Search This Blog

2.7.11

ரஜினி உயிர் பிழைத்ததற்குக் காரணம் டாக்டர்களே தவிர கடவுள் அல்ல!

செய்திகள் மீதான விவாதங்கள்

(உடல்நலம் பாதிக்கப்பட்டதைக் கூட பக்தியைப் பரப்புவதற்குப் பயன்படுத்தும் போக்கு. தமிழ்த் தேசியம் என்ற பெயரால் பார்ப்பன எதிர்ப்பு உணர்வின் அடித்தளத்தைத் தாக்கும் முயற்சிகள் இவற்றின் மீதான விமர்சனமே இக்கட்டுரை)

நடிகர் ரஜினிக்கும் பொறுப்புண்டு


நடிகர் ரஜினி நடிக்கிறார். பணம் சம்பாதிக்கிறார். இருக்கட்டும்; அதே நேரத்தில் மக்கள் மத்தியில் மூடநம் பிக்கையை விதைப்பது சமூகத்துக்குச் செய்யும் துரோகமும், பாதகமும் ஆகும். மூடநம்பிக்கை மனிதனின் தன்னம்பிக்கையைத் தகர்க்கிறது; - முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை போடுகிறது. மனித சமூகத்துக்கு மிகப் பெரிய கேடானதும் அறிவை முடக்கும், நாசமாக்கும் தீயக்குணமு மாகும் இது. திரைப்படம் மூலம் நடிகர் ரஜினி இதனைச் செய்து கொண்டிருக்கிறார்.

கயிறு கட்டுவது முதல் கழுத்தில் மாலை போடுவது வரையிலான மடத்தனங்கள் இளைஞர்களை மூழ்கடிக்கிறது.

கடவுளை அவர் நம்புவது உண்மையானது என்றால், ஏன் மருத்துவமனைகளை நாடு விட்டு நாடு தேடித் திரிய வேண்டும்?

நேராக தாம் நம்பும் பாபாக்களிடம் சரணடைய வேண்டியது தானே? இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் உயிர் வாழும் மகா சித்தி பெற்ற மகான்கள்தான் அவருக்குப் பரிச்சியம் ஆயிற்றே?

ஏன் அதைச் செய்யவில்லை? ஊருக்குத்தான் உபதேசமா? மக்களை மடையர்களாக்கிவிட்டு, தாம் மட்டும் சொந்த விஷயத்தில் கடவுளை மறந்து மனிதனைத் தேடுகிறாரே - ஏன்?

உடல் குணமடைந்து நீண்ட காலம் அவர் வாழ வேண்டும் என்பதே மனித நேயர்களான எங்களின் அவா. அதில் ஒன்றும் நமக்கு மாறுபாடு கிடையாது. சங்கராச்சாரியார் போல நாத்திகனுக்கு வைத்தியம் பார்க்காதே (தெய்வத்தின் குரல் 3ஆம் பகுதி பக்கம் 734) என்று சொல்லக் கூடியவர்களல்லர் பகுத்தறிவு வாதிகள்.

ரஜினியின் உடல் நலப் பாதிப்பைப் பயன்படுத்தி பிரார்த்தனை என்றும், நேர்த்திக் கடன் என்றும் தொற்று நோயைப் பரப்புவது ஏன்?

விஞ்ஞானம் கண்டுபிடித்த விலை உயர்ந்த மருந்துகளை ஒரு பக்கம் சாப்பிட்டுக் கொண்டு - இன்னொரு பக்கம் பிரார்த்தனைகளை ஊக்கு விப்பது ஏன்? இது இரட்டை வேடம் அல்லவா?

சிங்கப்பூரில் இருந்து ரசிகர் களுக்குத் தெரிவிப்பதில் கூட இந்த விஞ்ஞான உலகத்தில் கூட எந்த விளையாட்டை விளையாடினாலும் காசை மேலே தூக்கிப் போட்டு யார் முதலில் ஆடுவது என முடிவு செய்றாங்க. காசை மேலே தூக்கிப் போடுவது மட்டும்தான் மனிதனின் வேலை. பூவா . . . தலையா என்று தீர்மானிப்பது ஆண்டவன் வேலை! என்று கூறியுள்ளார்.

---------------(ஆனந்த விகடன் 29-6-2011 பக்கம் 6)

கடவுளுக்கு இதுதான் வேலையா? முதலில் தலை விழுந்ததாக வைத்துக் கொள்வோம். திருப்பி ஒரு தடவை போட்டால் அதே தலை மீண்டும் விழுமாறு ஆண்டவன் செய்வாரா? கடவுள்தான் ஒவ்வொன்றையும் முடிவு செய்கிறார் என்றால் ரஜினிக்கு நோய் வந்ததற்கும் கூட கடவுள்தான் மூலம் என்று ஆகாதா?

இதே ரஜினிகாந்த் முன்பு என்ன சொன்னார்?

எல்லாம் தெய்வச்செயல். கடவுள் எல்லாம் பார்த்திருப்பாருன்னு விட்டிருந்தா நான் இன்னும் கண்டக்டராகவே இருந்திருப்பேன். அந்தச் சூழ்நிலையில் உத்தியோகத்தை விட்டு விட்டு, தைரியமாகச் சென்னைக்கு வந்து, ஒரு வாசல்ல காத்திருந்தது என் முயற்சி தான்.

-------------------------(ராணி வார இதழ் 20-7-2008)

சபாஷ்! இதுதான் புத்திசாலித் தனம். தன் முயற்சி, விடாமுயற்சிதான் ரஜினியின் வெற்றிக்குக் காரணமே! தெய்வச் செயல் என்று நம்பாது, தன் வாழ்க்கையை மட்டும் பத்திரப் படுத்திக் கொள்ளும் ரஜினி அடுத்தவர்களுக்கு மட்டும் ஆண்டவனைக் கைகாட்டுவது அறிவு நாணயமா?

தான் மீண்டு வந்ததற்கு மிக முக்கியக் காரணமாக ரஜினி கருதுவது டாக்டர்களைத்தான். தனக்குச் சிகிச்சை அளித்த டாக்டர்களை வீட்டுக்கு அழைத்து விருந்து வைக்கத் திட்டமிட்டிருக்கிறார் என்றும் அதே இதழில் ஆனந்தவிகடன் குறிப் பிட்டுள்ளது.

இதன் பொருள் என்ன? இவர் உயிர் பிழைத்ததற்குக் காரணம் டாக்டர்களே தவிர கடவுள் அல்ல என்பதுதானே இதன் பொருள்?

உங்களுக்கு ஒரு நீதி, -நியதி! மற்றவர்களுக்கு வேறு மாதிரியா? - மற்றவர்களை வஞ்சிக்க வேண்டாம், அவர்களையும் வாழவிடுங்கள் வைதீகர்களே என்பதுதான் நமது மனிதாபிமான வேண்டுகோள்.

