Search This Blog

15.7.11

கதர்ச்சட்டைக்குள் கறுப்புச்சட்டை காமராசர்


பச்சைத் தமிழர் என்றும் கல்வி வள்ளல் என்றும், தமிழர் களின் ரட்சகர் என்றும் தந்தை பெரியார் அவர்களால் புகழப் பெற்ற காமராசர் அவர்களின் 109ஆம் ஆண்டு பிறந்த பெரு மைக்குரிய நாள் இந்நாள் (1903).

நல்ல பெயர் வைக்க வேண் டுமா? என்று கேட்டு காமராஜ் என்று குழந்தைகளுக்குப் பெயர் சூட்டினார் தந்தை பெரியார் என்றால், இதற்கு மேல் என்ன சொல்ல!

வைக்கத்தில் தந்தை பெரியார் தீண்டாமையை எதிர்த்து சத்தியாக்கிரகம் நடத்திய போது அதில் தொண்டராக இருந்த வரலாற்றுப் பெருமையும் காமராசருக்கு உண்டு.

பார்ப்பனர் - பார்ப்பனர் அல்லாதார் போராட்டம் தமிழ் நாட்டுக் காங்கிரசுக்குள்ளும் இருந்ததுண்டு. ஒரு பக்கம் காமராசர் என்றால் - இன் னொரு பக்கம் ராஜாஜி - அவற்றையெல்லாம் தாண்டி எதிர் நீச்சல் போட்டுதான் காமராசர் பெரு நிலைக்கு வந்தார்.


அதனால்தான் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அழகுறப் படம் பிடித்தார்.

பெருநிலையில் இருக்கின்றீர்
காமராசப் பெருந்தகையீர்!
உம் பெருமை அவர்கள் கண்ணில்
கருவேள் முள் போல்
உறுத்தும் - நீவிர்
கடுகளவும் அஞ்ச வேண்டாம்
என்றார் புரட்சிக் கவிஞர்.

ராஜாஜி அவர்கள் தமிழ் நாட்டில் இரு முறை முதல்அமைச்சராக வந்தபோதும் அவர் செய்ததெல்லாம் பள்ளிக்கூடங் களை இழுத்து மூடியதுதான். சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காது என்பதுதானே மனு தர்மம்?

1952இல் ராஜாஜி அவர்கள் 6000 பள்ளிகளை இழுத்து மூடி குலக் கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தியபோது தந்தை பெரியார் புயலாய்ச் சீறி எழந்தார். மக்கள் புரட்சியின் முன் ராஜாஜி பதவியை விட்டு ஓடினார்.

அந்த நேரத்தில் அடுத்த முதல் அமைச்சர் யார் என்ற கேள்வி எழுந்தது. அப்பொழுது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்த காமராசர் முதல் அமைச்சராக வர வேண்டும் என்ற ஒரு கருத்து மலர்ந்தது.

இதற்கான முக்கியத் தலை வர்களின் கூட்டம் சென்னை அரசினர்த் தோட்டத்தில் டாக்டர் வரதராசலு நாயுடு அவர்களின் வீட்டில் நடைபெற்றது. சிதம் பரத்தில் இருந்த தந்தை பெரியார் அவர்களை அவசரமாக அழைத்தார் நாயுடு. நிகழ்ச்சியை ஒத்தி வைத்து விரைந்தார் தந்தை பெரியார்.

முதல் அமைச்சர் பொறுப்பு ஏற்க காமராசர் தயங்கினார். தந்தை பெரியார் தைரியம் கொடுத்தார் உங்களை எதிர்க்க வேண்டும் என்றால் நான் தானே எதிர்க்க வேண்டும்? நானே ஆதரிக்கிறேன் என்கிற போது உங்களுக்கு ஏன் தயக் கம்? என்றார் -அதன்பின்தான் காமராசர் சம்மதித்தார். காமராசரை எதிர்த்து ஆச்சாரியாரின் சீடர் சி. சுப்பிரமணியம் போட்டியிட்டார். காமராசர் 93 வாக்குளையும், சி.சு. 41 வாக்குகளையும் பெற்றனர். காமராசர் முதல் அமைச்சர் ஆனார். வந்தவுடன் முதல் வேலையாக ராஜாஜி கொண்டு வந்த குலக் கல்வித் திட்டத்தை ஒழிந்தார். அவர் மூடிய பள்ளி களைத் திறந்ததுடன் மேலும் 12 ஆயிரம் பள்ளிகளைத் திறந்தார்.

இதுதான் பார்ப்பனர் களுக்கு ஆத்திரம். கதர்ச் சட்டைக்குள் கறுப்புச் சட்டை என்றும், பெரிய பதவி சின்ன புத்தி என்றும் கல்கி கூட்டம் கார்ட்டூன் போட்டு கிண்டல் செய்தும், இழித்தும் தம் ஆத்தி ரத்தைக் கொட்டித் தீர்த்தது.

