Search This Blog

3.6.10

கலைஞருக்கு தந்தை பெரியார் வாழ்த்து!



மாண்புமிகு கலைஞர் டாக்டர் கருணாநிதி அவர்களுக்கு 49ஆவது ஆண்டு பிறந்த நாள் விழா நடப்பது குறித்து நான் மிகுதியும் மகிழ்ச்சியடைகிறேன்.

டாக்டர் அவர்களது வாழ்நாள் ஒவ்வொன்றும் மக்கள் நலம்பற்றி சிந்திப்பதிலும், தொண்டாற்றுவதிலுமே நடந்து கழிவதை நான் மனப்பூர்வமாக உணர்கிறேன். மனம் பூரித்து திருப்தி அடைந்து வருகிறேன். டாக்டர் செய்து வருகிற காரியங்கள் பெரிதும் மற்றவர் சிந்திக்கக்கூட பயப்படும்படியான காரியங்கள் என்பதோடு அவைகளை வெகு எளிதிலே செய்து முடித்து விடுகிறார்.

இதன் பயனாகவே அரசியல் உலகில் அவருக்கு எதிர்ப்பாளர்கள் அதிகமாகி வருகிறார்கள். காரணம் டாக்டர் அவர்களது ஆட்சி நீண்ட நாளைக்கு நிலைத்து விடுமோ என்கின்ற பொறாமையும் வேதனையும்தான் என்றாலும் டாக்டர் அவர்கள் யாருடைய எதிர்ப்புக்கும் பயப்படாமல் எப்படிப்பட்ட தொல்லைக்கும் சளைக்காமல் துணிந்து காரியமாற்றி வருகிறார். பொதுவாகவே சமுதாயத் துறையில் சீர்திருத்த தொண்டு ஆற்றினால் யாருக்கும் சுயநலக்காரருடையவும், பழைமை விரும்பிகளினுடையவும் எதிர்ப்பு ஏற்பட்டுத்தான் தீரும். டாக்டர் கலைஞர் அவர்களுடைய புரட்சிகரமான தொண்டுக்கு எதிர்ப்பும், தொல்லையும் முற்படுவது அதிசயமல்ல. அவற்றைப்பற்றி சிறிதும் லட்சியம் செய்யாமல் துணிந்து தொண்டாற்றி வரும் டாக்டர் அவர்கள் மனதாரப் பாராட்டி அவர் வாழ்வு எல்லையற்று நீண்டு மக்களுக்கு புதிய உலகம் ஏற்படவேண்டுமென்று ஆசைப்படுகிறேன்.

(விடுதலை, 3.6.1972)

புதுவாழ்வு தருபவர்

மனிதர்களை இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கலாம். நம்பிக்கையாளர்கள்-பகுத்தறிவாளர்கள்

எதையும் சிந்திக்காமல் கடவுள் பெயரால் மடமைகளை ஏற்றுக்கொள்பவர்கள் நம்பிக்கையாளர்கள் அறிவைக்கொண்டு ஆராய்ந்து அறிவுக்கு ஏற்றதை ஏற்றுக்கொண்டு மற்றதைத் தள்ளி விடக்கூடியவர்கள் பகுத்தறிவாளர்கள்.

நம்நாட்டில் நம்பிக்கையாளர்கள் தான் அதிகம். பகுத்தறிவாளர்கள் இருப்பது மிக மிகக் குறைவு. நமது முதல்வர் கலைஞர் அவர்கள் தலைசிறந்த பகுத்தறிவுவாதி ஆவார். இந்தியாவில் தமிழ்நாட்டைத் தவிர மற்ற மாநிலங்களில் எல்லாம் நம்பிக்கையாளர் ஆட்சிதான் நடக்கிறது. தமிழ்நாட்டில் மட்டும்தான் பகுத்தறிவாளர் ஆட்சி நடக்கிறது. தி.மு.க ஆட்சியின் கொள்கை மக்களுக்கு நன்மை செய்வதாகும். தி.மு.கவுக்கு வெற்றி என்றால் அது கலைஞர் அவர்கள் தன் சாதுர்யத் திறமையால் பெற்றதாகும்.

பகுத்தறிவாளராகவும், சிறந்த ராஜ தந்திரியாகவும், முன்யோசனையுடனும் அவர் நடந்து வருவதன் மூலம் தமிழ்ர்கட்குப் புதுவாழ்வு தருபவர் ஆகிறார். அவர் பல்லாண்டு வாழ்ந்து, அவர் பணி வெற்றி அடைய வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

--------------------- தந்தை பெரியார்

--------------------நன்றி:- “விடுதலை” 2-6-2010



1 comments:

Anonymous said...

பகுத்தறிவு புதுசா சிந்திக்காது போலும். 1972 ல வாழ்த்திய அய்யா பெரியார், இன்று இருந்தா இந்த "மொத்த தமிழ் சமுகத்தையும் இந்த டாஸ்மாக் குள்ள அடக்கிய" டாக்டரை வாழ்த்துவார்னா நினைக்கிறிங்க. பகுத்தறிவு யோசிக்க வேணாம். காலத்துக்கு தகுந்து அய்யா என்ன சொல்லி இருப்பார்ன்னு பார்க்க வேணாம்.