Search This Blog

30.9.09

சாட்டை அடிகளை எந்தப் பார்ப்பனப் பெண்ணாவது வாங்குவது உண்டா?


சாட்டையடி!

நாமக்கல் அருகே வெள்ளாளப்பட்டி அச்சப்பன் கோயில் விழாவில் பெண்களை சாட்டையால் அடித்துப் பேய் விரட்டும் ஒரு அகோர காட்சியை, ஒரு தொலைக்காட்சி ஒளிபரப்பியது. ஏடுகளிலும் செய்தி வெளிவந்துள்ளது.

இவ்வாறு சாட்டையால் பெண்ணை அடித்தால், அந்தப் பெண்ணைப் பிடித்த பேய் ஓடிவிடுமாம். அந்தப் பெண்ணுக்குக் குழந்தைப் பேறு இல்லாதிருந்தால் குழந்தையும் பிறக்குமாம்; இப்படி ஒரு பித்தலாட்டம் இந்த 2009 ஆம் ஆண்டிலும் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.

இத்தகு மூடத்தனத்துக்கும், மூர்க்கத்தனத்துக்கும் காரணம் மத மூட நம்பிக்கை என்று ஒரு பக்கத்தில் சொன்னாலும், ஆன்மிகச் சிறப்பிதழ்களை வெளியிடும் நவீன ஏடுகளும், இதழ்களும் இதற்கான பொறுப்பினை மரியாதையாக ஏற்றுக்கொண்டுதான் தீரவேண்டும்.

மாட்டுக்குத் தார்க்குச்சி போட்டாலே குற்றம் என்று சட்டம் உள்ள ஒரு நாட்டில், மனிதர்களை இப்படி மதத்தின் பெயரால் சித்திரவதை செய்கிறார்களே, இதனை அனுமதிப்பது எப்படி என்று ஊடகங்கள் குரல் கொடுக்கவேண்டாமா?

ஏன் கொடுப்பதில்லை? மக்களுக்கு நல்ல புத்தி வந்துவிட்டால் இதுகளை யார் காசு கொடுத்து வாங்குவார்கள்? மடமையில் ஆழ்த்தி வைத்திருந்தால்தானே அவர்களைச் சுரண்டிட முடியும்?

சேலம் பக்கத்தில் அன்னதானப்பட்டியில் அங்காளம்மன் கோயில் திருவிழா எப்படி தெரியுமா? பக்தர்களைத் துடைப்பத்தால் அடிப்பார்கள். எம்.ஏ. படித்த முண்டங்கள்கூட காசு கொடுத்து விளக்கமாற்று அடி வாங்குகின்றன என்றால், இதன் பொருள் என்ன? கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி என்று சொன்ன தந்தை பெரியார் அவர்களின் ஒவ்வொரு எழுத்துக்கும் எவ்வளவுப் பெரிய மதிப்பு என்பதை எளிதில் தெரிந்துகொள்ளலாமே!

மொட்டைத் தலையில் தேங்காய் உடைக்கிறார்கள். இரத்தம் பீறிடும் காட்சியைக்கூட தொலைக்காட்சிகள் அப்படியே காட்டுகின்றன. இதனால் மூளை நரம்புகள் பாதிக்கப்படுகின்றன என்று மருத்துவர்கள் சொல்லுகிறார்கள். ஆனாலும், மொட்டையாகிவிட்ட மூளை கொஞ்சமும் சிந்திப்பதில்லையே! பக்தி வந்தால் புத்தி போயே போகிறதே!

பேய் என்றால் என்ன அப்படி ஒன்று இருக்கிறதா? பிள்ளைப் பேறு இல்லை என்றால், சாட்டையால் அடித்தால் மலட்டுத்தனம் பறந்து ஓடிவிடுமா?

சரி, இதுபோல சாட்டை அடிகளை எந்தப் பார்ப்பனப் பெண்ணாவது வாங்குவது உண்டா? துடைப்ப அடியை எந்தப் பார்ப்பான் வாங்குகிறான்?

பக்தியில்கூட வெஜிட்டேரியன், நான் வெஜிடேரியனா? சிந்திப்பீர்!

------- மயிலாடன் அவர்கள் 30-9-2009 "விடுதலை" யில் எழுதிய கட்டுரை

10 comments:

ராஜவம்சம் said...

மதநம்பிக்கைக்கும் மூடநம்பிக்கைகும் மழைகும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் உல்லது இதை பிரித்து அறிபவனே மனிதன்

பித்தனின் வாக்கு said...

