Search This Blog

24.7.11

பஞ்சாங்கம், சோதிடம் அறிவியல் அடிப்படையானதா?

பஞ்சாங்கம், சோதிடம் அறிவியல் அடிப்படையானது என்பது அப்பட்டமான பொய்!

1979ஆம் ஆண்டு தினமணி நாளிதழில், பழைய பஞ்சாங்கமும் வானவியல் பற்றிய நவீன ஆய்வுகளும் என்ற தொடர்கட்டுரையை திரு. ஏ.என்.சிவராமன் எழுதி வந்தார். அந்தக் கட்டுரையில் சூரியனும், கிரகங்களும் பூமியை சுற்றுவதாக நம்புவது அய்தீகம்.

பஞ்சாங்கம் என்பது அதிர்ஷ்டம் பார்ப்பதற்கு உருவானதல்ல! மேலை நாட்டினரின் அறிவியல் தகவலுக்கும், பஞ்சாங்கம் தரும் தகவலுக்கும் (சோதிடம் பஞ்சாங்கத்தை வைத்தே கணிக்கப்படுகிறது) வித்தியாசம் இருக்கும்! தோராயமான பல உண்மைகள் நமக்குத் தெரிந்தேயிருந்தன என்று குறிப்பிட்டிருக்கிறார்.

திரு. ஏ.என்.சிவராமன் கருத்துப்படி அறிவியல் தகவலுக்கும், பஞ்சாங்கத் தகவலுக்கும் வித்தியாசம் இருக்குமென்றால் பஞ்சாங்கக் கணக்கு தவறு என்றுதானே பொருள்!


பஞ்சாங்கம் தோராயமானது என்றால் சோதிடமும் தோராயமானதுதானே

பஞ்சாங்கம் அறிவியலுக்கு வித்தியாசப்பட்டது - தோராயமானது என்றால் அந்தப் பஞ்சாங்கத்தைக் கொண்டு கணிக்கப்படும் சோதிடம் எப்படி அறிவியல்

அடிப்படையானதும் - துல்லியமான கணக்குமாகும்!

சோதிடம் இன்றைய அறிவியலுக்கு வித்தியாசமானது ஒத்து வரக்கூடியது அல்ல என்பதுதானே உண்மை. தனி மனிதன் வாழ்வை சோதிடத்தின் மூலம் துல்லியமாகக் கூறமுடியும் என்பது ஏமாற்றுத்தானே! அப்படிப்பட்ட சோதிடத்தை நம்பிக் கொண்டு அதிலே அறிவியல் இருப்பதாக சோதிடரைக் தேடிக் கொண்டு அலைந்ததால் தமிழ்ச் சமுதாயம் முன்னேற்றம் காணமுடியுமா!

அறிவியலுக்கும் சோதிடத்திற்கும் பெருமளவு வித்தியாசம்

அறிவியல்படி உண்மை நிலவரப்படி சூரியன் மகர ராசியில் டிசம்பர் 22இல் பிரவேசித்து விடுகிறது. ஆனால் சோதிடக் கணக்குப்படி ஜனவரி 13 அல்லது 14இல் சூரியன் மகர ராசியில் பிரவேசிப்பதாகக் கணக்கிட்டு மகர சங்கராந்தி கொண்டாடுகிறார்கள். அறிவியலுக்கும் சோதிடத்திற்கும் 22 நாள்கள் வித்தியாசம் இருக்கின்றன. இந்தச் சோதிடம் எப்படித் துல்லியமானதாகவும் அறிவியலின்படியும் ஆனதாகும்!

நிரூபிக்கப்படுவது அறிவியல்

அறிவியல் என்பது நிலைநாட்டப்பெற்ற உண்மைகள். சோதிடம் நிலைநாட்டப்பெற்ற அறிவியலா? உண்மையானதா? உலக விஞ்ஞானிகள் ஒப்புக் கொண்டனரா!

கணித மேதை ராமானுஜம் தனது கணிதம் பற்றிய ஆய்வுகளை உலகுக்கு அறிவித்தார். உலக விஞ்ஞானிகளிடம் ஆய்வுகளை அளித்தார். நிரூபித்துக் காட்டினார். அவரது கணிதம் பற்றிய ஆய்வை உலக விஞ்ஞானிகள் ஏற்றுக் கொண்டதுடன் அவருக்குச் சிறந்த பட்டமும் வழங்கிச் சிறப்பித்தனர்.

மூலிகைப் பொருளிலிருந்து பெட்ரோல் தயாரிக்கலாம் என்ற இராமர்பிள்ளையால் அதை விஞ்ஞானிகளின் மத்தியில் செய்து காட்டி நிரூபிக்க முடியவில்லை. விஞ்ஞானிகள் அவரின் ஆய்வை ஏற்றுக் கொள்ளவில்லை!

எனவே நிரூபிக்கப்பட்டதைத் தான் உலக விஞ்ஞானிகள் ஏற்றுக் கொள்வார்கள். நிரூபிக்கப்படாததை விஞ்ஞானிகள் ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள்.

