Search This Blog

7.6.10

பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கை புதை குழிக்குள் போய்விட்டதா?


பலே அரசு!

கேள்வி: ஏராளமான கோயில்கள் தோன்றிக் கொண்டே இருக்கிறதே, பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கைகள் புதைகுழிக்குள் போய்விட்டதா?

- ச.ந. தர்மலிங்கம்,
சத்தியமங்கலம்

பதில்: புதிதாய்த் தோன்றுவது கோயில்கள் அல்ல; உண்டியல்கள். பெரியாரின் கொள்கைகள் புதை குழியில் போவதற்கானவை அல்ல. புதை குழியில் புதைய இருப்பவர்களைக் காப்பாற்றுவதற்காக.

(குமுதம், 9.6.2010, பக்கம் 18, அரசு பதிலகள்)

பரவாயில்லையே, அரசு உருப்படியாக ஒரு பதிலை சித்திரம் செதுக்கியதுபோல பிசிறு இல்லாமல் கடைந்தெடுத்து வார்த்துக் கொடுத்துள்ளாரே பலே, பலே! என்று பாராட்டவேண்டும்தான்!

கோயில்களில் உண்டியல் வைக்கக்கூடாது என்று ஒரு சட்டம் போடட்டும் முதலில் கோயில் அர்ச்சகனே கோயிலுக்குப் போவானா என்பதுதான் முக்கிய கேள்வியாக இருக்கும்.

இந்து அறநிலையத்துறை சிதம்பரம் கோயிலுக்குள் உண்டியலை வைத்து, தன் கட்டுக்குள் அதனைக் கொண்டு வந்து விட்டது என்றவுடன், அந்தக் கோயில் தீட்சதப் பார்ப்பனர்கள் என்ன செய்தார்கள்? நமக்குக் கிடைக்காதது நாசமாகப் போகவேண்டும் என்ற பரந்த இதயத்தால் அந்த உண்டியலுக்குள் எண்ணெய்யையும், நெய்யையும் ஊற்றி ரூபாய் நோட்டுகளைப் பாழடித்தார்களே அதன் பொருள் என்ன?

சாணக்கியனாகிய கவுடில்யனின் திட்டப்படி கோயில்கள் என்பவை வருவாய்க்காக அரசன் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதுதானே!

பக்தி என்பது ஒரு பிசினஸ் என்று சங்கராச்சாரியார் கூறவில்லையா? கொலை, கொள்ளை செய்யத் துணிகிறவர்களில் அனேகப் பேர் பக்தர்களாகவே இருந்து, ஆண்டவனிடத்தில் பிரார்த்தனை செய்துகொண்டு தப்பித்துக் கொள்வதற்கு வழி தேடுகிறார்கள். நாத்திகத்திற்கும் இப்படி எடுத்துப் போவதற்கும் சம்பந்தம் இருப்பதாக நான் நினைக்கவில்லை. பொதுவாக பேராசை ஜாஸ்தியாகிவிட்டது. பணமுடை அதிகரித்துள்ளது.

_இப்படி சொல்லியிருப்பவர் யார் என்றால் காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதிதான் (குமுதம், 12.9.1996)

உண்மை இவ்வாறு இருக்கும்போது பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கை புதை குழிக்குள் போய்விட்டது என்று கூறுவது அபத்தமே!

தங்கத்தாலேயே கோயில் முழுவதும் ஒருவர் கட்டுகிறார் என்றால், இதற்குப் பணம் கொடுத்தவர் பகவானா? மக்களைச் சுரண்டுவது, தவறான வகையிலே கறுப்பாக வந்தது இந்தப் பணம் என்பதல்லாமல், வேறு என்னவாம்?

கடவுளின் பெயரால், பக்தியின் பெயரால் பாமர மக்கள் சுரண்டப்படுகிறார்கள்.

அப்பாவிப் பெண்கள் கோயில் கருவறைக்குள்ளேயே கற்பழிக்கப்படுகிறார்கள் (கர்ப்பக்கிரகம் என்றால், கர்ப்பத்தை உண்டாக்கும் கிரகமோ!) அந்தக் கடவுளும் அதனைப் பார்த்துக்கொண்டே கையாலாகாதவனாக இருக்கிறான்.

பெரியார் கொள்கை தோற்றது என்பதற்கு இதுதான் அடையாளமா? கோவில் விபச்சார விடுதி என்று காந்தியார் சொன்னதும் நிரூபிக்கப்பட்டு விட்டதே!

இந்தப் பக்திப் புதை குழியில் புதைய இருப்பவர்களைக் காப்பதற்காகத்தான் பெரியார் கொள்கை என்று குமுதம் அரசு கூறியிருப்பது மிகமிகப் பிரமாதம்! (Million Dollar Answer).

பக்தி வேடம் போட்ட ஒரு பார்ப்பனப் பெருச்சாளி குமுதம் நிதியைப் பெரும் அளவுக்குச் சுரண்டியது!

அரசுவின் பதிலில் அனுபவமும் கைகோக்கிறது என்று நம்பலாம்!

--------------------- மயிலாடன் அவர்கள் 7-6-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

2 comments:

தாணு said...

vanakkam,
Anbu periyarukkum avar vazhithontral kalukkum hindu matham mattum thaan thavaraga therigiratha?????
engu mosadi nadakkavillai,
church evvaru ullathu???
Vattiganil(Italy) enna nadakirathu (homo sex broker) ithu thavaru illaya, Islamiyathil thavaru illaya???
ithai ellam urkka solla mudiuma ungalal,
sonnal ungalal vezhiye varamudiyathi....
thavarai sutti kattuvathu sarithaan, athai neengal ella mathathavaridamum kattavendum
athai seiungal muthalil.
summa yaar kettu konde irupparkal entru avaragali mattum sollatheergal mathippirkuriyavargale,

Nantri
Tamilan

Anonymous said...

aam veeramaniyin puthai kuzhikkul poi vittathu