கரூரில் இந்து முன்னணி மாநாடு நடக்க இருக்கிறதாம். எதற்காக இந்த மாநாடு? அதன் மாநில அமைப்பாளர் திருவாளர் இராமகோபாலன் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
இந்துக்கள் தொடர்ந்து மூன்றாம் தர குடிமக்களாக நடத்தப் படுகிறார்களாம். கோவில் நிருவாகம், கல்வி, அரசின் சட்டங்கள் மற்ற மதத்தினருக்கு உள்ளது போல இந்துக்களுக்கும் சம உரிமை கேட்க இம்மாநாடு என்று கூறியிருக்கிறார்.
இந்துக்கள் மூன்றாம் தர மக்களாக நடத்தப்படுகிறார்களா இல்லையா என்பது ஒருபுறம் இருக்கட்டும்; இந்துக்களுக்குள்ளேயே இந்த நாட்டின் பெரும்பான்மையான மக்கள் நான்காம் தர மக்களாக, அய்ந்தாம் தர மக்களாக ஆக்கப் பட்டுள்ளார்களே, நடத்தப்படுகிறார்களே. இதற்கு என்ன பதிலாம்?
அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்று சட்டம் கொண்டு வந்தால் அதனை எதிர்த்து இந்து மதத்தில் உயர்ஜாதி மக்கள் உச்சநீதிமன்றம் செல்லுகிறார்களே. அதனை எதிர்த்து இந்து முன்னணி மாநாடு கூடப் போடவேண்டாம் கண்டித்து அறிக்கை விடலாமே ஏன் செய்யவில்லை?
இந்துக்கள் பெரும்பான்மையான மக்களின் மொழி கோயில்களில் வழிபாட்டு மொழியாக இருக்க வேண்டும் என்றால் அதனை எதிர்த்து நீதிமன்றம் சென்றவர்கள் யார்?
கோயில்களிலும் பெரும்பான்மை இந்து மக்களின் மொழியான தமிழில்தான் அர்ச்சனை நடைபெறவேண்டும் என்று இந்து முன்னணி கரூரில் நடக்க இருக்கும் மாநாட்டில் குறைந்த பட்சம் தீர்மானம் நிறைவேற்றுமா என்று சவால் விட்டுக் கேட்கிறோம்.
இந்து முன்னணி மாநாடு நடத்த இருக்கும் அதே கரூரையடுத்த திருமுக்கூடலூர் சைவக் கோயிலுக்குத் தமிழில் குடமுழுக்கு செய்தார்கள் என்று கோயிலை இழுத்து மூடித் தோஷம் கழித்தார்களே, அப்பொழுது எங்கே போனார் இந்த ராமகோபாலன்?
சிதம்பரம் கோயிலில் தேவாரம் பாடினார் என்பதற்காக வயது மூப்படைந்த ஓதுவார் ஆறுமுகசாமி, தீட்சதப் பார்ப்பனர்களால் தாக்கப்பட்டபோது இந்து முன்னணி எங்கே போய் முக்காடு போட்டுக் கொண்டது?
தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள் இந்துக்கள் என்று இந்து முன்னணி ஒப்புக் கொள்ளுமேயானால், அந்தத் தாழ்த்தப்பட்ட அல்லது பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் காஞ்சி மடத்தின் சங்கராச்சாரியாராக அமர இந்து முன்னணி ஒப்புக்கொள்ளுமா என்ற கேள்விக்கும் விடை தேவை.
வைத்தியரே, முதலில் உங்கள் நோயைக் குணப்படுத்திக் கொள்வீர் என்று கேட்பது போல, இந்து முன்னணிக் கும்பலே முதலில் உம் மதத்தில் உள்ள ஏற்றத் தாழ்வுகளை, ஜாதிப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு மாநாடு கூட்டுங்கள். உம் வீட்டிலேயே வண்டி வண்டியாகக் குப்பைகளை வைத்துக் கொண்டு அடுத்தவன் வீட்டுக்கு நொட்டாரம் சொல்லுவது வீண் வேலையல்லவா?
இந்துக்களுக்கும் கல்வியில் உரிமை வேண்டுமாம். அதற்காக இந்து முன்னணி மாநாடாம். வாயால் சிரிக்க முடியாது.
இந்துக்களில் தாழ்த்தப்பட்டோருக்கும், பிற்படுத்தப் பட்டோருக்கும் இட ஒதுக்கீடு அளிக்கும்பொழுதெல்லாம் அதனை எதிர்த்து உண்ணாவிரதம் இருந்த முற்போக்குக் கூட்டம் எது?
குஜராத் பாணியிலே சென்னையில் ஊர்வலம் நடத்துவோம் என்று அறிவித்தவர்கள் யார்? எதிர் ஊர்வலம் நடத்தப்படும் என்று திராவிடர் கழகம் அறிவித்த பிறகுதானே வாலைச் சுருட்டிக் கொண்டு ஓடினீர்கள்?
இன்னும் தீண்டாமையை வைத்துக் கொண்டிருக்கிற மதம் உலகத்திலேயே இந்து மதம் தவிர வேறு ஒன்று உண்டா? தீண்டாமை க்ஷேமகரமானது என்று பச்சையாக சொன்னவர்தானே உங்களின் பெரியவாள் மறைந்த சங்கராச்சாரி சந்திரசேகரேந்திர சரஸ்வதி?
இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்துக் கோயில்களின் நிருவாகம் இவர்களின் கைகளுக்கு வரவேண்டுமாம். ஏன், கொள்ளையடிக்கவா? சுரண்டல் தொழிலை ஜாம் ஜாமென்று செய்யவா?
சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சதப் பார்ப்பனர்கள் அடித்த கொள்ளை இப்பொழுது வீதிக்கு வந்துவிட்டதே ; இக்கோயில் இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டுக்குக் கீழ் வந்த நிலையில் கடந்த 14 மாதங்களில் கோயில் வருவாய் ரூபாய் 29 லட்சம் என்று அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதே! அதே நேரத்தில் தீட்சதப் பார்ப்பனர்கள் கையில் சிதம்பரம் நடராஜர் கோவில் நிருவாகம் இருந்த நேரத்தில் ஆண்டு ஒன்றுக்கு வருமானம் வெறும் ரூபாய் 37,199 என்றும், அதில் செலவு ரூபாய் 37,000 என்றும் மீதி ரூ.199 என்றும் உயர்நீதிமன்றத்திலே கணக்குச் சொன்னார்களே!
இதை வைத்துப் பார்க்கும் போது எத்தனை நூறு ஆண்டு காலமாக கோடி கோடியாக இந்தப் பார்ப்பனர்கள் பணத்தைச் சுரண்டிக் கொழுத்து இருப்பார்கள்.
அந்தக் கொள்ளை மீண்டும் நடக்கத்தான் கோயில் நிருவாகம் இவர்களின் கைகளில் வரவேண்டுமா?
கரூரில் இந்து முன்னணி மாநாடு நடத்கு முன் நாணயமாக இவற்றிற்கெல்லாம் பதில் சொல்வார்களா? எங்கே பார்ப்போம்?
------------------ ”விடுதலை” தலையங்கம் 16-6-2010
3 comments:
உங்க கழகத்தில் , வீரமணி ஐயாவோட புள்ளைக்கு எத்தனை வருஷம் களப் பயிற்சி உள்ளது?
அவரை தவிர வேறு யாருக்குமே வீரமணிக்கு பிறகு கழகத்தை நிர்வாகம் செய்ய திறமையோ தகுதியோ இல்லையா?
உங்க பெரியார் சாமி பேசிய பேச்சுக்களும் , எழுதிய கருத்துக்களும் மற்ற விவரங்களும் ஏழை , பிற்பட்ட நிலையில் உள்ள தமிழர்களுக்கு போய் சேர பிற பெரியார் பக்தர்கள் புத்தகங்கள் பதிப்பிக்கும் முயற்சிக்கு , நீதி மன்றம் அனுமதி அளித்ததை எதிர்த்து வீரமணி ஏன் புலம்புகிறார்? தங்கராசு வீட்டில் தாக்குதல் நடத்துகிறார் என்று கேட்டீர்களா?
நீங்க இந்த மாதிரி கேள்விகளை வீரமணி ஐயா விடம் கேட்டதுண்டா?
எப்போதாவது அல்லா /கடவுள் மறுப்பு பற்றி முஸ்லிம்களிடம் பேசியது உண்டா?
அவர்கள் அஹ்மதிய /ஷியா பற்றி என்ன சொல்கிறார்கள் என்று தெரியுமா?கேட்டதுண்டா?
Aiyo.. Aiyo.. Chinna Vayasula Soriar sorry.. Periyar Oru aiyer ponna davu adhichar.. Aana adhu othukala. Appa irundhe periyar kku aiyer aalunkana pidikkadhu..
Idhu theriyama intha pannada pasanga avaru kolkaya pinpatradha nenachu, edho solranga..
Anne, Idhe mari Muslim Mathathula irukkura attulium pathi eluthunka. Penkal Sama Urimai pathi.. thalak pathi.. panni maari 10 kutti poduranukale adha pathi, appram bombay la vandhu 200 pera suttanukale adha pathi...
Neenka eludha maateenka.. ena avunka unkalukku biriyani poda mattankannu payam.. hehe..
//rajan said...
உங்க கழகத்தில் , வீரமணி ஐயாவோட புள்ளைக்கு எத்தனை வருஷம் களப் பயிற்சி உள்ளது?
அவரை தவிர வேறு யாருக்குமே வீரமணிக்கு பிறகு கழகத்தை நிர்வாகம் செய்ய திறமையோ தகுதியோ இல்லையா?//
உனக்கு இருந்தா வந்து நிர்வாகம் பண்ணு...என்ன இது பார்ப்பன சங்கரமடமா...? இயக்கத்திலே வந்து இணைச்சுக்கோ...என்ன வேணும் உனக்கு...? ரொம்ப சொறியரியே...
சொறிஞ்சுட்டு...கீழே ஒன்னு கன்றாவியா வெச்சிருக்கப்பாரு....
//நீங்க இந்த மாதிரி கேள்விகளை வீரமணி ஐயா விடம் கேட்டதுண்டா?
எப்போதாவது அல்லா /கடவுள் மறுப்பு பற்றி முஸ்லிம்களிடம் பேசியது உண்டா?
அவர்கள் அஹ்மதிய /ஷியா பற்றி என்ன சொல்கிறார்கள் என்று தெரியுமா?கேட்டதுண்டா?
June 17, 2010 9:37 PM//
இதுதான் உன்னோட சரக்கு...இதற்கு எதுக்கு இவ்வளவு பில்டப்பு....முதல்ல உன்னை சுத்தி இருக்கிற குப்பையை அள்ளு, சாக்கடை கப்பை முதல்ல கிளீன் பண்ணு அப்பறம் அடுத்தவ விஷயத்திற்கு போலாம்.
அங்கே இருக்கிறதா சொன்னா மட்டும் உடனே மதம் மாறி இந்து மதத்தை வேறோட அறுத்திடப் போறியா..எல்லா மதத்தையும் உண்டு இல்லைன்னு ஒரு கை பார்த்திடப்போறியா....எப்பவும் ஊதுற மகுடியைத்தான் நீ ஊதிக்கிட்டு இருக்கப்போற...உனக்கு மட்டுமா இது...?
Post a Comment