சோதிடம் அறிவியல் அடிப்படையானது என்று இதுவரை நிரூபித்துக்காட்டியதில்லை. சோதிடர்களால் நிரூபிக்கவும் முடியாது. அவ்வளவு தவறுகள் சோதிடத்தில் இருக்கின்றன. சூரியனை ஒரு கிரகமென்றும், அது ஒரே இடத்தில் நிலையாக இருக்கிற பூமியைச் சுற்றி வருவதாகவும் சோதிடம் கூறுகிறது. இந்த அடிப்படையில் கணிக்கப்படும் சோதிடம் எப்படி அறிவியல் பூர்வமானது என்று கூறமுடியும்.

சூரியன் ஒரு கிரகமல்ல, அது அண்டத்தில் ஒரு நட்சத்திரம். நொடிக்கு 60 கோடிடன் ஆற்றலை வெளியிடும் பேராற்றல் மிக்க சூரியனை, வறண்டு போன, கடும்பனி மூடிய கிரகங்களுடன் சேர்த்து சூரியனை ஒரு கிரகமென்று சோதிடம் குறிப்பிடுவது மிகப்பெரிய தவறு!

வானவெளியிலுள்ள புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய 8 கிரகங்களைத் தான் இன்றைய விஞ்ஞானிகள் ஏற்றுக் கொண்டிருக்கின்றனர். ஆனால் சோதிடம் எழுதப் பெற்ற அக்காலத்தில் யுரேனஸ், நெப்டியூன் கிரகங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. அக்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டு ஒப்புக் கொள்ளப்பட்டிருந்த கிரகங்கள் 6 மட்டுமே!

ராகு, கேது என்பது கிரகமே அல்ல! அதையும் சோதிடத்தில் கிரகமென்று சேர்த்துக் கொண்டார்கள். கிரேக்க நாட்டு வானவியல் கருத்து அது.

சூரியனிலிருந்து கிரகங்களின் வரிசை புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி என்று இருப்பது கூடத் தெரியாமல் சோதிடத்தில் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி என்று வரிசைப்படுத்தியிருக்கின்றனர். கிரகங்களின் வரிசையே தவறாக இருக்கும் போது, அந்த அடிப்படையில் கணிக்கப்படும் சோதிடம் தவறானதுதானே! அது அறிவியல் அடிப்படை ஆகுமா!

ராசி வட்டத்திலும் சோதிடம் தவறாக கணக்கிடப்படுவதாக வானவியல் விஞ்ஞானி. எஸ்.சுந்தரம் தான் எழுதிய நூலில் எடுத்துக்காட்டியிருக்கிறார். வானவியல் விஞ்ஞானத்திலிருந்து சோதிடம் விலகி விட்டது என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

அறிவியல்படி கிரகங்களுக்கு ஈர்ப்புவிசை கொஞ்ச தூரத்திற்கே உண்டு. ஈர்ப்பு விசையும் பூமியை எட்டுகிற அளவிற்கு கிடையாது! சில குறிப்பிட்ட தூரத்திற்கே ஈர்ப்பு விசை உண்டு! பூமியின் ஈர்ப்பு விசை 350 கிலோ மீட்டர் உயரத்தில் வலுவிழந்து இருப்பதால் விண்வெளி வீரர்கள் மிதந்தபடி இருக்கிறார்கள். ஆனால் சோதிடர்கள் கிரகங்களின் ஆற்றலால் (சக்தி) பூமியில் தனி மனிதனின் வாழ்வு நிருணயிக்கப்படுவதாகக் கூறுகின்றனர். அறிவியல் அறிஞர்களின் கருத்துகளை நம்பாமல் சோதிடர்களின் கருத்தை நம்புவதுதான் வேடிக்கையாக இருக்கிறது.

பூமியின் துணைக்கிரகம் சந்திரனை சோதிடத்தில் சேர்த்துக் கொண்டவர்கள் மற்றக் கிரகங்களிலுள்ள துணைக் கிரகங்களைச் சோதிடத்தில் ஏற்றுக் கொள்ளவில்லை! அக்காலத்தில் தெரிந்திருப்பதைக் கொண்டு சோதிடம் எழுதப்பட்டதே தவிர, அறிவியல் தெரிந்து எழுதப்பட்டதல்ல!

சோதிடத்தில் கிரகங்கள் வரிசையில் முரண்பாடு, ராசி வட்டத்தில் தவறு, கிரகங்களுக்கு ஏதோஆற்றல் இருப்பதாகக் கூறுவது தவறு, இத்தனை தவறுகளை சோதிடத்தில் வைத்துக் கொண்டு பஞ்சாங்கமும், சோதிடமும் அறிவியல் அடிப்படையானது என்று சொல்ல எப்படித் துணிந்தார்களோ.

--------------------------தி.பொன்னுசாமி எழுதிய சோதிட மறுப்பும், வானவியல் சிறப்பும் என்ற நூலிலிருந்து

4 comments:

Anonymous said...

நல்ல பதிவு...வாழ்த்துக்கள்...

நாட்டாமை said...

இந்தியாவின் சோதிடம் தான் இன்றைய உலகளாவிய வானியல் அறிவியலுக்கு அடிப்படை. இந்த உண்மை அறிவியலும் கணக்கும் மிக நன்றாக தெரிந்தவர்களுக்கு மட்டும்தான் புரியும் பாமரர்களுக்குப் புரியாது.முயற்சி செய்யுங்கள்
http://chandroosblog.blogspot.com/search/label/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D

நம்பி said...

//நாட்டாமை said...

இந்தியாவின் சோதிடம் தான் இன்றைய உலகளாவிய வானியல் அறிவியலுக்கு அடிப்படை. இந்த உண்மை அறிவியலும் கணக்கும் மிக நன்றாக தெரிந்தவர்களுக்கு மட்டும்தான் புரியும் பாமரர்களுக்குப் புரியாது.முயற்சி செய்யுங்கள்
http://chandroosblog.blogspot.com/search/label/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D
July 28, 2011 8:42 AM //
இது பாமரர்களுக்கு புரியாது அப்படியென்றால் இதை முதன் முதலில் கண்டுபிடித்தவன் எவன்? அவன் ஒரு பாமரன் தானே?

திருட்டுத்தனம் இப்படி பணிணினால் எவனாலும் கண்டுபிடிக்கமுடியாது?

மீறி எவனாவது? இதன் ஏமாற்றுத்தனத்தை கண்டுபிடித்தால், அவர்களிடம் இந்த மாதிரி "பாமரர்களுக்கு புரியாது" என்று சொல்லுங்கள்? என்று அதையும் அவனே எழுதிவைத்து விட்டு சென்றானா?

திருட்டுத்தனத்தை உருவாக்க அவனால் முடிந்த போது திருட்டுத்தனத்தை கண்டுபிடிக்க அதே போன்று இன்னொரு மனிதனால் முடியாதா? என்ன?

அலெக்சாண்டர் கிராகம்பெல் கண்டுபிடித்த கம்பிவடத் தொலைபேசியை மாதிரியாக வைத்து, இன்று விதவிதமாக கைப்பேசிகளை உருவாக்கத் தெரிந்த மனிதனுக்கு இந்த "பிக்காரி பிசின்" ஏமாற்று வித்தையை கண்டுபிடிப்பதா? கடினம்.

கோள்களே "ஒன்பது" மட்டும் தான் என்று கூறிவந்த, "பார்ப்பன" பஞ்சாங்கத்தை உடைத்தெரிந்து, இன்று அதற்கு மேலும் கோள்கள் உள்ளன, அவை எப்படி? இயங்குகின்றன, எப்படி சூரியனை சுற்றி வருகின்றன என்பதையும் தெள்ளத்தெளிவாக ஆதாரத்துடன் கூறத்தெரிந்த மனிதனுக்கு இதை கண்டுபிடிப்பதா கடினம்?

மனிதன் கிரகம் விட்டு கிரகம் தாவி அனைத்தையும் கண்டுபிடிக்க புறப்பட்டு விட்டான். இனிமேலாவது இந்த புரிடாக்களை மூட்டைக்கட்டி ஓடிவிட்டால் நல்லது. இல்லையென்றால் காலம் ஒடவைத்துவிடும். அப்புறம் "நாட்டாமை"த்தனம் எல்லாம் மக்களிடம் செல்லபடி ஆகாது

ஜோதிடத்தால் என்ன நன்மை? இதை வைத்து பிழைப்பு நடத்துபவனைத் தவிர! வேறு எவனுக்கும் இது பிரயோஜனம் இல்லை!.

nakkeeran said...

அறிவியலுக்கும் சோதிடத்திற்கும் பெருமளவு வித்தியாசம்

அறிவியல்படி உண்மை நிலவரப்படி சூரியன் மகர ராசியில் டிசம்பர் 22இல் பிரவேசித்து விடுகிறது. ஆனால் சோதிடக் கணக்குப்படி ஜனவரி 13 அல்லது 14இல் சூரியன் மகர ராசியில் பிரவேசிப்பதாகக் கணக்கிட்டு மகர சங்கராந்தி கொண்டாடுகிறார்கள். அறிவியலுக்கும் சோதிடத்திற்கும் 22 நாள்கள் வித்தியாசம் இருக்கின்றன. இந்தச் சோதிடம் எப்படித் துல்லியமானதாகவும் அறிவியலின்படியும் ஆனதாகும்!

அப்படியில்லை. சூரியன் மகரராசியில்
சனவரி 14 அல்லது 15 இல் புகுகிறது. வானியலின் படி சனவரி 19. காரணம் சூரியனின் பின்னேகல் (Precession of Equinoxes). Vernal Equinox takes place on March 20/21, but the actual sun is in Piscess 7 degrees. Again it is the precession of equinoxes the reason. Again the sun enters Aeries on April 13/14 (Astronomically on April 19th). Astrology says spring commences on April 13/14 which is wrong. It starts on March 20/21!