Search This Blog
4.6.09
இந்தியா மதச்சார்பற்ற நாடு என்பதை எப்படி நம்புவதாம்?
இந்தியா, மதச்சார்பற்ற நாடாம்!
15 நாள்களுக்கு முன்பு ஆந்திரப்பிரதேச முதலமைச்சரான ராஜசேகர ரெட்டி, நேற்று (புதன் கிழமை) தான் அலுவலகப் பொறுப்பை ஏற்றுத் தம் அலுவலகத்தில் நுழைந்தார். காரணம், அந்த நாள் தான் நிர்ஜல ஏகாதசி நாளாம்.
ஜோசியர்கள் குறித்துக் கொடுத்த நல்ல நேரமான காலை 7.15 மணிக்கு அவர் பொறுப் பேற்றார். அந்த நேரத்தில் தான் அவருக்குச் சாதகமான இடங்களில் நட்சத்திரங்கள் இருந்தனவாம்.
இதற்கும் முன்னதாகச் சர்வமதப் பிரார்த்தனைகள் செய்யப்பட்டனவாம். திருப்பதி வெங்கடாசலபதிக்குப் பூஜையாம். கிறித்துவப் பாதிரி ஒருவர் ஜெபம் செய்தாராம். (கத் தோலிக அல்லது புரொடஸ்டன்ட் அல்லது அதில் இருக்கும் 100க்கும்மேற்பட்ட எந்தப் பிரிவு என விவரம் இல்லை) முசுலிம் முல்லா ஒருவர் நமாஸ் செய்தாராம். இவ்வளவும் செய்த காரணமும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொல்லையில்லாது 5 ஆண்டுக்காலத்தை ஓட்டவேண்டும் என்பதற்காகவாம். போதாக் குறைக்குப் பக்கத்தில் உள்ள அனுமான் கோயிலுக்கும் போனாராம்.
கடந்த மாதம் 25 ஆம் தேதியன்று செயலகத்திற்கு வந்து அமைச்சரவைக் கூட்டத்தைத் தலைமை தாங்கி நடத்தினார். அன்றைய நாளில் ஜோசியப்படி 8 அமைச்சர்கள் மட்டுமே பதவியேற்றனர். பூஜை புனஸ்காரச் சடங்குகளுடன் அமளி துமளியுடன் அலுவல்களைச் செய்தனராம்.
காட்டிலாகா அமைச்சர் ராமச்சந்திர ரெட்டி மாலை 5.30-க்குப் பூஜை செய்த பின் அலுவல் அறைக்குள் நுழைந்தாராம். சிறிய நீர்ப்பாசன அமைச்சர் சுனிதா லட்சுமண்ரெட்டி மாலை 4.41 க்கு நல்ல நேரத்தில் நுழைந்தாராம்.
இந்தக் கூத்தில், முதலமைச்சர் மருத்துவம் படித்த டாக்டர் படிப்புக்கும் அறிவுக்கும் தொடர்பில்லை என்பது போல நடந்து கொள்கிறார். மேலும் இவர் கிறித்துவர். இன்னும் ஜாதிப்பட்டத்தை விடாமலும் இந்து மத மூடத்தனமான ஜோசியத்தை நம்பியும் எல்லா மதச் சடங்குகளையும் செய்து அனை வரையும் ஏமாற்றுகிறார். அனைத்து மதக் கடவுள்களையும் கூட கேலிக்கு ஆளாக் குகிறார்.
இந்தியா மதச்சார்பற்ற நாடு என்பதை எப்படி நம்புவதாம்?
------------------"விடுதலை"4-6-2009
Labels:
பார்ப்பனியம்-மூடநம்பிக்கை
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
முட்டாள்தனமும் மூடத்தனமும் கோலோச்சும் வரையில் மனித முன்ன்னேற்றம் தடைபடத்தான் செய்யும். அதற்கு ஆட்சியாளர்களே உடந்தையாயிருப்பதுதான் கேவலம்
இத்தனைக்கும் ராஜசேகர் ரெட்டி ஒரு கிறிஸ்துவர்.
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
என்ன செய்வது இவ்வளவு..... பார்த்தும்...மூன்றே மாதத்தில் எலிகாப்டர் விபத்தில் மாண்டுவிட்டாரே...(வானிலை குறித்த சரியான கவனத்துடன் பைலட்டுடன் விவாதித்து இருந்தால் இந்த பிரயாணத்தை தவிர்த்திருக்கலாம்...இது விசாரணை ரிப்போர்ட்) அவர்தான் மூடநம்பிக்கையில் கவனம் செலுத்தியிருந்தாரே...கூட பயணம் செய்த நான்கு பேரின் வாழ்வையும் (பைலட்கள் உட்பட)பறித்து விட்டது.
Post a Comment