இந்திய அரசமைப்புச் சட்டம் கூட விஞ்ஞான மனப்பான்மையை, சீர்திருத்த உணர்வை வளர்க்க வேண்டும். அது ஒவ்வொரு குடி மகனின் அடிப்படைக் கடமை என்று தானே சொல்கிறது. (நான்காம் பாகம் - அடிப்படைக் கடமைகள் 51 A-(h)

விஞ்ஞானக் கருவியான திரைப் படத்தைப் பயன்படுத்தி மக்கள் மத்தியில் அஞ்ஞான இருளைத் திணிப்பது நியாயம் ஆகுமா?

மக்களை மக்கள் எந்தக் காரியத் திற்கு வேண்டுமானாலும் மன்னிக்கலாம். ஆனால் அறிவைக் கெடுக்கும் காரியம் எவ்வளவு சிறிய தானாலும், அது மன்னிக்க முடியாததேயாகும். தமிழர்களையும் நான் வேண்டிக் கொள்வது என்ன வென்றால், எந்தக் காரியத்திற்கு இணங்கினாலும், அறிவைக் கெடுக்கும் காரியத்திற்கு மாத்திரம் கண்டிப்பாக ஒத்துழைக்கக் கூடாதென்றே வேண்டிக் கொள் கிறேன். (விடுதலை 4-4-1968) என்று ஒரு வேண்டுகோளை முன் வைக் கிறார் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார்.

95 ஆண்டு வரை உடல் உபாதை களுக்கிடையே மக்களின் மாண் பினை உயர்த்த அயராது பாடுபட்டு, பகுத்தறிவு வெளிச்சத்தை மக் களுக்குத் தந்து, அவர்களின் முன்னேற்றத் திசைக்கு அடி எடுத்துக் கொடுத்துச் சென்றுள்ளார்.

மக்களின் பாமரத் தன்மையைப் பயன்படுத்தி அவர்களை மீண்டும் பாழ்பட்ட மூடநம்பிக்கை இருள் பள்ளத்தில் தள்ளி மூடிட வேண் டாம்.

காசு சம்பாதிப்பது மட்டும் ஒரு கலைஞனின் குறிக்கோளாக இருக்கக் கூடாது. சமுதாயப் பொறுப்பும் தேவை! கலையின் மூலம் மனிதனை கடைத் தேற்றும் முற்போக்குக் கருத்தும் இருக்க வேண்டும் அல் லவா? மக்களை முட்டாள் ஆக்குவது எளிது - அறிவாளியாக்குவதுதான் கடினம்! குயவனுக்குப் பல நாள் வேலை - தடியனுக்கோ ஒரு நொடி வேலை!

=========================================

சமச்சீர் முறை கல்வி நீக்கம் சரியாகுமா?

பெரியாரைப் பற்றிப் பேசி கை தட்டு வாங்கி, பார்ப்பனர் - தமிழர் பற்றிப் பேசி விளம்பரம் பெற்று, அதன்பின் அவற்றை அடகு வைத்து பார்ப்பன ஊடகங்களால் ஆழ்வார் பட்டம் பெறுவது என்பதெல்லாம் தமிழ்நாட்டில் அதிசயம் இல்லை.

தமிழ்நாட்டு முதல் அமைச்சரைப் பாராட்டுவது, போற்றுவது அத்தகையவர்களுக்கு அவசியமாகவும், ஆதாயமாகவும் இருக்கலாம். அதில் தலையிட யாருக்கும் உரிமை கிடையாது.

சமச்சீர் கல்வியைப் பற்றி கேள்வி கேட் டால் என்ன பதில் தெரியுமா?

சமச்சீர் கல்வி முறையை தமிழக அரசு ஏற்றுக் கொள்கிறது. அதில் கருத்து மாறுபாடு இல்லை. ஆனால் தரமான பாடத்திட்டம் இல்லாமல் எப்படி நடைமுறைப்படுத்துவது? எனவே இந்த வகையில் தமிழக அரசைக் குறை சொல்ல முடியாது- என்பதுதான் இயக்குநர் ஒருவரின் பதில்.

சீமான் வீட்டுப் பிள்ளையும், அன்னக்காவடி வீட்டுப் பிள்ளையும் ஒரே பாடத்தைப் படிப்பதா என்று பூணூலைக் கொடியாக்கித் தூக்கிப் பிடிப்போரின் பாதார விந்தங்களை நோக்கி அனுமார்கள் சரணடையும் படலம் இது.

நாரதனுக்கும், கிருஷ்ணனுக்கும் பிறந்த 60 பிள்ளைகள்தான் தமிழ் ஆண்டுகள் என்று புராணம் எழுதி வைத்த பார்ப்பனர்தம் குப்பையைத் தூக்கி எறிந்து, பார்ப்பனர்களின் பண்பாட்டுப் படையெடுப்பை முறியடித்து, தை முதல்நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்பதை வாழ்த்தி வரவேற்கும் பாடம் சமச்சீர் கல்வியில் இடம் பெறுவது அழிக்கப்பட்டு விட்டதே!

இதற்கு என்ன பதிலாம்?

ஒரு வரியில் இதெல்லாம் தரமான கல்விப் பாடத் திட்டம் அல்ல என்று இந்தத் தரமான மனிதர்கள் கருதி விட்டார்களோ!

மிகப் பெரிய விலை கொடுத்து, பார்ப்பனீய கோர நச்சுப் புழுதியிலிருந்து, பிடியிலிருந்து பார்ப்பனர் அல்லாத மக்களின் வாழ்வும், தன்மானமும் எடுத்துக் கட்டப்பட்டுள்ளன _- மீட்கப்பட்டுள்ளன!

புரிந்தோ, புரியாமலோ, தெரிந்தோ, தெரியாமலோ பார்ப்பன வலையில் சிக்கி முக்கால் நூற்றாண்டுக்கு மேற்பட்ட திராவிடர் இயக்கத்தின் பேருழைப்பை - தியாகங்களைக் கொச்சைப்படுத்தி, எதிரிகளிடம் விலை போக வேண்டாம் என்று எச்சரிப்பது நமது கடமை! தமிழ்த் தேசியம் என்ற பதாகையைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு, பார்ப்பன எதிர்ப்பைப் புறந்தள்ளி, சமூக நீதியை கிடப்பில் போட்டு, ஜாதி ஒழிப்பை நெட்டித் தள்ளி, மூட நம்பிக்கை ஒழிப்பை ஓரங்கட்டி, பார்ப்பனிய ஆதிக்கப் பல்லக்கைத் தூக்கிச் சுமக்க தோள்களைத் தயார் செய்து கொண்டிருப்பவர்கள்தாம் இக்கால கட்டத்தில் ஆபத்தானவர்கள் - மிகமிக ஆபத்தானவர்கள்.