உங்களுக்கு ஏன் இந்த மாதிரி எல்லாம் ஆசை, இது ஒரு இடத்தில் நடக்கும் பூசை. இதுக்கும் பார்ப்பனருக்கும் சம்பந்தம் இல்லை. இது கொங்கு வேளார் மரபில் உள்ளது. நடப்பதும் வேறு கோவில் பூசாரியும் அய்யன் கிடையாது. என்ன நடந்தாலும் பார்ப்பானைத்தான் திட்டனும் என்ற உங்களின் ஆழ் மனக்கிடக்கை இந்த பதிவு வெளிப்படுத்துகிறது. கொஞ்சம் அறிவுக்கும் வேலை உணர்வுகள் மாதிரி கொஞ்சம் அறிவுக்கும் வேலை கொடுங்க. உங்களை மாதிரி ஆளுக பாப்பாத்திகளை கேவலமாக விமர்சிப்பதும், மஞ்சள் பத்திரிக்கைகளில், திரைப்படங்களில் மாமிகளை தரம் தாழ்ந்து கேவலமாக விமர்சிப்பதை வீடவா சாட்டையடி பெரிது.

தமிழ் ஓவியா said...

//மதநம்பிக்கைக்கும் மூடநம்பிக்கைகும் மழைகும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் உல்லது இதை பிரித்து அறிபவனே மனிதன்//

raja vamsam அவர்களுக்கு வணக்கம்

மத நம்பிக்கைக்கும், மூடநம்பிக்கைக்கும் பெரிய அள்வு வித்தியாசம் எதுவும் இல்லை என்பதே எனது கருத்து.

அன்பைப் போதிக்கும் மதங்களினால் அள்வில்லா மனித உயிர்கள் பலியாகியுள்ள வரலாற்றுச் சம்பங்களை உற்று நோக்குங்கள். ஏன் இப்போது கூட இயேசுவின் கட்டளைப்படி தான் ஈராக் மீது படைஎடுத்தேன் என்று புஷ் சொல்லவில்லையா?
அல்லா சொன்னால் என் தாய் இருக்கும் இடத்தில் கூட குண்டு வைப்பேன் என்று ஒருவன் சொல்லவில்லையா?

ஏன் ஆளில்லா இடத்தில் குண்டு வைத்தாய் என்று மாலேகான் குண்டு வெடிப்புச் சம்பவத்தில் இந்து தீவிரவாதி இன்னொரு இந்து தீவிரவாதியிடம் சொன்ன செய்திகள் உங்களுக்கு தெரியவில்லையா?

மக்களைக் கொல்வதுதான் மதங்களின் வேலையா?
அருள்கூர்ந்து யோசியுங்கள் raja vamsam

தமிழ் ஓவியா said...

பித்தனின் வாக்கு மாதிரித்தான் இருக்கிறது. மனிதனின் வாக்கு போல் இல்லை உங்கள் பின்னூட்டம் (பித்தனின் வாக்கு)

எந்தப்பார்ப்பனத்தி தமிழன் பாதிக்கப் பட்ட போது வீதிக்கு வந்து போராடியிருக்கிறாள்.

சங்கராச்சாரிகள் கைது செய்யப்பட்ட போது வீதிக்கு வந்து போராடினார்கள் உங்களுக்கு தெரியுமா?

அது போல் வி.பி.சிங்

மண்டல்கமிசனை அமுல் படுத்திய போது பார்ப்பனத்திகள் வீதிக்கு வந்து போராடினார்கள்.

தேவையில்லாமல் யாரையும் விமர்சிப்பது எங்கள் நோக்கமல்ல பித்தன்

வாக்குச் சொல்லும் போது தெளிவாகச் சொல்ல வேண்டுகிறேன்.

எப்படியிருப்பினும் தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

Unknown said...

பெரியார் பார்ப்பன மேலாதிக்கத்திலிருந்து விடுதலை பெற்று சுயமரியாதையுடன் இருக்க சொன்னார். ஆனால் நீங்கள் பார்ப்பனருக்கு ஒரு விதத்திலும் சம்பந்தம் இல்லாத செய்தி வெளியிட்டு அதற்கு பார்ப்பனரை திட்டுவதிலிருந்து உங்கள் உண்மை சுய உருவம் தெரிகிறது. உங்கள் நோக்கம் அந்த மக்களை உயர்த்துவதல்ல பார்ப்பனரை எதாவது காரணம் சொல்லி திட்ட வேண்டும். அந்த மக்கள் உணமையிலேயே அறிவு பெற்று சுயமரியாதையுடன் வாழ தொடங்கினால் டிவி கொடுத்து உங்களால் ஒட்டு பெற முடியாது.

Unknown said...

இதையெல்லாம் அரசு தடை செய்ய வேண்டும் என்று தி.க போராடுமா?.
இத்தகைய சம்பவங்கள் நடைபெறும் இடங்களில் தி.க வினர் மக்களிடையே இதையெல்லாம் எதிர்த்து பிரச்சாரம்
செய்வதுண்டா?.
இதில் பார்பன அர்ச்சகர்களுக்கு பங்கிருப்பதாக தெரியவில்லை.
இவை உள்ளூர் மரபுகள.பார்பன பெண்களை இதில் தொடர்புபடுத்துவதிலிருந்து
தி.கவினரின் புத்தி வக்கிரமானது என்பது தெரிகிறது.

