Search This Blog
5.6.09
திருமுருக கிருபானந்தவாரியாரும் - கலைஞரும்
வாரியாருக்கு வாயடைப்பு
நான் திருவாரூரில் படித்துக் கொண்டிருக்கும் போது எங்கள் ஊருக்குக் காலட்சேபம் செய்ய திருமுருக கிருபானந்தவாரியார் அடிக்கடி வருவார். அவரைக் கலாட்டா செய்ய வேண்டுமென் பதற்காகவே, பள்ளிக்கூடத்திற்கு டிமிக்கி கொடுத்துவிட்டு நண்பர்களுடன் செல்வேன்.
காலட்சேபத்தில் கதை கூறும்போது திரு.வாரியார் அவர்கள், உருயிருள்ள ஒன்றையும் - மிருகங்களையோ, பறவைகளையோ கொன்று மனிதன் சாப்பிடுவதற்காக கடவுள் படைக் கவில்லை என்றார்.
நான் எழுந்து, சிங்கத்திற்கு கடவுள் என்ன உணவைப் படைத்தார் என அவரிடம் கேட்டேன்.
வாரியார் என்னை உட்காரும்படி அடக்கி விட்டு, தாவரங்களுக்கு உயிர் இருக்கிறதே, அதைச் சாப்பிடலாமா? என்று மாமிசம் உண்போர் கேட்பார்கள். காய்கறிகளை பறித்த பின் அவைகளின் வளர்ச்சி தடைப்படுவதில்லை. ஆனால், மனிதன் காய்கறிகளைத் தாராளமாக உண்ணலாம்; இது யாருக்கும் தெரியாது என்றார்.
உடனே நான் எழுந்து, நான் கீரைத்தண்டை வேரோடு பறித்து உண்கிறோம்; அது எப்படி?என்று கேட்டேன்.
மறுபடியும் என்னை அடக்கி உட் கார வைத்தார் வாரியார்.
அன்று நான் எழுப்பிய கேள்விக்கு இன்று வரை பதில் கிடைக்க வில்லை. அதனால் நானும் என் கொள்கையை மாற்றிக் கொள்ள வில்லை.
-------------------- கலைஞர் -நன்றி:-"விடுதலை" 2-6-2009
Labels:
கலைஞர்
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
Vaiko speaks about Periyar and Anna. It is funny that thatn some one who never met periyar and anna is talking about them. -Kalaignar.
Vaiko's response - No one can talk about Jesus because no one met him. Kalaignar can't talk about Mahatma Gandhi because he never met Mahatma. Kalaignar can't talk about Stalin, because he never met stalin(not the deputy CM). Kalaignar never responded to this.
very well said K.
Karunanithi never answers question correctly & directly. 90% he speaks bullshit as reply.
//அஹோரி said...
very well said K.
Karunanithi never answers question correctly & directly. 90% he speaks bullshit as reply.
June 30, 2009 8:19 PM //
இல்லை! பொணந்திண்ணி!...அரிசியைக் கூட கொன்றுத்தானே புசிக்கிறோம். அறுவடை செய்தபின் என்ன? நெல வளருகிறதா? என்ன?
நெற்கதிரை கழுத்தை அறுப்பது போன்று அறுத்து தானே உண்கிறோம்.
ஒவ்வொரு நெல்மணியிலேயும் ஒரு உயிர் இருக்கிறதே!
இதெல்லாம் நல்மணிகளுக்கு தெரியும். நாசமணிகளுக்கு எங்கத் தெரியப்போகுது.
தாவரத்தின் ரத்தம் நிறமற்றது. பூச்சிகளின் ரத்தத்தை போன்றது.
அதானே! கானிபாலிச பொணந்திண்ணிகளுக்கு இதெல்லாம் பற்றி எங்க தெரியப்போகுது.
Post a Comment