தமிழர்களே, எச்சரிக்கை! எச்சரிக்கை!!

நான் அரசியலில் பல மாறுதலில் ஈடுபட்டிருக்கலாம் என்றாலும் சமுதாயத் துறையில் பார்ப்பனிய வெறுப்புள்ளவன் நான். அதுதான் என்னைப் பகுத்தறிவுவாதியாக (நாத்திகனாக) ஆக்கியது.

- தந்தை பெரியார் (விடுதலை 5.3.1969)

=================================================

மண்சோறு என்னாச்சு?

கேள்வி: முதல்வர் அம்மா இருக்கும் இடம்தான் எனக்குக் கோவில். எனவே அவர் ஆட்சி செய்யும் கோட்டையும் சரி, அ.தி.மு.க. தலைமைச் செயலகமானாலும் சரி, போயஸ் கார்டனாக இருந்தாலும் சரி, அங்கெல்லாம் நான் செருப்பு அணியமாட்டேன் என்று சபதம் எடுத்துக் கொண்ட செருப்பு அணியாமல் பவனி வரும் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் ஆர்.வி. உதயகுமார் பற்றி?

பதில்: நல்ல வேளையாக முதல்வர் தலையிட்டு இந்தக் கோமாளித்தனத்தை நிறுத்தி இருக்கிறார். இம்மாதிரி செய்யக்கூடாது என்றும், தான் இருக்கும் இடத்தில் அவர் காலணி அணிந்து கொண்டுதான் வரவேண்டும் என்றும், அவரிடம் முதல்வர் கண்டிப்பாகக் கூறிவிட்டதாகச் செய்திகள் கூறுகின்றன. அதுவரை நல்லது.

------------------------------(துக்ளக் - 15-6-2011)

சரிதான். அதோடு, அ.தி.மு.க. பக்தர்கள் அம்மாவுக்காக மண்சோறு தின்கிறார்களே. அது பற்றி ஒன்றும் அம்மா சொல்லமாட்டாரா? துக்ளக் அய்யர்வாளும் அதனைக் கண்டு கொள்ளத்தான் மாட்டாரா?


------------------- மின்சாரம் அவர்கள் 2-7-2011 “விடுதலை” ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை

13 comments:

Tamil Linux said...

அப்போ சத்திய சாயி பாபா இறந்ததுக்கும் காரணம் டாக்டர்களா :-)

தமிழ் ஓவியா said...

//அப்போ சத்திய சாயி பாபா இறந்ததுக்கும் காரணம் டாக்டர்களா//

இதத்தான் முட்டாள்தனம் என்கிறோம்.

ரஜினி சாதாரண மனிதன் ஆனால் பாபா கடவுள் என்று கூறிக் கொண்டு ஏமாற்றி பிழைப்பு நடத்தியவர்.

அப்ப கடவுள் இறப்புக்கு காரணம் டாக்டர் என்றால் எவனாவது கடவுளை மதிப்பானா?

தமிழ் ஓவியா said...

ஒரே நேர்க்கோட்டில் பார்ப்பனர்கள்



அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் செல்வி ஜெயலலிதா அம்மையார் பேட்டி ஒன்றில் தொல். திருமாவளவன் அவர்களின் உண்ணாவிரதம் குறித்து பின்வருமாறு கூறியுள்ளார்:

"கருணாநிதியும், திருமாவளவனும் பேசிக்கொண்டு நடத்துகிற ஒரு நாடகம்"

("நமது எம்.ஜி.ஆர்", 19.1.2009).

இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் தா. பாண்டியன் அவர்கள் இது ஜெயலலிதா அம்மையாரின் கருத்து என்று கூறி, அதற்குமேல் அதற்குள் செல்லவில்லை.

மானமிகு தொல். திருமாவளவன் மேற்கொண்டிருந்த உண்ணாவிரத மேடைக்கே சென்று, வாழ்த்திப் பேசி - "வீரமரணம் அடையத் தயாராக இருப்போம்" என்று வீர முழக்கமிட்டார்.

இந்த நிலையில், தோழர் தா. பாண்டியன் அவர்கள் செய்தியாளர்கள் கேட்ட வேறு கேள்விகளுக்கெல்லாம் பதில் அளித்துவிட்டு, இந்த வினாவை மட்டும் சந்திக்காமல் நழுவியது ஏன் என்று தெரியவில்லை.

பதில் சொல்வதாக இருந்தால் கடுமையானதாகவிருக்கும் - கூட்டணியின் அச்சையே முறிக்கும் அளவுக்கு அது முட்டுதலை ஏற்படுத்தும் என்று நினைத்தாரோ என்னவோ!

உண்ணாவிரதத்தை வாழ்த்திப் பேசிய நிலையில், ஜெயலலிதா அம்மையார் கூறும் அந்த நாடகத்தில் தோழர் தா.பா. அவர்களுக்கு ஒரு பாத்திரம் இருக்கத்தானே செய்யும்? அது என்ன பாத்திரமாக இருக்கும் என்று ஒவ்வொருவரும் யூகமாகப் பேசுவதற்கு கம்யூனிஸ்ட் செயலாளர் இடம் கொடுத்திருக்கவேண்டாம் என்பதே நமது கருத்து.

அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் அய்யங்கார் அம்மையார் திருமா அவர்களின் உண்ணாவிரதத்தை ஒரு நாடகம் என்று சொல்கிறார் என்றால், தினமலர் பார்ப்பனர் என்ன எழுதுகிறார்?

தமிழக மின்துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி: நண்பர் திருமாவளவன் மட்டும் தன்னிச்சையாக, யாரிடமும் அறிவிக்காமல், தானே ஒரு முடிவெடுத்து, இலங்கைப் பிரச்சினையை வலியுறுத்தி உண்ணாநோன்பைத் தொடங்கியுள்ளார்.

டவுட் தனபாலு: அவரு பாவம்... நம்ம ஓட்டு வங்கியெல்லாம் பகுஜன் சமாஜ் கட்சிக்குப் போயிடுமோங்கிற பயத்துல ஏதோ ஒரு உண்ணாவிரதம் இருந்து பார்க்கிறார்.... அது பொறுக்கலையா உங்களுக்கு...? அதையெல்லாமா உங்கள்ட்ட சொல்லி அழ முடியும்?

("தினமலர்", 19.1.2009, பக்கம் 8)

அய்யங்கார் அம்மையார் நாடகம் என்கிறார் - "தினமலர்" அய்யரோ ஓட்டு வங்கிக்காக என்கிறார்.

