Search This Blog
5.6.09
உலகச் சுற்றுச்சூழல் நாளும் நமது சிந்தனையும்
நமக்கு நாமே!
1972 ஆம் ஆண்டு முதல் உலகச் சுற்றுச்சூழல் நாள் என்று ஜூன் 5 ஆம் நாள் கடைபிடிக்கப்படுகின்றது.
இது ஏதோ தீண்டாமை ஒழிப்பு நாள் என்று வருடத்துக்கு ஒரு நாள் கூடி சமபந்திப் போஜனம் நடத்துவது போன்ற தல்ல.
நாம் அமரும் நாற்காலியின்கீழ் நாமே வெடி வைத்துக்கொள்ளப் போகிறோமா என்ற அர்த்தமுள்ள அதே நேரத்தில் ஆபத்தான கேள்வியை உள்ளடக்கிய ஒன்றாகும்.
பூமியின் வெப்ப நிலை உயர்ந்து பனிமலைகள் உருகி பூமியை முழுசாகப் போட்டு விழுங்க இடம் கொடுக்கப் போகிறோமா என்பதை இப்பொழுதே தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.
ஆபத்து! ஆபத்து!! பூமியின் வெப்ப நிலை அதிகரித்து வருகிறது என்று குய்யோ முய்யோ என்று யாரோ சில பேர் தானே கத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று நமக்கு ஏதோ அறவே சம் பந்தம் இல்லாத பிரச்சினைபோல அட்டாணிக் கால்போட்டு தொலைக் காட்சிக்கு முன்னால் காலத்தையும், கருத்தையும் தொலைக்கிறவர்கள் ஏதோ படிக்காத பாமரர்கள் என்று கருதிவிடவேண்டாம்.
இதில் படித்த பாமரர்களும் உண்டு. இந்த வெப்ப நிலையைச் சீராக்க என்ன செய்யப் போகி றோம்; எல்லாம் இறைவன் ஏற்பாடு; எது எது எந்த எந்தக் காலத்தில் எப்படி நடக்கவேண்டும் என்று இருக்கிறதோ, அது நடந்தே தான் தீரும் - அதற்காக இந்த மானுட அற்ப ஜென் மங்கள் அலட்டிக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்று ஆன்மீக வேதாந்திகள் அந்தரத்தில் சஞ்சரித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
சுற்றுச்சூழலை கண்ணாடிப் பாத்திரம்போல பாதுகாக்காவிட்டால், கையிலிருந்து தவறவிட் டால் விழுந்து நொறுங்கு வதுபோல கண்மூடிக் கண் திறப்பதற்குள் எல்லாமே முடிந்துவிடும்; முடிந்து விட்டது என்று பதிவு செய்வதற்குக்கூட ஆள் ஒருவர் எஞ்சப் போவதில்லை.
அறிவுரை என்றாலே பொதுவாக அதன்மீது ஒரு வெறுப்பு நம் மக்களுக்கு - காரணம் அறிவுரை என்று கூறி ஆன்மீகவாதிகளும், சாமியார்களும், காவிகளும் அதனைக் கெடுத்துக் குட்டிச்சுவர் ஆக்கி வைத்து விட்டார்கள்.
இந்த அறிவுரை அந்தப் பட்டியலில் இடம்பெறுவதல்ல. மரங்களை வெட்டா தீர்கள்; செடிகளை நடுங்கள்; நீர் நிலைகளை ஆக்கிரமிக்காதீர்கள்! - ஆற்றில் மணலை கொள்ளை யடிக்காதீர்கள்! நிலத்தடி நீரை உறிஞ்சி உபத்திரம் செய்யாதீர்கள்; பிளாஸ்டிக்கைத் தவிர்ப்பீர் என்பதெல்லாம் ஆன்மீக அறிவுரைகள் அல்ல - நம்மையும், நம் தலைமுறையினரையும் காப்பாற்றிக் கொள்ள மேற்கொள்ளும் சுயநல பொதுநலத் தொண்டறக் கருத்துகளாகும்.
----------------- மயிலாடன் அவர்கள் 5-6-2009 "விடுதலை" யில் எழுதிய கட்டுரை
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
நல்ல பதிவு
Post a Comment