Search This Blog
3.6.09
ஜாதி ஒழிப்புத் திருமணங்கள் செய்ய எங்களை பக்குவப்படுத்தியவர் பெரியாரும் பெரியார் உருவாக்கிய காட்டுமிராண்டிகளுமே!-4
உதகமண்டலத்தில் 1.12.1981ல் மாபெரும் மாநாடு கூட்டப்பட்டது. அதில் பல்வேறு தீர்மானங்களை இயற்றியுள்ளனர். இவ்வாறு தலித்துக்களின் பிராமண எதிர்ப்புகளை பயன்படுத்தி தலித்துக்களைப்போலவே மனித விலங்குகளாய் இருந்து வந்த பிராமணரல்லாதார் தங்களுடைய திராவிட அரசியலை வென்றெடுத்ததன் மூலம் தங்களை கணம் பொருந்திய இரண்டாம் வகுப்பு பிராமணர்களாக மாற்றிக் கொண்டார்களே தவிர தங்களுடைய வெற்றிக்கு வேராக இருந்தவர்களை ஏமாற்றியதே அவர்கள் (திராவிடர்கள்) செய்த சாதனை என்கிறhர் மா.வேலுச்சாமி.”
1891ஆம் ஆண்டு அயோத்திதாசப் பண்டிதரும் வேறு சிலரும் கூடி பொதுநல விண்ணப்பம் ஒன்றை தயாரித்து அதில் பத்து தீர்மானங்களை நிறைவேற்றி இந்திய தேசீய காங்கிரஸ் கமிட்டிக்கு அனுப்பி வைத்தனர். அதில் நிறைவேற்றப்பட்ட முதல் தீர்மானம் பறையன் என இழிவுபடக் கூறுவோரைப் பழித்தல் அவதூறென்னும் குற்றத்திற்கு ஆளாகும் ஓர் சட்டம் ஏற்படுத்த வேண்டும் என்பதாகும். தீண்டாத மக்களில் அயோத்திதாசப் பண்டிதருக்கு ‘பறையன்’ என்பது மட்டுமே கண்ணுக்குத் தெரிந்து அதைக் குற்றமாகச் சட்டம் இயற்றிக் கோரியுள்ளார். இவரின் வாரிசான வேலுச்சாமியும், தலித்துகளைப் போலவே மனித விலங்காய் இருந்து வந்த பிராமணரல்லாதார் இரண்டாம் வகுப்பு பிராமணர்களாக மாறி விட்டடர்கள் என்று எழுதியுள்ளார். பிராமணரல்லாதார் முன்னேற்றத்தைக் கண்டு திரு.மா.வேலுசாமி குமுறுகிறார் என்பது மட்டும் நன்றாக தெரிகிறது. ஏனெனில், இவர்களின் குருவான, முன்னோடியான அயோத்திதாசப் பண்டிதருக்கே இப்படிப்பட்ட மனநிலைகள் என்பதை அயோத்திதாசரின் எழுத்தே நிருபிக்கிறது. சக்கிலியர் மலமெடுக்கும் தோட்டிகள் என்று தீண்டப்படாத மக்களிடையே ஒரு பேதத்தை ஏற்படுத்தியவர் அயோத்திதாசர். இதோ அயோத்திதாசர் பேசுகிறார்.
“இந்த டிசம்பர் மீ விடுமுறை காலத்தில் சில பெரியோர்கள் கூடி இந்தியாவில் தாழ்த்தப்பட்டுள்ள ஜாதியோரைச் சீர்திருத்த வேண்டும் என்று முடிவு செய்திருக்கின்றார்கள். இவற்றுள் இயல்பாகவே அறிவின்றி தாழ்ந்துள்ள வகுப்பாரும் உண்டு. ஜாதித்தலைவர்களின் விரோதத்தினால் தாழ்த்தப்பட்டுள்ளவர்களும், நாளது வரையில் தாழ்த்தி வருகிறவற்றுள் தாழ்ந்தவர்களுமாகிய ஒரு வகுப்பாரும் உண்டு. அவர்கள் யாரென்பிரேல் - குறவர், வில்லியர், சக்கிலியர் மலமெடுக்கும் தோட்டிகள் இயல்பாகவே தாழ்ந்த நிலையிலுள்ளவர்கள்..
இவற்றுள் கூளங்குப்பைகளுடன் குணப்பெரும் பொருட்களையுஞ் சேரக்குவித்து குப்பைக் குழியென்பது போல் - கல்வியிலும் நாகரிகத்திலும், விவேகத்திலும், ஒற்றுமையிலும் மிகுத்து வேஷபிராமணர்கள் கற்பனா கதைகளுக்கிணங்காமல் விரோதிகளாய் நின்ற திராவிட பவுத்தாகள் யாவரையும், பறையர், சாம்பார் வலங்கையரென்று தாழ்த்திக் கொண்டதுமின்றி – சக்கிலி, தோட்டி, குறவர், வில்லியர் இவர்கள் யாவரையும் அய்ந்தாவது ஜாதியென்னும், பஞ்சம சாதியென நூதனப் பெயரிட்டு மேன்மக்களாம் பவுத்தர்களையும் அக்குப்பையில் சேர்த்து பஞ்சம சாதியென்று வகுத்திருக்கின்றார்கள்.
(அயோத்திதாசர் சிந்தனைகள் 1 பக்கம் 97)
மேலும் சொல்கிறார். “ஆயிரத்தி அய்நூறு வருட காலமாக இந்த திராவிட பவுத்தர்களைத் தலையெடுக்க விடாமல் தாழ்த்தி பலவகை இடுக்கங்களைச் செய்து வந்த சத்துருக்களாகிய வேஷ பிராமணர்களுக்குப் பருப்பில் நெய்யை விட்டதுபோலும், பாலில் பழம் விழுந்தது போலும் மென்மேலும் ஆன்ந்தம் பிறந்து தங்கள் வஞ்கங்கள் யாவையும் சரிவர நிறைவேற்றி விடுவதற்காய் தோட்டிகள் பிள்ளைகளுக்குக் கல்வி சாலை வகுத்து அதையும் பஞ்சமர் பாடசாலை எனக்குறித்து விட்டார்கள. இவ்வகை கருத்து யாதெனில் இன்னுஞ்சில காலங்களுக்குப் பின் தோட்டிகள், பறையர்கள், யாவரும் ஒரு வகுப்பாரென்றுங் கூறி இன்னுந்தலையெடுக்க விடாமல் நாசஞ்செய்வதற்கேயாம்.
((அயோத்திததாசர் சிந்தனைகள் 1 பக்கம் 138)
தாழ்த்தப்பட்டவர்களில் உள்ள ஜாதிகளையே கூர்மைப்படுத்தி பிரித்தாளும் சூழ்ச்சியை செய்தவர் அயோத்திதாசர். (அயோத்திதாசரின் சிந்தனைகளை வழகாட்டியாக்க கொண்டதால்தான் என்னவோ கரடிச்சிசத்தூர் அருந்ததிய்ப் பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்து கொடுமைப்படுத்தியுள்ளனர் இப்படி நாமும் எழுதலாமல்லவா? ஒரு நாளும் இப்படிப்பட்ட எழுத்தை எழுதமாட்டோம் ஏன் எனில் தீண்டாமை என்பது ஏணி மரப்படி போல் இந்நாட்டு மக்ககள் ஒவ்வொருவரையும் பிடித்திருக்கிறது என்ற வரலாறு நமக்கு தெரிந்ததால்)
ஆனால் பெரியாரோ அனைத்துச் சாதியும் ஒழிக்கப்பட்டு சமத்துவ சமுதாயமாக வாழ ஆசைப்பட்டடார். ஆதை விளக்கும் பகுதி இதோ,
“நம் நாட்டில் திராவிட மக்ககளுக்குள்ளாகவே திராவிடர்-ஆதிதிராவிடர் என்கின்ற ஒரு பிரிவு இருக்கிறது என்பதோடு, ஆதி திராவிட சமூகம் மிகப்பெரும் எண்ணிக்கை கொண்ட சமூகமாக இருந்து வருகிறது. திராவிட நாட்டில் எப்படி வெளியிலிருந்து வந்த ஆரியர்களுக்குத் திராவிட மக்கள் தீண்டப்படாதவர்களாக இருக்கிறார்களோ, அப்படி திராவிடர்களுக்கு ஆதி திராவிடர்கள்- அதைவிட மேம்பட்ட