ஈழத் தமிழர் பிரச்சினையென்றாலும், சமூகநீதிப் பிரச்சினை என்றாலும், மதச் சார்பின்மை என்றாலும் எல்லாப் பார்ப்பன வகையறாக்களும், அது எப்படி ஒரே நேர்க்கோட்டில் வந்து விழுகிறார்கள்?

அதுதான் பார்ப்பனப் பாசம் என்பது. இந்தப் பிரச்சினைகள் எல்லாமே பார்ப்பனர் ஆதிக்கத்தின் அடிவேரை அடித்து வீழ்த்தும் வெட்டரிவாள்கள்தானே!

பார்ப்பனர்களுக்கென்று ஒரு நாடு இல்லாத காரணத்தால், நாடோடிகளாகத் திரிந்து ஆங்காங்கே ஒண்டிக்குடித்தனம் நடத்தும் நிலை ஏற்பட்டுள்ளதால், நாட்டுக்குரிய மக்களுக்குத் தனி நாடு கிடைத்துவிட்டால், "ஒண்ட வந்த நம்மை உண்டு இல்லையென்று பார்த்து விடுவார்களோ, ஓட ஓட விரட்டுவார்களோ" என்ற பயத்தில் இப்படி அக்கப்போர்களையும், அரட்டைக் கச்சேரிகளையும் நடத்திக்கொண்டு இருக்கிறார்கள். தந்தை பெரியார் அவர்கள் கொடுத்த "ஈரோட்டுக் கண்ணாடியை" அணிந்து பார்த்தால், அவாளின் கொட்டம் அடுத்த நொடியே அடங்கிப் போய்விடும் - தமிழன் போடும் எச்சிலையில் புரளும் நிலையும் உருவாகிவிடும்.


---------------- கருஞ்சட்டை அவர்கள் 19-1-2009 "விடுதலை" இதழில் எழுதியது.

தமிழ் ஓவியா said...

பிரார்த்தனை

பிரார்த்தனை என்பது இன்று உலகில் மக்கள் சமூகம் எல்லோரிடத்திலும் அதாவது கடவுளால் மக்கள் நடத்தப்படுகிறார்கள் என்று நம்பும் எல்லோரிடத்திலும் இருந்து வருகிறது. இது எல்லா நாட்டிலும் எல்லா மதக்காரர்களிடத்திலும் இருந்து வருகிறது.

பிரார்த்தனை என்பதற்கு ஜபம், தபம், வணக்கம், பூசனை, தொழுகை, முதலிய காரியங்களும் பெயர்களும் சொல்லுவதுண்டு.

இவையெல்லாம் கடவுளை வணங்கி தங்களுக்கு நன்மை அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளுவதேயாகும்.

தனக்கு வேண்டியவற்றை எல்லாம் அதாவது இம்மையில் இவ்வுலகில் யுக்தி, செல்வம், சுகம், இன்பம், ஆயுள், கீர்த்தி முதலியவை களும், மறுமையில் மேல்லோகத்தில் பாவமன்னிப்பு, மோக்ஷம், நல்ல ஜன்மம் முதலியவைகளும் கிடைக்க வேண்டும் என்கின்ற ஆசையே பிரார்த்தனையின் முக்கிய நோக்கமாக இருந்து வருகிறது.

இந்த பிரார்த்தனையின் அஸ்திவாரம் உலகத்தைப் படைத்துக் காத்துவரும் கடவுள் ஒருவர் இருக்கிறார் என்பதும், அவர் சர்வ வல்லமையும் சர்வ வியாபகமும் சர்வமும் அறியும் ஞானமும் உடையவர் என்பதும், அப்படிப்பட்ட அக்கடவுளை வணங்குவதால் ஒருவனுக்கு வேண்டிய சகல காரியத்திலும் சித்தி பெறலாம் என்பதுமானவைகள் தான் பிரார்த்தனைக் காரர்களின் கருத்தாயிருக்கிறது. இப்படிப்பட்ட பிரார்த்தனைக்கு அக்கடவுளை வணங்குவது, தோத்திரம் செய்வது, புகழ்வது, பஜனை செய்வது முதலிய காரியங்கள் ஒருபுறமிருக்க பொருள்களைக் கொண்டும் கடவுளைத் திருப்தி செய்து அவற்றால் பயன்பெறலாம் என்பதும் இந்த பிரார்த்தனையில் சேர்ந்ததாகும்.

அதாவது கடவுளுக்கு இன்ன இன்னது செய்வதாக நேர்ந்து கொள்ளுவது, ஜீவ பலிகொடுப்பது, கோயில் கட்டுவது, உற்சவம் செய்வது முதலிய காரியங்கள் செய்யப்படுவனவாகும்.

ஆகவே இப்படிப்பட்ட பிரார்த்தனை என்பதற்கு வேறு வார்த்தையில் ஒரு மாறுபெயர் சொல்லவேண்டுமானால் பேராசை என்றுதான் சொல்ல வேண்டும். பேராசை என்றால் தகுதிக்கு மேல் விரும்புவது, வேலை செய்யாமல் கூலி பெறுவது.

படித்துப் பாஸ் செய்யவேண்டியவன் பிரார்த்தனையில் பாஸ் செய்வது என்றால், பணம் வேண்டியவன் பிரார்த்தனையில் பணம் சம்பாதிக்க வேண்டு மென்றால், "மோக்ஷத்துக்கு" போகவேண்டும் என்கின்றவன் பிரார்த்தனையில் மோக்ஷத்துக்கு போக வேண்டும் என்றால், இவைகளுக்கெல்லாம் பேராசை என்று சொல்லுவதோடு வேலை செய்யாமல் கூலிகேட்கும் பெரும் சோம்பேறித் தனமும் மோசடியும் என்றும் சொல்வதுதான் மிகப் பொருத்தமாகும்.

பேராசையும் சோம்பேறித்தனமும் ஏமாற்றும் தன்மையும் இல்லா விட்டால், பிரார்த்தனைக்கு இடமே இல்லை.

மற்றும் முன் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஆக பிரார்த்தனை செய்வதும் பிரார்த்தனையில் அவைகளை அடையப் பார்ப்பதும் முன் குறிப்பிட்ட சர்வ வல்லமை சர்வ வியாபகம் உள்ள கடவுளை சுத்த முட்டாள் என்று கருதி அதை ஏமாற்றச் செய்யும் சூக்ஷி என்று கூட சொல்லி ஆகவேண்டி இருக்கிறது.

எந்த மனிதனும் தகுதியானால் எதையும் அடையலாம்.

அதற்கு வேண்டிய காரியங்கள் செய்து தகுதியாக்கிக்கொண்டு பலனையடைய எதிர் பாராமல் காரியத்தை செய்யாது பிரார்த்தனையில் பலன் அனுபவிக்கவேண்டும் என்று கருதினால் கடவுள் வேலை செய்யாமல் கூலி கொடுக்கும் ஒரு "அறிவாளி" என்றும் தன்னைப் புகழ்வதாலேயே வேண்டியதைக் கொடுக்கும் ஒரு தற்புகழ்ச்சிக் காரனென்றும் தானே சொல்லவேண்டும்.

