Search This Blog

18.7.11

அண்ணா சொன்ன கடவுளர் கதைகள்!



மதுரை சோமநாத பெருமானின் ஒரு பார்ப்பன பக்தன் காமுகப்பட்டு, கருத்திழந்து தொட்டிலிலே வளர்ந்தவளை கட்டிலுக்கிழுத்தான்.

நடக்க கூடாத செயல்! ஆனால் நடந்திருக்கிறது.

தாய் அவனைப் பார்த்து பாவி அன்னையையா இந்த அக்கிரமம் செய்தாய் என்று கேட்க அவன் அப்பன் ஒருவன் இருப்பதால் அல்லவோ நீ எனக்கு அன்னையானாய் அவன் இல்லாவிட்டால்...!

ஒரு பெண்தானே என எண்ணி அவளை வெட்டி வீழ்த்தினான். இரு பாதகம் செய்த அவன் மருங்கி கொண்டு மதுரைக்கு வந்துஅப்பனிடம் அடைக்கலம் புகுந்தான் அலறினான்

அப்போது சோம பெருமானும் மீனாட்சி அம்மையும் சொக்கட்டான் விளையாடிக் கொண்டிருக்க அவன் குரல் கேட்ட பெருமாள் ஆட்டத்தை நிறுத்த உடனே அம்மையைப் பார்த்து ஏன் ஆடவில்லை என்று கேட்க கருத்தை விளக்க அந்த பார்ப்பானுக்கா அருள்புரிவது என்று மீனாட்சி சினங்க உமயவளே உற்றுக் கேள் எத்தகய மகா பாதகம் என்றாலும் பிராமணன் என்றால் அருள்புரியத்தான் வேண்டும் என்று கூறினானாம்.
பிறகு அவன் முக்தி (மோட்சம்) பெற்றானாம்.

அக்கினியின் ஆசை .

ஒரு காலத்தில் சப்தரிஷிகள் யாகம் செய்தனராம். அந்த யாகத்திற்கு அவிர்ப்பாகம் வாங்கச் சென்ற அக்கினி பகவான் அந்த ஏழு ரிஷி பத்தினிகள் மீதும் காமமுற்றானாம்.

இதனை வெட்கத்தை விட்டு தன் மனைவியிடம் சொன்னானாம். ஆண்டவனான அக்கினி பகவான் தன் மனைவியிடம் அதற்கு ஏற்பாடுகளையும் செய்யச் சொன்னானாம்.

அவன் மனைவியும் சப்தரிஷிகளில் ஆறு பேர்களின் மனைவியைப் போல உருவெடுத்து தன் கணவனனின் காமத்தைத் தனித்தாளாம்.

ஆனால் ஏழாவது முனிவரின் மனைவியான அருந்ததியைப் போல மட்டும் உருவெடுக்க முடியவில்லையாம் அதற்குக் காரணம் அருந்ததி ஒரு ஆதி திராவிடப் பெண்ணாம்.

------------- நூல் :-பேரறிஞர் அண்ணா சொன்ன குட்டிக் கதைகள் 100

0 comments: