Search This Blog
2.10.08
சிங்கத்தை அதன் குகையிலேயே சந்தித்த பரம்பரையினர் தான் இந்தப் பெரியார் பெரும்படை!
எதிரிகள் அழைக்கிறார்கள்! வாருங்கள்!
அது 1929-ஆம் ஆண்டு தந்தை பெரியாரும், கி.ஆ.பெ. விசுவநாதமும் திருநெல்வேலிக்குச் செல்கிறார்கள் சுயமரியாதைப் பிரச்சாரம் செய்ய.
நெல்லைக்குச் சென்றதும் அவர்கள் கையில் கிடைத்தது ஒரு துண்டு அறிக்கை.
புராணங்களை எல்லாம் பொய்யென்று சொல்லும் நாத்திகர் ராமசாமி திருநெல்வேலிக்கு வருகிறார். அவரைப் பேச விடக் கூடாது என்ற துண்டறிக்கைதான் அது.
மாலைப் பொதுக் கூட்டம் - கூட்டத்தை ஏற்பாடு செய்தவர் களையும் காணவில்லை. ஊருக்குத் திரும்பி விடலாம் என்றார் கி.ஆ.பெ.! சரி! ஜட்கா ஒன்று கொண்டு வா என்கிறார் பெரியார். எட்டணா பேசி ஜட்கா கொண்டு வரப்பட்டது. கி.ஆ.பெ. முன்னேஉட்கார, பெரியார் பின்னே உட்கார்ந்தார். பொதுக்கூட்டம் நடக்கும் சாலை வழியாக வண்டியைப் போகச் சொன்னார்.
பொதுக்கூட்டம் நடக்கும் இடத்தில் அய்ந்நூறு, அறு நூறு பேர் கூடியிருந்தனர். மேடையில் நாற்காலியோ, மேஜையோ இல்லை.
பெரியார் என்ன செய்தார்? வண்டியை விட்டு இறங்கி விறு விறு என்று மக்கள் கூடி நிற்கும் அந்த இடத்திற்குத் தனியாகச் சென்று மேடையில் ஏறி ஒரு விளக்கத்தைச் சொல்ல ஆரம்பித்தார்.
பொது மக்களே! நான் உங்கள் முன்னால் இப்பவும் பேச வரவில்லை. ஒரு உண்மையைச் சொல்லிப் போகவே வந்தேன். புராணங்களை எல்லாம் பொய்யென்று சொன்னதாக என்னை எதிர்த்து நோட்டீஸ் போட்டிருக்கிறார்கள். அது நான் சொல்ல வில்லை.
சைவப் புராணங்களையெல்லாம் பொய்யென்று கண்டு பிடித்துச் சொன்னவர்கள் வைணவப் பண்டிதர்கள். வைணவப் புராணங்களையெல்லாம் பொய்யென்று கண்டுபிடித்துச் சொன்னவர்கள் சைவப் பண்டிதர்கள். இந்த இரண்டு புராணங் களும் பொய்யாக இருக்குமோ என்று நான் எண்ணியதுண்டு. அந்தப் புராணங்களைப் பொய்யென்று சொன்னவர்கள் சைவ - வைணவப் பண்டிதர்கள்தான். இதைச் சொல்லிப் போகவே நான் வந்தேன். என்மேல் பழி போடாதீர்கள் என்று பெரியார் சொன்ன தும், ஓயாமல் கை தட்டி மக்கள் ஆரவாரம் செய்தார்கள். அதன்பின் தந்தை பெரியார், தொடர்ந்து ஒன்றரை மணி நேரம் பேசிக் கொண்டேயிருந்தார்! மக்கள் அனைவரும் அமைதியாகயிருந்து கேட்டார்கள்.
