Search This Blog

22.7.11

ஜாதியை ஒழிக்க கடவுளை ஒழி!




நான் என்ன சொல்லுகிறேன் என்றால், ”நம் கடவுள் நம்பிக்கை என்பதே கடைந்தெடுத்த முட்டாளின் அறிகுறி”யாக ஆகிவிட்டது. காரணம் என்னவென்றால், ”கடவுள் என்றால் ஆராய்ச்சியே செய்யக்கூடாது”, நம்பவேண்டும்”, அப்படியே ஒப்புக்கொள்ள வேண்டும்” என்பதாகிவிட்டது.

அதுமாத்திரமல்ல, அப்படிப்பட்ட கடவுளைப்பற்றி, ”கடவுள் என்றால் என்ன? அவர் எப்படி இருப்பார்? எதற்காக இருக்கிறார்? ஏன் இருக்கிறார்? எதுமுதல் இருக்கிறார்? அவர் சக்தி எவ்வளவு? நம் சக்தி எவ்வளவு? அவரால் ஏற்பட்டது எது? நம்மால் ஏற்பட்டது எது? எது எதை அவருக்கு விட்டுவிடலாம்? எது எது நாம் செய்ய வேண்டியது? அவரில்லாமல் ஏதாவது காரியம் நடக்குமா? எதையாவது செய்யக் கருதலாமா?” என்பது போன்ற (இப்படிப்பட்ட) நூற்றுக்கணக்கான விஷயங்களில் ஒரு விஷயத்தைக்கூட தெளிவாகத் தெரிந்து கொண்டவன் எவனும் கடவுள் நம்பிக்கைக்காரர்களில் இல்லை. இல்லை என்றால் அறவே இல்லை என்று சவால் விட்டுக் கூறுவேன்.

நான் இதை 60, 70 ஆண்டாகச் சிந்தித்து, சிந்தித்து அறிவில், ஆராய்ச்சி அனுபவத்தில் கண்டுகொண்ட உறுதியினால் கூறுகிறேன். இவ்விஷயங்களில் மக்களுக்கு விஷயம் தெரியாது என்று சொல்லுவதற்கும் இல்லாமல் தெரிந்து கொண்டிருப்பது குழப்பமானதும், இரட்டை மனப்பான்மை கொண்டதுமாக இருப்பதால், மனிதனுக்கு இவ்விஷயத்தில் அறிவு பெற இஷ்டமில்லாமலே போய்விட்டது.

தோழர்களே! நான் சொல்லுகிறேன், கடவுள் நம்பிக்கைக்காரன் ஒருவன்
”நான் ஜாதியை ஒழிக்கப் பாடுபடுகிறேன்” என்றால் அதில் அறிவுடைமையோ, உண்மையோ இருக்க முடியுமா? கடவுள் இல்லாமல் எப்படி ஜாதி வந்தது? மத நம்பிக்கைக்காரன் ஒருவன் ”நான் ஜாதியை ஒழிக்கப் பாடுபடுகிறேன்” என்று சொல்ல முடியுமா? மதமில்லாமல் எப்படி ஜாதி வந்தது? சாஸ்திர நம்பிக்கைக்காரன் ஒருவன் ”நான் ஜாதியை ஒழிக்கப்பாடுபடுகிறேன்” என்று சொல்ல முடியுமா? சாஸ்திரம் இல்லாமல் எப்படி ஜாதி வந்தது?

ஆகவே, இந்த ஜாதி ஒழிப்புக் காரியத்தில் கடவுள், மத, சாஸ்திர நம்பிக்கைக்காரர்கள் இருந்தால், அவர்கள் மரியாதையாய் வெளியேறி விடுவது நாணயமாகும். இதனாலேதான் ”ஜாதி கெடுதி, ஜாதி சுடாது” என்று சொல்லத்தான் சில ”பெரியவர்கள்” முன் வந்தார்களே ஒழிய, அதை ஒழிக்கப் பாடுபட இன்றுவரை எவரும் முன்வரவில்லை.

ஆகவே, தோழர்களே! உங்களுக்கு நான் சொல்லுகிறேன், வணக்கமாகச் சொல்லுகிறேன். நீங்கள் ஜாதியை ஒழிக்கப் பிரியப்பட்டீர்களேயானால் இந்த இடத்தில் உங்கள் கடவுளையும், மதத்தையும், சாஸ்திரத்தையும் ஒழித்துக்கட்டுங்கள்! ஒழித்துவிட்டோம் என்று சங்கநாதம் செய்யுங்கள்! கடவுள், மதம், சாஸ்திரம் ஆகிய மூன்றும் ஒழிந்த இடத்தில்தான் ஜாதி மறையும், ஜாதி ஒழியும். மற்ற இடம் எப்படிப்பட்டதானாலும் அங்கு ஜாதி சாகாது.

ஆகவே, ஜாதி ஒழியவேண்டும் என்பவர்கள் முதலில் நாத்திகன் ஆகுங்கள். நாத்திகம் என்பது அறிவு, ஆராய்ச்சி, அனுபவம் கொண்டு தெளிவடைவது தான். இத்தெளிவு அடைந்த இடத்தில் இம்மூன்றும் (கடவுள், மதம், சாஸ்திரம்) தலைகாட்டாது.

ஆகையால், இப்படிப்பட்ட நீங்கள் நாத்திகர் என்று சொல்லிக் கொண்டாலும் ஒன்றுதான், பகுத்தறிவுவாதி என்று சொல்லிக்கொண்டாலும் ஒன்றுதான். தோழர்களே! ஜாதி ஒழிப்புக்காரர்கள் வீட்டில் உருவச் சின்னங்களோ, மதக் குறியோ, சாஸ்திர சம்பிரதாய நடப்போ இருக்கக் கூடாது; கண்டிப்பாய் இருக்கக்கூடாது.

---------------12.08.1962 அன்று பாண்டிச்சேரியில் நடைபெற்ற ஜாதி ஒழிப்பு மாநாட்டில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரையின் ஒரு பகுதி. ”விடுதலை”- 17.08.1962



5 comments:

Anonymous said...

நாத்திகர்களும் ஜாதிக்குள்தான் பெண் எடுத்துப் பெண் கொடுக்கிறார்கள்.

ஜாதிமுறைகள் ஆணிவேராக இந்து மதத்தின் வருணக்கொள்கையிலிருந்து முளைத்து
விருச்சமாக விரிந்தன என்பது உண்மையென்றாலும், அவை அம்மதத்திற்கும் அப்பால் விரிந்து இந்துமதம் என்ற வேரில்லாமல் வளர்ந்து இன்று நிற்கின்றன. நிற்பன.

எனவேதான், இந்து மதத்திலிருந்து விலகி பிறமதங்களுக்குத் தாவிய தமிழர்கள் ஜாதிவாரியாக வரன் தேடித் தத்தம் ஜாதிக்குள்ளேயே அடைந்து வாழ்கிறார்கள்.

சாத்திரங்கள் தந்த ஜாதிகளைப் பிற மதங்களுக்கும் எடுத்துச் சென்றவர்களுக்கு,
எப்படி "நீ நாத்திகனாகி விடு. சாத்திரங்கள் ஒழிந்துவிடும். ஜாதிகளும் போய்விடும்" என்று சொல்வது ?

பெரியாரின் காலத்திலேயே இது நடந்துதான் வந்தது: அதாவது இந்துமதத்திலிருந்து பிறமதங்களுக்குள் எகிறிக்குதித்த ஜாதிமுறைகள்.

பெரியார் கண்டும் காணாமல் இருந்தாரா? என்னால் நம்பமுடியவில்லை. என்னை விட தமிழ்சமூக வாழ்க்கை நன்குணர்ந்தவர் பெரியார் இல்லையா ?

ஆக, இந்து மத எதிர்ப்பா அன்றி, ஜாதி முறைகள் ஒழிப்பா பெரியாருக்கு ? என்பதே ஐயப்பாடு.

Anonymous said...