தமிழ் ஓவியா said...

//இதையெல்லாம் அரசு தடை செய்ய வேண்டும் என்று தி.க போராடுமா?.
இத்தகைய சம்பவங்கள் நடைபெறும் இடங்களில் தி.க வினர் மக்களிடையே இதையெல்லாம் எதிர்த்து பிரச்சாரம்
செய்வதுண்டா?.//

உங்களுக்கு பெரியாரையும் தெரியவில்லை. பெரியார் கொள்கைகளும் தெரியவில்லை.

தி.க.வினர் இது குறித்து பிரச்சாரம் செய்யவில்லையா?

சட்டமன்றத்தில் கூட இது போல் பேய் பிரச்சினை வந்த போது குமரி அனந்தன் உடபட தி.க.வின் பிரச்சாரம் பற்றி புகழ்ந்து பேசிய வரலாறு எல்லாம் உண்டு.

சமீபத்தில் கூட திருவண்ணாமலையில் சாமியார்களின் கொட்டத்தை அடக்கியது தி.க.வின் பிரச்சாரமே.

தமிழ் ஓவியா said...

//பார்பன அர்ச்சகர்களுக்கு பங்கிருப்பதாக தெரியவில்லை.
இவை உள்ளூர் மரபுகள்//

அர்த்தசாஸ்திரத்தில் சாணக்கிய பார்ப்பான் என்ன சொன்னான், கடவுள் மதம் பேய், வேப்பமரம் பற்றிய பொய்கதைகளைப் பரப்பி மக்களை பயமுறுத்த வேண்டும் என்று சொல்லியதை எல்லாம் படித்திருக்கிறீர்களா?

அப்படி மக்களின் மூளைக்கு விலங்கிட்டது பார்ப்பனியம் அல்லாமல் வேறு எது?

பேய் பிசாசு,பில்லி,சூனியம் பற்றிய அறிவியல் விளக்கம் என்ற நூலை பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் வெளியிட்டுள்ளது அதையாவது படித்து விட்டு பின்னூட்டம் இடவும்.

தமிழ் ஓவியா said...

//நீங்கள் பார்ப்பனருக்கு ஒரு விதத்திலும் சம்பந்தம் இல்லாத செய்தி வெளியிட்டு அதற்கு பார்ப்பனரை திட்டுவதிலிருந்து உங்கள் உண்மை சுய உருவம் தெரிகிறது.//

tamilyennuyir உங்களின் கேள்விக்கும் மேலே அளித்துள்ள பதிலே போதுமானது.

தனிப்பட்ட முறையில் எந்தப் பார்ப்பனரையும் தேவையில்லாமல் விமர்சிப்பது எங்கள் நோக்கமல்ல. தேவையுமில்லை

தமிழ் ஓவியா said...

tamilyennuyir

இன்று வரை தாங்கள் உயர்ந்தவர்கள் மற்றவர்கள் தாழ்ந்தவர்கள் என்பதற்காக பார்ப்பனர்கள் ஆவணிஅவிட்டம் என்ற பெயரில் பூணூலைப் புதுப்பித்து வருகிறார்கள் .

பார்ப்பனர் சங்கங்கள் ஒன்று கூடி இதுதான் கடைசியாக பூணூலைப் புதுப்பிக்கும் ஆவணி அவிட்டம் கொண்டாடியது. அடுத்த ஆண்டு முதல் அதை கொண்டாட மாட்டோம் என்று அறிவிப்பார்களா? கேட்டுச் சொல்லுங்கள் .

வெறுப்பது நாங்களா? பார்ப்பனர்களா?

அனைத்துச் ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று அரசு அறிவித்தும் பயிற்சி கொடுத்தும் அனைத்துச் ஜாதி மக்களும் ஒத்துக் கொண்டபோது பார்ப்பனர்கள் மட்டும் வழக்குத் தொடுத்து நிறுத்தி வைத்திருக்கிறார்களே

வெறுப்பது நாங்களா? பார்ப்பனர்களா?

இது போல் பல இருக்கிறது.

குறைந்தது இந்த பூணூல் போடுவதையாவது அடுத்த ஆண்டு முதல் நிறுத்திவிடுவோம் என்ற உறுதி மொழியைப் பார்ப்பன சங்கத்திடமிருந்து பெற்றுக்கொடுங்கள்

எங்களுக்கு இழிவு ஒழிந்தால் போதும் சக மனிதனாக மதிக்கப்பட்டால் போதும்

செய்வீர்களா?

முரண்பாடுகளை களைய நாங்கள் தயார். பார்ப்பனர்கள் தயாரா?

கேட்டுச் சொல்லுங்கள் .

உங்கள் மூலமாவது விடிவு பிறக்கட்டும் tamilyennuyir

நன்றி