---------------ஆதாரம்: அறிவுக் கதைகள் - கி.ஆ.பெ. விசுவநாதம்
இப்படியெல்லாம் எதிர்த்தவர்கள் மத்தியிலே சிங்கக் கர்ச்சனை செய்து மக்களைச் சிந்திக்க வைத்த தந்தை பெரியாரின் தொண்டர்கள் நாங்கள். 79 ஆண்டுகளுக்கு முன்பே - எதிர்ப்புக் கடுமையாக இருந்த கால கட்டத்திலேயே சிங்கத்தை அதன் குகையிலேயே சந்தித்த பரம்பரையினர் தான் இந்தப் பெரியார் பெரும்படை!
பெரியார் கருத்துகள் மக்கள் மத்தியிலே பரவி, எங்கள் பெரியார் - தந்தை பெரியார் - பகுத்தறிவுப் பகலவன் பெரியார் என்று தமிழனாகப் பிறந்த ஒவ்வொருவரும் கட்சிக்கரைகளை எல்லாம் உடைத்தெறிந்து பூரித்துக் கொண்டாடும் இந்தக் கால கட்டத்திலே, யாரோ சிலர் எதிர்ப்புக் காட்டுகிறார்களாம். அவர்கள் பி.ஜே.பி.யாம் - ஆர்.எஸ்.எஸ்ஸாம்!
மாண்புமிகு அமைச்சர் மைதீன் கானை எதிர்த்து தட்டி வைக்கிறார்களாம்! மதவெறியைத் தூண்டிப் பார்க்கிறார்களாம்.
சிங்கக் கூட்டத்திடம் சிறு நரிகள் கிச்சுக் கிச்சு மூட்டப் பார்க்கின்றனவா? நல்ல நகைச்சுவையப்பா!
இது பெரியார் நாடு! எங்களைச் சூத்திரர்கள் என்று கூறும் கூட்டத்தின் மதங்களுக்கு இங்கு இடமேயில்லை.
அமைச்சரை எதிர்த்து அநாகரிகமாக எழுதப்பட்டுள்ள தட்டிகளை அகற்றுவது மட்டும் காவல்துறையின் வேலையல்ல! வெறி கக்கும் வாசகங்களுக்குச் சொந்தக்காரர்கள்மீது வழக்குத் தொடர்ந்திருக்க வேண்டாமா? கைது செய்து லாக்கப்பில் தள்ளியிருக்க வேண்டாமா? ஏன் உள்ளே அனுப்ப வேண்டும்? வெளியிலிருந்து கறுஞ்சட்டைச் சிறுத்தைகளின் இராணுவ மிடுக்கையொத்த அணி வகுப்பை அவர்களும் கண்டுகளிக்க வேண்டாமா? போர் முழக்கத்தை அவர்களும் காது குளிரக் கேட்க வேண்டாமா?
ஒருக்கால் அதை நினைத்துக் காவல்துறையினர் அவர்களை வெளியிலே விட்டிருக்கலாம்.
கட்டுக்கோப்புக்கும், கொள்கை முழக்கத்துக்கும் பெயர்போன கழகத் தோழர்களே, இதற்கு மேலும் நீங்கள் வீட்டில் முடங்கிக் கிடப்பீர்களா? எதிர்ப்பு வரும் போதுதானே எழுந்து போவோம் நாம்! நாம் யார் என்று காட்ட வேண்டாமா?
கறுஞ்சிறுத்தைகளின் கர்ச்சனை என்ன என்பதை உணர்த்த வேண்டாமா?
புறப்படுவீர், புறப்படுவீர்! எதிரிகள் அழைக்கிறார்கள்! புறப்படுவீர், புறப்படுவீர்!
------------ மின்சாரம் அவர்கள் 2-10-2008 "விடுதலை" யில் எழுதிய கட்டுரை
Labels:
திராவிடர் இயக்கம்
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
பெரியார் திராவிடர் கழகம் - மனிதஉரிமை அமைப்புகள்
பா.ஜ.க.வுக்கு நேரடி எதிர்ப்பு மதவன்முறை சக்திகள் அதிர்ச்சி
நாடு முழுதும் மதக்கலவரங்களைத் தூண்டி விட்டு வன்முறைகளை நடத்தி வரும் சங்பரிவார்களின் அரசியல் முகமான பா.ஜ.க.வின் மாநில பொதுக் குழு சேலத்தில் கூடியபோது மதவெறியை எதிர்க்கும் மனிதநேய உணர்வாளர்கள் கடும் எதிர்ப்பையும், கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தையும் நடத்தினர். பெரியார் திராவிடர் கழகம், சுற்றுச்சூழல், மனித உரிமை அமைப்புகளைச் சார்ந்த 250 க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டனர்.
அண்மைக்காலமாக நாடாளுமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு, பா.ஜ.க. சங்பரிவாரங்கள், மதக் கலவரங்களைத் திட்டமிட்டு உருவாக்கி வரு கிறார்கள். மதக் கலவரங்களை உருவாக்கி படுகொலை களை நடத்தி, மத அடிப்படையில் வாக்காளர்களை கூறு போடுவதே இவர்களின் நோக்கம். தமிழ் நாட்டிலும் பெரியார் கருத்துப் பரப்பும் கூட்டங்களில் கலவரம் விளைவித்து, அதற்கு ‘இந்துக்களின் தன்னெழுச்சி’ என்று பார்ப்பனர்கள் இல.கணேசன், ராம.கோபாலன் போன்றோர், அறிக்கைகளை விடுத்து வருகின்றனர்.
இந்தச் சூழலில், சங். பரிவார்களின் அரசியல் அமைப்பான பா.ஜ.க. சேலத்தில் மாநில பொதுக் குழுவை கடந்த 27 ஆம் தேதி கூட்டியது. பா.ஜ.க.வின் - அகில இந்திய தலைவர் ராஜ்நாத் சிங், இதில் பங்கேற்க வருகை தந்தார். அமைதிப் பூங்காவான தமிழகத்தை, மதவெறிக் களமாக மாற்றிட திட்டமிட்டு வன்முறை களை நடத்தி வரும், பா.ஜ.க.வின் செயற்குழு தமிழ்நாட்டில் சேலத்தில் மட்டுமல்ல, தமிழகத்தின் எந்தப் பகுதியிலும் நடத்திடக் கூடாது என்று, எதிர்ப்பு தெரிவிக்க, மதச்சார்பற்ற மதவெறிக் கலவரங்களை எதிர்க்கும் அமைப்புகள் முடிவு செய்தன. பெரியார் திராவிடர் கழகம், ‘சேலமே குரல் கொடு’, குடியுரிமை பாதுகாப்பு நடுவம், தமிழ் தேசிய இயக்கம், தமிழக இளைஞர் இயக்கம் ஆகிய அமைப்புகளின் சார்பில் முதல் கட்டமாக சேலத்தில் 23 ஆம் தேதி பத்திரிகை யாளர் சந்திப்பு ஒன்று நடத்தப்பட்டது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி அளித்த பேட்டி யில், “சங்பரிவாரின் அரசியல் முகமான பா.ஜ.க.வின் மாநில செயற்குழு சேலத்தில் மட்டுமல்ல, தமிழ்நாட்டில் எந்த இடத்தி லும் நடத்தவிட மாட்டோம்; அமைதிப் பூங்காவான தமிழகத்தை வன்முறைக் களமாக்கிடும், எந்த சிறு நிகழ்வும், தமிழகத்தில் நடக்கக் கூடாது என்று அமைதி விரும்பிகளாகிய நாங்கள் அறிவிக்கிறோம்; பொதுக்குழு நடத்தப்படுமானால் நேரடி நடவடிக்கை யில் இறங்குவோம்” என்று அறிவித்தார்.