ஜாதிகள் என்பவை இன்று பலபரிமாணங்களையும் கரணிகளையும் மூலங்களையும் கொண்டு உருமாறிவிட்டன. அவை இப்போது தேவைகளாகப் பார்க்கப்படுகின்றன. நம் சமூகத்தில் குறுங்குழுக்கள் பலவேறு நெருக்கடுக்கடிக்குள்ளாகும் போது, அல்லது பிற குழுக்களால் ஆதிக்கம் செய்யப்பட்டு உரிமைகளை இழக்கும் அபாயனிலைக்குத் தள்ளப்படும்போது ஒன்று சேர்ந்து தங்களைக்காப்பாற்றிக்கொள்ளவேண்டியதாகிறது.

கொஞ்சம் இங்கிலீசில் எழுதறேன். மொழி பெயர்த்துக்கொள்ளவும்.

Anonymous said...

The caste divisions, which came from Hindu religion, hav lost their original religious reasons, or lost their religious roots today. (There may be a few Hindu paarppana vedic idiots or some upper caste idiots who believe in the old theory, but lets forget them as they r negilible)

Now, the reasons r social, not religious. People of former castes hav to live together in order to protect themselves and their people from various pulls and pressures of society.

Scarce resources, Might is Right, power struggles through politics and money, etc make us huddle together for safety, like people huddling together in a danger zone when there s an aerial bombardment.

So, we come together. If we dont, we will b lost.

For fear that our people will b misled by people like u and periyar, we tell our people to believe in caste and live together in caste, ONLY FOR OUR SOCIAL WELFARE, FOR OUR RIGHTS, FOR THE FUTURE OF OUR CHILDREN.

That s why, castes have now passed into other religions also, although Jesus and Mohamed did not found their religions on varnasharadharama.

Social changes have come a long way. But u and periyar live in the past. It s not out of mental pervesrity that castes shd remain. But out of compelling social reasons.

Be4 calling for abolition of castes, ask urself:

WHY SHOULD THEY BE ABLOLISHED AT ALL?

நம்பி said...

//simmakkal said...

நாத்திகர்களும் ஜாதிக்குள்தான் பெண் எடுத்துப் பெண் கொடுக்கிறார்கள்.//

நாத்திகர் என்று வந்து விட்டாலே பெண் கொடுப்பது பெண் எடுப்பது என்ற பிற்போக்கு எண்ணங்கள் (வாசகங்களாக கூட) வராது.

(இதிலும் அப்பா அம்மா இருவரும் சம்பந்தப்பட்டு உள்ளனர் அவர்கள் இருவரும் நாத்திக்க கருத்துக்களில் ஒத்திருப்பவர்கள் என்ற நிலைப்பாடு இன்றளவும் குடும்பங்களில் இல்லை. )

இருமனம் இணையும் திருமணம் என்று தான் வரும்.

பெண்ணை யாருக்கு கொடுப்பது? யாரிடமிருந்து எடுப்பது...? இந்த வாசகங்கள் நாத்திக குடும்பங்களில் இருக்காது. (குடும்பத்தில் உள்ள அனைவரும் நாத்திகர்களாக இருந்தால்...)

இரு குடும்பங்கள் இணைகின்றன. இரு வேறு குடும்பங்கள் சொந்தமாகின்றன. இருமனங்கள் ஒன்றையொன்று விரும்புகின்றன என்பதாகத்தான் வரும்.

இருமனங்கள் எதை விரும்பவேண்டும் என்பதை ஒரு நாத்திகர் தீர்மானிக்க முடியாது. அல்லது எந்த ஒரு நாத்திகமல்லாதவரும் தீர்மானிக்க முடியாது. அந்த திருமணத்தின் முக்கியஸ்தர்களான மணமகள், மணமகன் முடிவெடுப்பது.

நாத்திக மணமகன் நாத்திக மணமகள் எங்கிருக்கிறாள்? நாத்திக மணமகள் நாத்திக மணமகன் எங்கிருக்கிறான்? என்று தேடிப்போக முடியாது. "காதலும்" அப்படித் தேடி வருவதில்லை.

சரி! அப்படியே! பெற்றோர்கள் மூலமாக நாத்திக மணமகள், நாத்திக மணமகனைத் தேடிப்போனாலும், ஒருவருக்கொருவர் கட்டாயம் பிடித்திருக்க வேண்டும் என்ற அவசியமுமில்லை.

