அறுபதாயிரத்து மூன்று மனைவி மார்கள் தசரதனுக்கு இருந்தும் குழந்தை மட்டும் இல்லை. அதற்காக அசுவமேத யாகம் ஒன்றை நடத்தினான் தசரதன். இந்த யாகத்தை நடத்துவதற்காக கலைக் கோட்டு (ருசிய சிருங்கர்) முனிவர் அழைத்து வரப்பட்டார்.
இதுபற்றி பண்டித மன்மத நாததத் தயர் பின்வருமாறு மொழி பெயர்த்து எழுதுகிறார். Kausalya with three strokes slew that horse experiencing great glee. Kausalya with an undisturbed heart passed one night with that horse. The Hotas, Adhwaryus and the Ugatas joined the king’s wives.
இதன் பொருள் வருமாறு: தசரதனின் மூத்த மனைவியாகிய கோசலை மூன்று வெட்டில் அக்குதிரையை மிக உற்சாகத் தோடு கொன்றாள். அவள் கலங்கா நெஞ்சோடு ஒரு நாளிரவை அக்குதிரை யோடு கழித்தாள். ஹோதா, அத்வர்யு முதலிய இருத்துவிக்குள் இராச பாரியை களைப் புணர்ந்தார்கள். இதன் காரண மாக தசரதனின் ராஜபத்தினிகள் கர்ப்பம் தரித்தார்கள் என்று வால்மீகி தெளிவாகவே கூறியுள்ளார்.
ஆனால் வால்மீகி இராமாயணத்தைத் தமிழில் மொழிபெயர்த்த கம்பனோ என்ன எழுதுகிறான்? யாகசாலையில் புகுந்து கலைக்கோட்டு மாமுனி தீ வளர்த்து ஆகுதி வழங்கினான். உடனே பூதமொன்று தீயினின்று எழுந்தது. பூதம் தோன்றி தந்த பாயசத்தைத் தசரதன் தன் மனைவியர் மூவருக்குப் பங்கிட்டுக் கொடுத்தான். அதன் காரணமாக கவுசலை, கைகேயி, சுபத்திரை ஆகியோர் கர்ப்பம் தரித்தனர் என்று புளுகுகிறார்.
ஆரியக் கலாச்சாரம் விபச்சாரத்தைக் கலையாகப் போற்றுவது; அந்தக் காவியத்தை மொழிபெயர்க்க வந்த கம்பனுக்கு ஏனிந்த திரிபு வேலை?
------------------நன்றி:"விடுதலை" 3-10-2008
Search This Blog
3.10.08
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
வால்மீஹியின் அனைத்து வார்த்தைகளையும் அசுவமேத யாகத்தில் நடந்த வர்ணனைகளையும் மொழி பெயர்ப்பைப் படித்தால் வாந்திதான் வரும்.
சரிதான் தோழரே
Post a Comment