அடுத்த நாளே - ‘தமிழ்நாட்டை வன்முறைக் காடாக மாற்ற விரும்பும் பா.ஜ.க.வின் பொதுக் குழுவை அனுமதிக்காதே’ என்ற வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் ஏராளம் ஒட்டப்பட்டன. பத்திரிகை யாளர்கள் சுவரொட்டிகளை படம் பிடித்து, பத்திரிகைகளில் வெளியிடவே, சேலம், தர்மபுரி மாவட்டங்களில் செய்தி வேகமாகப் பரவியது. அதிர்ச்சியடைந்த மதவெறி சக்திகள் - கழகத்தின் சுவரொட்டிகள் மீது பா.ஜ.க. பொதுக்குழு சுவரொட்டிகளை ஒட்டியதோடு, கழக சுவரொட்டிகளை கிழிக்கத் தொடங்கினர். கழகத் தோழர்கள் சுவரொட்டி கிழிக்கப்பட்ட பகுதிகளில் புதிதாக சுவரொட்டிகளை அடித்து, ஒட்டி, பதிலடி தந்தனர். சுற்றுச்சூழல்களை நாசப்படுத்தி, மக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தி வரும் ‘கெம்பிளாஸ்ட்’ நிறுவனத்தை எதிர்த்துப் போராடி வரும் ‘கோனூர் விவசாயிகள் சங்கம்’ மக்களின் வாழ்வுரிமையை பறித்து, நிலங்களை பெரும் தொழில் நிறுவனங் களுக்கு ‘தாரை’ வார்ப்பதை எதிர்த்துப் போராடி வரும் ‘கஞ்சமலை பாதுகாப்புக் குழு’வினரும், மனித உரிமைக்கும், சுற்றுச் சூழலுக்கும் எதிராக செயல்படும் மதவெறி சக்திகளை எதிர்த்து இந்தப் போராட்டத்தில் இணைத்துக் கொண்டனர்.
இயற்கை வளங்களை தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டதை எதிர்த்த காரணத்தால் சத்தீஸ்கர் மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சி, மக்களுக்கு சேவை செய்து வந்த மருத்துவர் விநாயக்சென் அவர்களை தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளது. வங்காளியான விநாயக்சென் வேலூர் மருத்துவக் கல்லூரியில் படித்து - சத்தீஸ்கர் மாநிலத்தில் பழங்குடி மக்களிடம் மருத்துவப் பணியாற்றி வந்தவர். மனித உரிமைப் போராளி; மனித உரிமைக் கழகத்தின் அகில இந்திய துணைத் தலைவர்; மருத்துவர் விநாயக்சென்னை கைது செய்த பா.ஜ.க. அரசைக் கண்டித்து, அவரை விடுதலை செய்ய வேண்டும் என்ற முழக்கத்தோடும், ஒரிசா, கருநாடகம், தமிழ்நாட்டில் நடக்கும் மதவெறி வன்முறைகளைக் கண்டித்தும், பா.ஜ.க. பொதுக் குழு நடக்கும் மண்டபத்தின் முன், கறுப்புக்கொடிகளுடன் திரளுவது என முடிவு செய்யப்பட்டது.
‘மதத்தின் பெயரால் வன்முறைகளை அரங் கேற்றாதே’; ‘மருத்துவர் விநாயக்சென்னை விடுதலை செய்’; ‘அமைதியும் நல்லிணக்கமும் மலரட்டும்’ என்ற வாசகங்கள் தமிழிலும், ஆங்கிலத்திலும் அச்சிடப் பட்டு, மார்பிலும், முதுகிலும் தொங்கவிட்டு, தோழர்கள் வந்த காட்சி, பொது மக்களின் கவனத்தை ஈர்த்தது. ராஜஸ்தான் மாநிலத்தைச் சார்ந்த மனித உரிமையாளர் பியுஸ் மானஷ் - இவைகளைத் தயாரித்து வழங்கினார்.
சேலம் இரும்பாலை சாலையிலுள்ள ஜகீர் ரெட்டிப்பட்டி எம்.எஸ்.வி. திருமண மண்டபத்தில், பா.ஜ.க.வின் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இரும்பாலை பிரிவு சாலை அருகே திரண்ட தோழர்கள் மண்டபத்தை நோக்கி, மதவெறி சக்திகளுக்கு எதிராக முழக்கமிட்டு, அணிஅணியாகப் புறப்பட்டனர். கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் முதல் அணியில் வந்த 150 கழகத் தோழர்கள் மண்டபத்தை நெருங்கும் முன்பே காவல்துறை தடுத்து கைது செய்தது.