இப்படி பல இடைஞ்சல்கள் இப்பொழுதும் உண்டு. ஏனென்றால் சமுதாயம் முழுவதும், குடும்பம் முழுவதும் நாத்திகர்களாக மாறாத பொழுது ஊரில், நாட்டில் உள்ளவர்கள் அனைவரும் நாத்திகர்களாக இருக்க சாத்தியமில்லை. அப்படி இல்லாத பொழுது இந்த ஜாதிய கட்டமைப்பில் ஆட்பட்டவர்களிடமிருந்து தான் பெண் எடுக்க வேண்டிய சூழல் அல்லது ஆண் எடுக்கவேண்டிய சூழல் வந்துவிடுகிறது.

(இல்லாவிட்டால் நோ கல்யாணம்....காத்திருக்கணும். வயசு காத்திருக்காது.)

ஆகையால் மறுவீட்டாரின் (இரு வீட்டாரின்) மனநிலையை உத்தேசித்து இந்த திருமணங்கள் நடைபெற்று கொண்டு வருகின்றன.

பெரியார் காலத்தில் இருந்த பிற்போக்குத்தனத்திற்கும் இப்பொழுது நடைபெற்று கொண்டிருக்கின்ற முற்போக்குத் திருமணங்களுக்கும் நிறைய வேறுபாடு உண்டு. இது அன்று பெரியார் விதைத்த முற்போக்குத்தன விதை.

இதனால், இன்று இந்தளவுக்காவது முற்போக்குத்தனம் விளைந்துள்ளது. அன்றே, இதற்கு முட்டுக்கட்டை போட்டிருந்தால் இந்த மாற்றங்கள் இன்று நிகழ்ந்திருக்காது. இன்னும் பல மாற்றங்கள் வரும்! இது காலத்தின் கட்டாயம்.

நம்பி said...

Blogger simmakkal said...

//ஜாதிமுறைகள் ஆணிவேராக இந்து மதத்தின் வருணக்கொள்கையிலிருந்து முளைத்து
விருச்சமாக விரிந்தன என்பது உண்மையென்றாலும், அவை அம்மதத்திற்கும் அப்பால் விரிந்து இந்துமதம் என்ற வேரில்லாமல் வளர்ந்து இன்று நிற்கின்றன. நிற்பன.
//

இந்து மதத்தின் வேரிலிருந்து தான் இவைகள் வளர்ந்திருக்கின்றன...இந்து மதத்தின் வர்ணாத்தின் தாக்கம் அங்கேயும் இருக்கிறது. ஆனால் இந்து மதம் போன்று இல்லை. இதற்கு முழு முதற் காரணம் இந்து மத பார்ப்பனீயமும், அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட கடவுள்களும், அதைக்கொண்டு உருவாக்கப்பட்ட சாதிய அடையாளங்களும் தான். அதனால் தான் ஒட்டுமொத்தமாக "கடவுள் மறுப்பு" என்ற ஒரேக்கொள்கையை பெரியார் கடைப்பிடித்தார்.

"ஜாதி ஒழிப்புக்காரர்கள் வீட்டில் உருவச் சின்னங்களோ, மதக் குறியோ, சாஸ்திர சம்பிரதாய நடப்போ இருக்கக் கூடாது; கண்டிப்பாய் இருக்கக்கூடாது."-பெரியார்

Blogger simmakkal said...

//பெரியாரின் காலத்திலேயே இது நடந்துதான் வந்தது: அதாவது இந்துமதத்திலிருந்து பிறமதங்களுக்குள் எகிறிக்குதித்த ஜாதிமுறைகள். //

இந்து மதத்திலிருந்து தான் அனைத்தும் எகிறி குதித்தது என்பதாலே தான் இந்து மதத்தை முதலில் ஒழித்தால் போதும் மற்றவைகளில் தானாக ஒழிந்து விடும். (அதை பின்னூட்டமும் உறுதிப்படுத்துகிறது.)

இவன் தான் அதற்கும் வழிகாட்டுகிறான்.

பிற மதத்திலிருந்து இந்த பார்ப்பனீய இந்து மதத்திற்கு எந்த சாதிய முறைகளும் எகிறிக் குதித்தாக தகவலில்லை.

பெரியார் இதற்குத்தான் இந்து மதத்தை சாடிக்கொண்டிருந்தார். .