தவிர இந்த பிரார்த்தனையின் தத்துவமானது மனிதனை சோம்பேறி யாக்குவதோடு சகலவித அயோக்கியத்தனமான காரியங்களுக்கும் லைசென்சு, அனுமதிச் சீட்டுக் கொடுப்பது போலாகிறது. விதை நட்டு தண்ணீர் பாய்ச்சாமல் அறுப்பு அறுக்க கத்தி எடுத்துக்கொண்டு போகிறவனுக்கும் யோக்கியமான காரியங்களைச் செய்யாமல் கடவுள் கருணையை எதிர்பார்ப்பவனுக்கும் என்ன வித்தியாசம் என்பது விளங்கவில்லை.

கடவுள் சகலத்தையுமுணர்ந்து அதற்கு தகுந்தபடி பலன் கொடுக்கக் கூடிய சர்வஞ்த்துவம் உள்ளவர் என்று ஒருவன் கருதி இருப்பானேயானால் அவன் கடவுளைப் பிரார்த்தனை செய்யும் வேலையில் ஈடுபடவோ அதற்காக நேரத்தை செலவு செய்யவோ ஒரு பொழுதும் துணியமாட்டான்.

ஏனென்றால் சகல காரியமும் கடவுளால் தான் ஆகும் என்று நினைத்துக்கொண்டு கடவுள் யாருடைய முயற்சியும் கோரிக்கையும் இல்லாமல் அவனவன் செய்கைக்கும் எண்ணத்துக்கும் தகுதிக்கும் தகுந்தபடி பலன் கொடுப்பதற்குத் தகுந்த ஏற்பாடும் செய்து விட்டார் என்றும் (அதாவது விதியின்படி தான் முடியும் என்றும்) தெரிந்து இருந்த ஒருவன் அந்த தெளிவில் நம்பிக்கை இருந்தால் பிரார்த்தனை செய்வானா என்று யோசித்துப்பார்க்க வேண்டுகிறோம்.

சாதாரணமாக மக்களில் 100க்கு 90 பேர்களிடம் பிரார்த்தனை வெகு கேவலமான அறிவற்ற வியாபாரத் தனமான முறையில் இருந்து வருகிறது.

அதாவது எனக்கு இன்ன பலன் ஏற்பட்டால் உனக்கு இன்ன காரியம் செய்கிறேன். அல்லது உனக்கு நான் இன்ன காரியம் செய்கிறேன். அதற்கு பதிலாக நீ இன்ன காரியம் எனக்குச் செய் என்கின்ற முறையிலேயே பிரார்த்தனை இருந்து வருகின்றது.




-----------தொடரும்

தமிழ் ஓவியா said...

இவர்கள் எல்லோரும் அதாவது இந்தப் பிரார்த்தனைக்காரர்கள் எல்லோரும் கடவுளை புத்திசாலி என்றோ சர்வ சக்தி உள்ளவன் என்றோ பெரிய மனிதத்தன்மை உடையவன் என்றோ கருதவில்லை என்றுதான் சொல்லி ஆகவேண்டும்.

சிலர் சொல்லுகிறார்கள். மனிதன் பாபி, அவன் பாப கர்மத்தைச் செய்துதான் தீருவான். ஆதலால் மன்னிப்பு கேட்டுதான் தீரவேண்டும் என்கிறார்கள்.

நான் பாபம் செய்துதான் தீருவேன். நீ மன்னித்துதான் ஆகவேண்டும் என்று பிரார்த்திப்பதை கடவுள் ஏற்றுக்கொள்வதானால் மனிதன் எந்தப் பாவத்தை செய்வதற்கும் ஏன் பயப்படவேண்டும் என்பது நமக்கு புலப்பட வில்லை. பாபத்துக்கு எல்லாம் மன்னிப்பு இருக்குமானால் புண்ணியம் என்பதற்கு அருத்தம் தான் என்ன?

ஆகவே கடவுள் கற்பனையை விட இந்த பிரார்த்தனை கற்பனையானது மிக மிக மோசமானது என்றுதான் சொல்ல வேண்டும். பிரார்த்தனைக் கற்பனை இல்லாவிட்டால் கடவுள் கற்பனை ஒரு பிரயோஜனத்தையும் கொடுக்காமல் போய்விடும்.

மனிதன் பூஜையும் பிரார்த்தனையும் செய்வதற்கு தான் கடவுள் ஏற்படுத்தப்பட்டதே ஒழிய கடவுளுக்கு ஆக பூஜையும் பிரார்த்தனையும் ஏற்படுத்தப்படவில்லை.

குரு (பாதிரி) புரோகிதன் (பார்ப்பனர்) ஆகியவர்கள் பிழைப்புக்கு ஆகவே பிரார்த்தனையும் கடவுள் மன்னிப்பும் ஏற்படுத்தப்பட வேண்டியதாய் விட்டது.

இந்த இரண்டு காரியமும் இல்லாவிட்டால் பாதிரிக்கோ முல்லாவுக்கோ, புரோகிதனுக்கோ ஏதாவது வேலை உண்டா என்பதை யோசித்துப்பாருங்கள். ஆஸ்திகர்கள் கொள்கைப்படி மனிதனுடைய செய்கையும் எண்ணமும் "சித்திரபுத்திரனுக்கோ கடவுளுக்கோ தெரியாமல் இருக்கவே முடியாது" இதற்கு ஆக பலன் கொடுக்க தீர்ப்பு நாளும் எமதர்ம ராஜாவும் இருந்தே இருக்கிறான்.

மத்தியில் பிரார்த்தனை பூசனை என்பது மேல்கண்ட இரண்டையும் ஏமாற்றவா அல்லது குருவும் புரோகிதனும், பிழைக்கவா என்பது யோசித்தால் விளங்காமல் போகாது.

பிரார்த்தனையில் செலவாகும் நேரத்தைப்போல் மனிதன் வீணாய்க்கழிக்கும் நேரம் வேறு இல்லை என்றே சொல்லுவோம். சில சோம்பேறிகள் பிழைப்பதற்காக மக்கள் புத்தி எவ்வளவு கெடுகிறது? மக்களுக்கு அயோக்கியத்தனம் செய்ய எவ்வளவு தைரியம் ஏற்பட்டு விடுகிறது? பொருள்கள் எவ்வளவு நாசமாகிறது? என்பவைகளை யெல்லாம் யோசித்துப் பார்த்தால் பிரார்த்தனை என்பது ஒரு புரட்டான காரியம் என்றோ பயனற்ற காரியம் என்றோ அறிவீனமான காரியம் என்றோ விளங்காமல் போகாது.

-------------- பெரியார் -”பகுத்தறிவு” ஜனவரி 1936

கிரி said...

//சபாஷ்! இதுதான் புத்திசாலித் தனம். தன் முயற்சி, விடாமுயற்சிதான் ரஜினியின் வெற்றிக்குக் காரணமே! தெய்வச் செயல் என்று நம்பாது, தன் வாழ்க்கையை மட்டும் பத்திரப் படுத்திக் கொள்ளும் ரஜினி அடுத்தவர்களுக்கு மட்டும் ஆண்டவனைக் கைகாட்டுவது அறிவு நாணயமா?/

ஓவியா ரஜினி யாரையும் கடவுளை மட்டும் நம்பு உன்னோட உழைப்பை நம்பாதே என்று கூறவில்லை. அவர் கூறுவதே உன் வாழ்க்கை உன் கையில் என்பது தான். நமது முயற்சிகளை கடமைகளை நாம் செய்ய வேண்டும் அதன் பிறகு நடப்பது நமது கையில் இல்லை என்பது தான். இதில் என்ன தவறு கண்டீர்கள்.

ரஜினி கூறியது மருத்துவர்களின் உதவி பிரார்த்தனைகளின் பலன் என்று கூறி இருக்கிறார். பிரார்த்தனை என்பதை நீங்கள் கடவுளாக பார்க்க வேண்டாம் எண்ணங்களாக பாருங்கள். பலரின் எண்ணங்களுக்கு சக்தி உண்டு இது அறிவுப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டதா என்று எனக்கு தெரியவில்லை ஆனால் அனுபவப்பூர்வமாக உணர்ந்து இருக்கிறேன். எண்ண அலைகளுக்கு எப்போதுமே பலம் உண்டு. நீங்கள் பகுத்தறிவாளர் என்பதால் உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்கலாம் அது குறித்து எனக்கு வருத்தமில்லை காரணம் எப்படி ஒரு விசயத்தில் ஒருவருக்கு நம்பிக்கை இருக்கிறதோ அதில் இன்னொருவருக்கு நம்பிக்கை இல்லாமல் இருப்பது ஆச்சர்யம் இல்லை தானே.

//உங்களுக்கு ஒரு நீதி, -நியதி! மற்றவர்களுக்கு வேறு மாதிரியா? - மற்றவர்களை வஞ்சிக்க வேண்டாம், அவர்களையும் வாழவிடுங்கள் வைதீகர்களே என்பதுதான் நமது மனிதாபிமான வேண்டுகோள்.//

இதில் மற்றவர்களை வஞ்சிக்க வேண்டாம் என்று கூறி இருக்கிறீர்கள். ரஜினி என்ன வஞ்சித்து விட்டார் என்று நிஜமாகவே எனக்கு புரியவில்லை. இதைக் கொஞ்சம் விளக்க முடியுமா! மனிதாபிமான வேண்டுகோள் வைக்கும் அளவிற்கு இதில் என்ன தவறாக இருக்கிறது. ரஜினி என்ன யாரையாவது கடவுளை மட்டும் வணங்கு மருத்துவமனைக்கு போக வேண்டாம் என்று கூறினாரா?

ஒருவேளை உங்கள அளவிற்கு அனுபவம் இல்லாமல் இருக்கலாம் எனவே இதற்க்கு விளக்கம் கூறுங்கள் நானும் தெரிந்து கொள்கிறேன்.

Tamil Linux said...

அதை தான் நானும் சொல்ல வந்தேன். Face Bool-il இப்படி எழுதியதால் பல சாயி பக்கதர்கள் என்னை தங்கள் நண்பர் வட்டத்திலிருந்து நீக்கி உள்ளனர்.:-))

ROBOT said...

//எல்லாம் தெய்வச்செயல். கடவுள் எல்லாம் பார்த்திருப்பாருன்னு விட்டிருந்தா நான் இன்னும் கண்டக்டராகவே இருந்திருப்பேன். அந்தச் சூழ்நிலையில் உத்தியோகத்தை விட்டு விட்டு, தைரியமாகச் சென்னைக்கு வந்து, ஒரு வாசல்ல காத்திருந்தது என் முயற்சி தான்.//

இதே ரஜினி தான் உங்களை போன்றவர்களுக்கு புரிய வேண்டும் என்பதற்காக தெளிவாக சொல்லி இருக்கிறாரே இப்படி

" நம்மை நாம் கவனித்து கொண்டால் தான் கடவுள் நம்மை கவனிப்பார் "என்று. கடவுளை மட்டுமே நம்பிக்கொண்டு அவர் எல்லாவற்றையும் பார்த்து கொள்வார் என்று இருப்பது சோம்பேறித்தனம் மற்றும் அது தான் மூட நம்பிக்கை. இதை ரஜினி ஒரு போதும் சொல்லவில்லையே. நீ உன் கடமையை சரியாக செய் கடவுளின் அருளால் அதற்கான பலன் கிட்டும் என்பது தான் அவர் சொல்வது. என்ன தான் டாக்டர்கள் வைத்தியம் பார்த்தாலும், கடைசி முடிவு ஆண்டவன் கையில் தான் என்பதை MBBS படித்த பெரிய டாக்டர்களே ஒத்துக் கொள்வார்கள்.

yasir said...

//என்ன தான் டாக்டர்கள் வைத்தியம் பார்த்தாலும், கடைசி முடிவு ஆண்டவன் கையில் தான் என்பதை MBBS படித்த பெரிய டாக்டர்களே ஒத்துக் கொள்வார்கள்//

இதைத் தான் ப‌டித்த‌ முட்டாள்க‌ள் என்று கூறுகிறார்க‌ள். டாக்ட‌ருக்கு ப‌டித்துவிட்டால் மூட‌ ந‌ம்பிக்கை இருக்காது என்று அர்த்தமாகிவிடுமா? அறுவை சிகிச்சை செய்துவிட்டு வ‌ந்து பிழைப்ப‌து ம‌ட்டும் ஆண்ட‌வ‌ன் செய‌ல் என்று மூட நம்பிக்கையை கூறும் டாக்ட‌ர்க‌ள் உள்ள‌ வ‌ரையில் மூட‌ ந‌ம்பிக்கையை ஒழிக்க‌ முடியாது. இத‌ற்கு முத‌லில் ச‌ட்ட‌ம் போட்டு த‌டை விதிக்க‌ வேண்டும்.

ROBOT said...

//அறுவை சிகிச்சை செய்துவிட்டு வ‌ந்து பிழைப்ப‌து ம‌ட்டும் ஆண்ட‌வ‌ன் செய‌ல் என்று மூட நம்பிக்கையை கூறும் டாக்ட‌ர்க‌ள் உள்ள‌ வ‌ரையில் மூட‌ ந‌ம்பிக்கையை ஒழிக்க‌ முடியாது. இத‌ற்கு முத‌லில் ச‌ட்ட‌ம் போட்டு த‌டை விதிக்க‌ வேண்டும். //

எல்லாமே மனிதனால் செய்ய முடியாது. மனித குலத்திற்கு அப்பாற்பட்ட சக்தி ஒன்று இருக்கத்தான் செய்கிறது. அதற்கு நம்பிக்கை உள்ளவர்கள் வைத்துக் கொள்ளும் பெயர் கடவுள். yasir உங்கள் அகராதியில் மூட நம்பிக்கை.

ச‌ட்ட‌ம் போட்டு த‌டை விதிக்க வேண்டிய எத்தனையோ குற்றங்கள் கண் முன்னே நடந்து கொண்டு இருக்க மற்றவர்களின் நம்பிக்கையை தடுக்க சட்டம் ரொம்ப அவசியமா ? உங்களுக்கு நமிபிக்கை இல்லை என்றால் விட்டு விட்டு செல்லுங்கள். அதற்காக கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் உள்ளவர்கள் அனைவரும் முட்டாள்கள் அல்ல அது இல்லாத நீங்கள் அதி மேதாவிகளும் அல்ல ........

நம்பி said...

Blogger ROBOT said...
//எல்லாமே மனிதனால் செய்ய முடியாது. மனித குலத்திற்கு அப்பாற்பட்ட சக்தி ஒன்று இருக்கத்தான் செய்கிறது. அதற்கு நம்பிக்கை உள்ளவர்கள் வைத்துக் கொள்ளும் பெயர் கடவுள். yasir உங்கள் அகராதியில் மூட நம்பிக்கை.//

இது காலத்திற்கு ஏற்ப, இடத்திற்கு ஏற்ப மாறுபடக்கூடிய வாசகம்.....ஒரு பக்கா மூடநம்பிக்கை வாசகம்....

(தாழ்வு மனப்பான்மை உடையவனுக்கு மட்டும், மனோதத்துவ மருத்துவத்தில் உஷாராக இதிலிருந்து மாறும் வாசகமான, நம்பிக்கை வாசகமான அதாவது....''மனிதனால் முடியாதது என்ன? அப்படின்னு நினைக்கணும்!'' என்ற அட்வைஸ்கள் மானாவாரியாக வழங்கப்படும்............)
******************************
''நிலவு'' கடவுள் அதன் மேல் கால் வைக்கமுடியாது....இது விண்வெளி ஓடம் கண்டுபிடிக்கும் வரை இந்த கூற்று ''நம்பிக்கையாக'' இருந்தது....

(அப்புறம் மூடநம்பிக்கை என்று கண்டுபிடித்தவரைப் போல மற்றவருக்கும் வந்து விட்டது)

ஆம்ஸ்ட்ராங்க் குரூப் கால் வைக்கும் வரை முடியாத காரியமாய்த்தான் இருந்தது. இப்போது அது ஒரு கரடுமுரடான கோள்........மனதனால் முடிந்த காரியம்.......

பூமியை சுற்றித்தான் கோள்களின் இயக்கம் (பைபிளில் இருந்தவை).....கலிலியோ மெயப்பிக்கும் வரை இதுதான் உண்மை......டெலஸ்கோப் கண்டுபிடிக்கும் வரை, இந்த நம்பிக்கைதான்............இதை மாற்றுவது மனிதனால் முடியாத காரியமாய் இருந்துவந்தது.....


கலிலியோ டெலஸ்கோப் கண்டுபிடித்தபிறகு ''சூரியனை மையமாக கொண்டு தான் அனைத்து கோள்களும் இயங்குகின்றன....என்ற உண்மை மனிதனால் முடிந்த காரியமாய் மாறிவிட்டது''.

வானவெளியில் இருப்பது 9 கோள்கள் மட்டும் தான்.....

இன்னும் பல கோள்களும், 9 கோளகளுக்கு மேலும் இருக்கின்றன......என்பதும், கண்டுபிடிக்கும் வரை மனிதனால் முடியாத காரியம் தான்.

மூடநம்பிக்கையை உடைத்த கண்டுபிடிப்புகளைக் கொண்டு மேலும் மேலும் மூடநம்பிக்கைகளை வளர்ப்பதற்கு, பகுத்தறிவாளர் கண்டுபிடித்த மருத்துவத்தை எதற்கு படிக்கவேண்டும்? பயன்படுத்த வேண்டும்?

அதே மூடநம்பிக்கையிலேயே மூழ்கி இருக்கலாமே.....!

(அப்படி படித்த நவீன மருத்துவர்களே! பல பழமையான மக்கள் பழகி வந்த மருத்துவங்களை ''மூடநம்பிக்கை மருத்துவம்'' என்று கூறுகிறார்களே! ஏன்?)

(அப்படியானால் இது தந்திரமாகத்தான் இந்த வாசகம் மருத்துவர்களால் பயன்படுத்தப்படுகிறது.....)
**********************
நடிகர் கமல்ஹாசன்..... ''வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்'' என்னும் தமிழ் திரைப்படத்தில், ஒரு மருத்துவரை பார்த்து கேட்பாரே! (வசனம்)

''நீங்கள் என்ன? கடவுளுக்கு படிச்சீங்களா? இல்லை மருத்துவம் படிச்சீங்களா?''.................அப்புறம் என்ன? கடவுள் மனசு வச்சா...? பிழைக்கமுடியும்னு சொல்றீங்க..? ....அப்புறம் என்ன?
.............................
வாட் டு டூ.....?
.........................பில் போடறதுக்காகவா?
************************
இந்த வாசகம் எதற்காக என்றால்? மருத்துவர்............பிழைப்பதற்கு,

நான் (மருத்துவன்) பிழைப்பதற்கு, கண்டுபிடிப்புகளும், விஞ்ஞானமும், அது சார்ந்த படிப்பும் தேவை. (அதுவும் பகுத்தறிவாளர்கள் கண்டுபிடித்தவைகள்.....)

ஆனால் தப்பிப்பதற்கு, பிறரை ஏமாற்றுவதற்கு......(அதாவது மருத்துவரையே கடவுளாக நம்பும் சாமான்ய மனிதர்களை ஏமாற்றுவதற்கு......) இந்த வாசகங்கள் பயன்படுகிறது....

''எல்லாம் கடவுள் செயல்....?''' என்ற மூடநம்பிக்கை வாசகம் எதற்காக என்றால்? மருத்துவரின் தவறான சிகிச்சையினால் உயிரிழப்பு ஏற்பட்டால்......வெளியிடுவதற்கு.....!