சேலம் மாவட்டக் கழகத் தலைவர் மார்ட்டின் தலைமையில் இரண்டாவது அணியில் 50 தோழர்கள் கறுப்புக் கொடியுடன் புறப்பட்டு, வேறு வழியாக மண்டபத்தை அடைந்து, மண்டப வாயிலின்அருகே கறுப்புக் கொடிகளுடன் முழக்கமிட்டபோது அதிர்ச்சியடைந்த காவல்துறை கழகத்தினரை சுற்றி வளைத்து போலீஸ் வேனில் ஏற்றியது.
மூன்றாவது அணியில் 50 தோழர்கள் மாவட்டக் கழக அமைப்பாளர் பாலன் தலைமையில் மண்டபத்தை நெருங்கி வாயிலிலே கூடியபோது காவல்துறை சுற்றி வளைத்து கைது செய்தது.
கோனூர் விவசாயிகள் சங்கத் தோழர்கள் 25 பேர் மாதேஷ் தலைமையில் - கழுத்தில், கோரிக்கைப் பதாகைகளை மாட்டிக் கொண்டு மண்டபத்தை நோக்கி வந்தபோது கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து கஞ்சமலை பாதுகாப்புக் குழுவினர் தோழர் கண்ணன் தலைமையில் வந்தபோது கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 250க்கும் மேற்பட்ட தோழர்கள் திருவாக்கவுண்டனூர் சாலை யிலுள்ள பி.என்.சி.ஜி. திருமணமண்டபத்தில் வைக்கப்பட்டனர்.
தோழர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு, 30 நிமிட நேரம் கழித்து, சேலம் இளம்பிள்ளையைச் சார்ந்த கழகத் தோழர் மணிமாறன் மற்றும் பிரபாகரன் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் போராட்டத்தில் பங்கேற்க வந்தனர். மணிமாறன் கருப்புச்சட்டை அணிந்திருந்தார். மண்டபத்தின் வழியாக வந்தபோது, மோட்டார் சைக்கிளை மெதுவாக நகர்த்தி, கழகத் தோழர்கள் நிற்கிறார்களா என்ற தேடிக் கொண்டிருந்த நிலையில், பா.ஜ.க.வினர் கூட்டமாக ஓடிவந்து, தனியாக சிக்கிய தோழரை தாக்கத் தொடங்கினர். ஆடிட்டர் ரமேஷ் என்ற பா.ஜ.க. பார்ப்பனர், ‘அவனைப் பிடித்து நொறுக்குங்கடா’ என்று கூச்சல் போட்டுக் கொண்டு முதலில் வெளியே ஓடிவந்தார். கும்பல் மோட்டார் சைக்கிளைப் பிடித்துத் தள்ளியது; கழகத் தோழர் மணிமாறனைத் தாக்கியபோது, காவல்துறை தோழரை மீட்டு, திருமண மண்டபத்துக்கு அனுப்பி வைத்தது. வெறி பிடித்த மதவெறி சக்திகள் - சாய்ந்து கிடந்த மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்த தோடு, வண்டியின் பெட்ரோல் டேங்க் மீது கல்லைத் தூக்கிப் போட்டு உடைத்தது. பெரியார் படம் போட்டு எழுதப்பட்டிருந்த வண்டி எண் அறிவிப்பு பலகையையும் உடைத்தது. கையில் தடி கற்களுடன் திரிந்த மதவெறி யர்கள் கழகத்தினரை கைது செய்து ஏற்றி சென்ற காவல்துறை வேன்கள் மீது கற்களை வீசினர். ஆயிரக்கணக்கில் போலீசார் குவிக்கப்பட்டு, அந்தப் பகுதியே பரபரப்பாக காட்சியளித்தது.