காமராசரைக் குறிப்பிட்டு கறுப்புக் காக்கையைக் கல்லால் அடிக்க வேண்டும் என்று ராஜாஜி சொன்னார் என்றால் - பார்ப்பனர்களின் ஆற்றாமை யைத் தெரிந்து கொள்ளலாமே!


இன்றைக்குத் தமிழர்கள் கல்வியில் தேர்ந்து உத்தியோகப் பீடங்களை அனுபவிக்கின்றார்கள் என்றால் அதற்குக் காரணம் பெரியார்; காரியம் - கர்மவீரர் காமராஜர்! வாழ்க இப்பெருமக்கள்!

------------ மயிலாடன் அவர்கள் 15-7-2011 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

2 comments:

தமிழ் ஓவியா said...

இராமாயணம் பற்றி மறைமலை அடிகள்
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஒரு குரங்கு கடலைத் தாண்டிற் றென்றாலும் அஃது ஒரு மலையைப் பெயர்த்துக் கொணர்ந்ததென்றாலும், ஒருவன் பத்துத் தலைகளும், இருபது கைகளும் உடையவனாயிருந்தானென் றாலும், ஒருத்தியை வேறொருவன் சிறையாக எடுத்துச் சென்றதால் அவன் இருந்த நிலத்தைப் பெயர்த்தெடுத்துச் சென்றான் என்றாலும், ஒருவன் தன் கையிலிருந்த வட்டத்தைச் சுற்றி யெறிந்து பகலவனை மறைத்தான் என்றாலும் இன்னும் இவை போல்வன . . . பிறவும் எல்லாம் உலக இயற்கையில் எவரும் எங்கும் காணாதவையாகும். ஆகையால் இன்னோரன்ன பொருந்தாப் புனைவுரைகளை ஒரு கதையிலாதல் ஒரு நாடத்திலாதல் இயைந்துரைத்தல் நல்லிசைப் புலமைக்கு ஒரு சிறிதும் ஒவ்வாது. ஏனென்றால் இயற்கைக்கு மாறுபட்ட கட்டுக் கதைகளைக் கூறும் நூல்களைப் பகுத்தறிவுடையவர் கற்பா ராயின் அவர்க்கு அவை இன்பம் பயவாவாய் வெறுப்பினையே விளைக் கும்.

- மறைமலையடிகளின் கோகிலாம்பாள் கடிதங்கள் ஆக. 1931
தமிழ்க் கடல் மறைமலை அடிகளார் பிறந்த நாள் இந்நாள் (1876)

.

தமிழ் ஓவியா said...

காந்தியார் பிறப்பும் - காமராசர் மறைவும்

இன்று காந்தியார் அவர்களின் பிறந்த நாள் (1869). பச்சைத் தமிழர் காமராசர் அவர்களின் நினைவு நாள் (1975).

இந்த இரு தலைவர்களும் நாட்டு மக்களால் நன்கு மதிக்கப்பட்டவர்கள்; பொதுத் தொண்டில் அப்பழுக்கற்ற மாமணிகளாக ஒளி வீசியவர்கள்.

இவர்களை இந்நாளில் நினைப்பது என்றால், மாலை மரியாதைகள் மட்டுமல்ல - மனிதகுலம் சிந்திக்கவேண் டிய கூறுகள்பற்றி சிந்திப்பதுதான் சீலமானதாகும்.

காந்தியாரின் பிறந்த நாள் சர்வதேச அகிம்சை தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. காந்தியார் என்று நினைக்கும்பொழுது, அவரின் இந்த அகிம்சை அனை வருக்கும் நினைவிற்கு வருவது இயல்பானதுதான். அதேநேரத்தில், அந்த அகிம்சா மூர்த்தி வன்முறையால் தான் மறைய நேரிட்டது என்பது கவனிக்கத்தக்க சான்றாகும். மத நம்பிக்கையாளரான காந்தியார் மதவாத நம்பிக்கையாளர்களால் படுகொலை செய்யப்பட்டார்.

காந்தியாரின் கடவுள் நம்பிக்கையோ, மத நம்பிக்கையோ அவரைக் காப்பாற்றவில்லை என்பது ஒரு சிந்தனை. மத நம்பிக்கையாளர்கள் மனிதநேயக் காரர்கள் அல்லர்; நன்னெறிகளை நம்பிக் கடைப்பிடிப் பவர்களும் அல்லர் என்பதற்கு எடுத்துக்காட்டு - உன்னதமான ஒரு மாமனிதரை திட்டமிட்டுக் கொலை செய்ததாகும்.

நான் ஒரு சனாதன இந்து என்று காந்தியார் அவர்கள் மிக வெளிப்படையாகச் சொல்லியிருந்தும், நம்பியிருந்தும், அந்த இந்துவை இந்துத்துவா சக்திகள் விட்டு வைக்கவில்லை.