தீண்டாதவர்களர்ய இருக்கிறார்கள். இந்த நிலைமை திராவிட சமுதாயத்துக்கே ஒரு பெரும் மானக்கேடான நிலைமையாகும் என்பதற்கு திராவிடர்கள் ஆரியர்கள் தீண்டப்படாத மக்களென்று வகுத்திருப்பதையும் நடத்துவதையும், அரண் செய்கிறது. ஆகையால் ஆதிதிராவிடர் என்கின்ற பெயரே மாற்றப்பட்டு இருவரும் திராவிடர்கள் அல்லது தமிழர்கள் என்கின்ற பெயராலேயே வழங்கப்பட வேண்டுமென்பதும், திராவிடருக்கும் ஆதிதிராவிடருக்கும் சமுதாயத் துறையிலுள்ள எல்லா வித்தியாசங்களும் பேதங்களும் ஒழிந்து ஒரே சமூகமாக ஆக வேண்டும் என்பதும் எனது ஆசை. இந்த இரு நோக்ககங்களும் ஜஸ்டிஸ் கட்சியின் நோக்கங்களில் பட்டதென்பது எனது அபிப்ராயமாதலால் கட்சியின் பேரால் இவைகளைச் சொல்லுகிறேன். உத்தியோகம், கல்வி முதலிய விசயங்களில் ஆதிதிராவிடர் என்பவர்களுக்குத் தனிசலுகை காட்டி, சீக்கிரத்தில் நம்மோடு சரி சமத்துவம் அடையும்படியான நிலைமை ஏற்படுத்த வேண்டியது நம் கட்சியின் தனிப்பட்ட கடமைகளில் ஒன்று.
---- (குடியரசு 25.8.1940)
இப்படி பெரியார் தனது எழுத்தாலும், பேச்சாலும் செயலாலும் இடைவிடாது பணியாற்றிதன் காரணமாக தாழ்த்தப்பட்டவர் பிற்படுத்தப்பபட்டவர் என்ற பேதத்தின் கடுமை குறைந்து மக்களும் இதில் உள்ள உண்மை உணர்ந்து வாழந்து வருகின்றனர்.. குறிப்பாக பெரியார் தொண்டர்கள் இதில் எவ்வித சமரசமுமின்றி, சமத்துவ சமுதாயமாக வாழ்நதுவருகின்றனர். இரண்டாம் வகுப்பு பிராமணர்களாக விரும்புவர்கள் யார்? என்பதை இதன் மூலம் உணர்ந்து கொள்ளலாம்.பெரியார் இயக்க குடும்பங்களில் தான் சாதி மறுப்பு திருமணங்கள் அதிகமாக நடந்து வருகிறது. அந்த வகையில் தமிழ் ஓவியா குடும்பத்திலும்.
தாழ்த்தப்பட்டவர்-பிற்படுத்தப்பட்டவர் என்று சாதி ஒழிப்புத் திருமணங்கள் செய்து, சாதி ஒழிந்த சமத்துவக் குடும்பமாகத்தான் உள்ளது. இந்த அளவு எங்களை பக்குவப்படுத்தியவர் பெரியாரும் பெரியார் உருவாக்கிய காட்டுமிராண்டிகளுமே
இந்த வகையில் மா.வேலுச்சாமி, முனிமா குழுவினர் எப்படிப்பட்டவர்கள்? சாதி மறுப்புத் திருமணமா அல்லது.........
---------------------தொடரும் -நன்றி:-"களத்துமேடு" ஜூன் 15 - 2004 பக்கம்:10-11
Labels:
பெரியார்-தலித்
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
//திராவிடருக்கும் ஆதிதிராவிடருக்கும் சமுதாயத் துறையிலுள்ள எல்லா வித்தியாசங்களும் பேதங்களும் ஒழிந்து ஒரே சமூகமாக ஆக வேண்டும் என்பதும் எனது ஆசை//
பெரியார் அய்யாவின் ஆசை நிறைவேறியிருக்கிறது.இன்னும் முழுமையாக நிறைவேற வேண்டும் என்பது எனது ஆசை
Post a Comment