திருமண மண்டபத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கழகத் தோழர் களிடையே கழகத் தலைவர் கொளத்தூர் மணி, மாதேஷ் (கோனூர் விவசாயிகள் சங்கம்), செந்தில் (குடியுரிமை பாதுகாப்பு நடுவம்), கண்ணன் (கஞ்சமலை பாதுகாப்பு இயக்கம்) ஆகியோர் பேசினர்.பா.ஜ.க. சங்பரிவார் கும்பலின் மதவெறி வன் முறைகள் மற்றும் டாக்டர் விநாயக் சென்னின் மக்கள் நலப்பணிகள் பற்றி விரிவாக பேசப்பட்டு கருத்தரங்கம் போல் நிகழ்ச்சி நடந்தது.
பா.ஜ.க. செயற்குழு மாலை 6.45 மணிக்கு முடியும் வரை, தோழர்கள் திருமண மண்டபத்திலேயே வைக்கப் பட்டு, பிறகு, விடுவிக்கப்பட்டனர்.
தோழர்கள் அனைவரும் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை யில் சூரமங்கலம் காவல்நிலையம் வரை ஊர்வலமாகச் சென்றனர். கழகத் தோழர் தாக்கப்பட்டு, மோட்டார் சைக்கிள் எரிக்கப்பட்டது பற்றி காவல் நிலையத்தில் புகார் தரப்பட்டது. புகாரை பதிவு செய்து முதல் தகவல் அறிக்கையைத் தந்த பிறகே கலைந்து செல்வோம் என்று கழகத்தினர் காவல்நிலைய வாயிலேயே நின்று விட்டனர். இரவு 8.30 மணி வரை காவல் நிலையத்திலே இருந்து முதல் தகவல் அறிக்கையின் பிரதியைப் பெற்ற பிறகே - தோழர்கள், கலைந்து சென்றனர். மதவெறி சக்திகளுக்கு எதிரான இந்த நடவடிக்கை சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாழ்த்து - பாராட்டுகள் குவிகின்றன
அண்மைக் காலமாக வன்முறைகளை கையில் எடுத்துக் கொண்டு தமிழ்நாட்டில் கலவரங்களை நடத்தி வந்த சங்பரிவார் - பா.ஜ.க. வன்முறைகளுக்கு எதிராக சேலத்தில் பெரியார் திராவிடர் கழகம் - சுற்றுச் சூழல், மனித உரிமை அமைப்புகளோடு இணைந்து வெளிப்படுத்திய எதிர்ப்பு மதச்சார்பின்மையாளர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளது. பல்வேறு அமைப் பினரும் தங்கள் மகிழ்ச்சியை நேரிலும், பேசிகள் வழியாகவும் பகிர்ந்து வருகின்றனர். திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த கழகத் தலைவர் கொளத்தூர் மணி மற்றும் தோழர்களை விடுதலை சிறத்தைகள் அமைப்பின் பொதுச் செயலாளர் உஞ்சை அரசன், அரங்க செல்லத் துரை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜீவானந்தம், மார்க்சிய பெரியாரிய பொது வுடைமை கட்சித் தோழர்கள், கவிஞர் தமிழேந்தி, திருச்சி கலிய பெருமாள், த.தே.பொ.க. தோழர் பிந்துசாரன் உள்ளிட்ட பலரும் நேரில் சந்தித்து, பாராட்டுகளைத் தெரிவித்தனர். சூரமங்கலம் காவல் நிலையத்தில் தோழர்கள் திரண்டிருக்கும் செய்தி கிடைத்தவுடன், பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த தோழர்களும், உணர் வாளர்களும் தங்கள் மகிழ்ச்சி, வாழ்த்துகளைத் தெரிவித்த காட்சி உணர்ச்சிபூர்வமாக இருந்தது.
- நமது செய்தியாளர்
எந்தப்பெரியார் தொண்டனும் யாரிடமும் அடிபட்டத்தில்லை என்ற சூழலை உருவாக்க வேண்டும்.
லட்சியவாதிகள் யார் என்பதற்கு அய்யா சொன்ன வாசகங்கள்தான் நினைவுக்கு வருகின்றன.
Post a Comment