இந்துத்துவா என்பது இந்துக்களை ஒற்றுமைப் படுத்தக் கூடியது - இந்து மக்களுக்குப் பாதுகாப் பானது என்பது கடைந்தெடுத்த பொய் என்பது தெற்றென விளங்கிவிட்டது. ஒரு சனாதன இந்துவை - ஒரு சனாதன இந்துக் கும்பலே கொன்று முடித்து, இனிப்பு வழங்கியதன்மூலம் இந்துக்கள் என்று கருதிக் கொண்டிருப்பவர்கள் வேறு கோணத்தில் சிந்திக்கக் கடமைப்பட்டவர்கள் ஆகிவிடவில்லையா?

இந்துவாக உள்ள ஒருவர் நியாயவாதியாக, பொதுத்தன்மை வாய்ந்தவராக இருக்க முடியாது. அப்படியிருந்தால், அத்தகையவரை இந்துத்துவா காவிகள் காவு கொடுத்துவிடுவார்கள் என்பதும் காந்தியார் கொலை நாட்டு மக்களுக்குச் சொல்லித் தரும் சொக்கத்தங்கமான பாடமாகும்.

காந்தி இந்தியாவை மதச் சார்பற்ற நாடு என்று சொன்னது 7.12.1947 இல்; காந்தி கொல்லப்பட்டது 30.1.1948 இல்; அதாவது நம் நாடு மதச் சார்பற்றது என்று சொன்ன 53 ஆம் நாள் கொல்லப்பட்டார்; அதாவது சுதந்திரம் பெற்ற 165 ஆம் நாள் கொல்லப்பட்டார் காந்தி. இந்தியா சுதந்திரம் பெற்றவுடன் பார்ப்பனர்களின் நடத்தையைப் பார்த்து அவர் சுயமரியாதைக்காரராகி விட்டார். அவர் கொல்லப்படாவிட்டால், இந்தியா சுயமரியாதைக் கொள்கை நாடாகிவிடும் என்று பயந்தே அவரைக் கொன்றார்கள் என்று கூறியுள்ளார் தந்தை பெரியார் (விடுதலை, 13.1.1965).

இந்துத்துவா என்று சொல்லும்பொழுது இந்து மதத்தின் கொள்கைகளில் நம்பிக்கை உள்ளவர்கள் என்பதையும்விட, வருணாசிரமத் தன்மையில் முதல் இடத்தில் உரிமைகளை அனுபவிக்கக் கூடிய பார்ப் பனர்களின் நலனைச் சார்ந்ததைத்தான் முக்கியமாகக் கருதப்படுகிறது.

பார்ப்பனர்களைப்பற்றி காந்தியார் தெளிவாகக் கணிக்கத் தொடங்கினார்.

பிராமணர், க்ஷத்திரியர், வைசியர் ஆகிய மூன்று பிரிவினரும் ஜாதி இந்துக்களானால், அவர்கள் சிறுபான்மைக் கட்சியினர் ஆவார்கள். பிரிட்டீஷார் வெளியேறி, இந்தியாவில் சுதந்திரத்தை நிலைநாட்டிய பின், இருந்த இடம் தெரியாமல் அவர்கள் அழிந்து போக வேண்டியதுதான் (திராவிட நாடு, 12.2.1947) காந்தியாரின் இந்தக் கணக்குக்குப் பிறகும், பார்ப்பன சக்திகள் விட்டு வைப்பார்களா? பார்ப்பனர்களின் கடந்தகால வரலாற்றை நன்கு உணர்ந்தவர்கள் இதனை இம்மியளவு அய்யமின்றி உணர்ந்து கொள்வார்களே!

அழிந்து போவார்கள் என்று சாபமிட்டவரை அழித்துவிட்டனர் பார்ப்பனர்கள்.

பச்சைத் தமிழர் காமராசரைப் பொறுத்தவரை - அவரும் மதவாத சக்திகளால் கொலை செய்யப்பட வேண்டியவராகவே இருந்தார். குறிப்பாக பசுவதைத் தடுப்பு என்ற பெயரால், பட்டப் பகலில் இந்தியாவின் தலைநகரமான டில்லியிலே காந்தியாரைக் கொன்ற கா(லி)விக் கும்பல் கொலை செய்ய எத்தனித்ததா இல்லையா? (7.11.1966).

இந்தக் கொலைக் கும்பலில் ஆர்.எஸ்.எஸ்., ஜன சங்கம், சங்கராச்சாரியார், சாதுக்கள் இடம்பெற்றி ருந்தனரே!

காந்தியாரின் பிறந்த நாள் - காமராசரின் மறைவு நாள் தரும் சிந்தனை என்ன?

மதவெறியை மாய்ப்போம் - மனிதநேயம் காப்போம்! என்றார் தமிழர் தலைவர் கி. வீரமணி.

“விடுதலை” தலையங்கம் 2-9-2010