1) பலதரப்பட்ட வகுப்புகளுக்குள்ளே படிப்படியான சமத்துவமில்லாத உயர்வு தாழ்வு நிலைகள்
(2) சூத்திரர்கள் , தீண்டத்தகாதார்களுடைய மோசமான வலிவற்ற தன்மை
(3) சூத்திரர்களும், தீண்டத்தகாதவர்களும் என்றைக்கும் படிக்கக் கூடாது என்று தடை
(4) சூத்திரர்களும் , தீண்டப் படாதவர்களும் உயர்நிலையோ , ஆற்றலோ பெறுவதற்குத் தடை
(5) சூத்திரர்களும் தீண்டப்படாதவர்களும் பொருள் சேர்ப்பதற்குத் தடை பெண்களை அடக்கி ஒடுக்கி அடிமைப்படுத்துவது .

பார்ப்பனியத்தின் அங்கீகரிக்கப் பட்ட சித்தாந்தம் உயர்வு-தாழ்வு நிலை, கீழ்த் தளத்தில் உள்ள வகுப்புகள் சமத்துவத் தன்மை அடைய விரும்புவதை ஈவு இரக்கமின்றி அழித்து வைப்பதே பார்ப்பனியத்தின் இன்றியமையாத கடமையாகும்….

……தம்முடைய மூதாதைகள் உருவாக்கிய இந்தப் பார்ப்பனீயத் தத்துவத்தை இன்று ஒவ்வொரு பார்ப்பனனும் நம்புகிறான். இந்தச் சமுதாயத்திலேயே அவன் ஒரு அந்நியனாக இருக்கிறான். பார்ப்பானை ஒரு பக்கம் நிறுத்தி மற்றொரு பக்கம் சூத்திரர்கள், தீண்டத்தகாதவர்கள் என்று கருதுபவர்களையும் நிறுத்தி ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த இரண்டு பிரிவினரும் அயல் நாட்டினரைப்போல் தான் தோன்றும். ஒரு ஜெர்மானியனுக்கு ஒரு பிரஞ்சுக்காரன் எப்படி அன்னியனோ ஒரு யூதனுக்கு யூதன் அல்லாதவன் எப்படி அன்னியனோ, ஒரு வெள்ளைக் காரனுக்கு ஒரு நீக்ரோ எப்படி அன்னியனோ அதுபோலவே பார்ப்பான் சூத்திரர்களுக்கும் தீண்டப்படாதவர்களுக்கும் அன்னியனாவான்.

தாழ்ந்த வகுப்பில் சூத்திர்களுக்கும் தீண்டப்படாதவர்களுக்கும், பார்ப்பனர்களுக்குமிடையே உண்மையிலேயே ஒரு பெருத்த பிளவு இருக்கத்தான் செய்கிறது. பார்ப்பான், சூத்திரர்களுக்கும் தீண்டப்படாதவர்களுக்கும் அன்னியனாக மட்டும் இல்லை. அவர்களுக்கு விரோதியாகவும் இருக்கிறான். இவர்களுடைய தொடர்பை நினைக்கும் பொழுது மனச்சாட்சிக்கோ, நியாயத்திற்குகோ சிறிதும் இடமில்லை.

———-————— டாக்டர் அம்பேத்கர் அவர்களால் எழுதப்பட்ட “காந்தியும், காங்கிரசும் தீண்டப்படாத மக்களுக்குச் செய்ததென்ன?” என்ற நூலிலிருந்து - பக்கம் 215-216

பெரியாரின் கருத்துக்களிலிலிருந்து அங்கு ஒன்றும் இங்கு ஒன்றுமாக உருவி அம்பேத்கரையும் பெரியாரையும் மோதவிட்டு திசை திருப்பி பார்க்கும் போக்கு என்றும் எடுபடாது தமிழ் நாட்டில்.

ஏன் என்றால் வடநாட்டின் பெரியார்- அம்பேத்கர்; தென்னாட்டின் அம்பேத்கர்-பெரியார்.
இருவரும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போல்.


எனவே தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட ஒடுக்கபட்ட மக்களின் உண்மையான எதிரி பார்ப்பனர்கள் தான் என்பதை தமிழக மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர். உங்களின் திசை திருப்பும் வேலை என்றும் எடுபடாது .

-----------------------தொடரும்...

1 comments:

S said...

Realities are different today. Many SC/STs have come up in life through quota system in education and employment. But most of them isolate themselves from poor/uneducated people of their own community and start behaving or conducting themselves as upper class of their own clan. They do not wish to contribute back to their community (through monitary help or marriages )and worse, in normal society do not like to disclose their real identity.
The wedge created, by these 'neo-upper class', between themselves and poor people of their own community is wider than that of other communities.

The real enemies, today, are these neo-SC/STs only.