Search This Blog
3.6.09
ஈழத் தமிழர்கள் பிரச்சினையில் இந்தியா அவப்பெயரைத் தேடிக்கொண்டு விட்டது சீனா, ருசியா, கியூபா நாடுகளுக்கும் கண்டனம்!
ஈழத் தமிழர்கள் பிரச்சினையில்
இந்தியா அவப்பெயரைத் தேடிக்கொண்டு விட்டது
சீனா, ருசியா, கியூபா நாடுகளுக்கும் கண்டனம்!
திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டத் தீர்மானங்கள்
ஈழத் தமிழர்கள் பிரச்சினையில் பாசிச சிங்கள அரசுக்குத் துணை போன நாடுகளுக்குக் கண்ட னம் தெரிவிக்கப்பட்டது.
2.6.2009 செவ்வாய் பிற்பகல் 3 மணிக்கு சென்னை பெரியார்திடல் துரை. சக்ரவர்த்தி நினைவகத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்ற திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களிலிருந்து முக்கியமானவைகள் சில ....
தீர்மானம் 3 (அ)
ஈழத்தமிழர் வாழ்வுரிமையும்
இந்திய அரசின் கடமையும் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இன அழிப்புப் போரில் இந்திய அரசு ஈழத் தமிழர்களுக்கு விரோதமாக, சிங்கள இன வெறி ராஜபக்சே தலைமை யிலான அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்துள்ளது என்பது, அண்மையில் அய்.நா. வின் மனித உரிமைக் கழத்தில் விசாரணையின்போது இந்திய அரசு நடந்து கொண் டுள்ள போக்கின் மூலம் வெளிச்சமாகவே அறிய முடிகிறது. இதன் மூலம் உலகம் முழு வதும் உள்ள கோடானுகோடி தமிழர்கள், மனிதநேய மாந்தர்கள் மத்தியில் இந்தியா அவப்பெயரைத் தேடிக் கொண்டு விட்டது என்றும் இக்கூட்டம் வேதனையுடன் சுட்டிக் காட்டுகிறது.
அதுபோலவே சிங்கள அரசின் பாசிச நடவடிக்கைகளுக்கு சீனா, ருசியா, கியூபா போன்ற கம்யூனிஸ்ட் நாடுகளும் ஒத்துழைப்பு அளித்தமைக்கு இக்கூட்டம் தனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் 3 (ஆ):
போர் முடிந்துவிட்டது என்று இலங்கை அரசால் அறிவிக்கப்பட்ட பிறகும் இலட்சக் கணக்கான தமிழர்களை முள்வேலியால் சூழப்பட்ட சுகாதாரமற்ற, அடிப்படை வசதிகள் அற்ற முகாம்களில் முடக்கி வைத்து, விசாரணை என்கிற பெயரில் அம்மக்களைப் பல்வேறு வகைகளிலும் துன்புறுத்துவதும் மிகவும் கண்டிக்கத்தக்கதாகும்.
தமிழர்களை முற்றாக ஒழிப்பதையே முதன்மையான நோக்கமாகக் கொண்ட இலங்கை அரசு நியாயமான நிவாரணப் பணிகளை தமிழர்களுக்காக மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்க முடியாத சூழ்நிலையில், அய்.நா. வே நேரடியாகத் தலையிட்டு, நிவாரணப் பணிகள் போர்க் கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட ஆவன செய்ய வேண்டும் என்று இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
முகாம்களில் முடக்கி வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்கள் தங்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பிச் சென்று சொந்த வீடுகளில் குடியேற உடனடியாக நட வடிக்கை எடுக்க இலங்கை அரசை நிர்ப்பந்திக்க உலக நாடுகள் முன்வரவேண்டும் என்றும் இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
இதில் இந்தியஅரசு முனைப்பாக இருந்து ஒருங்கிணைத்து ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமைக்கான உத்தரவாதத்தை ஏற்படுத்தித் தரவேண்டும் என்றும் இக் கூட்டம் வலியுறுத்துகிறது.
தீர்மானம் 3 (இ):
ஈழத்தில் வன்னிப் பகுதியில் மட்டும் கடைசி சில நாள்களில் இலங்கை இராணுவத்தால், யுத்த நெறிமுறைகளையெல்லாம் புறந்தள்ளி, 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர் என்ற செய்தி உலகத்தையே அதிர்ச்சி அடையச் செய்திருக்கிறது.
இதன் மீதான விசாரணையை உலக நீதிமன்றத்தில் நடத்தி, கொடூரமான முறையில் மக்களைக் கொன்றவர்களுக்கு உரிய தண்டனையைப் பெற்றுத் தர உலக நாடுகள் முன்வரவேண்டும் என்று இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
------------------- நன்றி:-"விடுதலை"3-6-2009
Labels:
திராவிடர் இயக்கம்
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
//ஈழத்தில் வன்னிப் பகுதியில் மட்டும் கடைசி சில நாள்களில் இலங்கை இராணுவத்தால், யுத்த நெறிமுறைகளையெல்லாம் புறந்தள்ளி, 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர் என்ற செய்தி உலகத்தையே அதிர்ச்சி அடையச் செய்திருக்கிறது.
இதன் மீதான விசாரணையை உலக நீதிமன்றத்தில் நடத்தி, கொடூரமான முறையில் மக்களைக் கொன்றவர்களுக்கு உரிய தண்டனையைப் பெற்றுத் தர உலக நாடுகள் முன்வரவேண்டும் என்று இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.//
இனவெறியன் ராஷபக்சேவையும் அவனுக்கு உதவிய நாய்களுக்கும் தண்டணை வாங்கித் தந்த்தே ஆகவேண்டும். அப்போதுதான் தமிழனின் கோபம் அடங்கும்
/இனவெறியன் ராஷபக்சேவையும் அவனுக்கு உதவிய நாய்களுக்கும் தண்டணை வாங்கித் தந்த்தே ஆகவேண்டும்./
சோனியா அவருக்கு உதவிய கருணாநிதி அவருக்கு உதவிய வீரமணி அவருக்காகக் குரல் கொடுக்கும் தமிழ் ஓவியா
அம்மா தாயே எதுக்கு வாயாலேயே கோல் போட்டு கெஜம் அளக்குறீங்க? தேர்தல் சமயத்துல திரும்ப திரும்ப இங்கே எழுதுனமே, வீரமணி அய்யா கருணாநிதி அய்யாவிடம் கொஞ்சம் பகுத்தறிவு சுயமரியாதையோடு இருக்கன்னு சொல்லுங்கன்னு. எங்கேம்மா தாயி அப்போ போயிருந்தீங்க.
உங்களமாதிரியான ஆளுங்கதான் ராசபக்சேயவிட ஈழத்தமிழனுக்கு ஆப்பு.
கொஞ்சமாச்சும் மனச்சாட்சி இருந்தா அடுத்த ஸ்பீச்சு ரெக்காட்டு பதிவ போடமுன்னாடி பதில சொல்லு தாயி
கறுப்புச்சட்டை வீரமணிய நம்புறதுக்கு கடவுள்பாட்டு வீரமணிய நம்பிருக்கலாம். சுப்புரமனியசுவாமிக்கும் வீரமணிக்கும் ஈழதமிழனுங்கள கொல்லறதுக்கு கல்லெடுத்து குடுக்கறதுல வித்தியாசமே இல்லீயே தாயி
Post a Comment