(மக்களுக்கு....மருத்துவரின் தவறான சிகிச்சை! என்று எந்த இடத்திலும் காண்பிக்கப்படுவதில்லை...மருத்துவத் தொழில் புரிபவர்களுக்கும், தொழில் சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டுமே இதன் உள்குத்து தெரியும்?....

அந்த மருத்துவ அறிவு, அனைவருக்கும் இல்லாமையால், பயனாளிகள் அனைவரும், அதை அறிந்து கொண்டு, பயன்பெறுவது என்பதும் சாத்தியமுமில்லை....)

தோல்வியடைந்த மருத்துவத்துக்கு....இப்படிபட்ட வாசகம் தான் மருத்துவர், மருத்துவமனை தப்பிக்க ஏதுவான வழி!

(இவைகள்......உண்மை....)

ஏன்? மருத்துவத்துக்கான பணத்தையும் கடவுள்கிட்டேயே வாங்கிக்க வேண்டியது தானே! அதை மட்டும் மனிதனிடம் வாங்குவது ஏன்?

நம்பி said...

Blogger கிரி said...

//அவர் கூறுவதே உன் வாழ்க்கை உன் கையில் என்பது தான். நமது முயற்சிகளை கடமைகளை நாம் செய்ய வேண்டும் அதன் பிறகு நடப்பது நமது கையில் இல்லை என்பது தான்.

''உன் வாழ்க்கை உன் கையில்'' என்ற பகுத்தறிவு வாசகம் வந்து விட்ட பிறகு.....''பிறகு நடப்பது நமது கையில் இல்லை'' என்ற மூடநம்பிக்கை, அவநம்பிக்கை வாசகம் தேவையில்லை....இது இரண்டையும் ஒருவரே கூறுவது தான் மற்றவரின் தன்னம்பிக்கையை குழப்புவதாகவும், குலைப்பதாகவும் ஆகிறது.

இதைத்தான் மருத்துவரும் குழப்பித் தப்பிக்கிறார்.....

''உயிர் பிழைப்பது கடவுள் செயல்'' என் கையில் ஒன்றும் இல்லை'' என்று உதட்டை பிதுக்குகிறார்.....''காசு கொடுப்பதும் கடவுள் செயல்'' என்று பின்னாடி (முன்பே அல்ல) ''பில்'' கட்டும் பயனாளிகளும் உதட்டைப் பிதுக்கலாம்.....


***************************
Blogger கிரி said...
//இதில் மற்றவர்களை வஞ்சிக்க வேண்டாம் என்று கூறி இருக்கிறீர்கள். ரஜினி என்ன வஞ்சித்து விட்டார் என்று நிஜமாகவே எனக்கு புரியவில்லை. இதைக் கொஞ்சம் விளக்க முடியுமா! மனிதாபிமான வேண்டுகோள் வைக்கும் அளவிற்கு இதில் என்ன தவறாக இருக்கிறது.//

Blogger கிரி said...
//ஒருவருக்கு நம்பிக்கை இருக்கிறதோ அதில் இன்னொருவருக்கு நம்பிக்கை இல்லாமல் இருப்பது ஆச்சர்யம் இல்லை தானே. //

***********
ஒரு வருக்கு நம்பிக்கை இருக்கிறது அதை அனைவரும் பின்பற்ற சொல்லுவது போல் பரப்புரையாக, தனது பாப்புலாரிட்டி வாயிலாக செய்வது தான் மூடநம்பிக்கையாக மாறுகிறது...கேள்விக்குள்ளாக்கவும் படுகிறது.....அந்த நபர் மட்டும் அந்த நம்பிக்கையை அனுபவித்தால் வெளியேத் தெரியப்போவதில்லை......

''கட்அவுட்டுக்கு பாலபிஷேகம்'' செய்வது கூட முட்டாள்களின் நம்பிக்கைதான்!

அதை நடிகருக்கு கிடைத்த போதையாக நினைத்து விட்டால்.....இந்த மூடநம்பிக்கை விபரிதமாக போய், கொலை, காட்டுமிராண்டித்தனம் போன்ற நிகழ்வுகளும் கட்அவுட் போட்டிக்காக அரங்கேறுகின்றன....பல அரங்கேறியுள்ளன்...இன்னும் அரங்கேறிக்கொண்டுதான் வருகின்றன....

.பொது நோக்கோடு இருப்பவர்கள், மக்களின் பணத்தின் மூலம் வசதி வாய்ப்புடன் வாழ்பவர்கள் (.....ஒவ்வொரு திரைப்பட பார்வையாளரும்....... வாடிக்கையாளர்கள்......) இது தேவையற்றது என்று தான் பொது நோக்குடன் தடுக்கவேண்டும்.

பலர்.................. இப்படி தடுத்திருக்கிறார்கள்........இன்னமும் தடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.
*****************
இதே போன்ற பிராத்தனைகளைத்தான் கிருத்துவ மிஷன்கள், மதத்தை பரப்புவதற்காக (அல்லேலுயா, பெந்தகோஸ்தே....இன்னும் பல ) குறிப்பாக அரசு மருத்துவமனைகளில் மருத்துவத்தை பொய்யாக்கும் விதமாக மருத்துவமனையில் ''ஜெபக்'' கூட்டம், ''நோய் தீர்க்கும் பிரார்த்தனைக் கூட்டம்'' என்று பிரச்சாரம் செய்து கொண்டு வருகின்றன....

''உங்களுடைய நோய் இயேசுவின் நாமத்தை ஜெபித்தால், பிராத்தைனையால் தீர்ந்து விடும்.....என்று சட்டவிரோதமாக துண்டு பிரசுரங்களை விநியோகித்து அனைத்து மருத்துவமனைகளில் பிராத்தனை கூட்டங்களை ஏழை மக்களை, அப்பாவி மக்களை குறி வைத்து நடத்தி வருகின்றன.

பல குழந்தைகள் மருத்துவமனை கொடுக்கும் மருந்து மாத்திரைகளை கூட விழுங்காமல், இந்த பிராத்தனைகளை நம்பி மோசம் போகின்றன. இது பல அரசு மருத்துவமனைகளிலும் இன்றளவிலும் கண்கூடாக நடக்கும் உண்மைகள். (சென்று காணலாம்)

அதே போன்றதொரு நிகழ்வுதான் இந்த நிகழ்வுகளும்............

Arun Solayan said...

there is a power apart from human efforts. Even, human invent new things in science and engineering, the will power to to invent everything is originated from a "POWER" . You can call this as "INTELIGENCE". This inteligence can not generate all human being. The person,who have will POWER in his mind only succeed. That power is known as GOD. It embeded in to every one. One who handled in a right way would suceeded in his efforts. GOD is a HOPE to ever one to do every thing in right way. SO Please dont say there is no GOD, and by saying this you are going to ruin your younger generation. SO faith on your Will Power........