Search This Blog

18.9.11

தினமலர் பூணூலின் திரிபுவாதத்திற்கு மறுப்பு


நண்டு கொழுத்தால் வலையில் தங்காது!

இந்தப் பழமொழியைக் கேள்விப்பட்டு இருக்கலாம்; இது யாருக்கு பொருந்துகிறதோ, இல்லையோ கண்டிப் பாக பூணூல் தினமலருக்கு நூற்றுக் நூறு பொருந்தும்.

திராவிடர் கழகத் தலைவர் வீரமணி: நமது விழி திறந்த வித்தகர், மான உணர்வை மறந்து, துறந்து, அடிமைகளாகி, காலம் காலமாக கால்நடைகளை விடக் கேவலமாக வாழ்ந்த திராவிடர் மக்களாகிய நமக்கு மானமும், அறிவும் போதித்த நம் அறிவுப் பேராசான் பெரியா ரின் 133ஆவது பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது.

டவுட் தனபாலு: யாரு... தமிழ் ஒரு காட்டுமிராண்டி பாஷை... இங்கிலீஷ் படிக்கலைன்னா நாசமாகப் போயிடுவோம்னு திட்டிட்டே இருந்தாரே... அவரோட பிறந்த நாள் தானே... கொண்டாடுங்க, கொண்டாடுங்க...!
-------------- தினமலர் 18.9.2011

தந்தை பெரியார் பிறந்த நாள், தமிழ் நாட்டைக் கடந்து, உலகம் முழுமையும் கொண்டா டப்படும் நிலையைக் கண்டு தினமலர் பூணூலுக்கு எய்ட்ஸ் கண்டு விட்டதாகத் தெரிகிறது.

அக்கப்போராக எழுதுவது தந்தை பெரியாரைக் கொச்சைப்படுத்துவது, திராவிடர் கழகத் தலைவரைச் சீண்டிப் பார்ப்பது - இவற்றைச் செய்யா விட்டால் அவாளுக்குத் தூக்கமே வராது போல் தெரிகிறது.

பெரியார் தமிழைக் காட்டு மிராண்டி பாஷை என்று சொன்னது, தமிழை இழிவுபடுத்த அல்ல.

பார்ப்பனீயப் புராணக் குப்பைகளைக் காட்டி இவைதான் தமிழ் என்று காட்டியபோது கண்டித்தார். தமிழில் முற்போக்கு இலக்கியங்கள் வளர வேண்டும் என்று ஆசைப்பட்டார்.

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் கூட சமயமென்னும் சூலையில் தமிழ்நாட்டில் வளராது என்று பாடினார்.

அந்தப் பொருளில்தான் தந்தை பெரியார் கூறினார். தந்தை பெரியார் தமிழ் மொழிக்கு ஆற்றிய தொண்டு ஆக்கபூர்வமானது.

தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தைதானே அறிமுகப்படுத்தினார். அதனைத்தானே தினமலர் என்னும் திரிநூல் ஏடும் பின்பற்றிக் கொண்டிருக்கிறது.

திருக்குறள் மாநாட்டைக் கூட்டியவரும் அவரே! உன் மதம் என்ன என்று கேட்டால், திருக்குறளான் என்று சொல்லு என்று சொன்னவர் அவரே!

சங்கராச்சாரியார் போல தமிழ் நீச்ச பாஷை - சூத்திரப் பாஷை என்றா பெரியார் சொன்னார்? கோயிலுக்குள் தமிழ் வழிபாட்டு மொழியாக்கத் தமிழுக்குத் தகுதியில்லை என்று ஜெயேந்திர சங்கராச்சாரியாரும், சோவும் இதுவரை சொல்லிக் கொண்டு இருக்கிறார்களே. நீதிமன்றம் வரை சென்றவர்கள் பார்ப்பனர்கள் தானே! தீக்குறளை சென்றோதோம் என்று ஆண்டாளின் பாட்டுக்குத் துய திருக்குறளைப் படிக்கமாட்டோம் என்று ஆண்டாள் பாடியதாகச் சொன்ன ஆசாமி செத்துப் போன சங்கராச்சாரி சந்திர சேகரேந்திர சரஸ்வதிதானே! குறளை என்றால் கோள் சொல்லுதல் என்று பொருள் என்பதை அறியாத அமாவாசை இருட்டா அவர்? அவருக்கா தெரியாது - எல்லாம் தெரிந்தவர் பெரியவாள் என்று சொல்லுவார்களேயானால் அதன் பொருள் என்ன?

தெரிந்திருந்தும் திருக்குறளை மட்டம் தட்ட வேண்டும் என்பதுதானே அவாளின் ஜெகத் குருவின் புத்தி!

இங்கிலீஷ் படிக்கச் சொல்லிவிட்டாராம் பெரியார். அதில் என்ன குற்றம் கண்டுபிடித்து விட்டது இந்தக் கொலம்பஸ்? மிலேச்ச பாஷை என்று சொல்லிக் கொண்டே இங்கிலீஷ் படித்துவிட்டு, நாலணா வேலைக்குச் செல்லும் பார்ப்பனர் களுக்கு பெரியார் இங்கிலீஷ் படிக்கச் சொன்னது ஆபத்து தானே - அந்த ஆத்திரமோ! ஹிட்லர் வெற்றி பெறுவார் என்று நினைத்து ஜெர்மன் மொழி படித்தவர்களாயிற்றே இந்தப் பார்ப்பனர்கள்.

தமிழ் செம்மொழியானால் வீட்டுக்கு வீடு பிரியாணி பொட்டலம் கிடைக்குமா என்று எழுதிய தினமலர் தமிழையும், தமிழரையும், தமிழகத் தலைவர்களையும் கொச்சைப் படுத்துவது என்பதில் மிகத் தீவிரமாக வெறி பிடித்து அலைவதாகத் தெரிகிறது.

நண்டு கொழுத்தால் வளையில் தங்காதே! ஆம் என்க!

------------------"விடுதலை” 18-9-2011

0 comments: